காலங்கள் கடந்துபோனதே என் இயேசைய்யா உம்மை தெரிந்துகொள்ளாமல் நேரம் வீணானதே உம்மை அறிந்துகொள்ளாமல் வாழ்வு வீணானதே பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே (2)
இனிமேலும் உம்மை விடமாட்டேன் - என் இயேசைய்யா இனிமேலும் உம்மை விடமாட்டேன் - இந்த பாவி நான் இனிமேலும் உன்னை விடமாட்டேன்
நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன் நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் மன்னிக்கும் தேவனே நீதிசொல்லும் ராஜனே (2)
இனிமேலும் உம்மை விடமாட்டேன் - என் இயேசைய்யா இனிமேலும் உம்மை விடமாட்டேன் - இந்த பாவி நான் இனிமேலும் உன்னை விடமாட்டேன்
மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக்கொண்டீரே மனதினில் அமைதி தந்து வாழவைத்தீரே பாலைவனத்தில் நீரூற்றினீர் சோலைவனமாய் வந்து வாசம்பண்ணீனீர் தந்தையாய் என்னை இங்கு தேற்றிவிட்டீரே சிந்தையெல்லாம் உன் நினைவாய் மாற்றிவிட்டீரே சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் (2)
இனிமேலும் உம்மை விடமாட்டேன் - என் இயேசைய்யா இனிமேலும் உம்மை விடமாட்டேன் - இந்த பாவி நான் இனிமேலும் உன்னை விடமாட்டேன்
கர்த்தருக்கு மகிமை என்று நம்பிவந்தவரை தேவன் வழி நல்லதென்று தேடி வந்தவரை தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால் தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே கானானின் தேசத்தின் அன்பான தேவனே
இனிமேலும் உம்மை விடமாட்டேன் - என் இயேசைய்யா இனிமேலும் உம்மை விடமாட்டேன் - இந்த பாவி நான் இனிமேலும் உன்னை விடமாட்டேன்
(சகோதரரின் சாட்சியுடன் கூடிய பாடலை அவசியம் கேட்கவும்...)