நாள் 24 ஆகஸ்டு 02, 2013 இந்தோனேசிய மறைவான கலை ஆவணங்கள்
நீங்கள் எப்பொழுதாவது மக்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளாமல் நெருப்புத் தழலின்மேல் நடப்பதையும், கத்தியாலும் கூரான ஆணிகளாலும் தங்களைஅறுத்துக்கொள்வதையும் பார்த்திருக்கிறீர்களா ? இதுதான் ‘டெபஸ்’ என்பது. இதுஒருகலை. அதேசமயத்தில் இது ஒரு யுத்தக்கலையும், சக்தியை வெளிப்படுத்தும் ஒன்றுமாகும். ‘டெபஸ்’ சடங்குகள் சிலவேளைகளில் திருமணங்களிலும் சிலமத வழிபாடுகளிலும் அநுசரிக்கப்பட்டு வருகிறது. கடவுள் இப்படிப்பட்ட வல்லமையை சுத்தமுள்ளவர்களுக்கே தருவார் என்று நம்பப்படுகிறது. மேலும் இது பாண்டன் இந்தோனேஷியா மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாக இருக்கிறது. பாண்டன் மக்கள் மத்தியில் இந்த கலையின் அனுபவம் பெறாத ஒருவரும் இல்லை.
இப்பெயரில்என்னஇருககிறது?
பாண்டன் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இந்தோனேஷியாவில் 2000 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிக இளைய பிராந்தியத்தின் பெயர் இது. இங்கு 90 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர் (ஜாவா தீவின் மேற்கு முனையில்). பாண்டன் என்பது 1526 -ம் ஆண்டுகளிலே இஸ்லாமிய போராளிகள் மந்திர வல்லமை கொண்ட டெமாக்கின் ஜவனிய சுல்தானியின் நினைவாக இந்த பெயர் நிலைநாட்டப்பட்டது. பாண்டன் என்ற பெயர், இந்தோனேஷியாவின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றைக் குறிக்கும். இது ஜகர்த்தா புகழ்பெறுவதற்கு முன் வாசனை திரவியங்களின் வியாபாரத்திற்கு பெயர்போன துறைமுகமாகும். பழைய பாண்டனில் துறைமுகத்தின் பாழடைந்த பகுதிகளையும், அரண்மனைகளையும், கலங்கரை விளக்கம் போல் தோற்றமளிக்கும் பழைய பாண்டன் மசூதியின் கோபுரத்தையும் பார்க்கலாம். பாண்டன் என்பது பாண்டன் பிராந்தியத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் பெயருமாகும். இவர்கள் இன்னும்ஈஸா அல் மஸீஹ்வுக்காக ஆதாயப்படுத்தப்படவில்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திர பழக்கங்களல்லாமல் பாண்டன் இஸ்லாமிய மதவெறிக்கு பெயர்போன இடமாகும். மதவெறிகுழுக்களில் முக்கியமானவர்கள் பாண்டன் மதபள்ளிகளிலிருந்து வந்தவர்கள். பாண்டனில் வெகுதொலைவில் உள்ள இடங்களில் சில ஈஸா முஸ்லீம்கள் வசிக்கின்றனர். பாண்டன் பிராந்தியத்திற் குட்பட்ட, அதேசமயத்தில் ஜகர்த்தாவின் மாநகர எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் பலகிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். சிலதிருச்சபைகளும், விசுவாசிகளும் மட்டுமே பாண்டன் மக்களை சந்திப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். சமீபநாட்களில் இது சற்று அதிகரித்து இருக்கிறது. ஆனால் கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றப்பணி மூலமாக பலன்தரக்கூடிய பல திறந்தவாசல்கள் இருக்கத்தான் செய்கின்றன.0
துஆ செய்யவேண்டிய காரியங்கள்
• பாண்டன் மக்கள் மந்திரம் மற்றும் மதவெறி அடிமைத் தனங்களிலிருந்து விடுபட்டு சுவிசேஷத்திற்கு திறந்த மனதுடையவர்களாய் மாற துஆ செய்வோம். (யோ. 8.32, “சத்தியத்தை நீங்கள்அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”).
• இந்தோனேஷிய விசுவாசிகள் அன்புடன் முஸ்லீம்கள்மேல் அக்கறைகொண்டு, அவர்களது சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முன்வர துஆ செய்வோம்.
• பாண்டன் மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து, சேவைசெய்து சாட்சிசொல்லும் ஈஸா முஸ்லீம்களை இறைவன் எழுப்பவேண்டும் என்று துஆ செய்வோம். (லூக்கா:10:2,“அறுவடைமிகுதி, ஆட்களோகுறைவு. அறுவடைக்குஎஜமான்தமதுஅறுவடைக்குஆட்களைஅனுப்பவேண்டிக்கொள்ளுங்கள்”).
-- Edited by HMV on Friday 2nd of August 2013 11:42:14 PM
ஊடகங்களில் வருகிற செய்திகளுக்கு அப்படியே பதிலளிக்கவேண்டாம். சிலவேளைகளில் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாலும், சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதாலும் முஸ்லீம்கள்மேல் தவறான மனநிலை உடையவர்களாயும் அவர்கள்மீது மனதுருக்கம் இல்லாதவர்களாயும் இருக்கிறோம் . நமது இந்த தவறான மனநிலைக்காக, அக்கறையற்றத்தன்மைக்காக, முஸ்லீம்கள்மேல் விரோதம் பாராட்டியமைக்காக நாம் மனந்திரும்பவேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் முஸ்லீம்கள் இருதயத்தில் அசைவாடி உண்மையான கிறிஸ்தவத்தை புரிந்துகொள்ள பசியை உண்டாக்குகிறார் என்பதை நாம் உணரவேண்டும். தேவன் முஸ்லீம்கள் மத்தியில் கிறிஸ்தவசாட்சி மற்றும் நேரிடையான வெளிப்பாடுகள் மூலமாக கிரியை செய்துகொண்டிருக்கிறார்.
துஆக்கள்
• இறைவா எல்லா இஸ்லாமியரும் ஈஸா அல் மஸீஹை ஏற்றுக்கொள்ளச் செய்வாயாக! அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.
• இறைவா, ஈஸா முஸ்லீம்களும் கிறிஸ்தவ விசுவாசிகளும் இஸ்லாமியருக்கு உப்பாகவும், ஒளியாகவும் வாழ உதவிசெய்வாயாக!
• இறைவா, இஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை அறிவிக்க அநேகரை எழுப்புவாயாக!
• இறைவா இப்பொழுது இஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை எத்திவைக்கிற ஒவ்வொரு ஊழியரும் உண்மையோடும், உத்தமத்தோடும் நீர் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றஅவர்களை பெலப்படுத்துவாயாக!
-- Edited by HMV on Thursday 1st of August 2013 03:36:54 PM