ஏன் எழுதவில்லை, எதற்கு எழுதவில்லை என்கிறாய்,நண்பா..!ஏன் எழுதவேண்டும்,எதை எழுதவேண்டும்,- நான்..?மார்க்கத்தின் வழிகளெல்லாம்மதபீடங்களாகிவிட்டனவே,அதைஎழுதவேண்டுமா..?மார்க்க தலைவர்களெல்லாம்மதவியாபாரிகளாகிவிட்டனரேஅதைஎழுதவேண்டுமா..?இறைமார்க்கத்தார் மதவா(வியா)திகளாகிவிட்டனரே,அதைஎழுதவேண்டுமா..?(மதிகெட்ட )நன்மார்க்கத்தார்துன்மார்க்கத்தை நாடுகிறார்களேஅதைஎழுதவேண்டுமா..?ஞானமார்க்கத்தார் ஜீவமார்க்கத்தின் சிந்தையற்றுப் போனார்களேஅதைஎழுதவேண்டுமா..?எ(த்)தை எழு(த்)தினால் நன்செய்- புன்செய்ஆ(க்)கும்.(தூ(து)க்கத்தில் ஒரு கவிதை..!!! )