நம்முடைய தளத்தில் பகிரப்பட்டுள்ள இவருடைய மற்றொரு கவிதை..."மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை"
அது ஓர் அர்த்த ராத்திரிஆனாலும் அர்த்தமுள்ள ராத்திரி..!காரணம்... கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் ராத்திரி
இதோ இன்று... கிறிஸ்மஸ் மரத்தில் கலர் விளக்குகளின் கண் சிமிட்டல்கள்..! காகித நட்சத்திரங்களின் கண் கவர் நாட்டியங்கள்..!
அட்டை பெட்டிகள் வெட்டி எடுத்து கட்டிவைத்த குடில்களில் செட்டப் செய்யப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தாக்கள்..!
கிறிஸ்மஸ் பெயரில் கேளிக்கை விடுதிகளில் வாடிக்கையாளர் கூட்டம்..! மகிழ்ச்சியில் மிதந்து... மத்தளமடிக்கும் வாலிபர் கூட்டம்..!
மனிதா.. மனிதா... குடில்கள் அலங்காரத்தில் குழந்தை இயேசுவாய் குடியிருக்கவாஇயேசு பிறந்தார்..?
மதுவென்னும்
திரவத் தீயை -உன் குடலுக்குள் குடியேற்றவா இயேசு பிறந்தார்..?
புகை என்னும் வெடிமருத்தை -உன் நுரையீரலுக்குள் புதைத்து வைக்கவா இயேசு பிறந்தார்..?
நீ ஆண்டுக்கொரு முறை ஆலயம் சென்று வரவா.. ஆண்டவர் பிறந்தார்..?
ஆதி மனிதன் பாதியில் விழுந்து போனதால் பாவ விதை பூமியில் முளைத்தது பாவ மரத்தின் ஆணிவேர் அறுக்க ஆண்டவர் இயேசு அவனியில் அவதரித்தார்..!
பொன்னும் பொருளும் வேண்டிய மட்டும் கொடுத்தாலும் விண்ணவர் இயேசுவுக்கு வேண்டியதில்லை..!
மனிதா...மனந்திரும்பு..!மனசுக்குள் திருந்து..!!!
ஐயா...லீலி புஷ்பமே... நீர் மனுக்குலத்தின் விடிவெள்ளி..! நானோ... ஜனக் குலத்தில் ஒர் தெருப் புழுதி
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை..! நறுங்குண்டு நொறுங்குண்டு இரத்தம் கசியும் இதயம் ஒன்று இருக்கிறது..!
அதையே உமது... காயம்பட்ட பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்..! அதுவே எனக்கு-அர்த்தமுள்ளதோர்... கிறிஸ்மஸ் ராத்திரியாய் விடியட்டும்..!
(அல்பா என்.ஆசைத்தம்பி.ஆவடி)
நன்றி: மெய்யான ஒளி (டிசமபர்’2012)