Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் :


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
RE: இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் :
Permalink  
 


சகோதரர் ஜான் 12 அவர்களே,

உங்களுக்கு பதில் சொல்ல எனக்கும் தாமதமாகி விட்டதற்காக வருந்துகிறேன்.

இங்கு நடந்த விவாதத்தில் ஏறக்குறைய ஆறு வேத சம்பந்தமான விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

அதில் இரண்டு விஷயத்தை பற்றி சில கிருஸ்துவ ஊழியர்களும், சில கிருஸ்துவ பிரிவுகளும், அறிவியல் வல்லுனர்களும் என்ன சொல்கின்றனர் என்பதை காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். அவர்களும் வேத புரட்டர்களா?

என்பதை கூறவும். அவை என்னவென்றால்,

1. மரித்த கிருஸ்துவின் சரீரம் கெட்டு போகவில்லை அல்லது கெட்டு போக ஆரம்பிக்கவில்லை என்பதும்
2. கிருஸ்துவின் விலாவை குத்தின போது வந்த ஜலம் என்னும் திரவம் மிகுந்த மேன்மையுள்ளதாக, ஜீவனுள்ளதாக உள்ளது என்பதும் ஆகும்.

இதை பற்றின உங்கள் கருத்தை தெரிவிக்கவும். ஜலம் என்னும் திரவம் பிளாஸ்மாவே என்பதை சொல்லும், வேறு  வலை தளமோ, ஊழியரோ இருந்தாலும் அவரது கருத்தை மேற் கோள் காட்டலாம்.

 



 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

//1.கொரி.11.26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துஇந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.// மிக சரி.. முன்னோக்கிச் சென்று பின்னோக்கி பார்கிறேன்.. அதை போன்றது தான் இது

 //நான் சொல்ல வந்தது என்னவெனில் இயேசு பன்முக பரிமாணம் கொண்டவர்அவரை வார்த்தையானவராகவும்தீர்க்கதரிசியாகவும்மனுஷகுமாரனாகவும்நன்னெறிகளை போதித்தவராகவும்தேவ குமாரனாகவும் (இன்னும் பலஎப்படி வேண்டுமானலும் பார்க்கலாம்அவரை எப்படி பார்க்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம்.

 அந்த வகையில் திருகுரான் அவரை தேவனிடமிருந்து வந்த வார்த்தையாக பார்க்கிறதுதான் அனுப்பினவரை எந்த சேதமுமில்லாமல் தன்னிடம் இறைவன் சேர்த்து கொண்டார் என்று சொல்கிறதுசுமார் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவர் மரணத்துக்கு அடையாளமாக இருந்தார் எனவும் அவர் எப்போதும் மரித்தவராக இருக்கவில்லை எனவும் சிலுவை அவரை பாதிக்கவில்லை எனவும்சிலுவையில் பாவ சுபாவமான மனிதன் கொல்லப்பட்டான் எனவும் கூறுகிறது. (இது எனக்கு புரிந்த வகையில்)

 

//அவரை பலியாக காண்பிப்பது என்பது திருகுரானின் நோக்கமல்லஇதைதான் நான் சொன்னேன்இதனால் அவரை பலியாக பார்க்கும் எனது பார்வை மாறவில்லை என்பதையும் சொல்லி கொள்கிறேன்.//

//இதுதான் என் நோக்கமே தவிர இவை இரண்டும் இணைந்த என் அனுமானத்தை மற்றவர்களிடம் திணிப்பது என் நோக்கமல்ல. //

  இது தங்களுக்கு மிகவும் நல்லது!! சகோதரரே..

 //நான் வேத வசனத்தின் மூலம் சொல்ல வருவது என்னவெனில்அவரது சரீரம் மற்ற மனிதர்களின் சரீரத்தை போல அழிந்து போகவோஅல்லது அழிந்து போக ஆரம்பிக்கவோ இல்லை என்பதும், (பாடுகள் அடையவில்லை என நான் சொல்லவில்லை)

அவரில் இருந்த வந்தமற்ற மனிதர்களிடம் இல்லாதஜலம் என்னும் விசேஷித்த திரவம் அவரை தேவ குமாரன் என உறுதி செய்தது என்பதும்தான்.//

இசுலாம் எவ்வாறாகவோ கருதிகொள்ளட்டும்.. அதைப்பற்றி காரியம் என்ன!! அவர்களும் திரவத்தை பற்றி கூறவில்லை.. வேதத்தில் இல்லாததை இருப்பது போல எண்ணிக்கொள்கிற  'துணிகரம்', 'கற்றுகொள்கிறேன்' என்கிற போர்வையில் அதிக நேரம் மறைந்து கொள்ள முடியாது என்பதை அறியுங்கள் .. 'பூனை வெளியே வந்து விட்டது'' என  Father.பெரியார் சொல்லுகிற படி தான்!!

 இதுதான் என் நோக்கமே தவிர இவை இரண்டும் இணைந்த என் அனுமானத்தை மற்றவர்களிடம் திணிப்பது என் நோக்கமல்ல

 //தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான்இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! //இதுபற்றினவிவாதத்தைநீங்கள்விரும்பினால்நாம்தொடரலாம்.

எப்படியாகிலும் என் தேவன் அறிவிக்கப்படத்தான் வேண்டும். பக்தி விருத்தி ஏற்படத்தான் வேண்டும். தயார் சகோதரரே!! வாருங்கள் விவாதிப்போம்!!

 

GLORY TO LORD THE GOD!! 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

////அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும் மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். //

 இது தவறான கருத்துஅவர் சிலுவையில் சிந்தின ரத்தத்தையே குடிக்க கொடுக்கிறார்அந்த ரத்தம் உயிர் துடிப்புள்ளதுநீங்கள் சொல்வது போல அது வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு கெட்டு போகவில்லை.//

இது வேதத்தில் இல்லாத கருத்து..'உயிர் துடிப்புள்ள ரத்தம்' என வேதத்தில் எங்குள்ளது.. மரித்தபின் ஏது  உயிர்த்துடிப்பு!! ஜீவனுண்டாக ரத்தத்தை கொடுத்தவர் உடலில் உறுப்பாக இருக்கும் பொது தானே அவர் ரத்தத்தில் பங்கடைகிறீர்கள்!! இன்னும் இந்த உண்மை தங்களை வந்தெட்டவில்லையா !! இதைத்தானே பவுலும் கூறுகிறார்.. 

 கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

ரோமர் 12:5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

கொரிந்தியர் 12:12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

பவுல் மேலேயுள்ள வசனத்தில் 'இருக்கிறார்' என்ற பதம் உயிர்த்து எழும்பின கிறிஸ்துவானவரைப் பற்றியே குறிபிடுகிறார்.ஏனென்றால் அவர் மரிபதர்க்கு முன் நீங்கள் எல்லாம் என் அவயங்கள் என எவரையும் பார்த்து கூறவில்லை!!! உறுப்புகள் ஒரு சரீரத்தில் இருந்து ,ஒரே ரத்தத்தை பகிர்ந்து கொள்பவை என இன்னும் கூற தான் வேண்டுமோ!! ஆகா கர்த்தர் நமக்கு தரும் ரத்தம் என்றும் நிலைநிக்க கூடிய உடன்படிக்கையின் ரத்தம்.. ஆம் அவர் நம் பாவத்திற்காக ரத்தம் சிந்தினார். ஆனால் நாம் ஜீவனுள்ளவர்களாய் இருப்பதற்கு அவர் தருகிற ரத்தம் உயிர்தெழுந்த சரீரத்தில் இருந்து தான். மன்னாவிலும் மேலானதுசிந்தப்பட்ட ரத்தத்தை அவர் குடிக்க கொடுக்காமல் (பொதுவாக ரத்தத்தை குடிப்பது ஆசாரியர்களுக்கும் (மற்ற எவருக்கும் கூட) நியமிக்கப்படாத ஒரு நியமம் என்பதை கவனத்தில் கொள்க!!) தெளிக்கபடவேண்டிய இரத்தத்திற்கும், பந்தியில் எடுக்கப்படவேண்டிய ரசத்திற்கும் வித்தியாசத்தை வேதம் சொல்லுகிறது..

லேவியராகமம் 17:14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறதுஇரத்தம் ஜீவனுக்குச் சமானம்ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானேஅதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

எனவே, வேதத்தின் படி தாங்கள் சொல்வது தவறு!! நாம் அறுப்புண்டுபோகும்படிக்கு அவர் ரத்தத்தை தராமல் ஜீவனை தரும்படிக்கு தருகிரவரானபடியினால், உயர்தேழுந்த சரீரத்தில் இருந்தே வழங்குகிறார்!!

 //அதே போல மனிதர்களுக்காக பாடுகளுக்கு உட்பட்ட சரீரத்தையே அவர் உண்ணக் கொடுத்தார்நீங்கள்தான் அது கெட்டுப் போனது என சொல்கிறீர்கள்நான்தான் அது கெடவில்லை என சரியாக சொல்கிறேன்.

 அவர் மறு ரூபமடைந்த சரீரத்தை உண்ண கொடுப்பதில்லைஏனெனில் அந்த சரீரத்துடந்தான் அவர் திரும்ப வர போகிறார்பந்தியின் போது அவரது மரணத்தைதான் நினைவு கூறுகிறோமே தவிரஅவர் உயிர்தெழுதலை அல்ல.///

'ஜீவனுள்ள அப்பம்' என்பதன் பொருளை கற்றுக்கொள்ளுங்கள்.. மரித்த  சடலமா அது!! தாங்கள் இயேசுவின் உயிர்தெழுந்த சரீரத்திலேயே உறுப்பாக இருகிறீர்கள் என இன்னும் அறியாமல் மரித்த சரீரத்தில் ஏன்  தங்களை பிணைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்!! 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

தேவனுடைய  ஆட்டுக்குட்டி என்பதும் சரியானதே. Lamb of God  என்பது தேவனின் ஆட்டுக்குட்டி,தேவ ஆட்டுக்குட்டி,தேவனுடைய ஆட்டுக்குட்டி என்பதற்கு சரியாய் இருக்கிறது!!

ஆதியாகமம் 22:8 அதற்கு ஆபிரகாம்: என் மகனேதேவன்தமக்குத்தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப்பார்த்துக்கொள்வார் என்றான்..

தேவன் தந்த ஆட்டுக்குட்டி எனவும் அடையாள படுத்தி அறிந்துகொள்ள முயன்றால் அறிந்துகொள்ளலாம்!!

  //இது போன்று அனேக காரியங்களை அறிய ஆவல்சந்துசந்தாக கிழிப்பதற்கு அடையாளமாக அவர் இருதயத்தில் குத்தப்பட்டது என சொல்வது சரியாக இருக்கும்ஏனெனில் வேறு யாரவது பலி விலங்கை போல சந்துசந்தாக  ஏன் அவரை கிழிக்கவில்லைஎன கேட்க கூடும்முடிந்த வரை லாஜிக் சரியாக வரும்படிக்கு சொல்வது நன்றாக இருக்கும்.

 

 ஏன் லாஜிக் இல்லை.. விட்டால் வேதத்திலேயே லாஜிக் இல்லை என்பீர்களோ!!

இயேசு தேவனாலே வெட்டப்பட்டார்!! தெரியுமா தங்களுக்கு!! பாருங்கள்!!

இந்தபட்டயம் எவ்வாறெல்லாம் வெட்டும் தெரியுமல்லவா!! படித்து அறிந்து கொள்ளுங்கள். பின் தெரியும் வெட்டப்பட்டது எவ்வாறு என்று!!

சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்,மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

மத்தேயு 26:31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கிமேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

வேதம் காட்டும் அனேக போஜனபலிகளில் மெல்லியமாவு என்கிற பதத்தை படித்திருகிரீர்களா!! அது இயேசுவின் சரீரத்திற்கு மாதிரியானதே!! மாவு நன்றாக அரைத்தால் தான் கிடைக்கும்மெல்லிய மாவு என்பது!!?? என் தேவன் நம் ஒவ்வொருவருக்காக வெகுபாடுபட்டார் என்பதை குறிப்பது தான் அது!! 

மேலும் அவரது பாடுகளை "தேவ வார்த்தை புடமிடும் களத்தில் புடமிடப்பட்டது " எனவும் தொடர்பு படுத்தலாம்..தவறேதும் இல்லை. புடமிடுதலில் நின்றதே. அனைத்து முன்குறிக்கப்பட்ட தீர்க்கதரிசனகளும் நிறைவேரிற்றே!! 

தகப்பனாகிய இயேசுவினடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!! அப்போது அனைத்தும் சரியாய் இருக்கும். நான் வேதத்தை முதன்முறை படித்து முடிபதற்கு முன்னேயே அவர் எனக்கு அறியாத வசனங்களை ஜெப வேளையில் தருவார். சொல்லி ஜெபித்த பின் அதே காரியத்தை படிக்க நேரிடும்,விளக்கத்தையும் பெற்றுகொள்வேன். சொல்லொனா ஆச்சர்யமே மிஞ்சும்!!

 

//அப்.நட.2.31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும்அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்துஅவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான் //இதை கொரிந்தியர் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் இயேசுவின் சரீரம் அழிவில்லாததாய் விதைக்கப்பட்டது , அழிவில்லாததாய் எழுந்தது என சொல்லலாம்.//

தங்கள் மேற்கூறிய வசனத்தில் உள்ள சரீர அழிவு என்கிற பதம் தற்காலிக அழிவை குறிக்கவில்லை அது நிரந்தர அழிவை குறிப்பது. ஏசுவின் சரீரம் அழிவில்லாமல் விதிக்கப்பட்டது என்பது வேத புரட்டு. கோதுமை மணியின் விழுதலை தம் சரீர மரணத்திற்கு ஒப்பிட்டாரே!! 

யோவான் 12:24,27 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

பாருங்கள் இங்கு சொல்லப்படும் கோதுமை மணியின் அழிவு தற்காலிகமானதே!!

 

//தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். //

 "தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால்யோவான் சுவிசேஷம் இதை மறுக்கிறது.

 அன்பு சகோதரரேயோவான் சுவிசேஷம்  கூறுவது வேறு.. நீங்கள் (யோவான் கூறுவதாக ) கூறுவது 'Aloe and Myrrh' நான் கூறுவது 'spices and ointments'. இரண்டும் வேறு வேறு!!

 

//விசேஷ திரவம் வேறு ஜலம் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்அவர் அந்த திரவத்தை குடிக்க சொன்னார் என நான் எங்கும் சொல்லவில்லைநான் சொன்னதாக கட்டு  கதை சொல்பவர் நீங்கள்தான்.//

மிகவும் முக்கியதன்மை வாய்ந்ததாக தாங்கள் கண்டரிதிருபதாக நினைக்கிற இந்த திரவம் உண்மையில் இல்லை. அப்படியே கர்த்தரின் ஜீவன் அதில் இருந்திருந்தால் நிச்சயம் நம் கர்த்தர் நமக்கு ஜீவன் உண்டாக கொடுத்திருக்கவேண்டும்.ஆனால் வேதம் அவர் ரதத்தை நமக்கு ஜீவன் உண்டாக கொடுப்பதாக கூறுகிறபடியினால் நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிற திரவம் என்பது உண்மையில் இல்லை எனவும், ரத்தத்தை தவிர வேறெந்த திரவமும் ஜீவனுடன் கருததக்கதாக முக்கியத்துவம் அற்றது எனவும் தாங்கள் முதலில் அறிய வேண்டியது.

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் அவர்களே,

 அதிகமானபணிசுமையினாலும்,பிரயாணத்தினாலும்தங்களுக்கானஎனதுபதில்தாமதமாயயிற்று.. மன்னிக்கவும்!!

//மரணம் என்பதற்கு உங்களின் கருத்துமருத்துவரின் கருத்தை விட வேதம் எதை மரணம் என்று சொல்கிறது என்பது முக்கியமானதுஅந்த வகையில் வேதத்தில் உள்ள மரணம்//

'விஷேஷ திரவம்என்று ஒன்று இயேசுவின் சரீரத்தில் இல்லை.வேதத்திலும் ' விசேஷ ஜலம் குறிப்பிடபடவில்லைவேதத்தில் கூறப்படாதவைகளை தாங்கள் பேசுகிபடியினால்,நானும்  வேதத்தில் விளக்கம் தேட அவசியம் ஏற்படுத்திகொள்ளாமல்அறிவியல் கொண்டே விளக்கமளிக்கிறேன்எனவேதங்களுக்கு இதில் ஆட்சேபம் இருக்கத் தேவையில்லைஏனென்றால் வேதம் எல்லா அங்கிகரிப்பிற்க்கும் ,ஏழு  புடமிடுதல்களுக்கும் பாத்திரமுள்ளதாய் உள்ளதுவரலாற்றில் எந்த வேதமானாலும் புடமிடும் கருவியாக 'அறிவியல்இருந்துள்ளது என தங்களுக்கு நான் கூறவேண்டும் என்பதில்லை !! 

 ரத்தம் உறையும் பொது  தோன்றும் நீரை (பிளாஸ்மாவை) 'விசேஷ ஜலம்என்று தவறாக எண்ணுகிறீர்கள்.  

//இந்த போர் சேவகன் ஒருவேளை இயேசு கிருஸ்துவின் மேல் அதிக எரிச்சல் உள்ளவனாக கூட இருந்திருக்க கூடும்அவர் இறந்தாலும் கூட விடாமல்  தனது எரிச்சல் தணியாமல் அவரை குத்தியிருக்க கூடும். (இதுவும் அனுமானம்தான்)//

கட்டு கதைகளில் தங்களுக்கு எவ்வளவு ஆர்வம் என அறிய இயலுகிறது!!

 //வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க//இதற்கு வேத ஆதாரம் தேவை//.

 வேதமே ஆதாரம்!! 

//அவர் மனிதர்களிடமிருந்து வித்தியாசமானவர் என்பதில் என்ன சந்தேகம்அவர் ஒருவர் மட்டும் தான் கன்னியிடமிருந்து பிறந்தார்அவர் ஒருவர் மட்டுமே ஆதாமின் வழி வந்த ஆணின்  விந்து துளியில் இருந்து பிறக்காதவர்இதை விசுவாசிக்காதவர்தான் விசுவாச துரோகம் செய்பவர்.//

அப்படியானால் யேசுவானவர் ஸ்த்ரியின் வித்தில் இருந்து தோன்றினார் என விசுவாசிக்காதவரும் விசுவாச துரோகியாவார்!! பாருங்கள் வசனம் பின்வருமாறு பேசுகிறது.

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!

 //நீங்கள் சொல்வது சரி என காட்டவும்என்னை அயோக்கியன் என காட்டவும் இது போன்ற மிகைபடுத்தப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும்யாரும் அவரை ஒன்றும் இப்போது ஆணியடிக்கவில்லை

மற்ற விசுவாசிகள்  வேதத்தை ஆராய தடுப்பதற்காகபடிப்பதை தடுப்பதற்காக சில போதகர்கள் இது போன்று குற்றம் சாட்டுவார்கள் என்பது நான் அறிந்தது.  இது விசுவாசிகள் அவர்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தந்திரமாகும்.//

மிகைபடுத்தவில்லை சகோதரா!! தங்களின் கருத்தை சிறுமைப் படுத்துகிறேன். இந்த கருத்து துணிகரம் கொள்ளும் ஆவலினால் வருகிறது என்பது வெளியரங்கம். ஏனென்றால், தீர்மானமாகாததை பொது விசுவாசத்தை போல முன் வைக்கிறீர்களே!!  இதில் எவனுக்கு பக்தி விருத்தி உண்டு!! தங்களுகாவது பிரயோஜனம் உண்டா!! தங்களுக்கு தாங்கள் கருதுவது தவறு என தோன்றும் வரை தங்களுக்கு பக்தி விருத்தி இல்லை. எதற்கு கண்டதை படித்தும்கேட்டும் செவிதினவு கொள்கிறீர்கள். கர்த்தரிடத்தில் இருந்தே கேள்விபடுங்கள்.. அது போதுமானது,ஜீவனை பார்க்கிலும் நல்லது !!

தாங்கள் கூறுகிறபடி தந்திரம் செய்கிறவர்களும் உண்டு அவர்கள்  பெருவயிற்று நாய்களாவார்கள். நான் கூறுகிற காரியத்தில் ஒரு தந்திரமும் இல்லை.

 இப்படி நான் எங்கும் சொல்லவில்லைஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும்அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னது.//

ஜலமும் இல்லை..அந்த கற்பனைக்கு அளவும் தேவைபடுவதில்லை!! வேதமும் எந்த ஜலத்தையும் அளக்கவில்லை!! 

 //இந்த நிகழ்வு இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் போது,  (கல்வாரி மலையில் அவர் கீழே விழுந்த போதுநடந்ததாக படித்த ஞாபகம்அதை நீங்கள் குறிப்பிட வேண்டும்ஏனெனில் அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வை சொல்கிறீர்களா என்று நான் கொஞ்சம் குழம்பி விட்டேன்.

இறந்த பிறகு நடந்ததை தான் கூறுகிறேன். மெல்லிய துப்பட்டி என்பது அடக்கம் பண்ணினபோது சுத்தப்பட்டதாயிற்றே!! 

 

ஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும்அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னதுஎன்னுடைய கூற்று மேற்கண்ட ஆதாரத்தை எந்த விதத்திலும் மறுக்கவில்லை.

 //இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டிஎன ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.//

 //இயேசுவானவர் 'தேவனுடைய ஆட்டுக்குட்டிஎன அழைக்கபடுவதில்லை. "தேவ ஆட்டுக்குட்டி"  என அழைக்கப்படுகிறார்.// 

ஏன் இந்த வாதம். தாங்கள் மொழிபெயர்ப்புகளில் அலாதி ஆர்வமுடையவராயிற்றே!!

தேவனுடைய  ஆட்டுக்குட்டி என்பதும் சரியானதே. Lamb of God  என்பது தேவனின் ஆட்டுக்குட்டி,தேவ ஆட்டுக்குட்டி,தேவனுடைய ஆட்டுக்குட்டி என்பதற்கு சரியாய் இருக்கிறது!!

ஆதியாகமம் 22:8 அதற்கு ஆபிரகாம்: என் மகனேதேவன்தமக்குத்தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப்பார்த்துக்கொள்வார் என்றான்..

தேவன் தந்த ஆட்டுக்குட்டி எனவும் அடையாள படுத்தி அறிந்துகொள்ள முயன்றால் அறிந்துகொள்ளலாம்!!

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரர் ஜான் 12 அவர்களே,

தங்கள் வருகைக்கு நன்றி, நாம் பேசுவதற்கு இடம் கொடுத்த தளத்தின் மாடரேட்டர் அவர்களுக்கும் நன்றி... உங்கள் கருத்து,

//மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன.
பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். //

மரணம் என்பதற்கு உங்களின் கருத்து, மருத்துவரின் கருத்தை விட வேதம் எதை மரணம் என்று சொல்கிறது என்பது முக்கியமானது, அந்த வகையில் வேதத்தில் உள்ள மரணம்

யாக்கோபு 2.26. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

இது, தேவன் தந்த ஆவியானது ஒருவரை விட்டு போனாலே அவர் இறந்தார் என கூறுகிறது. சரீரம் அழுகி போதல் என்பது இதற்கு பிறகு நடக்கும் நிகழ்ச்சி. இந்த வசனத்தை ஆதாரமாக கொண்டு இயேசு கிருஸ்து இறந்தார் என்பதற்கான வசனம்

மத்தேயு 27.50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
மாற்கு 15.37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்டார்.
லூக்கா 23.46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
யோவான் 19.30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

//இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! //

இது உங்கள் அனுமானம் மட்டுமே. இதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை. மற்றவர்களை அனுமானிக்க கூடாது என சொல்கிறவர்கள் (நீங்கள் எப்படியோ?) தாங்களும் அனுமானிக்க கூடாது எனபது நேர்மையாகும்.

யோவான் 19.33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. 34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

அவர் மரித்தார் என தெரிந்ததினால்தான் அவரது கால் எலும்புகளை முறிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த போர் சேவகன் ஒருவேளை இயேசு கிருஸ்துவின் மேல் அதிக எரிச்சல் உள்ளவனாக கூட இருந்திருக்க கூடும். அவர் இறந்தாலும் கூட விடாமல்  தனது எரிச்சல் தணியாமல் அவரை குத்தியிருக்க கூடும். (இதுவும் அனுமானம்தான்)

//வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க//

இதற்கு வேத ஆதாரம் தேவை.

//மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம்//

அவர் மனிதர்களிடமிருந்து வித்தியாசமானவர் என்பதில் என்ன சந்தேகம். அவர் ஒருவர் மட்டும் தான் கன்னியிடமிருந்து பிறந்தார். அவர் ஒருவர் மட்டுமே ஆதாமின் வழி வந்த ஆணின்  விந்து துளியில் இருந்து பிறக்காதவர். இதை விசுவாசிக்காதவர்தான் விசுவாச துரோகம் செய்பவர்.

 //மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்! //

நீங்கள் சொல்வது சரி என காட்டவும், என்னை அயோக்கியன் என காட்டவும் இது போன்ற மிகைபடுத்தப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும். யாரும் அவரை ஒன்றும் இப்போது ஆணியடிக்கவில்லை.
மற்ற விசுவாசிகள்  வேதத்தை ஆராய தடுப்பதற்காக, படிப்பதை தடுப்பதற்காக சில போதகர்கள் இது போன்று குற்றம் சாட்டுவார்கள் என்பது நான் அறிந்தது.  இது விசுவாசிகள் அவர்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தந்திரமாகும்.

//இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. //

இப்படி நான் எங்கும் சொல்லவில்லை. ஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும். அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னது.

//அவர் மனுஷ வம்சாவளி உடையவர்//

அது மட்டுமல்லாது அவர் தேவ வம்சாவளியையும் உடையவர். (யோவான் சுவிசேஷம்- 1 ஆம் அதிகாரம் அல்லேலுயா!!!)

//இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள். இதனை கொண்டு கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள்.//

இந்த நிகழ்வு இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் போது,  (கல்வாரி மலையில் அவர் கீழே விழுந்த போது) நடந்ததாக படித்த ஞாபகம். அதை நீங்கள் குறிப்பிட வேண்டும். ஏனெனில் அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வை சொல்கிறீர்களா என்று நான் கொஞ்சம் குழம்பி விட்டேன்.

ஜலம் என்னும் திரவம் அவரது உடலில் கூடுதலாக இருந்தது என்பதே நான் சொன்னதாகும். அதாவது ரத்தத்தோடு கூட ஜலமும் இருந்தது எனபதே நான் சொன்னது. என்னுடைய கூற்று மேற்கண்ட ஆதாரத்தை எந்த விதத்திலும் மறுக்கவில்லை.

//ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை. என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது.//

அவர் பாடுகள் அனுபவித்தார் என்றுதான் நானும் சொல்கிறேன். அந்த விசேஷ திரவம் அவர் இறந்த பிறகே அவருக்கு பயன்பட்டது.  அவர் அனுபவித்த துன்பத்தை அந்த திரவம் எந்த வகையிலும் குறைக்கவில்லை. அவர் உடலை சிதைவில் இருந்து காப்பதற்கே அந்த திரவம் பயன்பட்டது எனபதே என் அனுமானம்.

//இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.//

இயேசுவானவர் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என அழைக்கபடுவதில்லை. "தேவ ஆட்டுக்குட்டி"  என அழைக்கப்படுகிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல. கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருந்ததால் உலகத்தின் பாவத்தையெல்லாம் அவர் தாங்கினார். சாதாரண மனிதனால் உலகின் பாவத்தையெல்லாம் தாங்க முடியாது. இதன் மூலம் அவர் விசேஷித்தவர் என்பது புலனாகும்.

//பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம்.//

எனக்கு அனேக காரியங்கள் தெரியாது என்பது உண்மைதான். உங்கள் விளக்கம் மிகவும் சரியாக, நன்றாக இருக்கிறது. இது போன்று அனேக காரியங்களை அறிய ஆவல். சந்து, சந்தாக கிழிப்பதற்கு அடையாளமாக அவர் இருதயத்தில் குத்தப்பட்டது என சொல்வது சரியாக இருக்கும். ஏனெனில் வேறு யாரவது பலி விலங்கை போல சந்து, சந்தாக  ஏன் அவரை கிழிக்கவில்லை? என கேட்க கூடும். முடிந்த வரை லாஜிக் சரியாக வரும்படிக்கு சொல்வது நன்றாக இருக்கும்.

//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு சேர்த்து சொல்கின்றனர்.//

ஒருவர் இறந்த பிறகு உடல் ரீதியான துன்பத்தை அனுபவிக்க முடியாது.   இந்த நிகழ்வை மரணமடைந்தற்கு ஆதாரமாக சொல்லும் அதே வேளையில் அவர் துன்பமடைந்ததாகவும் சிலர் சொல்கின்றனர் (அதாவது சமயத்திற்க்கு ஏற்றார் போல, தங்கள் இஸ்டப்படி, மக்களை மேலும் உணர்ச்சி வசப்பட வைக்க சொல்கின்றனர் என்பதே எனது கருத்து)

உதாரணமாக வசந்த குமார் என்பவர் எழுதிய "இயேசு மரணமடைந்தாரா அல்லது மயக்க நிலையில் இருந்தாரா" என்னும் கட்டுரையில் (தமிழ் கிருஸ்டியன் தளம்) யோவானில் வரும், "இயேசு கிருஸ்து தன் சிலுவையை சுமந்து சென்றார்" (யோவான் 19.17) என்ற வசனத்தை மறைத்திருக்கிறார். (தான் சொல்ல வந்த கருத்தை வலுப்படுத்த). இதெல்லாம் வேத புரட்டா, இல்லையா என்பது சகோதரர் சில்சாமுக்குத்தான் தெரியும்.

தங்களுக்கு வேண்டிய கருத்து வரும்படி வேத ஆதாரத்துக்கு மாற்றாக சொன்னாலும் அதை யாரும் வேத புரட்டு என சொல்வதில்லை. ஆனால் வேத ஆதாரத்தோடு அவர்கள் விரும்பாத கருத்தை சொன்னால் வேத புரட்டு என கூறவும் தவறுவதில்லை.

குரு எனவும், தந்தை எனவும் கூறுவது தவறு கிருஸ்து ஒருவரே குருவாகவும், தந்தையாகவும் இருக்கிறார் என ஒரு தளத்தில் சொன்னவர்,  போதகர் எனவும், மேய்ப்பர் எனவும் சொல்வது கூட தவறு என்பதை வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விட்டார். 

1 கொரிந்தியர் 15 இல் இரு காரியம் உள்ளது. ஒன்று கிருஸ்துவின் உயிர்த்தெழுதல், இரண்டு மரித்தோரின் உயிர்த்தெழுதல். இரண்டும் ஒரே மாதிரியான நிகழ்வு அல்ல. பவுலுக்கு ஏற்பட்ட பிரச்சனையும் இதுதான். அவர் பிரசங்கம் என்னவெனில் கிருஸ்து உயிர்தெழுந்தது போலவே மரித்தோரும் உயிர்தெழுவர் என்பதே.

அதை கேட்ட சிலர், இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்று சொல்கிறீர்கள் சரி ஒத்து கொள்கிறோம். அதே போல மரித்த விசுவாசிகளும் மூன்றாம் நாளில் எழ வேண்டுமே ஆனால் அவர்கள் சரீரம் அழிந்து போகிறது. அவர்கள் உயிர்தெழுவதில்லை. ஆகவே உங்களின் பிரசங்கம் தவறு என சொன்னார்கள். அதற்கு பதில்தான் பவுல் சொன்னது.

I கொரிந்தியர் 15:35. ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
37. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
அதாவது பூமியில் போடப்பட்ட விதையை நாம் அதற்கு பிறகு உபயோகிக்க முடியாது. ஆனால் அது அழிந்து உண்டாகி வரும் தானியத்தை நாம் பயன்படுத்த முடியும்.
42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

இதன்படி மரித்த விசுவாசிகளின் சரீரம் அழிந்து போகும். அதன் பிறகு அவர்கள் தங்கள் சரீரத்தை பயன்படுத்த முடியாது. இயேசு வருகையின் பிறகே அவர்கள் மறுரூபமடைந்த சரீரத்தோடு எழுவார்கள் என்பதே. ஆகவே 1.கொரிந்தியர் 15.36 விசுவாசிகளின் உயிர்தெழுதலுக்கு மட்டுமே பொருந்தும் என அறிய முடியும்.

இது லாசருவுக்கு பொருந்தாது. ஏனெனில் இவனின் சரீரம் அழிந்து ஒன்றுமில்லாமல் போகவில்லை. இவன்  இறப்புக்கு பிறகும் பூமியில் அதே சரீரத்துடன் இருந்தான். இதை மேற்கண்ட உதாரணத்தோடு சொல்ல வேண்டுமென்றால் விதை தானியத்தை போட்டு விட்டு, அது சிறிது அழுகிய நிலையில் பூமியை விட்டு எடுத்து பிறகு சரியாக்கி பயன்படுத்தியது போல ஆகும். அதாவது இது அழிவுள்ளதாய் விதைக்கப்பட்டது. அழிவுள்ளதாய் எழுந்தது.

மேலே சொன்ன வசனம் (1 கொரி.15.36) இயேசுவிற்கும் பொருந்தாது. ஏனெனில் அவர் ஆவியாக வரவில்லை . அதே சரீரத்துடன்தான்  வந்தார். அந்த சரீரம் மேலும் மகிமை பெற்றதாகவும் இருந்தது (அதாவது இது புதிய சரீரம் அல்ல. பழைய மற்றும் மேன்மை அடைந்த சரீரம்) . மேலும் அவரது மரணம் லாசருவின் மரணத்தை போன்றதும் அல்ல. லாசருவின் உடல் அழிய ஆரம்பித்து விட்டது. ஆனால் இயேசு கிருஸ்துவின் உடலோ அழிந்து போகவில்லை. அதைதான் கீழ்கண்ட வசனம் சொல்கிறது.

ஏன் அழிந்து போகவில்லை? என நான் சொல்லும் காரணத்தை வேண்டுமானால் ஏற்காமல் போகலாம்.. அது அவரவர் சுதந்திரம்.. ஆனால் அவரது உடல் அழிவுக்கு உட்படாது என்பதற்கு வேத வசன ஆதாரம் உள்ளது.

//அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். //

உங்கள் கருத்து பொய் என சொல்லும் வசனம்

அப்.நட.2.31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்

இதை கொரிந்தியர் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் இயேசுவின் சரீரம் அழிவில்லாததாய் விதைக்கப்பட்டது , அழிவில்லாததாய் எழுந்தது என சொல்லலாம்.

//தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். //

"தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால்" யோவான் சுவிசேஷம் இதை மறுக்கிறது.

யோவான் 19.39. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
40. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

//தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது).//

இயேசு கிருஸ்துவின் பாடுகள் முடிந்ததும் சிலுவையில்தான். அவரது ஜெயம் ஆரம்பிதததும் சிலுவையில்தான். அவர் "முடிந்தது" என சொல்லி தன்னுடைய ஆவியை தேவன் கையில் ஒப்பு கொடுத்தது முதல் அவரது ஜெயம் ஆரம்பிக்கிறது. அப்போதில் இருந்து கிருஸ்துவாக போகும் இயேசுவாக இருந்த அவர் இயேசு கிருஸ்துவாக ஆனார்,
அவரை தேவன் கைவிட்டது இமைப் பொழுது மாத்திரமே. அதற்கு பிறகு நடந்த எல்லா நிகழ்வுகளும் அவர் ஜெயம் கொண்ட நிகழ்வுகளே.

எசேக்கியல் பார்த்தது ஒரு தரிசனம். அந்த சேனைகள் அதற்கு பிறகு என்ன ஆனது என்ற தகவல்கள் அதில் இல்லை. எசேக்கியலுக்கு நம்பிக்கை உண்டாகும்படி தேவன் அந்த தரிசனத்தை அளித்தார்.

//பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!

பிதாவானவர் அவரை கைவிட்டது சிலுவையிலேயே முடிந்து விட்டது. அதற்கு பிறகு பிதாவானவர்  குமாரனை கைவிடவில்லை.

//தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.//

விசேஷ திரவம் வேறு ஜலம் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். அவர் அந்த திரவத்தை குடிக்க சொன்னார் என நான் எங்கும் சொல்லவில்லை. நான் சொன்னதாக கட்டு  கதை சொல்பவர் நீங்கள்தான்.

//அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும் மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். //

இது தவறான கருத்து. அவர் சிலுவையில் சிந்தின ரத்தத்தையே குடிக்க கொடுக்கிறார். அந்த ரத்தம் உயிர் துடிப்புள்ளது. நீங்கள் சொல்வது போல அது வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு கெட்டு போகவில்லை.

அதே போல மனிதர்களுக்காக பாடுகளுக்கு உட்பட்ட சரீரத்தையே அவர் உண்ணக் கொடுத்தார். நீங்கள்தான் அது கெட்டுப் போனது என சொல்கிறீர்கள். நான்தான் அது கெடவில்லை என சரியாக சொல்கிறேன்.

அவர் மறு ரூபமடைந்த சரீரத்தை உண்ண கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த சரீரத்துடந்தான் அவர் திரும்ப வர போகிறார். பந்தியின் போது அவரது மரணத்தைதான் நினைவு கூறுகிறோமே தவிர, அவர் உயிர்தெழுதலை அல்ல.

1.கொரி.11.26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

//இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.//
//அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!!

நான் ஏதோ இதை இல்லை என்று சொன்னது போல எழுதியிருக்கிறீர்கள்.

நான் சொல்ல வந்தது என்னவெனில் இயேசு பன்முக பரிமாணம் கொண்டவர். அவரை வார்த்தையானவராகவும், தீர்க்கதரிசியாகவும், மனுஷகுமாரனாகவும், நன்னெறிகளை போதித்தவராகவும், தேவ குமாரனாகவும் (இன்னும் பல) எப்படி வேண்டுமானலும் பார்க்கலாம். அவரை எப்படி பார்க்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம்.

அந்த வகையில் திருகுரான் அவரை தேவனிடமிருந்து வந்த வார்த்தையாக பார்க்கிறது. தான் அனுப்பினவரை எந்த சேதமுமில்லாமல் தன்னிடம் இறைவன் சேர்த்து கொண்டார் என்று சொல்கிறது. சுமார் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவர் மரணத்துக்கு அடையாளமாக இருந்தார் எனவும் அவர் எப்போதும் மரித்தவராக இருக்கவில்லை எனவும் சிலுவை அவரை பாதிக்கவில்லை எனவும், சிலுவையில் பாவ சுபாவமான மனிதன் கொல்லப்பட்டான் எனவும் கூறுகிறது. (இது எனக்கு புரிந்த வகையில்)

அவரை பலியாக காண்பிப்பது என்பது திருகுரானின் நோக்கமல்ல. இதைதான் நான் சொன்னேன். இதனால் அவரை பலியாக பார்க்கும் எனது பார்வை மாறவில்லை என்பதையும் சொல்லி கொள்கிறேன்.

(அவரை பலியாக ஒரு மார்க்கம் காட்டுமானால் அது கிருஸ்துவமாகி விடும். அது வேறு மார்க்கமாக இருக்க முடியாது. இஸ்லாம் மார்க்கம் அவரை எப்படி பார்க்க விரும்புகிறதோ அப்படியே பார்க்கிறது. அதனால் அது பொய் சொல்கிறது என ஆகி விடாது. இதை குறித்து இயேசுவும் சொல்லியுள்ளார்.)

நான் வேத வசனத்தின் மூலம் சொல்ல வருவது என்னவெனில், அவரது சரீரம் மற்ற மனிதர்களின் சரீரத்தை போல அழிந்து போகவோ, அல்லது அழிந்து போக ஆரம்பிக்கவோ இல்லை என்பதும், (பாடுகள் அடையவில்லை என நான் சொல்லவில்லை)
அவரில் இருந்த வந்த, மற்ற மனிதர்களிடம் இல்லாத, ஜலம் என்னும் விசேஷித்த திரவம் அவரை தேவ குமாரன் என உறுதி செய்தது என்பதும்தான்.

இதற்கு தெளிவான வேத ஆதாரத்தையும், அதை ஏன் மற்றவர்கள் அப்படி சொல்லவில்லை என்பதையும் கூறியுள்ளேன். அதிகமானவர்கள் ஒன்றை சொல்வதால் அதுதான் உண்மையாய் இருக்கும் என்ற முடிவுக்கு வருவது சில நேரங்களில் தவறாக கூட முடியலாம். 

இதுதான் என் நோக்கமே தவிர இவை இரண்டும் இணைந்த என் அனுமானத்தை மற்றவர்களிடம் திணிப்பது என் நோக்கமல்ல. 

//சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து//

எதற்காக இதை சொன்னீர்கள் என தெரியவில்லை. இயேசு கிருஸ்து மானிட சரீரத்தில் இல்லை. ஆவியாக இருக்கிறார் என்பதை சொல்வதற்காக இதை சொல்லியிருந்தால் உங்கள் கருத்து தவறு என பல வசனங்கள் மூலம் சொல்ல முடியும்.
அவர் பரலோகத்தில் உள்ள மனுஷ குமாரன் எனவும், எப்படி போனாரோ அப்படியே திரும்ப வருவார் எனவும், அவரால் திராட்ச ரசத்தை பானம பண்ன முடியும் எனவும், அவர் ராஜாவாக வர வேண்டியுள்ளது எனவும், அவர் பிராதான ஆசாரியராக இருக்கிறார் எனவும், அவரது மானிட சரீரத்தின் வேலை இன்னும் முடியவில்லை எனவும் வசனத்தின் மூலம் அறியலாம்.

//சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது,//

மறுரூபமடைந்த சரீரத்தில் எதற்கு காயங்கள்? பவுல் சொல்ல வருவது என்னவெனில் சபை என்பதை சரீரத்திற்க்கு ஒப்பாக கொண்டால், இயேசு கிருஸ்து அதன் தலையாவார். மற்ற விசுவாசிகள் அதன் மற்ற அவயங்கள்,  அவயங்கள் எப்படி மூளை சொல்வதை போல இயங்குகிறதோ அப்படியே இயேசு கிருஸ்துவின் ஆளுகையினால் விசுவாசிகள் இயங்க வேண்டும். ஒரு உறுப்புக்கு பிரச்சனை என்றால் எப்படி மற்ற உறுப்புகள் வேதனைபடுகிறதோ அப்படியே விசுவாசிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறுகிறார்.

சபை என்பது இயேசுவின் சரீரம் மட்டுமல்ல அது விசுவாசிகளின் சரீரம் கூடத்தான். மறுரூபம் பற்றின கருத்து இங்கு தேவையில்லாதது.    

//தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! //

இது பற்றின விவாதத்தை நீங்கள் விரும்பினால் நாம் தொடரலாம்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

வணக்கம் நண்பர்களே,


//மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.

மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு  சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.//

வரவேற்ப்பிற்கு நன்றி சகோதரரே!!


//ஜலம் என்னும் திரவத்தால் என்ன பயன்? என் அனுமானத்தின்படி இது அவரது உடல் அழுகி போகாமல் வைத்திருக்க உதவியிருக்கும் என்று கருதுகிறேன். அதாவது அவர் உயிர்தெழுந்து வருவதற்கு சாதகமாக, பிறக்கும் போதே அவரது சரீரம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனத்தின்படி அந்த போர் வீரன் ஈட்டியை குத்தியது, ரத்தம் முழுவதும் வெளியேறவும், அந்த திரவம் சுரந்து வரவும் ஒருவேளை உதவி செய்திருக்க கூடும்.//

மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன.
பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே  முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். இதன் பிறகு தான் செல் சிதைதல் நிகழ்கிறது. செல் சிதைவின் நிகழ்வின் பொது தான் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் நீர் போன்ற திரவமாயும்,ஹீமோ குளோபின் சிகப்பு கட்டிகளாகவும் உறைந்து மாறி பின் அழுகுதல் நிகழ்கிறது. சிதைவிற்கு பின்னாக நம் சரீரம் வெளியுலகில் உள்ள கிருமிகளிடம் எதிர்ப்பு சக்தியை கொண்டு போரிடாது ஆகவே தான் இந்த அழுகுதல் நிகழ்கிறது.
இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க , உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறவரின் மரணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம் விசுவாச துரோகத்திற்கே வழிகோலும்.

யோவான் 19:33-35. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

மரிக்கும் பொது வெளிவந்த திரவத்தை விசேஷம் திரவம் என்கிறீர்களே! அது மரித்த பின் நிகழும் ரத்த உறைதலினால் தோன்றுவது. ஆடு வெட்டும் பொது அதன் ரத்தத்தை அகல பாத்திரத்தில் பிடிப்பார்கள். சில நொடிகள் கழித்து ரத்தத்தின் மீது தண்ணீர் போன்ற திரவம் நிற்கும். அது பிளாஸ்மா!! 

இந்த விசேஷ திரவம் வெப்ப ரத்த பிராணிகள் அனைத்திற்கும் உண்டு.மனிதனும் ஒரு வெப்பரத்த பிராணி தான். (வெப்ப ரத்த பிராணிகளால்  சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களது ரத்தத்தின் வெப்பநிலையை மாற்ற இயலாது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.) சகோ.சந்தோஷ் கூறுவது போல இந்த பிளாஸ்மா (விசேஷித்த திரவம்) சரீரத்தை அழுகாமல் காக்காது. இது ஜீவா தண்ணீரும் அல்ல. கூறப்போனால் அழுகுதல் என்ற அதிவேக சிதைதலுக்கு இந்த பிளாஸ்மா திரவம் இன்னும் துணைபோகும். 

நாம் எல்லாம் ஒரே ரத்தத்தால் உண்டாக்கப்பெற்றவர்கள். அந்த ஒரே ரத்தத்தினால் உண்டாக பெற்ற மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்!!

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. அவர் மனுஷ வம்சாவளி உடையவர் (மத்தேயு முதலாம் அதிகாரம்). அவர் சந்ததியை சொல்லி முடியாது-அல்லேலுயா!! 
இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள்.  இதனை கொண்டு  கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது. இதை நண்பர்.சில்சாம் வேத புரட்டு என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.

//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு  சேர்த்து சொல்கின்றனர். இது தங்களுக்கு ஏற்றார் போல வேத வசனங்களை சிலர் எப்படி வளைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது)//

பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம். துரும்பை பற்றி விளக்கமைக்க துணிந்து, சகோதரா!! தூணை விட்டுவிட்டீர்களே!!

பலி பொருளானது குப்பையில் கொட்டப்படுமா!! அழுகி நாற்றமெடுப்பதற்காக ஒரு பலி செலுத்தப்படுமா!! 
பலி பாவ நிவாரணத்திற்காக செலுத்தபடுவது!! நசல் கொண்ட பிள்ளைகளாகிய நமக்காக  தம்முடைய சரீரத்தை ஒப்பு கொடுத்து,பின் நித்திய சரீரம் கொண்டு உயிர்தெழுந்தார் (பவுல் கூறும் விதை விழுந்து பின் மரமானதை போல.) 

I கொரிந்தியர் 15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். அனேக காயங்கள் அவரது உடலில் இருந்த படியினாலும், தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். 
தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது). பின் தேவன் தாம்   முன்குறித்ததவாறே தம் குமாரனை உயர்தேழுப்பினார். 
உலர்ந்து போன எலும்புகளை உயிர்தெழச் செய்த தேவனது வல்லமையை அறிவீர்களோ!! எலும்புகளுக்கு மாம்சம் அளித்து ஜீவன் தந்தாரே. அவைகள் மாம்சம் அழுகாமல் உலர்ந்த எலும்புகள் என கூறுவது எப்படி முறையற்றதோ அதை போலவே இயேசுவின் சரீரம் தேவனால் அழுகாமல் காக்கப்பட்டது என்பதும் முறையற்றது. பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!

எசேக்கியேல்37:10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.  

மரித்த நான்கு நாள் ஆன பின், அழுகி நாற்றமேடுப்பதாக அவன் சகோதரியால் சொல்லப்பட்ட நிலையில் அவனை உயிர்தெழச்செய்தாரே!! அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!! 

யோவான்11:39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.

யோவான் 10:18 ...நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

அவர் நம் பாவங்களுக்காகத் தம்மை பலியாக ஒப்புகொடுத்தார். நாம் நித்திய ஜீவனைப் பெற்று கெட்டுப் போகாமல் இருக்க அவ்வாறு செய்தார் என்பதே சரியான விசுவாசம்.தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

பலி கொடுக்கப்படாமல் மாம்சமும்,ரத்தமும் புசிக்கபடுதல் சாத்தியமில்லை.  அழுகி போன மாம்சத்தையும்,ரத்தத்தையும் இயேசுவானவர் நமக்கு புசிக்க,குடிக்க கொடுகிறவர் அல்ல. அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும்  மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். ஆகவே தான் மன்னாவை பார்க்கிலும் இயேசுவானவர் மேலானவர். மேலும் மன்னவானது பலிபொருள் அல்ல. அது ஒரு போஜனம் அவ்வளவே!! இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.இன்னும் எந்த Degree of Under Standing இல் சந்தோஷ் அவர்களுக்கு விளக்கம் தேவை!?
சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது, அவரது மாம்சத்தில் உண்டு, ரத்தத்தை பருகி நித்திய ஜீவனை பெறுகிறோம். எனவே, இயேசுவின் சரீரம் தேவனால் ஆயதம் பண்ணப்பட்டிருந்தாலும், நம்பிக்கையோடு தங்கி இருந்தாலும் அது மற்ற மனிதர்கள் சந்திக்கின்ற அதே நிலை மாற்றங்களை தான்  சந்திதிருகிறது என்பதை அறிய வேண்டும். 
தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! அப்புறம்  எல்லாம் சரியாய்டும்!! தற்போது இருக்கும் தங்கள் வேத அறிவும் / வெளிப்பாடும்  புதுரூபமெடுக்கும்..
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

வணக்கம் நண்பர்களே,


//மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.

மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு  சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.//

வரவேற்ப்பிற்கு நன்றி சகோதரரே!!


//ஜலம் என்னும் திரவத்தால் என்ன பயன்? என் அனுமானத்தின்படி இது அவரது உடல் அழுகி போகாமல் வைத்திருக்க உதவியிருக்கும் என்று கருதுகிறேன். அதாவது அவர் உயிர்தெழுந்து வருவதற்கு சாதகமாக, பிறக்கும் போதே அவரது சரீரம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனத்தின்படி அந்த போர் வீரன் ஈட்டியை குத்தியது, ரத்தம் முழுவதும் வெளியேறவும், அந்த திரவம் சுரந்து வரவும் ஒருவேளை உதவி செய்திருக்க கூடும்.//

மரணம் இரண்டு வகையாய் Clinical death, Biological death என மருத்துவ உலகத்தால் பிரிக்கபடுகிறது. மூச்சு நிற்கும்போது மருத்துவ மரணம் (Clinical death) நிகழ்கிறது. இதனால் பிராண வாயுவினை உடல் பெற்றுகொல்லுதல் தடையாகிறது. 'உயிரியல் மரணம்' என்பது 'மருத்துவ மரணத்திற்கு' அடுத்த நிலை. இந்நிலையில் இதய செல்கள்,மூளை செல்கள்,மற்ற இயங்கு,இயக்கு தசை செல்களும் ஒவ்வொன்றாக மரிக்க ஆரம்பிகின்றன.

பொதுவாக மருத்துவ மரணத்திற்கு பின் 4-6 நிமடங்களில் மூளை செல்கள் சாக ஆரம்பிகிறதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே  முழுமையான மரணம் என்பது உயிரியல் மரணம் தான். இதன் பிறகு தான் செல் சிதைதல் நிகழ்கிறது. செல் சிதைவின் நிகழ்வின் பொது தான் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் நீர் போன்ற திரவமாயும்,ஹீமோ குளோபின் சிகப்பு கட்டிகளாகவும் உறைந்து மாறி பின் அழுகுதல் நிகழ்கிறது. சிதைவிற்கு பின்னாக நம் சரீரம் வெளியுலகில் உள்ள கிருமிகளிடம் எதிர்ப்பு சக்தியை கொண்டு போரிடாது ஆகவே தான் இந்த அழுகுதல் நிகழ்கிறது..

இயேசுவின் மரணத்தை உறுதி செய்ய அந்த போர் சேவகன் கையாண்ட உத்தி வேதத்தில் உள்ளது. அவன் சுவாசத்தை பரிசோதிக்காமல், ரத்தம் தண்ணீராக பிரிந்திருகிறதா என்று பார்த்தே மெய்யாய் உறுதி செய்தான். இதற்கு அவனுக்கு அவன் கடந்து வந்த கொலையனுபவங்கள் உதவி இருக்க கூடும்!! வேதமும் அவர் மெய்யாய் மரித்தார் என இயேசுவின் உயிரியல் மரணத்திற்கு சாட்சி கூறியிருக்க , உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறவரின் மரணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மனுஷ குமாரனை Super Species ஆக சகோ.சந்தோஷ் காண்பிக்கும் காரியம் விசுவாச துரோகத்திற்கே வழிகோலும்.

யோவான் 19:33-35. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

மரிக்கும் பொது வெளிவந்த திரவத்தை விசேஷம் திரவம் என்கிறீர்களே! அது மரித்த பின் நிகழும் ரத்த உறைதலினால் தோன்றுவது. ஆடு வெட்டும் பொது அதன் ரத்தத்தை அகல பாத்திரத்தில் பிடிப்பார்கள். சில நொடிகள் கழித்து ரத்தத்தின் மீது தண்ணீர் போன்ற திரவம் நிற்கும். அது பிளாஸ்மா!! 

இந்த விசேஷ திரவம் வெப்ப ரத்த பிராணிகள் அனைத்திற்கும் உண்டு.மனிதனும் ஒரு வெப்பரத்த பிராணி தான். (வெப்ப ரத்த பிராணிகளால்  சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களது ரத்தத்தின் வெப்பநிலையை மாற்ற இயலாது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.) சகோ.சந்தோஷ் கூறுவது போல இந்த பிளாஸ்மா (விசேஷித்த திரவம்) சரீரத்தை அழுகாமல் காக்காது. இது ஜீவா தண்ணீரும் அல்ல. கூறப்போனால் அழுகுதல் என்ற அதிவேக சிதைதலுக்கு இந்த பிளாஸ்மா திரவம் இன்னும் துணைபோகும். 

நாம் எல்லாம் ஒரே ரத்தத்தால் உண்டாக்கப்பெற்றவர்கள். அந்த ஒரே ரத்தத்தினால் உண்டாக பெற்ற மனுஷஜாதிக்கு வெளியே மனுஷ குமாரனை புறம் தள்ளி ஆணியடிக்காதீர்!!

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

இயேசு வேறு மாதிரியான ரத்தத்தை கொண்டு பிறந்தவர் என வேதத்தில்இல்லை. அவர் மனுஷ வம்சாவளி உடையவர் (மத்தேயு முதலாம் அதிகாரம்). அவர் சந்ததியை சொல்லி முடியாது-அல்லேலுயா!! 

இயேசுவை சரீரத்தை சுற்றி மெல்லிய துப்பட்டி (Shroud of Turin) கொண்டு சுற்றினார்கள்.  இதனை கொண்டு  கொண்டு ஒரு பக்கம் இயேசுவின் RH வகையினை AB Positive (universal recipient) என்கிறார்கள். ஒரு பக்கம் அந்த துணியை கொண்டு அவரது முகம் எவ்வாறு இருந்திருக்கும் என முப்பரிமாண முகவெட்டையும் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் சந்தோஷ் அவர்களின் வேத ஆராட்சியை பார்க்கும் பொது, அவர் இயேசுவை நம்மைப் போன்ற பாடுள்ள மனிதனாக கருதவில்லை என்பது அவர் விசேஷித்த திரவத்தை கற்பனை செய்து கொண்டுள்ள விதத்தில் தெளிவாகிறது. இதை நண்பர்.சில்சாம் வேத புரட்டு என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இயேசுவானவர் வார்த்தையாயினும் 'தேவனுடைய ஆட்டுக்குட்டி' என ஏன் அழைக்கபடுகிறார் என சகோ.சந்தோஷ் அறியவில்லை என்பது தெளிவாகிறது.

//(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு  சேர்த்து சொல்கின்றனர். இது தங்களுக்கு ஏற்றார் போல வேத வசனங்களை சிலர் எப்படி வளைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது)//

பலி பீடத்தின் நான்கு கொம்புகளுக்கும்,இயேசுவின் பிரதான நான்கு காயங்களுக்கும் தொடர்பு நிலைகளையும் அவர் அறியவில்லை. பலியானது கொல்லப்பட்ட பின்பும் சந்து சந்தாக கிழிக்கப்பட வேண்டும் என தாங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அறியாததும் ஆச்சரியம். துரும்பை பற்றி விளக்கமைக்க துணிந்து, சகோதரா!! தூணை விட்டுவிட்டீர்களே!!

பலி பொருளானது குப்பையில் கொட்டப்படுமா!! அழுகி நாற்றமெடுப்பதற்காக ஒரு பலி செலுத்தப்படுமா!! 
பலி பாவ நிவாரணத்திற்காக செலுத்தபடுவது!! நசல் கொண்ட பிள்ளைகளாகிய நமக்காக  தம்முடைய சரீரத்தை ஒப்பு கொடுத்து,பின் நித்திய சரீரம் கொண்டு உயிர்தெழுந்தார் (பவுல் கூறும் விதை விழுந்து பின் மரமானதை போல.) 

I கொரிந்தியர் 15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

அவர் மரித்த பின் ஒரு சாதாரண மனிதனின் உடல் வெவேறு வேதியியல், உயிரியல் மாற்றங்களை சந்திதிருக்குமோ அதை போலவே இயேசுவின் உடலும் மாற்றங்களை சந்தித்து இருக்கும். அனேக காயங்கள் அவரது உடலில் இருந்த படியினாலும், தைலங்களும் கந்த வர்க்கங்களும் பூசப்படாததினால் இன்னும் விரைவாகவும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். 

தம்மை பாவிகள் முகத்தில் துப்புகிறதற்கும்,கேவலமாய் பரிகசிறதற்கும் தம் குமாரனை ஒப்புக்கொடுத்த தேவன் மெய்யாகவே குமாரனை நம் பாவங்களுக்காக கைவிட்டார் (கர்த்தராகிய இயேசுவானவர் பிதா கைவிட்டதாக கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது). பின் தேவன் தாம்   முன்குறித்ததவாறே தம் குமாரனை உயர்தேழுப்பினார். 

உலர்ந்து போன எலும்புகளை உயிர்தெழச் செய்த தேவனது வல்லமையை அறிவீர்களோ!! எலும்புகளுக்கு மாம்சம் அளித்து ஜீவன் தந்தாரே. அவைகள் மாம்சம் அழுகாமல் உலர்ந்த எலும்புகள் என கூறுவது எப்படி முறையற்றதோ அதை போலவே இயேசுவின் சரீரம் தேவனால் அழுகாமல் காக்கப்பட்டது என்பதும் முறையற்றது. பிதாவானவர் குமாரனை கைவிட்டிருக்க காவல் எங்கிருந்து வரும்!!!

எசேக்கியேல்37:10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.  

மரித்த நான்கு நாள் ஆன பின், அழுகி நாற்றமேடுப்பதாக அவன் சகோதரியால் சொல்லப்பட்ட நிலையில் அவனை உயிர்தெழச்செய்தாரே!! அவரால் மூன்றாம் நாள் தம் ஆவியை திரும்ப எடுத்து கொள்ளக்கூடாதா!!! 

யோவான்11:39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.

யோவான் 10:18 ...நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

அவர் நம் பாவங்களுக்காகத் தம்மை பலியாக ஒப்புகொடுத்தார். நாம் நித்திய ஜீவனைப் பெற்று கெட்டுப் போகாமல் இருக்க அவ்வாறு செய்தார் என்பதே சரியான விசுவாசம்.தம் ரத்தத்தை தான் பானம் பண்ண சொன்னாரே தவிர விசேஷ திரவத்தையும்,ஜலத்தையும் அல்ல. ஆக, கட்டு கதைகளுக்கு விலகி இருப்போம்.
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

பலி கொடுக்கப்படாமல் மாம்சமும்,ரத்தமும் புசிக்கபடுதல் சாத்தியமில்லை.  அழுகி போன மாம்சத்தையும்,ரத்தத்தையும் இயேசுவானவர் நமக்கு புசிக்க,குடிக்க கொடுகிறவர் அல்ல. அவர் உயிர்தெழுந்த இனி ஒருபோதும்  மரணத்தை சந்திக்காத மகிமையின் சரீரத்தையே நமக்கு உண்ணவும்,குடிக்கவும் தருகிறார். ஆகவே தான் மன்னாவை பார்க்கிலும் இயேசுவானவர் மேலானவர். மேலும் மன்னவானது பலிபொருள் அல்ல. அது ஒரு போஜனம் அவ்வளவே!! இயேசுவானவர் பரிபூரண பரிகார பலியானவர்.இன்னும் எந்த Degree of Under Standing இல் சந்தோஷ் அவர்களுக்கு விளக்கம் தேவை!?

சபையாகிய அவரது மருரூபமடைந்த சரீரத்தில் நாம் உறுப்புகளாக நிலைத்திருந்து அவர் காயங்களை தரித்துக்கொள்ளும்போது, அவரது மாம்சத்தில் உண்டு, ரத்தத்தை பருகி நித்திய ஜீவனை பெறுகிறோம். எனவே, இயேசுவின் சரீரம் தேவனால் ஆயதம் பண்ணப்பட்டிருந்தாலும், நம்பிக்கையோடு தங்கி இருந்தாலும் அது மற்ற மனிதர்கள் சந்திக்கின்ற அதே நிலை மாற்றங்களை தான்  சந்திதிருகிறது என்பதை அறிய வேண்டும். 

தங்களுக்கு இருப்பது ஒரு சின்ன பிரச்சனை தான். இயேசுவானவரையும் சேர்த்து வரும் பதம் தான் யெகோவா என்பதை விசுவாசிங்க!! அப்புறம்  எல்லாம் சரியாய்டும்!! தற்போது இருக்கும் தங்கள் வேத அறிவும் / வெளிப்பாடும்  புதுரூபமெடுக்கும்..

சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

திரு சில்சாம் அவர்களே,

//இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையானால் நீங்கள் யாரென்றும் உங்கள் நிலைமை என்னவாகும் என்றும் நான் சொல்லவேண்டியதில்லை.//

சில கிருஸ்துவ பிரிவுகள் ஏன் வெற்று சிலுவையை தங்கள் சின்னமாக கொண்டுள்ளார்கள்? அவர் சிலுவையில் மரணமடைந்தார் என்றுதானே வேதத்தில் உள்ளது. இவர்களுக்கு உங்கள் பதில் என்ன? இதற்கு வேத ஆதாரம் என்ன? இதை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? அவர் சிலுவையிலா உயிர்த்தெழுந்தார்?

//அது ஆவியானவரே என்று உங்கள் அனுமானத்தினால் சொல்லுகிறீரோ..? வேணாங்க சோதிக்காதீங்க...//

என்னுடைய கருத்துக்கு நான் வேத ஆதாரம் கொடுத்துள்ளேன். முடிந்தால் வேத ஆதாரம் கொண்டு அதை இல்லை என்று சொல்லுங்கள். வேத வசனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியும் என்றும் ஒரு கருத்துக்கு இரு இடங்களில் ஆதாரம் இருக்கும் என்றும் தெரியாதா?

//இவர்கள் சொல்வது என்னவென்றால், இந்த ஜலம் என்னும் திரவமானது எல்லா மனிதர்களின் இதயத்திலும் இருக்கும் என்றும், அங்கு குத்தப்பட்டால் ரத்தமெல்லாம் போன பிறகு அந்த திரவம் வெளியாகும் என்றும் அந்த திரவம் வெளியானது இயேசு கிருஸ்து இறந்து விட்டார் என்பதை உறுதிபடுத்துவதாகவும் சொல்கின்றனர்.  மருத்துவ ரீதியாக அவர் மரணமடைந்தர் என்பதற்கு ஆதாரமாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்கின்றனர்.//

மேற்கண்டவாறு சொல்வது கூட அனுமானம்தான். இதை எப்போதாவது கண்டித்து இருக்கிறீர்களா?

இயேசு கிருஸ்து தேவனுடைய வார்த்தை. வானம் பூமி ஒழிந்தாலும் என் வார்த்தை ஒழியாது என்ற வசனம் இருக்கும் போது அவர் எப்படி அழிந்து போக முடியும்?

அவர் மரிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அது ஒரு விசேஷித்த, வித்தியாசமான‌ நிகழ்வு என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

//இந்த கட்டுரையில் அல்லது விவாதத்தில் நண்பர் சந்தோஷ் ரொம்ப அப்பாவி போலவும் நல்லவர் போலவும் சிந்தனையாளர் போலவும் வேத வியாக்கியானத்தில் தேறியவர் போலவும் காட்டிக்கொள்ள எடுத்துக்கொண்ட//

இது உங்கள் கற்பனை

//எல்லா முயற்சிகளையும் தகர்க்கும் வண்ணமான கருத்து பின்வருமாறு...இது ஒன்றே போதும், ஒரு துருபதேசம் அல்லது கள்ள உபதேசம் எப்படி உள்ளே நுழையும் என்பதை அறிந்துகொள்ள..!//

முன்பு எழுதியதைதான் திருத்தி எழுதியிருக்கிறேன் என சொல்லியிருக்கிறேன்.

//கர்த்தத்துவத்தைக் குறித்த அச்சமின்றி கட்டுரை வரையும் துணிச்சல் உம்மைத் தவிர யாருக்கும் வராது.//

அவரை நான் மேலும் மகிமைபடுத்தியிருக்கின்றேனே தவிர தவறாக எதுவும் சொல்லவில்லை. வேத வசனங்கள் ஆராயதானே உள்ளது. இதற்கெதற்கு அச்சம்?



-- Edited by SANDOSH on Tuesday 8th of January 2013 05:42:42 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த கட்டுரையில் அல்லது விவாதத்தில் நண்பர் சந்தோஷ் ரொம்ப அப்பாவிபோலவும் நல்லவர் போலவும் சிந்தனையாளர் போலவும் வேத வியாக்கியானத்தில் தேறியவர் போலவும் காட்டிக்கொள்ள எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளையும் தகர்க்கும் வண்ணமான கருத்து பின்வருமாறு...இது ஒன்றே போதும், ஒரு துருபதேசம் அல்லது கள்ள உபதேசம் எப்படி உள்ளே நுழையும் என்பதை அறிந்துகொள்ள..!

 

/// இயேசு கிருஸ்து சிலுவையில் அடைந்த உடல் ரீதியான துன்பத்தினால் மரணமடைந்தார். சில நிமிட நேரம் அவரது உடலின் இயக்கம் (இருதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவை) நின்று போனது. அதனால் அவரது சரீரத்துக்கும், ஆவிக்கும் உடனான தொடர்பு அற்று போனது. ஆவி தனியே பிரிந்தது. அவர் தலை சாய்ந்தது அவர் மரித்தார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே,

அவரது உடல் உயிருள்ள உடலை போல இயங்க ஆரம்பித்து, பிறகும் இயங்கி கொண்டிருந்தது என்பதே வேதத்தின்படி நாம் அறிவதாகும்.

ஏனெனில் அவரது உடலை அழிவில் இருந்து பாதுகாப்பதாக தேவன் வாக்கு செய்திருந்தார். ///

அதாவது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்றும் சொல்லவேண்டும்...அதே நேரத்தில் மரித்தார் என்றும் சொல்லவேண்டும்....ஏன் இத்தனை பாடுகள்....முரண்பாடுகள்...!!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

SANDOSH wrote:
(இதற்கு முன்பு நான் எழுதிய கட்டுரையில், உடல் அழுகி போகாமல் இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் இருக்க வேண்டும், இரத்த ஓட்டம் இருக்க வேண்டுமானால் இதய துடிப்பு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இயேசு கிருஸ்துவின் ஆவி பிரிந்த உடலில் இதய துடிப்பு இருக்க வேண்டும் என அனுமானித்திருந்தேன். அது ஒரு தெளிவற்ற கருத்தாய் இருந்த தாலும், இதை படித்த ஒருவர் நான் வேத புரட்டு செய்கிறேன் என சொன்ன தாலும், அதை பற்றி எனக்கு வேறு ஒரு வெளிப்பாடு கிடைத்த தாலும் இந்த திருத்திய கட்டுரை)

 திரு.சந்தோஷ் அவர்களே, அனுமானத்துக்கு அவசியமென்ன வந்தது ? எழுதப்பட்டவற்றுக்கு மிஞ்சி எண்ணும் துணிகரம் தானே ? நீங்கள் பார்த்திராத அனுபவித்திராத ஒன்றைக் குறித்து கருத்து சொல்லி பாவியாகிறதைக் காட்டிலும் தேவனுடைய அன்பை நாலு பேருக்கு சொல்லலாமே ?

இயேசுவின் உடல் வைக்கப்பட்ட இடம்...வைக்கப்பட்ட முறைமை....அக்காலத்தின் தட்பவெப்பநிலை...மற்றும் ஆண்டவருடைய பாவமற்ற பரிசுத்த தேகம் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கர்த்தத்துவத்தைக் குறித்த அச்சமின்றி கட்டுரை வரையும் துணிச்சல் உம்மைத் தவிர யாருக்கும் வராது.

இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையானால் நீங்கள் யாரென்றும் உங்கள் நிலைமை என்னவாகும் என்றும் நான் சொல்லவேண்டியதில்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

SANDOSH wrote:
போர்சேவகன் ஒருவன் ஏதோ ஒரு உள்ளுணர்வினால் உந்தப்பட்டு...

 அப்படின்னு அவன் சொன்னானா ? இதுபோன்ற தமாஷ் எல்லாம் பண்ணாதீங்க...சந்தோஷ்.

 

SANDOSH wrote:
அந்த இன்னொரு சாட்சி யார்? என்பதை இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

 அது ஆவியானவரே என்று உங்கள் அனுமானத்தினால் சொல்லுகிறீரோ..? வேணாங்க சோதிக்காதீங்க...

 



-- Edited by chillsam on Monday 7th of January 2013 12:30:25 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

தேவ குமாரன் :

இயேசு தேவ குமாரன் என அழைக்கப்படுகிறார். அவர் தேவ குமாரன் என அழைக்கப்பட ஒவ்வொருவரும் ஒரு ஒரு காரணத்தை முன் வைக்கின்றனர். யோவான் அவரை ஒரே பேறான குமாரன் என்கிறார். இவ்வாறு அவர் சொல்ல காரணம் என்ன? என பார்ப்போம்.

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தேவன் தன் வார்த்தையின் மூலமாக படைத்தார். இது இரண்டு படிகள் கொண்டது. தேவன்-வார்த்தை-உயிர்கள்

ஆனால் தன் வார்த்தையானவரை உலகிற்கு அனுப்பும் போது அவருக்கு தேவையான சரீரத்தை தேவனே ஆயத்தம் செய்தார். இதில் ஒரு படி மாத்திரம் உண்டு. தேவன்-இயேசு கிருஸ்துவின் சரீரம்.  இதை பற்றி வேதத்தில்,

எபிரேயர் 10.5.5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;

ஆண்-பெண் இணைப்பு இல்லாமல், கன்னியிடத்தில் அதிசய விதமாக இயேசு கிருஸ்து பிறந்தார். அது மட்டுமல்லாமல் அவரது சரீரம் வேறு ஒரு அதிசயமும் கொண்டிருந்தது. அது பற்றி,
யோவான் தன் சுவிசேஷத்தில் இவ்வாறு சொல்கிறார்.

யோவான்.19.34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
35. அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிருஸ்துவின் கால் எலும்புகளை முறிக்க வந்த போர்சேவகன் ஒருவன் ஏதோ ஒரு உள்ளுணர்வினால் உந்தப்பட்டு அவரது விலாவில் ஈட்டியால் குத்துகிறான். அப்போது அங்கிருந்து ரத்தமும், தண்ணீரும் புறப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சியை யோவான் தன் கண்களால் காணவில்லை. ஆனால் இன்னொருவர் சாட்சியின் மூலமாக அதை அவர் அறிந்து,  நமக்கு அதை அப்படியே அறிவிக்கிறார்.
அந்த இன்னொரு சாட்சி யார்? என்பதை இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

1.யோவான்5.5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
6. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
9. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

அந்த இன்னொரு சாட்சி ஆவியானவர் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். இயேசு கிருஸ்து மட்டுமே ரத்தத்தினாலும், ஜலத்தினாலும் வந்தவர் என்பதையும், அது விசேஷித்த நிகழ்வு என்பதையும் அழுத்தி சொல்கிறார். அதுமட்டுமின்றி இந்த நிகழ்வு அவரை தேவனுடைய குமாரன் என உறுதிப்ப்டுத்துவதாகவும் கூறுகிறார். அதாவது உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களும் ரத்தத்தினால் மட்டுமே வந்தவர்கள். ஜலத்தினால் வந்தவர்கள் அல்ல என்பதையும்,  இயேசு கிருஸ்து மட்டுமே ஜலம், ரத்தம் என இரண்டினாலும் வந்தவர் எனவும் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இயேசுவின் சரீரத்தில் மற்ற மனிதர்களின் சரீரத்தில் இல்லாத ஜலம் என்னும் ஒரு திரவம் இருந்தது என அறிந்து கொள்ளலாம். இது ஈட்டியை குத்தின அந்த போர் வீரனின் மூலமாக பூமியில் சிந்தப்பட்டது.  இந்த நிகழ்வு ஆவியானவர் மூலமாக யோவானுக்கு அறிவிக்கப்பட்டு, யோவான் மூலமாக உலகிற்கு சொல்லப்பட்டது.

இயேசு கிருஸ்துவுக்கு சாட்சியாக பூமியில் இருப்பவை மூன்று. 1. அவர் சிந்திய ரத்தம் 2. அவர் உடலில் இருந்து வெளியான ஜலம் 3.பரிசுத்த ஆவி
பரலோகத்தில் சாட்சியாய் இருப்பது மூன்று 1. பிதா 2. மகிமையடைந்த மானுட சரீரம் கொண்ட இயேசு கிருஸ்து 3. பரிசுத்த ஆவி
இதில் ஆவியானது பரலோகத்தையும், பூலோகத்தையும் இணைக்கிறது

யோவான் வியந்து பேசும், ஆவியானவரே சாட்சி கொடுத்த இந்த நிகழ்வை பற்றி கிருஸ்துவர்கள் பலர் சொல்லும் கருத்தை பார்ப்போம்.

இவர்கள் சொல்வது என்னவென்றால், இந்த ஜலம் என்னும் திரவமானது எல்லா மனிதர்களின் இதயத்திலும் இருக்கும் என்றும், அங்கு குத்தப்பட்டால் ரத்தமெல்லாம் போன பிறகு அந்த திரவம் வெளியாகும் என்றும் அந்த திரவம் வெளியானது இயேசு கிருஸ்து இறந்து விட்டார் என்பதை உறுதிபடுத்துவதாகவும் சொல்கின்றனர்.  மருத்துவ ரீதியாக அவர் மரணமடைந்தர் என்பதற்கு ஆதாரமாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்கின்றனர்.

physician William Edwards and his colleagues supported the combined cardiovascular collapse (via hypovolemic  shock) and exhaustion asphyxia theories, assuming that the flow of water from the side of Jesus described in the Gospel of John was pericardial fluid  Some Christian Apologists  seem to favor this theory

மிகவும் அற்புதமான இந்த நிகழ்வை சாதாரண நிகழ்வு என்று சொல்லும் இவர்கள் வேத புரட்டர்களா என்பதை இதை படிப்பவர்கள் தீர்மானித்து கொள்ளட்டும்.

(இயேசு இறந்தார் என்பதை உறுதிபடுத்துவதாக இந்த நிகழ்வு உள்ளது என சொல்லும் போதகர்கள், இயேசு அனுபவித்த துன்பங்களை பற்றி சொல்லும் போது அவரது மார்பில் ஈட்டி குத்தப்பட்டதையும் மற்ற துன்பங்களோடு  சேர்த்து சொல்கின்றனர். இது தங்களுக்கு ஏற்றார் போல வேத வசனங்களை சிலர் எப்படி வளைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது)

யோவான் தன் சுவிசேஷத்தில் பலமுறை இயேசுவை ஒரே பேறான குமாரன் என சொல்கிறார். எல்லாரையும் கடவுள்தான் படைத்தார். எப்படி இயேசு மட்டும் ஒரே பேறான குமாரன் எனப்படுகிறார்? என சிலர் கேட்கின்றனர்.

யோவான் அவ்வாறு சொல்ல காரணம் அவருக்கு வெளிப்பட்ட மேற்கண்ட காரியமே என சொல்லலாம். ஏனெனில் சரீரத்தில் ஜலத்தோடு பிறந்தவர் இயேசு கிருஸ்து ஒருவர் மட்டுமே. அது மட்டுமல்லாது இயேசு கிருஸ்து தேவனுடைய வார்த்தையின் மூலம் பிறவாமல், அவரிடமிருந்து நேரடியாக, வார்த்தையாக பிறந்தார்.

போர் வீரன் அவரது விலாவை குத்திய போது, அவரது உடலில் தங்கியிருந்த கடைசி சொட்டு ரத்தமும் வெளி வந்தது, அதன் பிறகு ஜலம் வெளிப்பட்டு அவர் ஜலத்தால் வந்தவர் என்பது உலகிற்கு தெரிந்தது. "இருதயத்தில் இருந்து ஜீவ ஊற்று புறப்படும்" என்னும் வசனமும் கவனிக்கதக்கது.

ஜலம் என்னும் திரவத்தால் என்ன பயன்? என் அனுமானத்தின்படி இது அவரது உடல் அழுகி போகாமல் வைத்திருக்க உதவியிருக்கும் என்று கருதுகிறேன். அதாவது அவர் உயிர்தெழுந்து வருவதற்கு சாதகமாக, பிறக்கும் போதே அவரது சரீரம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. தீர்க்கதரிசனத்தின்படி அந்த போர் வீரன் ஈட்டியை குத்தியது, ரத்தம் முழுவதும் வெளியேறவும், அந்த திரவம் சுரந்து வரவும் ஒருவேளை உதவி செய்திருக்க கூடும்.

(தொடரும்)



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் (திருத்தியது) :

இயேசு கிருஸ்துவின் உயிர்தெழுதலை குறித்து பார்க்கும் முன் அவரது மரணத்தை குறித்த செய்தியை இன்னும் தெளிவாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

இயேசு கிருஸ்து தன் ஆவியை தேவனின் கையில் ஒப்பு கொடுத்தார். அவரது ஆவி அவரது உடலை விட்டு பிரிந்தது. ஆகவே அவர் மரணமடைந்தார்.

இயேசு கிருஸ்து சிலுவையில் அடைந்த உடல் ரீதியான துன்பத்தினால் மரணமடைந்தார். அவரது உடலின் இயக்கம் (இருதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவை) நின்று போனது. அதனால் அவரது சரீரத்துக்கும், ஆவிக்கும் உடனான தொடர்பு அற்று போனது. ஆவி தனியே பிரிந்தது. அவர் தலை சாய்ந்தது அவர் மரித்தார்.

ஆனால் அவரது மரணத்திற்க்கும் மற்ற மனிதர்களின் மரணத்திற்க்கும் வித்தியாசம் உண்டு.  அதை இப்போது பார்ப்போம்.

மரணத்தின் போது பல்வேறு செயல்கள் வரிசையாக நிகழ்கின்றன என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகின்றது. அப்போது இருதய துடிப்பும் ரத்த ஓட்டமும் நின்று போகிறது. அதன் பிறகு சில நிமிட நேரங்களிலேயே உடல் அழுக ஆரம்பித்து விடுகிறது. இதுவே எல்லா இறந்த உடலிலும் நிகழக் கூடியதாகும்.

கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு கிருஸ்துவின் உடல் அழுகி போகவில்லை என்பதை கீழ்காணும் வசனத்தில் இருந்து அறியலாம்.

அப்போ.நட.2.23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
(அது எப்படி எனில்,)
25. அவரைக்குறித்துத் தாவீது (இயேசு கிருஸ்து) : (யோகவா தேவனை) கர்த்தரை  எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி (மரணத்தினால் பாதிக்கப்பட கூடாதபடிக்கு) அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
26. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
27. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
28. ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29. சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
30. அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,
31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.

மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு  சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.

ஆகவே இயேசு கிருஸ்துவின் மரணம் என்பது ஆவி உடலை விட்டு பிரிந்தாலும், உடல் மட்டும் அழுகாமல் இருந்த ஒரு அதிசய நிலையாகும் என்பதை அறிய முடியும்.

அது எப்படி சாத்தியம்? ஆவி போனால் உடலும் மாறுதல் அடையுமே என சிலர் கேட்கலாம். ஆனால், தேவன் சர்வ வல்லமையுள்ளவர். இது போன்று அதிசயமான காரியங்களை செய்ய அவரால் கூடும். இது உலகத்திற்க்கு இதுவரை புலப்படாத ஒரு அற்புதம் ஆகும்.

(இதை பற்றி கிருஸ்துவ போதகர்கள் யாரும் விவரித்து சொன்னதாக தெரியவில்லை. ஏனெனில் இது கிருஸ்துவின் மரணத்தை கேள்விக்குரியதாய் ஆக்கி விடும் என்பதால் அவர்கள் ஒருவேளை சொல்லாமல் இருந்திருக்கலாம். உடல் அழுகி போவதை மரணம் என்று கொண்டால் அதை வைத்து இயேசு கிருஸ்து இறந்தவர் என சொல்ல முடியாததே இதற்கு காரணமாகும்)

(இதற்கு முன்பு நான் எழுதிய கட்டுரையில், உடல் அழுகி போகாமல் இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் இருக்க வேண்டும், இரத்த ஓட்டம் இருக்க வேண்டுமானால் இதய துடிப்பு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இயேசு கிருஸ்துவின் ஆவி பிரிந்த உடலில் இதய துடிப்பு இருக்க வேண்டும் என அனுமானித்திருந்தேன். அது ஒரு தெளிவற்ற கருத்தாய் இருந்த தாலும், இதை படித்த ஒருவர் நான் வேத புரட்டு செய்கிறேன் என சொன்ன தாலும், அதை பற்றி எனக்கு வேறு ஒரு வெளிப்பாடு கிடைத்த தாலும் இந்த திருத்திய கட்டுரை)

எப்படி இயேசு கிருஸ்துவின் உடல் மட்டும் அழுகி போகாமல் இருந்தது என பார்ப்போம். இதற்கு முன்பாக வேறு சிலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Friday 4th of January 2013 04:06:28 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

SANDOSH wrote:

FROM  TRUTH SPEAKS.ACTIVEBOARD.COM

அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.


 வாங்க சந்தோஷ்..எங்கே ரொம்ப நாளாக ஆளையே காணோம்..? அண்மையில் ஒரு முன்னாள் நண்பர் என்னைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை நானும் ஏற்றுக்கொண்டதாக வம்புவளர்த்தார்.இதே கருத்தை நமது தளத்திலும் பதித்திருக்கிறீர்களா என்று நான் அறியேன்.ஆனாலும் அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் தேடியந்திரத்திலிருந்து உங்கள் கட்டுரையைக் கண்டுபிடித்தேன்.நீங்கள் எழுதியிருப்பது அப்பட்டமான வேதப்புரட்டாகும்.இது உங்கள் சொந்த கருத்தாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். அல்லது இதனை இணையத்திலிருந்து வேறு மொழியில் வாசித்த காரியங்களில் தாக்கம் எனில் அதன் தொடுப்பைத் தரவேண்டுகிறேன்.நன்றி.

பின்குறிப்பு:

உங்களுடைய தளத்தின் தொடுப்பு இங்கே ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

FROM  TRUTH SPEAKS.ACTIVEBOARD.COM

அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பின்வரும் கட்டுரையை எச்சரிக்கையுடன் வாசிக்கவும்; ஒருவேளை நீங்கள் வஞ்சிக்கப்படவும் வாய்ப்புண்டு...

இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் :

இயேசு கிருஸ்துவின் உயிர்தெழுதலை குறித்து பார்க்கும் முன் அவரது மரணத்தை குறித்த செய்தியை இன்னும் தெளிவாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தின் மூலம் இஸ்லாமியர்கள் சொல்வது என்னவெனில்,

இயேசு கிருஸ்துவின் உடல் தேவனால் (பல்வேறு நிகழ்வுகளின் மூலம்) விசேஷித்த விதமாக பாதுகாக்கப்பட்டது. அதனால் சிலுவையில் அவர் மரணடையவில்லை. என்பதே.

நாம் சொல்வது என்னவெனில்,

இயேசு கிருஸ்து தன் ஆவியை தேவனின் கையில் ஒப்பு கொடுத்தார். அவரது ஆவி அவரது உடலை விட்டு பிரிந்தது. ஆகவே அவர் மரணமடைந்தார்.

இயேசு கிருஸ்து சிலுவையில் அடைந்த உடல் ரீதியான துன்பத்தினால் மரணமடைந்தார். சில நிமிட நேரம் அவரது உடலின் இயக்கம் (இருதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவை) நின்று போனது. அதனால் அவரது சரீரத்துக்கும், ஆவிக்கும் உடனான தொடர்பு அற்று போனது. ஆவி தனியே பிரிந்தது. அவர் தலை சாய்ந்தது அவர் மரித்தார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே,

அவரது உடல் உயிருள்ள உடலை போல இயங்க ஆரம்பித்து, பிறகும் இயங்கி கொண்டிருந்தது என்பதே வேதத்தின்படி நாம் அறிவதாகும்.

ஏனெனில் அவரது உடலை அழிவில் இருந்து பாதுகாப்பதாக தேவன் வாக்கு செய்திருந்தார்.

இவ்வாறு அழிவில் இருந்து பாதுகாக்கபட வேண்டும் எனில் உடலின் இயக்கம் அதிக நேரம் நின்று போக கூடாது. அவ்வாறு நின்று விட்டால் உடல் அழுகிப் போக ஆரம்பித்து விடும். உடல் நாற்றமடிக்க ஒரு நாள் ஆகலாம். ஆனால் அழுகி போவது என்பது சில நிமிடங்களிலேயே ஆரம்பித்து விடும் ஒரு நிகழ்வாகும். ஆகவே தேவன் அவரது உடல் உடனே இயங்கும்படி வைத்திருந்தார்.

இவ்வாறு இயங்கி கொண்டிருக்கும் நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவே, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

1. இரத்த ஓட்டம் சீராகும்படி அவரது இருதயத்தில் குத்தப்பட்டது.

2. இயேசு கிருஸ்துவின் ஆதரவாளரான நூற்றுக்கு அதிபதியின் மூலம் அவர்  மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. (அதாவது அந்த அதிபதி பொய் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அல்லது அவர் உடலின் இயக்கம் நின்று விட்டது என அவன் நம்பும்படி தேவன் செய்திருக்கலாம்.)

3.அவரது உடல் வழக்கத்தை விட குறைந்த நேரத்திலேயே சிலுவையில் இருந்து இறக்கப்பட்டது.

4. அவரது காலெலும்புகள் முறிக்கப்படவில்லை.

5. அவரது உடல் பல்வேறு மூலிகைகள் கொண்ட துணியால் சுற்றப்பட்டது.

6. நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டது.

7. அவரது உடல் அழியவில்லை (அழியாது) என்பதை அறிந்திருந்த பெண்கள் அவர் உடலுக்கு சுகந்த வர்க்கமிடும்படி அதற்கானவைகளை எடுத்து வந்திருந்தனர். (ஏதாவது அற்புதம் நடந்து குகைக்கு உள்ளே தாங்கள் செல்ல முடியும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு உண்டு)

மேகண்ட ஏழு காரியங்களிலும் யாருக்காவது, ஏதாவது சந்தேகம் இருந்தால் இஸ்லாமியர்களை கேட்டு பாருங்கள். அவர்கள் இதை பற்றி வேத வசன ஆதாரத்தோடு தெளிவாக விளக்குவார்கள். அதனால் நாம் நமது நேரத்தை இதற்காக விரயம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

(ஆனால் அனேக கிருஸ்துவர்கள் இந்த வேத வசன ஆதாரங்களை நம்ப மாட்டார்கள். இயேசுவின் மரணம் சாதாரண மனிதனின் மரணம் போன்றது எனபதை நிரூபிப்பதே அவர்களின் தேவையாய் இருக்கிறது.)

ஆகவே இயேசு கிருஸ்துவின் மரணம் என்பது ஆவி உடலை விட்டு பிரிந்தாலும், உடல் மட்டும் இயங்கி கொண்டிருந்த ஒரு அதிசய நிலையாகும் என்பதை அறிய முடியும்.

அது எப்படி சாத்தியம்? ஆவி போனால் உடலும் மாறுதல் அடையுமே என சிலர் கேட்கலாம்.

ஆனால்,

தேவன் சர்வ வல்லமையுள்ளவர். இது போன்று அதிசயமான காரியங்களை செய்ய அவரால் கூடும். இது உலகத்திற்க்கு இதுவரை புலப்படாத ஒரு அற்புதம் ஆகும்.

இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்ததனால் கடைசியாக நடந்தது என்னவெனில்,

1. அவரது மாமிசம் கூட அழிந்து போகவில்லை அதை தேவன் பாதுகாத்தார்.

2. அவரது ஆவியும் பிற மனிதர்களின் உள்ளே வாசம் செய்யும் வரம் பெற்று, அவரது உடலில் திரும்ப பிரவேசித்தது.

3. சிலுவை அவரது தெய்வத்தன்மையை ஒன்றும் செய்ய முடியவில்லை.  இன்னும் சொல்லப் போனால் அவரது உடலை கூட ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

4. சிலுவையில் கொல்லப்பட்டதோ, உலக மனிதர்களுக்குள் இருந்த சாத்தானுக்கு கீழ்ப்பட்டிருந்த பாவ சுபாவமான மனுஷனே. இவ்வாறு சிலுவையில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதுவும் தேவன் செய்த மிகப் பெரிய அற்புதமாகும்.

5. மரண பரியந்தமும் அவர் தேவனுக்கு கீழ்ப்படிந்ததனால் அவரது தேவ அன்பு, பக்தி உலகிற்க்கு உணர்த்தப்பட்டது. அவர் பிதாவாகிய தேவனின் சகல ஆசிர்வாதங்களுக்கும் சொந்தமானார். அவர் கிருஸ்துவாக ஆனார். அவரை தேவன் தனதளவில் (தனக்கு இணையாக) உயர்த்தி கொண்டார்.

6. தன் சகோதரர்களுக்காக தன் உயிரையும் இழக்க துணிந்ததின் மூலம், இழந்ததன் மூலம் அவர் பிற மனிதர்கள் மேல் கொண்டிருந்த அன்பு உலகிற்க்கு உணர்த்தப்பட்டது. அவரது அன்பின் ஆழம் பிற மனிதர்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியது.

7. அதுவரை ஆடுகளாய் இருந்த அவரது சீடர்கள், அவரது ஆவியை பெற்ற பிறகு சிங்கங்களாக மாறினார்கள். சுவிசேஷம் காட்டுத் தீயை போல பரவியது. அற்புதங்கள் நடைபெற்றன. மனிதர்கள் தேவ வசனத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

8. அவரது வசனத்தையும், ஆவியையும் ஏற்றுக் கொண்ட அனேக மனிதர்களின் பாவ மனுஷன் அழிக்கப்பட்டான். அவர்கள் புதிய சிருஷ்டியாக ஆனார்கள்.

9. அதுவரை மனிதர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாத்தான், தனது ஆதிக்கத்தை கிருஸ்துவிடம் இழந்தான். அவன் தோற்று போனான். அவனது கிரியைகள் அழிக்கப்பட்டன.

10. பிதாவாகிய தேவன் பிற மனிதர்களுக்கு நன்மை செய்யும், அவர்களை உயர்த்தும் தன் நோக்கத்தை சிலுவையின் மூலமாக இயேசு கிருஸ்துவில் நிறைவேற்றினார்.

சுருக்கமாக இயேசு கிருஸ்து சிலுவையில் வெற்றி சிறந்தார். தோற்றது சாத்தானும், அவனது கிரியைகளுமே.

இதை நாலுவரியில் (இன்னொரு மார்க்கத்தை பற்றி சொல்லும் புத்தகத்தில் அவ்வளவுதான் இடம் ஒதுக்க முடியும்) தெளிவாக சொல்லும் குரானின் வசனங்கள்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், "அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை.

மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:156-158)

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார்.

(அல்குர்ஆன் 43:61)

 

பிற மதத்தினரோடு விவாதம் என்று வரும் போது, பிற மத மக்களே வேதத்தில் உள்ள நிகழ்வுகளை வேத வசன ஆதாரத்தின்படி சரியாக எடுத்து காட்டும் போது, அது அப்படியல்ல, இது அப்படியல்ல என வேதத்திற்க்கு முரண்பாடாக கிருஸ்துவர்களே பேசும் போதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இயேசுவின் உடல் அழியவில்லை, அதை தேவன் பாதுகாத்தார் என வேத வசன ஆதாரங்களோடு சொல்லும் இஸ்லாமியர்களுக்கு,

உங்கள் கருத்து சரியே. ஆனால் இவ்வளவு வேத வசனங்களை சரியாக ஏற்றுக் கொண்ட நீங்கள் அவர் தனது ஆவியை பிதாவின் கையில் ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? அதையும் ஏற்றுக் கொண்டாலே அவரது மரணம் பற்றின புதிர் விளங்கும்.

சில ஆட்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால் தானாகவே காணாமற் போவார்கள் என்று விட்டுவிடுகிறோம்..அவர்களோ தங்களைப் பெரிய அறிவாளிகளாகவும் தங்களைக் கேட்க யாருமில்லை என்றும் நினைத்துக்கொள்ளுகிறார்கள்.இப்படிப்பட்டவர்களைக் குறித்து உடனுக்குடன் எச்சரிப்பதே நம்முடைய முக்கியமான பணியாகும். அப்படி நாம் கழட்டிவிட்ட இன்னொரு நபர், பின்வரும் தரும் தொடுப்பில் இருக்கிறார். இவர் தனக்கு மரணமே இல்லையென்றும் சர்வ வல்ல தேவன் வேறு வல்லமையுள்ள தேவன் வேறு எனும் கொள்கையுடையவர். மேலும் இயேசுவானவர் சிருஷ்டிக்கப்பட்டவரே எனவும் நம்புகிறார். இதுபோன்ற தளங்களில் நேரம் செலவழிப்பதாலோ அங்கு விவாதிப்பதாலோ ஒரு பயனும் இல்லை.மாறாக தேவகோபத்துக்கும் ஆளாக நேரிடும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard