அரசர்கெல்லாம் அரசர் அடிமைக்கு அடிமையானார்;அரசவைகளைக் கலங்கச் செய்தார்.உலகத்திலே தோன்றிய மகான்களில் ஒருவர் அல்ல;தத்துவ ஞானிகளில் ஒருவர் அல்ல.மடங்களின் பீடாதிபதியும் அல்ல;மாடங்களின் மாமன்னனும் அல்ல.வாதங்கள் செய்ய வந்தவர் அல்ல;வதம் செய்ய வந்தவர்,எதிரிகளை.வேதங்கள் தந்த வேதனையைப் போக்க வந்தார்;வேதத்தைக் கொண்டே பேதங்கள் கொன்றார்.புரிந்தார் புரியாதவர் பரிந்தவரை புரிந்திடவே இத்தரையில் வந்தார்.அறிந்தார் அறியாதவர் அறிந்திடவேவருந்தியழைத்தார் தம்மிடம்.தெரிந்தார் தெரியாதவர் தெரிந்திடவேதெரிந்துகொண்டார் தம் சீடரை.மனத்துக்கண் மாசிலன் ஆதல் சாத்தியமாக்கினார்.சத்தியத்தை நித்தியமாக்கினார்.அடைந்தார்க்கு படைக்கலனாவார்படைப்புக்கெல்லாம் விடையுமானவர்.நிறைகுடம் ததும்பாது ததும்பும்குறைகுடம் நிரம்பாது நிற்கும்.கல்லெடுத்து சிலைவடித்தவன்வில்லெடுத்து விலைகொடுத்தான்.சிலுவையெடுத்த எம்பெருமான் ஈனச் சிலுவையெடுத்த என் ஆசான்மானம் பாராது வானம் பார்த்த சிலுவைதனைஏணியாக்கி ஏறிச்சென்றார் விண்ணகம்.மீண்டும் வருவார் மீண்டவர் மீட்டிடவிண்ணிசை மீட்டிட.
(மூலம் :- http://yauwanajanam.activeboard.com/t52028959/topic-52028959/ )