அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தவறாது பார்வையிடுவோர் ஒருவித பிரமிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு.எப்படியெனில் தேசத்தில் அனைவருக்கும் கல்வியறிவு கிடைத்துவிட்டது போலவும் குடிநீர்,சாலைகள், தெருவிளக்கு,சுகாதார வசதிகள் உட்பட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது போலவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகிவிட்டதால் டாஸ்மாக் கடையில் வியாபாரமே இல்லாததுபோலவும் சினிமா தியேட்டர்களும் விபச்சார - கேளிக்கை விடுதிகளும் இழுத்து மூடப்பட்டுவிட்டதைப் போலவும் சமுதாயமே குணசீலர்களால் நிரம்பியிருப்பதைப் போலவும் அந்த விளம்பரங்களால் ஒருவித மயக்கம் ஏற்படும். ஆனால் உண்மையில் தேசம் புழுத்து - நொதித்து போயிருப்பது சமுதாயத்தின் நிலைமைகளை உற்றுநோக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும்.
அதுபோலவே கிறிஸ்தவமும் மீடியாவில் ”சலம்பல்” பண்ணிக்கொண்டிருக்கிறது.ஆனால் உண்மையில் சபைகளில் ஒருவித மந்தத்தன்மையே நிலவுகிறது. ஒருவருக்கொருவர் உண்மையான புரிதலோ உறவோ இல்லாமலே இருக்கிறது. கள்ளத் தொடர்புகளும் விவாகரத்துக்களும் சகஜமாகிவிட்டது. இங்கே விவாகரத்து செய்த ஒருவர் பிரபலமானவராகவோ பெரும் பணக்காரராகவோ இருந்துவிட்டால் அவரை அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ள கேயாசிகள் ஆயத்தமாக இருக்கிறார்கள். சுயதிருப்தியும் சுயநலமும் பெருகியிருக்கிறது.சுயமறுப்பும் ஆத்தும பாரமும் இல்லவே இல்லை.
திறப்பின் வாயிலில் நிற்பதைக் குறித்து சரியான போத்னையில்லாமலே திறப்பில் நிற்க பொது இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்படுகிறது. விளம்பர ஏஜென்ஸிகளுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களை ஒப்பந்தம் பேசி விளம்பரம் செய்யப்படுகிறது. அரசு பேருந்துகளிலும் பொது இடங்களிலுமிருந்து திறப்பின் வாயிலில் நிற்க விருத்தசேதனமில்லாதோரை அழைக்கும் குருட்டு போதகர்களையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையுமே இன்றைக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் பெருமைக்குரிய தலைவர்கள் என கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தேவையானது என்ன, எனும் அறிவே ஒருத்தருக்கும் இல்லையே..!!!
இந்நிலையில் அரசு விளம்பரத்தைப் பார்த்து நாம் அலட்டிக்கொள்ளாமல் நம்மை நாம் நொந்து கொண்டு அன்றாடப் பாடுகளில் மூழ்குவதைப் போலவே மீடியா மிருகஙகளின் கூத்துக்களைப் பார்த்து பெருமூச்சுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்...