" லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்." (அப்போஸ்தலர்.14:8,9,10)
இந்த வசனத்தை மையமாக வைத்து அண்மையில் ஒரு சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் மூலம் ஜெப உதவிகேட்டு வந்த ஒரு சகோதரி என்னைப் பற்றி அவர்களிடம் புகார் செய்தார்களாம். அவர்களுடைய மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமாம். அதை இயேசுநாதர் அருளித் தந்து தனது சக்தியை நிரூபிக்கவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் ஜெபிக்கத் துவங்கியதிலிருந்து (மூன்று மாதத்துக்குள்) ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. எனவே சலிப்புற்ற அவர் என்ன சார் என்று கேட்டார். தாமதத்துக்கான காரணமாக, முழுமையான அர்ப்பணத்தையும் விசுவாசத்தையும் வலியுறுத்தி வைராக்கியத்துடன் சில வார்த்தைகளைக் கூறினேன். உதாரணமாக முனீஸ்வரன் - கருப்பசாம -ி காளி போன்ற துஷ்ட தேவர்களை வணங்குகிறவர்கள் ஒரு காரியத்தை அறிகிறதில்லை. கருக்கலைப்புக்குக் காரணமான அந்த தெய்வங்களிட்மே மீண்டும் மீண்டும் சென்று மன்றாடுகிறார்களே என்று சொன்னேன். இல்லை என் மருமகன் ஐயப்ப பக்தர் என்று சொன்னார்கள். சரியா போச்சு அவருக்கு பெண்களே ஆகாதே, அவர் எப்படியம்மா, பிள்ளை பாக்கியம் தருவார்... (என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு..) சரி கொஞ்சம் பொறுமையா இருங்க, ஆண்டவர் அற்புதம் செய்வார், அப்படியும் பிறக்கும் பிள்ளையை சாயிபாபாவுக்கோ திருப்பதிக்கோ படைப்பார்கள் என்று அவர்கள் விசுவாசி என்று நம்பி சொன்னேன். ஆனாலும் அவர்களுடைய மருமகன் ஐயப்பனை வணங்குவதை நிறுத்தினாலே குழந்தை பிறக்கும் என்று சொல்லவில்லை. அவர்களுடைய விசுவாசத்தை தடுமாறப்பண்ணாமல் ஜெபிப்போம் என்றே சொல்லியிருந்தேன். ஆனாலும் அவர்கள் என்னைக் குறித்து, அவர் இந்து விக்கிரகங்களை எடுக்கசொல்லுகிறார் புகார் செய்திருக்கிறார்கள்.
நான் சொன்னேன், சிஸ்டர் எல்லோரும் அற்புதம் நாடி ஆண்டவரிடம் வருகிறார்கள்.ஆனாலும் வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா, ஒரு மனுஷனிடம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் இருக்கிறதா என்றே பார்க்கிறது. அவர்களால் ஒரு வேளை விக்கிரகங்களையெல்லாம் எடுத்துப்போட்டு ஆண்டவரிடம் வரமுடியாமலிருக்கலாம், ஆனாலும் அவர்களுடைய மனதை ஆண்டவர் பார்க்கிறார்,அவர்களுக்குள் ஆண்டவரைக் குறித்த மெய்யான அன்போடு கூடிய விசுவாசம் இருக்குமானால் அற்புதம் நிச்சயம் நடக்கும். மற்றபடி இங்குமங்கும் நாலு இடத்தில் அப்ளிகேஷன் போட்டுவைத்து எப்படியாவது காரியத்தை சாதித்துக்கொள்ளவேண்டும் எனும் இந்திய பக்தி முயற்சி எந்த நன்மையைப் பெறவும் உதவாது. சர்வ வல்லவரான நம்முடைய ஆண்டவரைப் பொறுத்தவரை வலியவந்து ஒரு மனிதனுக்கு அற்புதம் செய்து தம்முடைய வல்லமையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினேன். அந்த புறவின சகோதர இறுதியாக, இதோடு போதும் சார்,முடிச்சுக்குவோம் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன விளையாட்டோ நமக்குத் தெரியவில்லை. அவர்களிடம் நல்லவேளையாக நாம் லேகிய வியாபாரி போல காசு எதுவும் வாங்கவும் இல்லை, நேர்த்தி கேட்கவுமில்லை..
கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட ஏதேனும் சொந்த அவசியங்களுக்காக ஆண்டவரிடம் சேரும் சுயநலப் போக்குடன் நமது விசுவாசத்தை நடத்தாமல் அன்பின் அடிப்ப்டையிலேயே நம்முடைய விசுவாசத்தை நிறைவேற்றுமாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)