”எழுந்து கட்டுவோம்” (Riseup & Build) எனும் கிறிஸ்தவ மாத இதழின் தலையங்கத்திலிருந்து...
"ஆமை பிடிக்கலாம் வாருங்கள்" என்று சில வேடர்கள் பேசிக்கொள்ளுவதை ஆமை ஒன்று ஒட்டுக்கேட்டது; வேடர்களிடமிருந்து தப்பிக்க இரண்டு கொக்குகளின் உதவியை நாடியது,ஆமை. என்னை பிடிக்க வேடர்கள் வருகிறார்கள், ஒரு குச்சியை உங்கள் அலகுகளில் இருவரும் பிடித்துக்கொண்டால்,நான் அதைக் கவ்விக்கொண்டு,பறந்து தப்பிவிடலாம்..” என்றது.கொக்குகள் பரிதாபப்பட்டு ஒப்புக்கொண்டன.
கொக்குகள் வானத்தில் பறக்க,ஆமை ஜாலியாகத் தொங்க, அதைக் கண்ட மக்கள்,”எத்தனை சாமர்த்தியமான பறவைகள்,இவைகள்...ஆமையைத் தூக்கிக்கொண்டு செல்லக்கற்றுக்கொண்டுவிட்டன..” என்றார்கள். ஆமை சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டியது தானே,”இது இவர்களுடைய யோசனை இல்லை,இது என் ஐடியா...” என்று பெருமையுடன் கூறியது. தொப்பென்று தரையில் விழுந்து மாண்டது..!
இதைப் போலவே பேசக்கூடாதவைகளைப் பேசி நம்மிலே பலர் செமையாக வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறோம். பேசவேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பதைவிட பேசக்கூடாதவைகளைப் பேசுவது பல விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
(இந்த தலையங்கமானது இம்மாத பத்திரிகையில் “கேட்பதில் வேகம் பேசுவதில் தாமதம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.முழுவதும் வாசிக்கவேண்டுமானால் அந்த பத்திரிகையை தேடி வாசிக்கவும், வாசித்தோரும் தமது அனுபவத்தை தாராளமாக பகிர்ந்துகொள்ளலாம்.)