நெஞ்சே நீ கலங்குவதேனோ நெஞ்சே நீ தவிப்பதும் ஏனோ ஒருதரம் கூட உன்சுமை தாங்க கருணையின் தேவன் தயங்குவதில்லை - 2
தளர்ந்திடும் போது தாங்கிடும் தூயவர் தூய பாதை காட்டுவார் கலங்கிடும் போதில் காத்திட வல்லவர் கவலை எல்லாம் மாற்றுவார் கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட தேவன் கரங்களை நீட்டுவார் - 2 அந்த பாவம் யாவும் பறந்தோட என்றும் வாழ்வில் நன்மைகள் கூட நல்லபாதை சொன்னவர் இயேசு இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்
பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவாராக சிறந்த வழியை சொல்லுவார் நிறைந்த அன்பால் காலமெல்லாம் தெளிந்த அறிவை ஊட்டுவார் என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார் இன்று புது பாதை காட்டுவார் அந்த பாவம் யாவும் பறந்தோட என்றும் வாழ்வில் நன்மைகள் கூட நல்லபாதை சொன்னவர் இயேசு இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்
__________________
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்