Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபைக்கும் தேவையான தகுதி?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
கிருபைக்கும் தேவையான தகுதி?
Permalink  
 


அன்பு நண்பரே..
"கிருபை" எனக்கு மிகவும் பிடித்தமான வார்த்தை... மகத்துவமான நம் தேவனின் அழகான சுவாபம்..
நாம் பொதுவாக  தாவீது ராஜா ,ஊதாரி மைந்தன்,எசேக்கியா ராஜா ,மனாசே ராஜா என்பவர்களை நோக்கும் போது ..
கிருபை பெற தன்னை தாழ்த்தி தேவனிடத்தில் வேண்டும்படியான விசுவாசமும்,தாழ்மையும்,புத்தியும்,உண்மையும் அவசியம் என எண்ணலாம். உண்மையில் தேவ கிருபை சிருஷ்டிப்பு அனைத்துக்குமானது .. தேவன் பூரண சற்குணர் என்பதை நாம் தாம் அறிந்துள்ளோமே!!

அனாலும் தேவன் இரக்கம் பாராட்டுவதும்,கோபாக்கினை அளிப்பதும் அவரது சித்தபடியானதே!! 
பின்வரும் வசனங்களை பாருங்கள்..
யாத்திராகமம் 33:19 அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்..

ரோமர்9 :15.16அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

இப்படியாக தேவன் சொன்னாலும் தேவனை அறிந்தவர்கள் சகலதியும் அறிவார்கள் என்பதாக உள்ள வசனத்தை அறிந்தால் பின்வருமாறு நாமும் கூற முடியும்..  

யாத்திராகமம் 34:6 கர்த்தர்கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

I நாளாகமம் 16:34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. என்று!!
ஆனாலும் தேவன் அனைவருக்கும் கிருபை பாராட்டினாலும், அவனவனுடைய கிரியைக்கு தக்கதாய் தமது கிருபையை காக்கிறார் அல்லது கிருபையை காத்துக்கொள்ள கிருபை செய்கிறார்..
II நாளாகமம் 6:14 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

நெகேமியா 1:5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,

சங்கீதம் 25:10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
கிருபையை காத்துகொள்ளாத துன்மார்கர் பூரணகிருபை வரமான நித்திய ஜீவனை பெறாமல் போவர். பெற்ற கிருபையை போற்றி காத்துகொள்ளுபவர் அதனை பெற்றுகொள்வர்.. 

ஆகவே.,

கிருபையை பெற தகுதி தேவை இல்லை.. காத்துக்கொள்ள தகுதிகள்  தேவை.. இழந்த கிருபையை மீண்டும் பெற மேற்கூறிய குறைந்த பட்ச  தகுதிகள்  தேவை என சகோதரர் அறிவாராக!!
-----------------------------------------------------------------------------
II கொரிந்தியர் 8:9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

 



-- Edited by JOHN12 on Wednesday 30th of May 2012 04:27:44 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட ஊழியத்தின் தலைவர் இவ்வாறாக கூறினார்?

இன்று அநேகர் "கிருபை" என்றால் தகுதி இல்லாதவனுக்கு கொடுக்கப்படும் இரக்கம் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி சொல்பவர்கள் மதிகேடர். தேவனுடைய கிருபையை பெற ஒரு மனிதனுக்கு பலவித தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

 

ஆகவே,

ஒரு மனிதன் தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ள அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard