கைப்பிரதி ஊழியம் ஒரு சிறந்த ஊழியமாகும். அதன் மேன்மை அதன் மூலம் இரட்சிக்கப்பட்டோருக்கே தெரியும். வளவளக்காத எளிமையான சொற்களால் நற்செய்தியை விரைவாக எடுத்துச்செ(சொ)ல்லும் ஒரு முயற்சி.
கவனத்தை ஈர்க்கும் ஒரு தலைப்பு. பொருத்தமானதொரு வரைபடம். நச்’ சென்று ஒரு குட்டிக்கதை. தொடர்புள்ள வசனம். அர்ப்பணத்துக்கான அழைப்பு
- ஆகியவையே ஒரு கைப்பிரதியின் உள்ளடக்கம்.ஆனால் அதை ஒருவ்ர் ஒரே முறையேனும் படித்துவிட்டாரானால் அஃது அவருக்குள் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள் ஏராளம்..ஏராளம்..!
எவருடைய நம்பிக்கையையும் புண்படுத்தாத இயேசுவை மாத்திரமே மையமாகக்கொண்ட வாசகங்கள் கொண்ட கைப்பிரதி தனது நோக்கத்தை விரைந்து நிறைவேற்றுகிறது. வாசிக்கப்படும் கைப்பிரதிகளைக் காட்டிலும் கொறித்துவிட்டு வீசியெறியப்படும் கைப்பிரதிகள் அதிகம். ஆனாலும் இந்த ஊழியம் எத்தனையோ நவீன சாதனங்களின் வருகைக்குப் பிறகும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கைப்பிரதியின் முக்கிய வாசகர் பெரியவர்கள் அல்லர். சிறியவர்களே. அவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் குதூகலத்துடன் வாங்கிக்கொள்ளுவார்கள். அதை வாங்கியதன் நற்பயனே அவர்களை ஏதாவது ஒரு கட்டத்தில் கர்த்தரின் அன்பினால் ஆட்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.
எனக்கு பேச்சுத்திறமையில்லையே, ஊழியம் செய்ய யாரும் அழைக்கவில்லையே, ஊழியத்துக்கு போதுமான பணமில்லையே என்று யோசித்துக்கொண்டிருப்போரும்கூட அர்ப்பணமும் ஆர்வமும் மாத்திரம் இருந்தால் போதும் இன்றே இப்போதே ஊழியத்துக்கான களம் ஆயத்தமாக இருக்கிறது.இந்த களம் காலங்களுக்கும் எல்லைகளுக்கும்
வால் போஸ்டர் வேண்டாம்,ஒலிபெருக்கி வேண்டாம், இசைக்கருவிகள் வேண்டாம்,காவல்துறையின் அனுமதி வேண்டாம், மாற்று மதநம்பிக்கையாளர்களின் எதிர்ப்பு பற்றியும் கவலைவேண்டாம். உங்களுக்கு அருகிலுள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலோ அல்லது எந்தவொரு பொது இடத்திலும் உடன் பயணிப்போருக்கும் கூட ஒரு கைப்பிரதியைக் கொடுக்கலாம். கைப்பிரதியை கொடுக்கும் முன்பதாக அவர்களுடன் இணக்கமானதொரு நட்பை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். விடைபெறும்போது கொடுத்தாலும் போதும். மற்றதை ஆவியானவர் பார்த்துக்கொள்ளுவார்.
நம்முடைய ஆணடவர் சொன்னார்,
மாற்கு 8:38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
எனவே கைப்பிரதி ஊழியத்தைக் குறித்து கொஞ்சமும் வெட்கப்படாமல் இன்றே தீர்மானித்தால் உங்கள் கைப்பையில் அட்லீஸ்ட் பத்து கைப்பிரதியாவது ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வாகனத்தின் மூலம் அலுவலகத்துக்குச் செல்லுவோர் உங்கள் பெட்ரோல் டேங்க்கிலுள்ள பையில் எப்போதும் கைப்பிரதிகளை வைத்துக்கொள்ளலாம். சிக்னலில் - வண்டி நிற்கும்போது ஆட்டோ மற்றும் கார் டிரைவருக்கோ, பெட்ரோல் பங்கில் பணியாளருக்கோ கூட ஒரு கைப்பிரதியைக் கொடுத்துவிட்டு ஓடிவிடலாம்.
எங்கே கைப்பிரதி கொடுக்கும் ஊழியர்களே ஆயத்தமாகிவிட்டீர்களா ? வெற்றிகரமான அறுவடைக்கு வாழ்த்துக்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)