இது போன்ற விளம்பரங்கள் தேவனை அறியாத ஜனத்திற்கு சலிப்பையும், கிறிஸ்தவத்தைக் குறித்த அவநம்பிகையையுமே உண்டு பண்ணும்.
இதை செய்தவர்கள் யார் என்றும் , அதன் நோக்கம் என்னவென்றும் நமக்கு தெரியாது(?) இருப்பினும் சத்திய தேவனை சத்தியமல்லாத எந்த முறையிலும் அறிமுகபடுத்துவது தவறே.
இது போன்ற காரியங்கள் எதிரிகள் நம்மை ஏளனம் செய்ய ஏதுவாய் அமைந்துவிடுகிறது. ஜெபிப்போம்.
கடந்த வருடத்தின் இறுதியில் நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது ஆயத்தமா என்று கூறி ஒரு நாளையும் கிழமையையும் விளம்பரத்தி சென்னை நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாகனம் சுற்றி வந்தது.அந்த நாளும் இதோ நெருங்கிவிட்டது. இப்போது நிலைமை எப்படி ? நாள் குறித்தவரின் நிலைமையும் அதைப் பார்த்து அஞ்சியவர்களின் நிலைமையும் இதெல்லாம் டூப் பென்று அக்கிரமங்களைத் தொடருவோரின் நிலைமையும்...சிந்திப்போம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)