பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ்’ என்று பெயர்.
எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.
அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்!
நீங்கள் வேண்டியதை அடைய வேண்டுமென்றால் கீழே உள்ள பாடி லாங்குவேஜ் பற்றிய எளிய குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். பெரியவருடனோ, சிறியவருடனோ, கணவருடனோ அல்லது நண்பருடனோ, உங்கள் முதலாளியுடனோ அல்லது உங்களோடு வேலை பார்ப்பவருடனோ, இக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்கள் சொல்வதை அவர்களை கேட்கச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கே!
மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.
மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.