இது வதனநூல் தளத்திலிருந்து பெறப்பட்ட தொகுப்பாகும்.
Golda Jasmine
Recently a minister said that Angel TV is "strange fire" and soon God's fire will consume them and their followers! This lack of discernment made me very sad ofcourse. He was speaking against one particular spiritual experience of Sadhu. Anyway, DGS Dhinakaran had such kind of spiritual experiences. Is he false then? Sadhu Sundar Singh also had many spiritual experiences, is he false then??
Yauwana JanamPrabhu Priya /// Sister GJ@ Golda Jasmine: If Sadhu is false, then Sadhu Sundar Singh and DGS are also false. Agree? // What is the relationsip with Sadhu-Sadhu Sundar Singh-DGS? Why you compare them all? If SSG-DGS are wrong (imagine)...then sadhu can also be worng? So sadhu is following SSG-DGS? ///
சத்தான-முத்தான கேள்விகள்,நண்பரே... இவையெல்லாம் தனிப்பட்ட அனுபவங்கள் என்பதால் போதனையாகவோ உபதேசமாகவோ உரைக்கப்படக்கூடாது. முக்கியமாக ஏஞ்சல் டிவியின் முதலாளி போன்ற ஹைடெக் சாதுக்கள் சாது சுந்தர்சிங் போன்றவர்களின் அனுபவங்களோடு ஒப்பிட்டால் அவர்களுடைய கால் தூசிக்கும் பெறுமதியானவர்கள் அல்ல. டிஜிஎஸ் அவர்கள் ஒருபோதும் ஏஞ்சல் டிவி முதலாளியைப் போல தனது அனுபவங்களை மேன்மைபடுத்தியதில்லை. தனது தீர்க்கதரிசனங்களைக் குறித்து தம்பட்டம் அடித்ததுமில்லை.அப்படியே தம்பட்டம் அடித்தாலும் அது அவருடைய 40 வருட ஊழிய அனுபவத்துக்கு தகும்.ஆனாலும் டிஜிஎஸ் அவர்களுடைய தரிசன அனுபவத்தைவிட ஏஞ்சல் டிவி முதலாளியின் அனுபவமே உயர்ந்ததாம்.எப்படியெனில் டிஜிஎஸ் தனது தரிசனத்தில் பிதாவாகிய தேவனைப் பார்க்கவில்லை.ஆனால் ஏஞ்சல் டிவியின் முதலாளி அப்பட்டமாக புளுகினார் என்பது உலகறிந்த ரகசியமாகும்.
எல்லாரிடமும் ஆதாரம் கேட்கும் கோல்டா மேடம் ஏஞ்சல் டிவியின் முதலாளிகளிடம் மட்டும் ஆதாரம் கேட்கமாட்டார்.அப்படியே கேட்டாலும் அந்த ஆள் என்ன சொல்லுவார் தெரியுமா, “நீ தரிசனம் பார்த்தியா,நான் பார்த்தேன்,அதனால சொல்றேன்,பார்க்காத நீ பார்த்த என்னை பார்த்து கேள்வி கேட்கக்கூடாது,கேட்டா உன் நாக்கு அழுகிடும்...” இது அவரது பிரபலமான மிரட்டல் ஆகும்.
Yauwana JanamGolda Jasmine /// DGS பிதாவாகிய தேவனைப் பார்த்ததாக தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பது தெரியாதா?? ///
ஏஞ்சல் டிவி முதலாளி ஈயடிச்சான் காப்பி என்பதையும் அவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவை அனைத்தும் ப்ரன்ஹாம் எனும் செத்துப்போன கள்ளத் தீர்க்கதரிசியின் உபதேசங்கள் என்பதையும் உரக்க சொல்லிக்கொண்டிருக்கிறேனே...அதுகுறித்து யாரும் கவனிக்கவில்லையோ...அவர் தூதர்களுடன் மாத்திரமே டீல் பண்ணமுடிந்தது....அவருடைய வழித்தோன்றல்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றாலே ஷைன் பண்ணமுடியும்...இந்த லாஜிக் கூட தெரியாமல் நம்மையே கேள்விகேட்டு மடக்குகிறார்களே....பிதாவை நான் பார்த்தேன் என்று யார் சொன்னாலும் அவன் பொய்யன்...என்கிறேன் நான்,ஆதாரம் காட்டுவாரா, கோல்டா..???
Yauwana JanamDurai Daniel /// சாது சுந்தர் செல்வராஜ் அல்லது டி.ஜி.எஸ் அல்லது வேறு ஊழீயர்களைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களின் ஆவிக்குரிய அனுபவங்களை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும்? பொதுவாக எந்த ஊழியரைப் பற்றியும் நாம் விமர்சித்து பேச வேண்டாம். உண்மை என்னவென்று நியாயத்தீர்ப்பின் நாளிலே தெரியும். ///
இதுபோன்ற தேவையற்ற அச்சமே துருபதேசக்காரர்களின் முதலீடாக இருக்கிறது. எல்லாவற்றையும் நியாயத்தீர்ப்பில்பார்த்துக்கொள்ளவா பரி.ஆவியின் அபிஷேகம் கொடுக்கப்பட்டது. ஆராய்ந்து பார்த்து சத்தியத்தை நிதானித்து அதனை தியாக உணர்வுடன் எடுத்துப்பேசவும் வேண்டும்...அதே நேரத்தில் துருபதேசத்தைக் குறித்து எச்சரிப்பு செய்யவும் வேண்டும்.
Durai Daniel@ Yauwana Janam - சரி. துர் உபதேசம் என்று எப்படி சொல்கிறீர்கள்?
Yauwana Janamநண்பரே அதுகூட தெரியாமலா நான் எந்த சுயலாப நோக்கும் இல்லாமல் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன் ?
Durai Danielசிலர் ஒரு குழுவாய் சேர்ந்து கொண்டு இந்த ஆவிக்குரிய அனுபவங்களே பொய். அற்புதங்களெல்லாம் அப்போஸ்தலர் காலத்தோடு முடிந்துவிட்டது. இப்போது இவையெல்லாம் நடைபெற்றால் இவைகளை நம்பாதேயுங்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்களோவென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நம்பக் கூடாதுதான். ஆனால் எல்லாவற்றையும் சந்தேகமும் படக்கூடாது. அது ஒரு பெரும் நோய்.
/// ப்ரன்ஹாம் செய்ததை காப்பியடிக்கிறார் என்று சொல்லுகிறீர்களா? எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். ///
கழுகு,சிங்கம் மற்றும் ஏஞ்சலிக் விஸிட்டேஷன் உட்பட அத்தனையும் பிரன்ஹாம் சரக்கு என்கிறேன்.மேலும் ஒவ்வொரு செய்தியும் ஏற்கனவே ப்ரன்ஹாம் மூலம் கொடுக்கப்பட்டுவிட்டது. நோவா நிர்வாணமாக படுத்திருந்தபோது அவருடைய மகன் தன் தகப்பனை ஹோமோசெக்ஸ் பண்ணினான் என்று சொன்னது ப்ரன்ஹாம் வெளிப்பாடு.இதை சாது மறுப்பாரா ? அல்லது தான் அவ்வாறு பேசவில்லை என்று மறுப்பாரா...சாட்சிக்கு அதனை நியாயப்படுத்திய கோல்டா இருக்கிறாரே ?
இவங்க அனைவரும் பாலாசீர் லாறியிலிருந்து புகுந்து புறப்பட்ட தனி செட்....இது தமிழ் கிறிஸ்தவ வ்ரலாற்றின் சுமார் 42 வருட வரலாறு அறிந்தவர்களுக்கே தெரியும். இவர்கள் யெகோவா சாட்சிகளை விட வேகமாக பரவியிருக்கிறார்கள்...சத்தியம் இவ்விரண்டுக்கும் இடையில...See more
Yauwana Janamடிவி பார்ப்பதே பாவம் என்று பெந்தெகொஸ்தே காரன் சொல்ல...இவர்களோ டிவி பார்ப்ப்தை ஊக்குவிப்பது போல மொழிமாற்ற சினிமா முதலாக உலகத்தனமான நிகழ்ச்சிகளை கடவுளுடைய புனிதமான பணத்தில் போடுகிறார்களே...
ஆம்,நாங்கள் இரட்சிக்கப்பட்ட புதிதில் டிவி பார்ப்பதே பாவம் என்று சொல்லி டிவியை விற்றுப்போட்டுவிட்டே ஞானஸ்நானம் எடுத்தோம்....நாங்களெல்லாம் அந்த கால பைத்தியங்களாம்... எங்கள் பாஸ்டர்ஸ் வீட்டில் நியூஸ் பேப்பர் இருப்பதே அதிசயமாகப் பார்த்தோம்...இன்னும் ஒரு பாஸ்டர் ஸ்கூட்டர் ஓட்டுவதையே ஆச்சர்யமாக பார்த்த சிறுவன் நான்...
இன்றைக்கு கார் என்ன,பங்களா என்ன...கேட்டால் ஆண்டவர் ஆசீர்வதித்திருக்கிறார் என்ற விளக்கம்...
Peter Samuel S /// மக்களை அவர்கள் இச்சையில் தொடர்ந்து வாழவும், கலாச்சார சீரழிவை ஆதரிக்கவும் ஊக்கமளிக்கிறது ஏஞ்சல் TV. ஆட்டங்கள், பாட்டங்கள், குத்தாட்டங்கள், மோசமான அங்க அசைவுகளுடன் பாடல்கள், இவை யாவும் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியே என காண்பவரை நம்பத்தூண்டும் ஏஞ்சல் TV யாருக்கு ஊழியம் செய்கிறது என சகோ. Durai Daniel அவர்கள் சற்று நிதானிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ///
இப்படியெல்லாம் எழுதினால் நம்மை பிற்போக்குவாதிகள் என்றும் பண்டாரங்கள் என்றும் இகழுவார்கள்...இதுவரையில்லாத அளவுக்கு நேற்றிரவு ஆவியானவர் என்னை வல்லமையாக ஆட்கொண்டு சொன்னது இது...நான் இவர்களுடைய இரைச்சல்களை வெறுக்கிறேன்...டிவி மூலம் என்னை மகிமைப்படுத்தவேண்டும் என்று நான் ஒருவனுக்கும் ஒருபோதும் சொல்லவில்லை,என்கிறார்....தைரியமிருப்பவர்கள் அவரிடமே கேட்டு சரிபார்த்துக்கொள்ளட்டும்...டிவி எனும் சாத்தானுக்கு எதிராக வலுவான இயக்கம் நடத்தவும் தூண்டப்படுகிறேன்...டிவி,சினிமா மீடியா சரியென்று யாராவது வாதிட்டால் மற்ற செக்குலர் படங்களையும் பார்ப்பது சரியென்றே ஆகும்.
ஒரு தலைமுறையையே கெடுத்த மாபாபிகள் வருகையில் எங்கே நிற்பார்களோ...அதிகமாக விதைத்து கொஞ்சமாக அறுக்கும் சாபத்தை உணராமல் தேவனுக்கு ஊழியம் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் இவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
Recently a minister said that Angel TV is "strange fire" and soon God's fire will consume them and their followers! This lack of discernment made me very sad ofcourse. He was speaking against one particular spiritual experience of Sadhu.
Anyway, DGS Dhinakaran had such kind of spiritual experiences. Is he false then?
Sadhu Sundar Singh also had many spiritual experiences, is he false then?? ///
டிவி மீடியா என்பது உலக மக்களுக்கே...உரித்தானது.அதில் ஈடுபடுவது நிச்சயமாக அந்நிய அக்கினி தான்...
@Durai Daniel
Yawna Janam said //ஆவியானவரை நீங்கள் இவ்வளவு கேவலப்படுத்தியிருக்கவேண்டாம்.// -
/// நான் என்ன ஆவியானவரை கேவலப்படுத்தினேன்?. இவ்வளவு கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்துதல் உங்களிடம் ஏதோ கோளாறு இருப்பதையே காட்டுகிறது. ஆவியானவரைப் பற்றீ தூஷித்தால் மறுமையிலும் மன்னிப்பு கீடைக்காது என்பதை மறந்து விடாதிருங்கள். ///
நீங்களுமா...ஓகே சமாளிக்கிறேன். முதலில் யாருடைய கருத்து ஆவியானவரை கேவலப்படுத்தியது என்பதை பார்த்துவிடுவோம்.
/// ஆவியானவர் துணையில்லாமல் ஒரு சேட்டிலைட் சானல் நடத்த முடியுமா? ///
இது நீங்கள் எழுதியதுதானே...குழப்பமில்லையே...இதற்கு விளக்கமாக பதில் சொல்லட்டுமா...ஒரு சேனல் நடத்துவதற்கு ஆவியானவரின் துணை அவசியம் என்கிறீர்கள்,சரியா...அப்படியானால் கலாநிதி மாறன் இந்தியாவே வியக்கும் வண்ணம் சேனல் நடத்துகிறார்களே...எந்த ஆவியில் என்று சொல்லுவீர்களா ?
டிவி சினிமா போன்ற உலக மாயையைகளிலிருந்து வெளியேறி வந்த கர்த்தருடைய பிள்ளைகளை மீண்டும் அதில் தள்ள பார்க்கும் சாத்தானின் தந்திரத்தை நீங்கள் உணரும் வரைக்கும் உங்களோடு விவாதிப்பதே வீண்வேலையாக இருக்கும்.
நோவாவை அவன் மகன் கெடுத்தான் என்று வேதத்தில் இல்லாத வியாக்கியானத்தை வெளிப்பாடு என்ற பெயரில் ஒருத்தன் உளறினால் அதை சற்றும் சங்கடமில்லாமல் நம்புமளவுக்கு மனம் மயக்கப்பட்டிருக்கிறீர்களே.,அது ஒன்றே போதும்,எல்லா பிரச்சினைக்கும் காரணம் புரிகிறது.
Durai Daniel /// ஊழியர் என்றாலே ஒரு ஜோல்னாப்பை, ஒரு பழைய சைக்கிள், பிய்ந்து போன செருப்பு என்று இருக்க வேண்டுமா? இதெல்லாம் துறவு மனப்பான்மை கொண்ட இந்து பாரம்பரியத்தினால் கிறிஸ்தவத்துக்குள்ளும் நுழைந்த கொள்கைகள். பாஸ்டர்னா கஷ்டப்படணும் அப்படிங்கறது அந்தக் காலத்துல இருந்தே நம்மவர்களுக்குள் அப்படி ஒரு நினைப்பு. அடிப்படை வசதிகளோடு கூட அவர் இருக்கக் கூடாது. அப்படித்தானே? அதனால்தான் பாஸ்டர் ஸ்கூட்டர்ர் ஓட்டுவதையே ஆச்சர்ர்யமாக பார்த்திருக்கிறீர்கள். நம்முடைய மனோபாவங்களை வேதத்துக்கு அடுத்ததாய் மாற்றாத வரை இந்நிலைமைதான். கிறிஸ்துவின் சிந்தை நமக்கு வர வேண்டும். ஐசுவரியனாய் இல்லை. அடிப்படை வசதிகளோடு கூட இருக்கக்கூடாதென்பது மோசமான நினைவுகளாககும். ///
ஆர்ப்பாட்டமான கருத்துக்களை அள்ளித்தூவியிருக்கிறீர்கள்,நண்பரே...நீங்கள் செழுமை உபதேச பிசாசின் வஞ்சகத்தில் இருக்கிறீர்கள் போலும்.நான் பிச்சைக்கார பண்டாரத்தைப் போல ஊழியர்கள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லையே,அது என்னுடைய சிறுவயது பிராய உணர்வு என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்றைய ஊழியர்களிடத்தில் எல்லாம் இருக்கிறது,இருக்கட்டும்,நல்லது...ஆனால் ஒன்று இல்லையே...அது மிகவும் ஆபத்தானதல்லவா ? அது பரிசுத்தம்...பரிசுத்தம்...பரிசுத்தம்..!
ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
@Durai Daniel /// ஹா...ஹா....!கலாநிதிமாறன் நடத்துகிறார் என்றால் விளம்பரங்கள் மூலமாக நடத்துகிறார். ஏஞ்சல் டி.வி.யில் என்ன விளம்பரங்கள் வருகிறது? இந்த அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு? சாட்டிலைட் மாத வாடகையே கோடி ரூபாய்கள் தெரியுமா? ///
ஒரு விபச்சாரி பிசாசின் பெலத்தினால் வேசித்தனம் பண்ணுகிறான்...ஒரு விசுவாசி தேவகிருபையால் வேசித்தனம் பண்ணுகிறான் என்பது போல இருக்கிறது உங்கள் கூற்று.
ஒருபக்கம் அறுப்பு மிகுதி எனும் சத்தம்...மறுபுறம் விளைச்சல் சரியில்லையே என்ற புலம்பல்..வித்தியாசமான கிறிஸ்தவம்.
Durai Daniel /// நான் சினீமா பார்த்து 12 வருடங்கள் ஆகிறது. சினிமா ஆபாசம், வன்முறைக் காட்சிகளுக்கு எதிரானவன் நான். சாது முதலில் நேபாளத்தில் தான் ஊழியம் செய்திருக்கிறார். பிறகு தேவனுடைய கட்டளைப்படிதான் இங்கு வந்து சாட்டிலைட் சானல் ஆரம்பித்ததாக சொல்கீறார். இதில் தவறு எங்கே இருக்கிறது? யூதர்களிடம் ஏனோக் என்ற ஒரு புஸ்தகம் அதாவது ஏனோக்கு எழுதின ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அதாவது அதனை வேதத்தில் சேர்க்கவில்லை. அதில்தான் இது எழுதியிருப்பதாகவே சாது சொன்னார். மற்றபடி வெளிப்பாடு என்றெல்லாம் சொல்ல வீல்லை. தவறான கண்ணோட்டத்துடனே நோக்கினால் எல்லாமே தவறாகத்தானன் தெரியும். காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல. ///
நீங்கள் சினிமா பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன...இங்கே மீடியா மிருகங்களை பற்றியே விவாதிக்கிறோம். தியேட்டரில் போய் பார்த்தால் பாவம்...ஏஞ்சல் டிவியில் பார்த்தால் பாவமில்லையா ? பொதுவாகவே பெண்கள் கண்ணின் காட்சிகளில் விழக்கூடியவர்கள் எனும் சாத்தானின் தந்திரத்தினால் பெண்களை வஞ்சிக்கவே சினிமா கலைஞர்களை வைத்து சீரியல் எடுக்கிறார்கள். இவர்களுடைய வியாபாரத்துக்கு ராயல்டி கேட்காத பார்ட்னராக இயேசு இருக்கிறார் அவ்வளவுதான்.
ஏனோக்கு புத்தகம் போலியானது என்று வேத வல்லுநர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒன்றை எடுத்து ஒருத்தன் பேசினால் அது சத்தியமாகிவிடுமா ? கொடுக்கப்பட்ட வேதத்திலிருந்து அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கவேண்டும்.இல்லாவிட்டால் கொடுக்கப்பட்ட வேதத்தை பழையபடி பிரித்து தனித் தனி சுருள்களாக்கி விடுங்கள். புதிய ஏற்பாட்டு உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவைப் பற்றும் விசுவாசத்துக்கு உதவாத பக்திவிருத்தியை உண்டாக்காத அனைத்து கிழவிக் கதைகளுக்கும் விலகியிருக்கச் சொல்லி பவுலடிகள் கட்டளையிடவில்லையா ? நூதனமான காரியங்கள் எப்போதுமே மனிதனை ஈர்க்கும்.ஆனால் அது சத்தியமாகாது.
I தீமோத்தேயு 4:7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
அப்போஸ்தலர் 17:20 நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.
I தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
/// சாது முதலில் நேபாளத்தில் தான் ஊழியம் செய்திருக்கிறார். பிறகு தேவனுடைய கட்டளைப்படிதான் இங்கு வந்து சாட்டிலைட் சானல் ஆரம்பித்ததாக சொல்கீறார். இதில் தவறு எங்கே இருக்கிறது? ///
இடையில் சில காலம் (கலெக்ஷன் இல்லாததால் ?) ஏஞ்சல் டிவியை மூடிவிடச் சொல்லி தூதன் சொன்னானா ? இவர் மார்க்கம் தப்பி அலையும் நட்சத்திரம் என்று வேதம் சொல்லுகிறது.
Durai Daniel /// ஒரு உலகப்பிரகாரமான டி.வி.யையும் கிறீஸ்தவ டி.வியையும் கம்பேர் பண்ணுவதே முதலில் தவறு. இரண்டாவது தவறு டி.வி.யையும் சினிமாவையும் கம்பேர் பண்ணுவது. சினிமா முற்றிலுமாய் பிசாசீன் கைவசமிருக்கீறது. அதீலும் Passion of Christ முதலிய படங்கள் வந்தால் அதைப் பார்ப்பீர்கள் (உங்களையல்ல ஆனால் பொதுவாக சொல்கிறேன்). டி.வி. மூலமாக ஊழியம் செய்வதே தவறு என்பது போல்தான் இருக்கிறது உங்கள் பேச்சு. அப்படியானால் டி.வி.யை விட மோசமான மீடியாவான இண்டெர்நெட்டை கிறீஸ்தவர்கள் கையால் கூட தொடக்கூடாது. அதீல் உள்ள கிறிஸ்தவ வெப்சைட்களையும பார்க்கக்கூடாது. இண்டெர்நெட் உபயோகீப்பார்களாம் .டி.வி மூலமாக ஊழியம் செய்யக்கூடாதாம். சிரிப்புதாங்க வருது. ///
நான் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்,டிவி மீடியா என்பது முழுக்க முழுக்க உலகப் பிரகாரமானது.அதன் பாதிப்பில்லாமல் லாபகரமானதொரு ஊழியத்தை செய்யமுடியாது. எனவே சத்தியத்தில் சமரசம் செய்வது அல்லது கடன்காரனாவது எனும் இருவேறு பாதிப்புகள் ஊழியர்களுக்கு நேருகிறது. நரியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டது போல தாங்களும் பிரபலமான ஆளாக விரும்பி கடனுக்கு கார் வாங்கி ஊர்ப் பணத்தில் ஊர்சுற்றும் எத்தனை பேரை அடையாளம் காட்டட்டும் ? சுத்த சுவிசேஷத்தை கலப்பில்லாமல் சொல்லி, வெளிப்பாடு அதுஇது என்று ரீல் சுற்றாமல் ஒரு மாதம் நடத்தச்சொல்லுங்கள் உங்கள் முதலாளிகளை..!
பாவத்தை எத்தனை சிங்காரித்தாலும் முடிவில் குழியில் தள்ளும். (இன்னும் வரும்...)
/// டி.வி. மூலமாக ஊழியம் செய்வதே தவறு என்பது போல்தான் இருக்கிறது உங்கள் பேச்சு. ///
இது என்னுடைய கருத்து அல்ல,காலஞ்சென்ற பிரபல ஊழியர் ஒருவரின் கருத்தாகும். ஒருவேளை அவர் அந்த காலத்து ஆள் என்பதால் அறியாமல் சொல்லியிருக்கலாம்,ஆனால் அந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். டிவியில் ஒரு குறிப்பிட்ட ஊழியர் மனதுருக பிரசங்கித்து ஜெபித்து காணிக்கை கோரிக்கையெல்லாம் வைத்து முடிக்கிறார்.சில நொடிகளிலேயே நேயர் டிவியில் பார்ப்பது என்ன ? நமது சபையின் பீடத்தை அப்படியே கற்பனை செய்யுங்கள்...ஒரு பரிசுத்தவான் செய்தி கொடுத்து முடிந்ததும் விவேக் எனும் காமெடி நடிகர் வந்து காமெடி செய்தால் எப்படியிருக்கும் ? இது வேறு, அது வேறு...டிவி மீடியா ஆண்டவரை அறியாதோர்க்காக என்றால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆலயக் கூடுகையையே பாதிக்குமளவுக்கு உபதேசக் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மீடியா செல்லுகிறதென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும். இன்னும், இவர்கள் இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் செய்துவிட்டு மடிப்பிச்சை கேட்பது இன்னும் கேவலம்.
Durai Daniel //டிவி சினிமா போன்ற உலக மாயையைகளிலிருந்து வெளியேறி வந்த கர்த்தருடைய பிள்ளைகளை மீண்டும் அதில் தள்ள பார்க்கும் சாத்தானின் தந்திரத்தை நீங்கள் உணரும் வரைக்கும் உங்களோடு விவாதிப்பதே வீண்வேலையாக இருக்கும்.//
- இந்த உங்களின் வார்த்தைகளுக்காகத்தான் நான் சினிமா பார்க்கவீல்லை என்று கூறினேன். உடனே இவ்வளவு காட்டமாக நீங்கள் சினிமா பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்று கூறுகிறீர்கள். விவாதிக்கும் போது கூட சாந்தமாக இருப்பதே தேவபிள்ளைகக்கு அழகு. உங்கள் கோபம் ஆச்சர்யமளிக்கிறது எனக்கு. நானும் இரட்சீக்ப்ட்ட ஒரு கிறிஸ்தவன். எதிரி போலல்லவா மோதுகீறீர்கள். ஆவியின் கனியாம் சாந்தம் எங்கே? ///
சாந்தம்...யோவான்.2 ஆம் அதிகாரத்தில் இயேசுவிடம் காணப்பட்டதா ? சுத்தம் செய்யும்போது சத்தம் போடக்கூடாது,நண்பரே....உங்கள் ஹைடெக் சாது தனக்கு எதிராகப் பேசுவோரின் நாக்கு அழுகும் என்றபோது அவரிடம் என்ன ஆவியின் கனியைக் கண்டீர்கள் ? மொழிமாற்ற படங்களையும் சீரியல்களையும் முக்கியமாக சினிமா கலைஞர்கள் நடிக்கும் சீரியல்களையும் நிறுத்தச்சொல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்த பணம் வேசிகளுக்குப் போகக்கூடாது.
டிவியை ஆரம்பிக்கச்சொன்னது ஆவியானவர் என்றால் அதில் எல்லா ஊழியர்களுக்கும் வாய்ப்பு தரட்டும்.முக்கியமாக ஆலன்பால் அவர்களை ஏஞ்சல் டிவியில் பேசவிடுவாரா பார்ப்போம் அல்லது ப்ளசிங் டிவியில் ஹைடெக் சாதுவுக்கு வாய்ப்பு கிட்டுமா ? கிறிஸ்தவம் என்பது ஐக்கியத்தில் ஆதி அப்போஸ்தல சபை போல இருந்திருக்கவேண்டும். அதுமுடியாவிட்டால் போகட்டும்,டிவி மீடியாவையாவது தனியாள் சொத்தாகக் கருதாமல் ஒரு சொஸைட்டியாக மாற்றும் தைரியம் யாருக்காவது இருக்கிறதா என்று பார்ப்போம். அதாவது இது மெய்யாகவே தேவனுடைய கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அப்படியிருந்திருக்கவேண்டும். ஒரு தனியாள் பெயருக்கு அல்லது ஒரு தனிமனிதன் கையெழுத்துப்போட்டாலே இயக்கப்படும் கணக்குக்கு ஏழை விசுவாசிகள் பணம் அனுப்பக்கூடாது. கிறிஸ்தவத்தில் வெளிப்படையான அணுகுமுறைகள் வரட்டும்.
அப்படியில்லாமல் தனியாள் ஆதிக்கம் செலுத்த துடிப்பதாலேயே பொய்யும் புரட்டுமான தரிசனங்களையும் வியாக்கியானங்களையும் ஆளாளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.எந்தவொரு காரியத்திலும் அப்போஸ்தலர்கள் ஒன்றுகூடி ஜெபித்து ஒரு முடிவையெடுத்து அதனை செயல்படுத்தினார்கள்.இன்றைக்கோ...??? என்ன சொல்ல...!!!
Yauwana JanamArputharaj Samuel /// சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதும், கிறிஸ்துவையேயன்றி வேறொன்றையும் ஜனங்கள் அறியாதிருக்கவும் செய்வதே உண்மை ஊழியத்தைக் காட்டும் அளவுகோல். ///
அப்படியானால் ஒரு தூதன் ஆவியில் வியாழன் கிரகத்துக்குக் கொண்டு போனான் என்று சொல்லுவதெல்லாம் மோசடியா,அண்ணன் ???
Prabhu Priya /// ஆவியின் கனியாம் சாந்தம் // I lack this....When i see people (Mainly Persons who say that i do Gods Ministry) doing things which God hates. Andavarku Unmaia Oouliam pannum Unmaiana ministry personai pakum pothu...Andavara Thuthikurain....But....Oouliam su sollitu.....Attoouliam panravangala pakum pothu.....neenga sonna சாந்தம் enaku kobama maruthu.///
ஐயோ மந்தை கொள்ளை போகிறதே என்று நான் இங்கே துடிக்கிறேன்...அதற்குள் என் ஆயுசு முடியுமோ கர்த்தர் வருவாரோ என்ற அவசரம் எனக்கு...மற்றவர்களைக் குறித்து சொல்ல எனக்கு அருகதை கிடையாது.நண்பர்கள் என்னை பொறுத்துக்கொள்ளவும். (மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. ஏனெனில் மன்னிப்பின் மகத்துவத்தை நான் அறிந்திருக்கிறேன்.)