இன்று ஆண்டவரையறியாத ஒரு இந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிக எளிமையாக அவரிடம் கேட்டேன், அதோ தெரிகிறதே தொடுவானம்...அதை தொட்டவன் உண்டா... அத்தனை பெரிய வானத்தையும் சூரிய சந்திர நட்சத்திரங்களையும் படைத்தவரை விட்டு விட்டு எப்படி நாம் படைத்து நிறுத்திய தெய்வங்களை வணங்கமுடியும் என்றேன்.அவரோ விடாமல் அது எப்படிங்க சிறுவயதிலிருந்து வணங்கிய தெய்வங்களை விடமுடியும் ஒருமாதிரி இருக்குமே, ஆனாலும் மற்ற தெய்வங்களையும் ஏன் அல்லாவையும் கூட வணங்க நான் தயார் என்றார். கடவுள் ஒருவரே என்பதை வலியுறுத்த வேண்டி நானும் விடாமல் கேட்டேன், வானத்தில் ஒரே ஒரு சூரியன் இருக்கிறதல்லவா, அது யாருக்கு சொந்தம்,என்பதாக. பளிச்’சென சொன்னார். அது இந்துக்களுக்கே சொந்தம் என்று. நான் சற்று அதிர்ந்துபோய் அப்படியானால் அது இந்து சூரியனா என்று கேட்டுவிட்டு அப்படியானால் அமெரிக்காவில் உதிக்கும் சூரியன் வேறு மதத்துக்கு சொந்தமா எனறு மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேட்டேன். போட்டாரே ஒரு போடு, நான் ரொம்பவும் தடுமாறிப்போனேன்,உலகத்திலேயே நவக்கிரகங்களை வணங்குவது யாருங்க, இந்துக்கள் தானே எனவே சூரியன் உட்பட நவக்கிரகங்களும் இந்துக்களுக்கே சொந்தம் என்றாரே பார்க்கலாம்.
இவருக்கு எப்படி புரியவைப்பது என்று புரியாமல் மண்டையை பிய்த்துக்கொள்ளணும் போலிருந்தது. எல்லா கிறிஸ்தவர்களும் சொல்லுவது போல நானும் சொல்லிவிட்டு, ஆண்டவரே இந்த மனுஷனுக்கு வெளிச்சம் தாரும் என்று வேண்டிக்கொண்டு எஸ்கேப் ஆனேன். என்ன சொன்னேன் என்று சொல்லணுமா, சொல்றேன்...
”அதான் சார், அந்த நவக்கிரகங்களையும் படைத்தவரையே நான் வணங்க சொல்லுகிறேன். உதாரணமாக (அவருடைய இரு சக்கர வாகனத்தைக் காட்டி...) இந்த பைக்’ உங்களை சுமந்து செல்லுகிறது. எல்லாவற்றுக்கும் உதவியாக இருக்கிறது. நீங்கள் காசுகொடுத்து வாங்கியிருக்கீங்க, எனவே இதை வணங்கினா போதும்’னு நீங்க நினைக்கிறீங்க. ஆனால் நான் என்ன சொல்றேன்’னா இந்த பைக்’ஐ விட இந்த பைக்’ஐ தயாரித்தவரே மரியாதைக்குரியவர். ஒரு புதிய பைக்’ஐ வாங்கிவிட்டு இந்த பைக்’ஐயும் வைத்துக்கொள்ளுவீர்களா,அதுபோலவே உண்மையானதும் மேன்மையானதுமான சத்தியம் வந்தபிறகு பழையதை விட்டுவிடவேண்டியதுதானே..?! “ என்பதாகக் கூறினேன். நண்பர் பெயர் ராமு.ஒதிக்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்றிரவு அமாவாசை பூஜைக்காக அங்காளப் பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்று ராத்தங்கிவிட்டு ஆத்தா அருளால் உடம்பெல்லாம் வலியுடன் குடும்பமாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)