கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மிகுந்த பெலவீனமடைந்து, மரணப்படுக்கையில் கிடந்த அந்த இளம் வாலிபன், தன்னைச் சூழ்ந்து நின்ற தன் தாயார், இளம் மனைவி, மற்றும் இரு குழந்தைகளை நோக்கிப் பார்த்தான். தன்னை சிறுவயது முதல் அன்பாய்ப் பராமரித்து வளர்த்த தன் தாயாரிடம், தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை, வேதனையுடன் ஒப்படைத்தான். அனைவரின் கண்களிலுமிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்துப் பின்னணியிலிருந்து ஆண்டவரை ஏற்ற அத்தாயாரும், அவனது மனைவியும் பிள்ளைகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆதரவற்றோருக்கு ஆறுதலளிக்கும் ஆண்டவரின் வாக்குத்தத்;தங்களைப் பற்றிக் கொண்டு, ஒவ்வொருவராகப் போராடி ஜெபித்தனர். நெரிந்த நாணலை முறியாத, மங்கியெரிகிற திரியை அணையாத தேவனின் சந்நிதியில், அவரிகளின் ஜெபம் எட்டியது.
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நின்ற அவ்வாலிபனின் உள்ளமோ, மரணத்தையும் தாண்டி, பரலோக வாழ்வை நாடி, வாஞ்சித்தது. அனைவரும் ஜெபித்து முடித்த பின்னர், கண்களைத் திறந்த அவ்வாலிபன், ஆவியானவர் தந்த நல்நம்பிக்கையால் நிறைந்து, “பரலோகமே, என் சொந்தமே” எனும் இப்பாடலின் முதல் இரு சரணங்களையும் எழுதினார். அதைத் தொடர்ந்து, “கர்த்தாவே, என் பெலனே, உம்மில் அன்பு கூருவேன்” என்ற நம்பிக்கை நிறைந்த மற்றொரு பாடலின் முதல் இரு சரணங்களையும் அந்நேரமே எழுதினார்.
“உன் விண்ணப்த்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” (II இராஜாக்கள் 20:5) என்று எசேக்கியா இராஜாவுக்கு வாக்களித்து, அற்புத சுகமளித்த ஆண்டவர், இக்குடும்பத்தாரையும் தேற்றினார். அவ்வாலிபன் ஒரே வாரத்தில் சுகம் பெற்றான்.
மரணத்தருவாயில், இந்த அருமையான நம்பிக்கையூட்டும் ஆறுதல் பாடலை இயற்றிய அவ்வாலிபன், போதகர் M.வின்சென்ட் சாமுவேல் ஆவார். அவர் தனது சிறுவயது முதல் தமிழ் மொழியில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இளம் வாலிப நாட்களில், தாள வாத்திய இசைக் கலையரானார். இசையில் தாலந்து மிக்க, வாலிபர்களான சத்தி விக்டர், சுவென் பீட்டருடன் இணைந்து, ஒரே குழுவாக, கிறிஸ்தவ இன்னிசைக் கச்சேரிகளை, திருச்சபை நிகழ்ச்சிகளிலும், மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், கிறிஸ்மஸ் பாடல் ஆராதனைகளிலும் நடத்தினார்.
வின்சென்ட் சாமுவேல் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், அவரது பெற்றோரோ தேவ சித்தத்தின்படி, அவரை சென்னை பெந்தெகொஸ்தே சபை (MPA) நடத்திய வேதாகமக் கல்லு}ரிக்கு அனுப்பி வைத்தனர். வின்சென்ட் 1972ல் தனது இறையியல் படிப்பை முடித்து, அக்கல்லு}ரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1973ம் ஆண்டு சாந்தகுமாரி என்ற பெண்மணியைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு, பிரேம்நாத் என்ற மகனும், ரூத் பிரியா சலோமி என்ற மகளும் பிறந்தனர்.
அந்நாட்களில் வின்சென்ட் சாமுவேல் MPA திருச்சபையின் பத்திரிகையான “சத்திய சமய சஞ்சீவி” யில், பல கவிதைகள் , கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இவர் இயற்றிய முதல் பாடல், “ஒப்புவிக்கிறேன் ஐயனே” என்பதாகும். MPA திருச்சபையின் தலைமைப் போதகரான காலம் சென்ற பிரபுதாஸ் வாசு, அத்திருச்சபையின் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களுக்குப் பாடல்கள் எழுதுமாறு, வின்சென்ட் சாமுவேலை உற்சாகப்படுத்தினார்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கென, அந்தந்த ஆண்டின் கருப்பொருளைச் சார்ந்து, போதகர் வாசு தெரிந்தெடுக்கும் வேத வசனங்களை மனதில் கொண்டு, பல பாடல்களை இயற்றுவது வின்சென்ட் சாமுவேலின் வழக்கமாயிற்று. சகோ. சத்தி விக்டர் இப்பாடல்களுக்கு ராகம் அமைத்துக் கொடுப்பார். சில வேளைகளில், சத்தி விக்டர் முதலில் இராகம் அமைக்க, அதற்கேற்றபடி, பாடல்களை போதகர் வின்சென்ட் சாமுவேல் எழுதுவதுமுண்டு. ஒவ்வொரு பாடலையும் இம்மூவரும் சேர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதை இன்னும் மெருகேற்றுவதற்கான மாறுதல்களைச் செய்வார்கள்.
சுகமடைந்த வின்சென்ட் சாமுவேல், தனது பெலவீன நிலையில் எழுதிய இப்பாடலைப் போதகர் வாசுவிடம் காண்பித்தார். 1980ம் ஆண்டின் MPA கன்வென்ஷன் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்ததால், அக்கூட்டத்தின் கருப்பொருளுக்குப் பொருந்தும் வகையில், இன்னும் பல சரணங்களை இயற்றிச் சேர்க்குமாறு போதகர் வாசு, வின்சென்ட் சாமுவேலைக் கேட்டுக் கொண்டார். வாசு கொடுத்த வேத வசனங்களின் அடிப்படையில், மீதமுள்ள சரணங்களையும் வின்சென்ட் சாமுவேல் எழுதி முடித்தார்.
இப்பாடலுக்கான இராகத்தை, சகோ. சத்தி விக்டர் அமைத்தார். அதைக்கேட்ட அவரது இசைக்குழு நண்பரான சுவென் பீட்டர், சரணங்களுக்கு இன்னும் பொருத்தமான இராகத்தை அமைத்தார். இம்மாற்ங்களுடன் இப்பாடல் இன்னும் சிறப்பாக அமைந்தது. பின்னர், 1980ம் ஆண்டின் MPA கன்வென்ஷன் கூட்டங்களில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இப்பாடல் பலதரப்பட்ட மக்களுக்கு மரணத்தின் மீது வெற்றி சிறக்கும் ஒரு நல் நம்பிக்கையைத் தந்து, பரலோக வாழ்வின் மகிமையை எதிர்நோக்கியவர்களாய், சமாதானத்துடன் இவ்வுலகை விட்டுச் செல்ல உதவியுள்ளது.
போதகர் D. ஜான் ரவீந்திரநாத், HMV நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட “இயேசு வருகிறார்” என்ற தனது இசைத்தட்டில் இப்பாடலைச் சேர்த்தார். அதில், பேர் பெற்ற கிறிஸ்தவ இன்னிசைப் பாடகி, திருமதி சுசிலா அருமைநாயகம் இப்பாடலைப் பாடினார்.
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோசெயர் 3:2) என்ற வேத வசனத்தின் எச்சரிப்பு இப்பாடலில் தெளிவாத் தொனிக்கிறதல்லவா!
பரலோகமே, என் சொந்தமே, என்று காண்பேனோ? என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ?
1. வருத்தம் பசி தாகம் மனத் துயரம் அங்கே இல்லை விண் கிhPடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் - பரலோகமே
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல, இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தயுடன் இயேசுவைப் பின்பற்றுவேன் - பரலோகமே
4. ஒட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாசப் பாதையில் சேராது ஓடிடுவேன் - பரலோகமே
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இராப் பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
சென்னையிலுள்ள ஒரு வீட்டில் நடந்த ஜெபக்கூட்டத்தில் பிரெட்டி என்ற ஒரு ஆங்கிலோ இந்திய வாலிபர் “ஒன்டே ஒன்டே!” என்று ஆங்கிலப்பாடல் ஒன்றை இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தார். அப்பாடல் சுவி. J.V.பீட்டர் எழுதிய நற்செய்திப் பாடலாகும்.
அர்த்தமுள்ள இப்பாடலை அங்கு ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு வாலிபனின் உள்ளத்தில் ஒரு வாஞ்சை! வாலிப உள்ளங்களைக் கவர்ந்திழுக்கும் அப்பாடலைச் சென்னைப் பட்டணமெங்கும் பாடி, அண்டவரின் அன்பை, அனைத்து இளம் வாலிபர்களுக்கும் அறிமுகம் செய்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! தன் உள்ளத்தில் எழுந்த இச்சவாலைத் தானே சந்திக்க முடிவு செய்தான்!
அக்கூட்ட முடிவில், அந்த வாலிபன் பாடகர் பிரெட்;டியைச் சந்தித்து அப்பாடலைக் கற்றுக் கொண்டான். அவனது அயராத முயற்சியால், அப்பாடல் தமிழகமெங்கும் பிரபலமானது. அப்பாடலைக் கர்த்தருக்கு மகிமையாகப் பாடிய மோசஸ் என்ற அவ்வாலிபனை, ‘ஒன்டே மோசஸ்’ என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர்.
மோசஸ், மதுரை மாநகரிலிருந்து சென்னைக்குக் குடியேறிய ஒரு கிறிஸ்தவத் தம்பதியரின் மகனாக 01.10.1959 அன்று சென்னையில் பிறந்தார். நுங்கம்பாக்கம் ECI ஆலயத்தின் ஞாயிறு பள்ளி மாணவனாக இருந்த நாட்களில், தனது சிறுவயதிலேயே, மோசஸ் ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். தன்னை இரட்சிப்பின் பாதையில் வழி நடத்திய ஞாயிறு பள்ளி ஆசிரியரும், லயோலா கல்லூரி விரிவுரையாளருமான, அறிவர். கிங்ஸ்லி ஜெய சூர்யாவை, இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
சிறுவன் மோசஸ் தாம்பரத்திலுள்ள கார்லி உயர்நிலைப்பள்ளியில் படித்தான். இளம்பருவத்திலேயே இசையில் தாலந்து பெற்றவனாக விளங்கினான். ஆர்மோனியம் மற்றும் கித்தார் இசைக்கருவிகளை வாசிப்பதில், சிறுவன் மோசசுக்கு இருந்த திறமையை, பள்ளித் தலைமை ஆசிரியர் தாமஸ் கண்ணுற்றார். அவனது இசைத் தாலந்துகளை ஊக்குவித்து வளர்க்கும்படி, பல இசைக்கருவிகளைப் பள்ளிக்கென வாங்கி, மோசஸ் கற்று உபயோகிக்க வாய்ப்பளித்தார்.
வாலிபன் மோசஸ் தனது படிப்பை முடித்தவுடன், டன்லப் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், தன் வாழ்வில் ஆண்டவரின் சித்தம் என்னவென்று அறிந்து செயல்பட விரும்பினார். எனவே, 1984ம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் 7 நாட்கள் உபவாசமிருந்தார். அதன் முடிவில், யோசுவா 13:33 ஐ ஆண்டவர் அவருக்கு வாக்குத்தத்த வசனமாகத் தந்தார். “கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட லேவி கோத்திரத்தாருக்கு கர்த்தரே சுதந்திரம்: இவ்வுலகமல்ல” என்ற தெளிவை இவ்வசனத்தின் மூலம் பெற்றார். எனவே, மோசஸ், தன்னைத் தெரிந்தெடுத்து அழைத்த ஆண்டவரின் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணம் செய்தார். தெருப் பிரசங்கியாராகத் தன் ஊழியத்தைத் துவக்கினார். படிப்படியாக, அண்டவர்; அவரைத் தமிழகமெங்கும், பின்னர் உலகின் பல பகுதிகளிலும் எடுத்து உபயோகித்தார்.
1988ம் ஆண்டு!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாரைசாலை என்ற கிராமத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களுக்கு, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த போதகர் மார்ட்டின் ராபர்ட் செய்தியாளராகவும், சுவி, ஒன்டேமோசஸ் பாடல் ஆராதனைத் தலைவராகவும் அழைக்கபட்டிருந்தனர். பாடல் ஆராதனை முடிந்தவுடன், செய்தியின் ஆதார வசனமாக, சங்கீதம் 46:7 வாசிக்கப்பட்டது. பின்னர் செய்தி தொடர்ந்தது.
‘ஆனால், ஆவியானவரோ, ஒன்டே மோசஸை ஆட்கொண்டு, அவ்வசனத்தின் மையக் கருத்தான ‘சேனைகளின் கர்த்தர்’ என்ற வாசகத்தின் மூலம், மோச்சுடன் இடைபட ஆரம்பித்தார். எனவே, அச்செய்தி முடிவதற்குள், இப்பாடலின் மூன்று சரணங்களையும் அக்கூட்ட மேடையில் அமர்ந்தவாரே மோசஸ் எழுதி முடித்தார். எரிகோ போன்ற சோதனைகள்ஃ நம்புபவர்களின் சீலாக்கியம் என்ற கருப்பொருள்களுடன், வேத வசனங்களைக் கொண்டே இம்மூன்று சரணங்களும் எழுதப்பட்டன. அந்த 4 நாட்கள் கூட்டத் தொடர் முடிவதற்குள், இப்பாடலின் ராகத்தையும் மோசஸ் இயற்றிவிட்டார்.
மோசஸ், “இயேசுவின் அரவணைக்கும் கரங்கள்” என்ற தனது ஊழியத்தின் முதல் பாடல் தொகுப்பில், 1989ம் ஆண்டில், இப்பாடலை ஒலிநாடாவில் பாடி வெளியிட்டார்;. இப்பாடல் தமிழகமெங்கும் பாடப்பட்டுப் பிரபலமானது.
சுவி. ஓன்டே மோசஸ் இதுவரை மொத்தம் 40க்கும் அதிகமான பாடல்களை இயற்றி, இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். இவைகள் இவர் வெளியிட்ட “இயேசுவின் அரவணைக்கும் கீதங்கள்” என்ற பாடல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.