ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படுகிறது. அதன் பின்னணியில் இன்னொரு காரியமும் இருக்கிறது. அது இது தான், கர்த்தருடைய நாளில் காலையில் சபைகூடி ஆராதித்துவிட்டு மாலையில் இதுபோல தெருப் பிரசங்கத்துக்கும் மருத்துவமனை ஊழியத்துக்கும் சென்று கர்த்தருடைய அன்பை சொல்லுவார்கள்,அந்த கால விசுவாசிகள். அந்த பாரம்பரியத்தை-நல்ல மரபை நினைவூட்டும் முயற்சியாகவே இந்த திரியானது அமைக்கப்பட்டுள்ளது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் காந்தி நகர் எனும் இடத்தில் அமைந்திருக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் செய்யப்பட்ட தெரு பிரசங்கம். இவர்களுக்கு பேரும் இல்லை, புகழும் இல்லை, ஒரு விளம்பரமும் இல்லை. காணிக்கையும் இல்லை. முழுக்க முழுக்க தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும். இதுபோன்ற ஊழியங்கள் இன்னும் பரவ வேண்டும்.
சீர்திருத்த சபையிலிருந்து சுயாதீன சபையார் தோன்றி சுவிசேஷத்தை பிரபல்யப்படுத்த தன்னார்வப் பணியாளர்கள் முன்னெடுத்துச்சென்ற வழிமுறைகளில் ஒன்றுதான்,தெரு பிரசங்கம்.இவர்களைப் பின்பற்றியே பல்வேறு அரசியல் இயக்கங்களும் மக்களை எளியமுறையில் சந்திக்க தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது எனலாம்.இதில் அதிக பயனடைந்ததும் பயனடைந்து வருவதும் கம்யூனிச இயக்கங்களே என்றால் அது மிகையல்ல.
இதேபோல 50- களில் கிறிஸ்தவம் ப்ரவலாக்கப்பட உதவியாக இருந்தது மருத்துவமனை மற்றும் சிறைச்சாலை ஊழியங்கள். இதுபோன்ற எளிய வழிகளைப் புறக்கணித்ததன் பலனை நிர்விசாரம் என்ற பெயரால் திருச்சபையானது அடைந்திருக்கிறது. ஆதியில் செய்த கிரியைகளை மீண்டும் செய்ய உதவியாக அந்த கிரியைகளைச் செய்த தலைமுறையினர் இன்னும் நம் மத்தியில் கவனிக்கப்படாதிருப்பதை கவனிக்கவேண்டும். அது மெய்யாகவே ஆறுதலளிக்கும் காரியமே. இனியும் காலத்தை வீணாக்காமல் வாய்ப்புள்ள இடங்களில் சுவிசேஷத்தைப் பிரபல்யப்படுத்துவோமாக.
வெளி 2:5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.