மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பார்கள்; இன்று நான் குடியிருக்கும் வீட்டைக் குறித்து கொடுக்கப்பட்ட அறிவிப்பினிமித்தம் உண்டான மனச்சோர்வின் மத்தியில் தோன்றியது இதுதான்...
கடவுள் ஏதோ ஒரு நோக்கத்துடன் நம்முடைய வாழ்வில் பல்வேறு கட்டங்களில் மாற்றங்களை நியமிக்கிறார்.இதனை ஆங்கிலத்தில் “transition ” என்கிறார்கள்;இதன் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் மேன்மைகளையும் உணர்ந்தோமானால் எந்தவிதமான மாற்றத்தைக் குறித்தும் நாம் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை.
சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு இதுகுறித்து இன்னும் விளக்கமாக எழுதுகிறேன்.நண்பர்களும் கூட தங்கள் வாழ்வில் சந்தித்த மாற்றங்களால் உண்டான பாதிப்புக்ளையும் விளைவுகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.நாம் குழந்தைப் பருவம் முதல் பல்வேறு கட்டங்களில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறோம்.மாற்றங்களால் உண்டான மனமாற்றங்கள் என்ன, ஏமாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் விவரமாக எழுதினால் அதுவே நம்முடைய தடுமாற்றத்தையும் போக்குவதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)