கட்டளை பெறுவது என்பது ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு அனுமதி பெறுவதாகும். கட்டளையிடப்படுவது என்பது ஒரு காரியத்தை செய்வதற்குப் பணிக்கப்படுவதாகும்.
கலாத்தியர் 1:12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
மோசடி ஊழியர்கள் பலரும் பவுலை மேற்கோள் காட்டி தப்பிக்கொள்ளலாம என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களால் கூடாது என்பதே பரிதாபமான நிலையாகும்.