தற்போது வழக்கில் இல்லாத ”குருவானவர்” எனும் வார்த்தையைத் திருச்சபையார் பயன்ப்டுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ”ஆயர்-பேராயர்” எனும் சொல்லே வழக்கத்திலும் புழக்கத்திலும் இருக்கிறது ”ஆயர்” எனும் சொல்லுக்கு ”மேய்ப்பர்” என்பது பொருளாகும். கிறிஸ்துவானவர் நல்ல மேய்ப்பராகவும் பெரிய மேய்ப்பராகவும் பிரதான மேய்ப்பராகவும் இருக்கிறார்; திருச்சபையின் தலைவர்கள் அவருக்கு கீழிருந்து அவர் சார்பாகவே பணியை மேற்கொள்ளுகிறார்கள்.எனவே அருட்தந்தை,குருவானவர் போன்ற வார்த்தைகளை நாம் தவிர்க்கவேண்டும்.
யோவான் 10:11 ” நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”