அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.(கொலோசெயர்.2:2,3)
ஆம், கிறிஸ்து இயேசுவின் மூலமே ஒருவர் பிதாவின் ஞானத்தை அறியமுடியும் -பெற்று அனுபவிக்கவும் முடியும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
''அரும்பெரும் பொக்கிஷங்கள்!''-- ''ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!!'' இது போன்ற செய்திகள் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெளிவந்து இருக்கின்றன. அவற்றில் சில சரித்திரப் புகழ் வாய்ந்தவையாகவோ, கலைனயமிக்கவயாகவோ இருக்கலாம்.
ஆனால் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொதுவாக அவை பிரயோஜனமாக இருகின்றனவா ? இல்லை !!! என்றாலும் நம் வாழ்க்கைக்கு உண்மையிலேயே பிரயோஜனமான பொக்கிஷங்கள் இருகின்றன. அவற்றை தேடிக்கண்டு பிடிக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை அழைக்கிறது, நம்மை மட்டுமல்ல எல்லாரையுமே அழைக்கிறது. இந்த அழைப்புக்கு இணங்கிச் செயல்படுவோருக்கு பொன், பொருள் போன்ற பொக்கிசங்களை விட மிகமிக மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும். ( நிதிமொழிகள். 2 : 1 -6 )
1. என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
2. நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3. ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
5. அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
6. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
தேடிக்கண்டு பிடிக்கும் படி தம்முடைய ஊழியர்களிடம் தேவன் சொல்கிற பொக்கிஷங்கள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை எனக் கவனியுங்கள். அந்தப் போக்கிசங்களில் ஒன்று, தேவனுக்கு பயப்படுகிற பயம், இந்தக் கொடிய காலங்களில் அது நமக்கு பாதுக்காப்பை அழிக்கிறது. '' தேவனை அறியும் அறிவை'' நாம் கண்டடையும் போது உன்னதமானவரோடு ஓர் இனிய உறவுக்குள் நம்மால் வர முடிகிறது. கிடைப்பதற்கரிய மாபெரும் பாக்கியம் இது !!!
தெய்வீக ஜானம், அறிவு , பகுத்துணர்வு ஆகிய போக்கிசங்களும் நமக்கு மதிப்பு வாய்ந்தவையே. நம்முடைய அன்றாட பிரச்சனைகளையும், கவலைகளையும் வெற்றிகரமாக சமாலிக்க அவை நமக்கு உதவுகிறது. (நீதி. 9 : 10 ) 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.