சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன ?
மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே,அதுபோன்ற கேள்வி இது. அவங்கள முறைத்துக்கொள்ள முடியுமா,எனவே அவங்களுக்கு வலிக்காம ஒரு ப்திலை சொல்லணும்.அதற்கு முன்பதாக இந்த கொள்கை (?) பரவக் காரணமான வேத வசனத்தைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
மேற்கண்ட வசனத்தின்படி சகோதரிகள் அவசியம் தலைக்கு முக்காடிட்டிருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதனாலென்ன, இன்னொரு வாய்ப்பாக தலைமுடியைக் கத்தரித்துப்போட சொல்லியிருக்கிறதே, அதனால முடியை கட் பண்ணிட்டு ஃபிரீ ஸ்டைலில் ஆராதனைக்கு வாராங்க..!
நம்ம ஆட்கள் எப்பவுமே செகண்டு சாய்ஸுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள்.இதை செய்யக்கூடாதுப்பா என்றால் சரி செஞ்டறோம், அப்ப என்ன பண்ணுவே என்றால் என்ன செய்யமுடியும். எனவே பரிகாரப் பூஜைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான்..!
ஆண்டவர் என்ன, இதையெல்லாமா பார்க்கிறார்,அவர் வழக்கம் போல இருதயத்தை தானே பார்க்கிறார்..?! ஆனால் இருதயத்தில் இருப்பதென்ன,அது அவருக்கே தெரியும்,எனக்கு தெரியாதே..!!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)