by Yauwana Janam on Friday, 17 February 2012 at 02:24 ·
நெடும் இரவுகளில் நான் விழித்துக்கொண்டே கனவுகாணும் பழக்கம் உள்ளவன். அந்த வகையில் சில மணி நேரத்துக்கு முன்பாக நான் கண்ட ஒரு கனவு மிகவும் இதமாக இருந்தது.அந்த கனவில் நான் ஜெபிக்கிறேன்...எதற்காகத் தெரியுமா, எனதருமை நண்பர்கள் ஒருவர் விடாமல் கர்த்தருடைய வருகையில் காணப்படவேண்டுமே என்று ஜெபிக்கிறேன். எப்படியும் அங்கே நான் காணப்படுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஒருவராவது தன்னுடைய பரம வைரியாகத் தான் நினைக்கும் இன்னொருவரும் அங்கே காணப்பட ஜெபிக்க முடியுமா ? முடியும். அப்படியில்லாதிருந்தால் நான் கிறிஸ்துவை அறிந்ததே வீணாகும். இவ்வுலக வாழ்க்கையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் நிமித்தமாக சிறுபிள்ளைத்தனமாக ஒரு சிலரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புறக்கணிக்கிறோம், வெளியேறுகிறோம், துரத்துகிறோம், ”ப்ளாக்..” பண்ணுகிறோம். ஆனால் நாமனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஆனந்த பாக்கியமான அந்த நாள், இந்த நாளாக இருந்தால் நம்முடைய நிலை என்ன ? ’இருங்க டாடி ஃபீட்பேக் பார்த்துட்டு வந்துடறேன்,’ என்போமா அல்லது ’இருங்க டாடி என்னுடைய உற்ற நண்பரை ஒருவரை அவசரப்பட்டு ப்ளாக் பண்ணிவிட்டேன், அவரையும் அழைத்துக்கொண்டு வந்திடறேன்,’ என்போமா ? அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா..?
எனவே,
”தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.” (2.கொரிந்தியர்.6:1,2)
என்று பவுலடிகள் கூறுகிறார்.இந்த எண்ணம் இருக்கும் நேர்மையாளர்கள் யாராக இருந்தாலும் குறைகளையே பெரிதுபடுத்தி ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டிராமல் ஒருவருடைய குற்றங்களை ஒருவர் பொறுத்துக்கொள்ளலாமே ?
1. அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
”விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” (ரோமர்.14:1)
இங்கே நாம் நடத்திக்கொண்டிருக்கும் சித்தாந்த யுத்தம் முடிகிறதோ இல்லையோ கர்த்தர் சீக்கிரம் வரப்போகிறார். ஆனால் இப்போதுதான் இரத்தசாட்சிகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஏற்கனவே சிந்தப்பட்ட இரத்தத்துக்கு பழிவாங்கவும் அந்த இரத்தத்தால் வாங்கப்பட்ட சந்ததியாரை சேர்த்துக்கொள்ளவும் ராஜா விரைவில் வரப்போகிறார். இனி இரத்தசாட்சிகளின் காலத்துக்காக அல்ல, ராஜாவை எதிர்கொண்டு செல்லும் காலத்துக்காகவே ஆயத்தப்படவேண்டும். ஆனாலும் சுகபோகமாக வாழுகிறவ(ர்க)ள் உயிரோடு செத்தவ(ர்க)ள் எனும் வசனத்தின்படி இரத்தசாட்சிகளின் இரத்தத்தில் எழும்பிய சபையில் நின்றுகொண்டு பதவிப்போட்டிகளையும் ஊழல்களையும் வழக்குகளையும் துணிகரமான அந்தரங்க பாவங்களிலும் உழன்றுகொண்டிருப்போர் யாராக இருந்தாலும் நடுத்தீர்வை தினத்தில் விசாரிக்கப்படுவ்ர். எனவே இந்த எச்சரிப்பை அசட்டை செய்யாமல் அவரவர் இன்றே சீர்பொருந்தவும் வேண்டுகிறேன். கிறிஸ்துராஜா வந்து நின்றால் எல்லா பகையும் புகையாய் கரைந்து மறைந்துபோம். அதனை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை தரித்துக்கொள்ளக்கடவோம். இதனை எழுதும்போதே பாரம்பரிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது...
பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிடபரமானந்த கீதம் அங்கே எழும்பநீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
இந்த பாடலுக்கு நம்முடைய பதில் என்ன ? அப்புறம் நான் கண்ட கனவில் யார் யாருக்காக எல்லாம் ஜெபித்தேன் என்று சொல்லவில்லையே..,அந்த நீண்ட ஜெபத்தில் எல்லோரும் இருக்கிறார்கள். முக்கியமாக நான் ப்ளாக் செய்தவர்கள், என்னை ப்ளாக் செய்தவர்கள், எல்லா போலி ஐடி நபர்கள், உட்பட எனக்கு அருமையான நண்பர்களும்..! ஒருசிலரை மட்டும் உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன். (கணக்கில் மட்டும் ? ) உண்மை ந(ண்)பர்களான விஜய், ப்ரசன், ஃப்ரான்சிஸ், அற்புதராஜ் சாமுவேல், கோல்டா, பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம், பாஸ்டர் ஜாண்சன் ராஜூ, இன்னும் போலி ஐடி என்று இகழப்படும் அனைத்து நண்பர்கள் மற்றும் என்னை தூஷித்து கட்டுரை வரைந்த அனைத்து நண்பர்களும் அதில் என்னை விமர்சித்து பின்னூட்டமிட்டவர்களும் ஆகிய அனைவருடன் ஒருவேளை கர்த்தருக்கு சித்தமானால் இன்று வரை (மேசியாவின்) எதிரிகளாக இருக்கும் ஞானப்பிரகாசம், இக்னேஷியஸ் இளங்கோ போன்றோரும் கர்த்தருடைய வருகையில் அவரோடு சேர எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.
குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சத்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய் காய்க்கும் காலம் வந்ததே
திராட்சைக்கொடி பூ பூத்து வாசம் பெருகுதே
என் பிரியமே
நீ ரூபவதி
எழுந்து வா -உன்
நேசரை சந்திக்கவே..!
மணவாளன் கர்த்தர் இயேசு
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே - மணவாளன்
1.குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே - என் பிரியமே
2.மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு - என் பிரியமே