இராமுழுவதும் பிராயாசம்... ஒரு மீனாவது அகப்படுமா??? என்று......... தோல்வி தான் மிச்சம்
மீனை அலசவேண்டிய எனக்கு வலையை அலசவேண்டிய நிலை???
ம்ம்... எப்படி வீட்டிற்கு வெறுங்கையாக... வெருமையாக.... திரும்புவேன்??? என்ற ஏக்கபெருமுச்சின் சத்தம் அலைகளின் சத்தத்தை மிஞ்சி நின்றது.
ஆனால் ஒரு குரல் கேட்கிறது!!! அதோ கரையோர கூட்டத்திற்கு நற்செய்தி அறிவிக்க வேண்டுமாம்... அதுவும் எனது படகிலேறியாம்... படகையும் சற்று தள்ளிபோடவேண்டுமாம்....
என்ன சோதனை... நானோ இருப்பது விரக்கியில்... நிற்பது தோல்வியில்...
ஆனால் அவரின் விருப்பமோ... ஜனங்களின் மீட்பில் எனக்கும் ஒரு பங்கை தரவேண்டுமாம்... அவர்களின் கண்ணிரை துடைப்பது என் மூலமாம்...
விலையேற பெற்ற ஆத்துமாக்களுக்கான அவரின் கண்ணீருக்கு முன்பாக..... அழிந்துபோகிற மீன்களுக்கான என் துக்கம் எம்மாத்திரம்...
எடுத்தேன் ஒரு முடிவு...
அவரின் ஊழியம் செய்ய எனது படகு மட்டுமா....... எனது தொழில், எனது செல்பேசி, எனது கணினி, எனது பேனா, எனது பணம்... எனது வாகனம்... இன்னும் எனக்குரியதெல்லாம் பயன்படட்டுமே... எல்லாம் அவர் தந்ததுதானே..
என்னே ஆச்சரியம் திரளான ஆத்துமாக்களுக்காக விட்டு கொடுத்தேன் எனது படகை... அவரோ திரளான மீன்களால் நிறைத்தார் அதே படகை......
யாரோ சொன்னார்கள்.... கிறிஸ்துவுக்காக இழந்தவர் யாரும் தரித்திரரானதில்லை... Thanks to: Rameshps
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)