Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் 11:35 ல் இயேசு கண்ணீர்விட காரணம் என்ன?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: யோவான் 11:35 ல் இயேசு கண்ணீர்விட காரணம் என்ன?
Permalink  
 


திரு.HMV அவர்களே,

நான் என்ன சொல்லுவது, யாம் பெற்ற துன்பம் (?) பெருக இவ்வையகம் என்று தான் சொல்லவேண்டும்..! biggrin

சுந்தர் நல்ல ம்னிதர் ஆனால் ஏதோ ஒரு ஆவி அவரை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.முகமது கூட இப்படி தான் அடிக்கடி உளறுவாராம், பைத்தியம் பிடித்தவரைப் போல நடந்துகொள்ளுவாராம்,அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோன்ற வஞ்சக ஆவி ஒன்று இவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.ஊழியக்காரரான சொந்த சகோதரனுடனே ஒத்துப்போக முடியாமல் அவரைக் குறித்து தவறாக எழுதி என்னால் ஒருகாலத்தில் கண்டிக்கப்பட்டவர்,இவர்.இவருடைய சூழ்ச்சிகள் தெரியாத அப்பாவி இளைஞர்கள் சிலர் இவரிடம் வசமாக சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. ஒளித்து வைப்பதற்கு ஒன்றுமில்லை,என்று வேதமே வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பிறகும் திருப்தியடையாமல் இன்னும் ஏதோ இரகசியம் இருப்பதாக மாயம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.ஆனாலும் இப்போதைக்கு இவரால் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்பதாலேயே இவரை விட்டுவைத்திருக்கிறேன்.தேவைப்பட்டால் அவருடைய உபதேசங்களை ஒவ்வொன்றாக எடுத்து பகிரங்கப்படுத்துவேன்.அவருக்கும் உள்ளூர ஆசைதான்,நான் இவரைக் குறித்து கொஞ்சம் எழுதி பிரபலப்படுத்த மாட்டேனா,என்று இலவு காத்த கிளிபோல காத்துக்கொண்டிருக்கிறார். அதன்காரணமாகவே அவ்வப்போது எனக்கு மட்டுமே புரிகிற மாதிரி என்னை சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் நான் இவரை ஒரு ஆரோக்கியமான மனிதராக நினைக்கிறதில்லை.எனவே அமைதியாக இருக்கிறேன்,பார்ப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

அன்புக்குரிய நண்பர்களே,

நான் எனது மனதில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக எழுதும் காரணத்தால் சுந்தர் அவர்கள் என்மீது கோபம் கொண்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார். இதோ என்னை திரு.சில்சாம் அவர்களோடு சம்பந்தப்படுத்தி தூஷித்து எழுதியிருக்கும் வரிகள்.... ஆனால் நானே குழப்பத்துக்குக் காரணம் என்று அவர் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.

SUNDAR wrote:
அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள்  மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின் பதிவுகள் பற்றி அனைவரும் அறிவோம். தொடர்ந்து தளத்தில் செயல்பாட்டை ஏதாவது ஒரு விதத்தில் குழப்பும்  நோக்கத்திலேயே செயல்படும் இவர்,  //சுந்தர் சிவபெருமானின் அவதாரம்// என்பது போன்ற நாம் எழுதாத சொல்லாத கருத்துக்களை  தளத்தில் பதிவிட்டு நம்மேல் ஒரு தவறான அபிப்ராயத்தை எல்லோருக்கும் ஏற்ப்படுத்த முற்படுகிறார்.
 
இவரது குற்றசாட்டுகளுக்கு வரிக்கு வரி என்னால் பதில் எழுத முடியும் என்றாலும் ஏனோ எழுதிய பதிவுகளை கூட பலநேரங்கள் நான் பதிவிட விரும்புவது இல்லை. ஆகினும் இவரது சில பதிவுகளுக்கு நான் விளக்கம் தர கடமைபட்டுள்ளேன்.  இவர் யார் என்பது நமக்கு தெரிந்தாலும் துணிகரமாக  உண்மையை  மறைத்து வருகிறார்!  
 
மேலும் தள சகோதரர்களோடு தனி மடலில் தொடர்பு கொண்டு நம்மை பற்றி தவறான கருத்துக்களை கூறி வருகிறதாகவும் நாம் அறிய முடிகிறது.  
 
இந்நிலையில் இவரது பதிவுகளை/பயனர் பெயரை தடை செய்ய விரும்பவில்லை என்று நான் முன்னர் எழுதி யிருந்தாலும்  அது எனக்கு தூரமாக இருப்பதாக! நம்முடைய மாம்சத்தால் தடுக்க முடிந்த தீமைகளை நாம்தான் தடுக்கவேண்டும்.  முடியாத காரியங்களையே கர்த்தரின் தீர்ப்புக்கு வைத்துவிடவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
 
ஆட்டுக்குட்டிக்கு ஓநாயை காவல் வைக்கமுடியாது! குடியை கெடுக்க நினைப்பவனை குடும்ப காவலனாக  வைக்க முடியாது! அதேபோல் ஆரோக்கிய உபதேசம் என்று சொல்லிக்கொண்டு அடுத்த வரை குறை கூறுவதையே  பிழைப்பாக கொண்டு தளம் நடத்திவரும் அதி மேதாவிகளை இங்கு நாம் அனுமதித்தால் இந்த தளத்தின் செயல்பாடுகள் முற்றிலும்  முடங்கிவிடும் என்று கருதுகிறேன்.
 
நானும் இந்த தளத்தில் ஒரு நிர்வாகி என்ற முறையில் தற்காலிகமாக  அவர் அவரது பயனர் பெயரை தடை செய்துள்ளேன்.    
 

 இதற்கு நான் அளித்துள்ள பதில் பின்வருமாறு:

HMV wrote:
SUNDAR wrote:
அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள்  மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின்  பதிவுகள்  பற்றி அனைவரும் அறிவோம்.... நானும் இந்த தளத்தில் ஒரு நிர்வாகி என்ற முறையில் தற்காலிகமாக  அவர் அவரது பயனர் பெயரை தடை செய்துள்ளேன்.    

 என்னை இத்தனை நாட்கள் பொறுத்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே. நான் எழுதியதையெல்லாம் இங்கேயே விட்டுச்செல்லுகிறேன்.ஆனாலும் தேவையற்ற அழுக்கைப் போல இருக்கும் என்னுடைய எழுத்துக்களை நீங்களே நீக்கிவிட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

திரு.சுந்தர் அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் வருத்தமும் அல்லது பொறாமையும் இப்படி எந்த தீய எண்ணமும் இல்லை. இங்கே என்னுடைய கருத்துக்கள் பொருந்தாமைக்கு மெய்யாகவே வருந்துகிறேன். ஆனாலும் கர்த்தர் ஒருவரே அனைத்தையும் அறிவார். அவருடைய பரிசுத்த சித்தத்துக்கு அனைத்தையும் ஒப்புகொடுக்கிறேன்.

இந்த கடைசி வார்த்தைகளைப் பகிர கொடுத்த நல்ல வாய்ப்புக்காக இந்த தளத்தின் நிர்வாகி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.cry


 எவ்வளவு குனிந்தாலும் குட்டுகிறார்களே என்ன செய்யலாம், ஐயா..?



-- Edited by HMV on Wednesday 30th of November 2011 11:11:33 PM

__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

நான் ஒரு சாதாரண மனிதன், எனக்கு தெரிந்ததை எழுதியிருந்தேன். அதற்கு சூதகமான போதகம் செய்யும் திரு.சுந்தர் அவர்கள் கொடுத்திருக்கும் ரியாக்‌ஷன்...

சாத்தானின் திசை திருப்பும் தந்திரரங்கள்!

SUNDAR wrote:
சாத்தானின் திசை திருப்பும் தந்திரங்கள்  என்ற   இந்த  திரியில் "தந்திரக்காரனாகிய" சாத்தானின் செயல்பாடுகள்  குறித்து  நாம் அறிந்தவைகளை  எழுதி பிறரை எச்சரித்து வருகிறோம். இன்று நம் தளத்தில் எழுதப்பட்ட  சில காரியங்களை  தியாநித்த போது சாத்தானின் இன்னொரு முக்கிய தந்திரத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதை குறித்த  எச்சரிக்கையை இங்கு எழுதிவைக்க விரும்புகிறேன்.
சாத்தானின் தந்திரமான உபதேசத்தில் ஓன்று "நீ இருக்கும் நிலையிலேயே சுகமாக இரு அதற்க்கு மேல் ஒன்றும்  சிந்திக்காதே ஒன்றும் செய்யவும் வேண்டாம்" என்பதே அந்த உபதேசம்.
சத்துரு உங்களிடம் வந்து  "உனக்கு அதுபற்றி ஏன் கவலை? இதுபோதும் இதற்க்கு மேல் வேண்டாம்,  உனக்கு என்ன வேண்டும் அதை கேள் தருகிறேன்  இப்படியே இருந்துவிட்டு  எல்லோரும் போவதுபோல செத்து போ"  என்று சொல்லி உங்களை அமுக்க பார்ப்பான்!

நாம் இருக்கும் நிலையில் சொகுசாக வாழ்க்கை நடத்த விரும்பாமல் அல்லது இருக்கும் நிலையில் திருப்தியடைதுவிட்டு போகாமல், யாரோ பாஸ்டர்களும் வெளிநாட்டுகாரர்களும்  சொன்ன உபதேசத்தை  அப்படியே வேதவாக்காக எண்ணாமல்,   வேதம் சொல்லும் வசனங்களை நாமே அமர்ந்து இன்னும் அதிக அதிகமாக தியானித்து ஒவ்வொரு வசனமும் நமக்கு சொல்லும் பாடம் என்ன?  நமது பக்கத்தில் இருந்து செய்யவேண்டிய காரியங்கள் எதாவது இருக்கிறதா அல்லது தேவன் என்னை இந்த பூமியில் படைத்த நோக்கம் என்ன? நான் இன்னும் ஆண்டவருக்காக எதை செய்யவேண்டும் என்பது குறித்த சிந்தனையில் இடைவிடாமல் தேவனை நோக்கி ஜெபிக்கவேண்டும். 

மேற்காணும் சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுக்கு நான் பதிலாகக் கொடுத்துள்ளது...

ஐயா, கீழ்க்கண்ட திரியில் இன்று காலை நான் எழுதியதை சாத்தான் எழுதியது என்கிறீர்களா,எப்படி ஐயா குணசாலியான வேடம் போட்டுக்கொண்டு இப்படி சகமனிதனை நேருக்கு நேர் சாத்தான் என்று உங்களால் எழுதமுடிகிறது? நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நேரடியாகவோ தனிமடல் மூலமாகவோ தெரிவிப்பது தானே நியாயம், உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா ?

http://www.lord.activeboard.com/t46450698/1135/

இந்த தளத்தை கவனிக்கும் மற்ற நண்பர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்கட்டும். மடையனிடம் தப்பித்தாலும் பைத்தியக்காரனிடம் தப்பிக்கமுடியாது என்பார்கள்,ஆனால் இந்த ஆளோ...disbeliefஎன்ன சொல்ல furious



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்ற மாபெரும் பிரச்சினைக்கு தீர்வு தேடி புறப்பட்டிருக்கிறார்,திரு.சுந்தர்.அதில் நான் பதித்துள்ள கருத்து.

SUNDAR wrote:
எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்?   அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் என்ன? என்பதை  அறிந்த சகோதரர்கள் இங்கு எழுதலாம்!

 திரு.சுந்தர் அவர்களே,

இயேசு கண்ணீர் விட்டார் என்று இருக்கிறதே தவிர ஏன் கண்ணீர் விட்டார் என்று அங்கே இல்லை. இப்படி இல்லாத ஒன்றைக் குறித்து தேடும் காரணத்தினாலேயே பல்வேறு உபதேச குழப்பங்கள் ஏற்படுகிறது. எனவே எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது.வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று ஆண்டவர் சொன்னது இதுவல்ல என்று கருதுகிறேன்.

உதாரணமாக நான் இதுகுறித்து சொல்லும் கருத்தை ஆண்டவர் அங்கீகரிப்பாரா ? அவர் அங்கீகரித்ததை எவ்வாறு நான் உறுதிபடுத்திக்கொள்ளமுடியும் ? ஒருவேளை பெரும்பாலான மனிதர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தை ஆண்டவர் புறக்கணித்தால் ? பெரும்பாலான மனிதர்கள் ஏற்றுக்கொண்டு என்னைப் புகழும் மாயையில் நான் தேவனுக்கு விரோதியானால் ? நான் ஏன் கண்ணீர் விட்டேன் என்று நீங்கள் சொல்லுவது எப்படி உண்மையாக இருக்கும், கொஞ்சம் யோசியுங்களேன் !

இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்று நீங்கள் யோசிப்பது தவறல்ல,அவர் ஏன் கண்ணீர் விட்டார் என்று கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பதே தவறு. அனைத்து சர்ச்சைகளுக்கும் இதையே அளவுகோலாக எடுத்துக்கொள்ளலாம். நாம் வேதத்தை வேதமாகப் படித்து ஒன்றும் அறியாத பேதைகளைப் போல இருந்துவிட்டால் நம்முடைய இரட்சிப்புக்கு அதாவது கடைசிகால சரீர மீட்புக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமா என்ன ?

சரி, நீங்க மிகவும் ஆர்வத்துடன் கேட்பதால் நானும் முயற்சிக்கிறேன். எப்போதுமே குறிப்பிட்ட வசனத்தின் பின்னணியையும் நோக்கத்தையும் அறிய அல்லது ஆராய அந்த வசனத்தின் சூழலையே முதலாவது கவனத்தில் கொள்ளவேண்டும் எனும் விதிமுறையின் படியும் வழக்கத்தின்படியும் வசனம் சொல்லப்பட்ட சூழலையும் அந்த வசனத்தைத் தொடரும் வசனங்களையும் கவனித்தால் அடுத்த ரெண்டு வசனங்களில் சில காரியங்கள் இருக்கிறது.

  • ”இயேசு கண்ணீர் விட்டார்.
  • அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
  • அவர்களில் சிலர் குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.”(யோவான்.11:35-37)

மேற்காணும் வசனத்தின்படி பார்வையாளரின் கூற்றுப்படி அவர் லாசருவின் மீது வைத்திருந்த நேசம் வெளிப்படுகிறது.அவர் கண்ணீர் விடவும் அதுவே காரணமாக இருக்கிறது.அதே நேரத்தில் அவரை குறைகூறும் மக்களின் கருத்தும் இங்கே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் லாசருவுக்காக இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்று வேதத்தில் எங்குமே இல்லாத நிலையில் அதுகுறித்து ஆராய்வது வரம்புமீறிய செயலாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

பொதுவாகவே ஒருவர் கண்ணீர் சிந்தும்போது இயல்பாகவே கண்ணில் நீர்சுரப்பது மனித இயல்பு.நாமும் கூட சில துக்கவீட்டுக்கு போகும்போது ஆண்களாக இருந்தாலும்கூட எல்லோரும் அழும்போது நம்முடைய கண்களும் கலங்கும். அவ்வாறே ஆண்டவரும் கண்ணீர் சிந்துகிறார்.ஆண்டவர் கண்ணீர் சிந்தியது இயலாமையினால் அல்ல,அவர் உணர்வுள்ளவர் என்பதே காரணம்.சிலர் சொல்லலாம்,இயேசு கண்ணீர் விட்டதால் அவர் மனிதனே என்பதாக.அவர் தன்னை தேவனாக நிரூபிக்க அழாதிருக்கவேண்டுமோ ? தேவன் அழக்கூடாது என்பது ஒன்றும் விதிமுறையல்ல. ஏனெனில் பிதாவாகிய தேவனும்கூட கலங்கியதான சம்பவங்கள் வேதத்தில் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.ஏனெனில் அவர் உணர்வுள்ளவர், துக்கப்படுகிறவர், பெருமூச்சுவிடுகிறவர்...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த திரியின் பாதிப்பில் நான் இன்று ஒரு குறுஞ்செய்தி (SMS) அமைத்து எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினேன்.அதை இங்கே நண்பர்கள் விரும்பினால் பகிர்ந்துகொள்கிறேன்.

"Jesus wept."-(John.11:35)
>To wipe away ur tears

>To take away ur stones

>To keep u away from evil

Sing loudly,

He is Lord,

He is risen4rm d dead..,

(தற்போது குறுஞ்செய்தி கட்டணங்கள் மிகவும் கூடிவிட்டபடியினால் அதிக பட்சம் 153 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.எனவே நான் அதனை இயன்றமட்டும் சுருக்கி அதிகமானோர்க்கு அனுப்ப வேண்டியதாகிறது.)

EDWIN SUDHAKAR wrote:
அவர் கடவுளாக இருந்தாலும் சகலத்தையும் அறிந்தாலும் மனிதன் வேதனை படுவதையும் அவர்கள் அழுவதையும் துன்பபடுவதையும்  அவரால் தாங்க முடியாது   என்பதை தெரியபடுத்திகின்றது.

 அன்பு நண்பர் எட்வின் அவர்களே,

இந்த தளத்தின் நிர்வாகி இயேசுவை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளுகிறாரா, ஏனெனில் பிதா இயேசுவில் இல்லை என்று மற்றொரு திரியில் எழுதியிருக்கிறாரே..?



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard