நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு எனும் இருபெரும் பிரிவுகள் உண்டு. அதில் பழைய ஏற்பாடு மனிதனின் கிரியையினால் உண்டாகும் விளைவுகள் குறித்து பேசுகிறது. புதிய ஏற்பாடு தேவனின் கிரியையினால் உண்டாகும் பலா பலன்களைக் குறித்து பேசுகிறது.
பழைய ஏற்பாடு முழுவதும் மரணமும் அதனால் உண்டான பயங்களும் விவரிக்கப்படுகிறது. புதிய ஏற்பாடு முழுவதும் ஜீவனும் அதனால் உண்டாகும் பாக்கியங்களும் விவரிக்கப்படுகிறது.
பழைய ஏற்பாடுதேவனால் மனிதனுக்கு மனிதன் மூலம் கொடுக்கப்பட்ட பிரமாணங்களைப் போதிக்கிறது. புதிய ஏற்பாடு தேவனால் மனிதனுக்கு தேவன் மூலமே கொடுக்கப்பட்ட பிரமாணங்களைப் போதிக்கப்படுகிறது.
”இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” (2.கொரிந்தியர்.5:17)