Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை ..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை ..!
Permalink  
 


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை , அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு..! விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா , சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?

392930_323394337674978_100000132439512_1509562_961888544_n.jpg

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;பரோட்டாவும் பிரபலமடைந்தது.பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்தநாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட..!

மைதா எப்படி தயாரிக்கிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்; அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள், அதுவே மைதா . Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை -யில் உள்ள ரசாயனம் இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது. இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது; மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது, இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு நோய் வர துணைபுரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல , மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . இதில் சத்துகள் எதுவும் இல்லை; குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது. Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடைவிதித்துள்ளன . மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்துக்கொள்வோம், நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே, ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு , கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறந் தள்ளுவோம்.
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard