இன்று அதிகாலை 04:30 மணிக்கு நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான தாயார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள், அவர்களுக்கு வயது 85 நிறைவான வயதானாலும் மனநிறைவான வாழ்க்கையல்ல; காரணம் அவருடைய இறுதி நாட்களில் அவர்கள் வேளாவேளை உணவுக்காக மிகவும் அங்கலாய்த்தார்கள், நிறைய பணம் இருந்தும் அவர்களுக்கு உணவு வாங்கித்தரக்கூட ஆளில்லாமல் பலமுறை தவித்திருக்கிறார்கள்,அவருடைய மகனோ ஆளுங்கட்சி எம் எல் ஏ..!
கடந்த மூன்று மாதமாக அந்த தாயாரை கவனித்துக்கொள்ளும் பாக்கியத்தை ஆண்டவர் அடியேனுக்குக் கொடுத்தார், இன்று என் வாழ்க்கையில் முதன்முதலாக நம்முடைய பாரம்பரியப்படி அவர்களுக்கு கோடி துணி வாங்கி சார்த்தும் பாக்கியத்தையும் பெற்றேன். இங்கு குடியேறி குறுகிய காலத்திலேயே என்னை மிகவும் நேசித்தார்கள், காரணம் அவர்களோடு நிறைய சண்டை போட்டிருக்கிறேன், அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை என்னால் மறக்கமுடியாதது, ”என் பிள்ளைகளை விட்டாலும் விடுவேன் உன்னை விடமாட்டேன்யா..நீ நல்லா ஊழியம் செய்... யார் வந்தாலும் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்...” என்று வீரத்துடன் சொன்னார்கள். படிப்பறிவில்லாவிட்டாலும் நல்ல உலக ஞானம் , தேவபக்தி, வைராக்கியத்துடன் வாழ்ந்து மறைந்த அந்த தாயாருக்காக இந்த நேரத்தில் ஆண்டவரை துதிக்கிறேன்.
அவர்கள் பெயர் லோகம்மாள், அவர்கள் மரிக்கும் முன்பதாகவே தன் இறுதி பயணம் எப்படியிருக்கவேண்டும் என்பதையெல்லாம் நேர்த்தியாக ஒழுங்கு செய்திருந்தார்கள்;எனவே அனைத்தும் அவர்கள் விருப்பப்படியே நடைபெறுகிறது.ஏனெனில் அவர்கள் மட்டுமே ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள்,அவர்கள் பிள்ளைகளெல்லாரும் விக்கிரகாராதனை செய்பவர்கள் ஆனாலும் தங்கள் தாயாரின் இறுதி விருப்பப்படியே எல்லாம் நடைபெற ஒத்துழைக்கிறார்கள். ஒரு விசுவாசியின் மரணமும் மேன்மையானது என்பதற்கு இந்த தாயார் ஒரு உதாரணம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)