இயேசு போல் ஓர் நேசருண்டோ
நம் மாசு துயர் தாங்கிட
வாஞ்சை நிறைவேற கெஞ்ச
தஞ்சம் அவர் போலுண்டோ
நெஞ்சம் சாந்தியை இழந்து
சஞ்சலம் கொள்வதேன்
கர்த்தரிடம் யாவும் கூற
ஏக்கம் மலர்ந்ததே
சோதனையில் வீண் தொல்லையில்
பாதையும் உன்று அல்லவோ
சோர்ந்து போகா நெஞ்சத்துடன்
சேர்வாய் அவர் பாதமே
வேதனையில் பங்கு கொள்ளும்
வேறே நேசர் யாருண்டோ
இயேசு யாவும் அறிவாரே
பேசு அவரிடமே
பெலவீனம் முற்றுங் கோணா
கவலையில் வாழுவோர்
தஞ்சம் தர நேசருண்டே
சஞ்சலத்தை கொட்டிட
நண்பர் கைவிட்டாரோ உன்னை
அண்டிக்கொள் இயேசுவையே
அணைப்பாரே உன்னை மார்பில்
துனை என்றும் தான் என்பார்