கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும்
திருவள்ளூர் பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து வந்த தகவல் என்னவென்றால் அசுத்த ஆவிகளை விரட்டுகிறேன் என்று சொல்லி ஒரு வீட்டினுள் நுழையும் குறிப்பிட்ட ஊழியர் வீட்டிலுள்ள ஆண்களை வெளியேற்றிவிட்டு இதேபோல சகோதரிகள் தலையில் கையை வைத்து கீழே தள்ளிவிட்டு அந்த சகோதரிகளின் வயிற்றிலிருந்து மாந்த்ரீகம் செய்யப்பட்ட மருந்தை எடுக்கிறேன் என்று கூறி அவர்களுடைய தொப்புளை கிள்ளியெடுக்கிறார்கள்.
இதுபோல கிள்ளப்பட்டதால் தொப்புள் புண்ணான சில சகோதரிகள் இதனை வேதனையுடன் தனது கணவன்மாரிடம் பகிர்ந்துகொள்ளுகிறார்கள்; தேவ ஊழியர் பெயரில் வந்தவர் செய்த இந்த அக்கிரமத்துக்கு எதிராக எதையும் செய்ய இயலாத அப்பாவி பெண்கள் இதனை வெளியே சொல்லுவது இல்லை. துணிகரமாக பெண்களின் சரீரத்தைத் தொட்டு ஜெபிக்கும் ஊழியர்களிடம் சகோதரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடனே இதனை பகிர்ந்துகொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)