Vijay Kumarசகோதரரே! தசமபாகம் என்பது ஊழியருக்கான ஊதியமல்ல. அது தேவனுக்குரியது, சபை வளர்ச்சிக்கானது என்று சொல்லித்தானே வாங்குகிறார்கள். ஊதியமென்றால் கணக்குச் சொல்லத் தேவையில்லை. ஆனால் தசமபாகம் என்பது தனக்கான ஊதியம் என்று எந்த பாஸ்டரும் சொன்னதாகத் தெரியவில்லை.
Chill Sam நண்பரே, இந்த விவாதத்தைத் தொடருவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் நிலையை அறிவிப்பீர்களா..? அதாவது சபை என்ற அமைப்பு உங்கள் கருத்தின்படி ஆலயம் என்ற ஒன்று தேவை என்று ஒப்புக்கொள்ளுகிறீர்களா..? அதில் எத்தனை உறுப்பினர் இருக்கவேண்டும், எப்படிப்பட்டவர் தலைவராக இருக்கவேண்டும் போன்றவற்றை நிர்ணயம் செய்யும் உரிமை நமக்கு இருக்கிறதா?
இந்த காரியத்துக்கு தீர்வு காணும் முன்பதாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லமுடியாது; ஏனெனில் இல்லாத ஆலயத்துக்காக மக்களை அழைத்து கடவுள் பெயரால் அவர்களிடம் காலாவதியான சரக்கை விற்று காசுபண்ணுவது என்பது பக்கா மோச்டியல்லவா..? எனவே அதுபோன்ற மோசடியான மார்க்கத்தைக் குறித்து நாம் அலசவே வேண்டாம் என்று எண்ணுகிறேன்.
நான் முன்பே குறிப்பிட்டது போல நட்சத்திரங்களை மனதிற் கொண்டு இந்த விவாதத்தை நடத்தாமல் இன்னும் வெளிச்சத்துக்கு வராத கிராம ஊழியர்களின் பரிதாப நிலையைக் கொண்டு இந்த பிரச்சினையை அணுகவும்.
இன்று நான் ஒரு காரியத்தை யோசித்தேன்...தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனம் செய்த எல்லாவற்றிலும் தலையிடவில்லை,எல்லாவற்றையும் கட்டளையிடவில்லை. சிலவற்றை இருந்தவண்ணமாக ஏற்றுக்கொண்டார்,சிலவற்றை அனுமதித்தார்.
மோசே போன்ற தலைவர்கள் இறந்தபோது இஸ்ரவேல் மக்கள் துக்கங் கொண்டாடினார்களாம்;ஆண்டவர் சொன்னதையே செய்வோம் என்று சொல்லிக்கொள்ளும் சமுதாயம் மோசேயின் மரணத்துக்காக துக்கம் கொண்டாட ஆண்டவரின் அனுமதி கேட்டதா,அல்லது ஆண்டவர் கட்டளையிட்டாரா அல்லது அவர்களுடைய செயலை ஆண்டவர் அனுமதித்தாரா அல்லது அதினிமித்தம் மகிழ்ந்தார் என்று இருக்கிறதா..? மன்னாவை இடித்தும் பொடித்தும் சமைத்து சாப்பிட கட்டளை தரப்பட்டதா..? இப்படியே புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களுக்குண்டானவற்றை விற்று அப்போஸ்தலரின் பாதத்தில் வைக்கும்படி எங்கும் யாரும் கட்டளையிடவில்லை;ஆனால் அது இயல்பாகவே நடந்தது அலலவா..?
இப்படியே ஒவ்வொரு பிரச்சினையிலும் மைய நோக்கத்தை பாதிக்காத பல காரியங்களை ஆண்டவர் அனுமதித்திருக்கிறார் அல்லது கண்டுங் காணாதவர் போலிருந்தார்.
உதாரணமாக கோயில் கோபுரத்துக்கு போட்டியாக ஆலயத்துக்கும் கோபுரத்தை கட்டினார்களே அதை எங்கிருந்து கட்டளையாகப் பெற்றார்கள்..? அது தவறு என்றால் கட்டப்பட்ட அத்தனை கோபுரங்களையும் இடித்துவிடலாமா..? இப்படியே தசமபாகம் உட்பட எந்தவொரு போதனைக்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நடுநிலையுடன் யோசிக்கவேண்டும்.
உண்மையிலேயே தசமபாகத்தைக் குறித்து மெயின்லைன் சபைகளிலோ அல்லது டிபிஎம் சபைகளிலோ போதிக்கப்படுவதில்லை.ஏஜி போன்ற சபைகளிலோ தசமபாகத்தைவிட ஆலயக் கட்டுமானப் பணி சம்பந்தமான அறிவிப்புகளும் கலெக்ஷனுமே அதகளப்படுகிறது.எனவே இதுகுறித்த வாதம் தேவையற்றது என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் ஏஞ்சல் டிவி போன்ற கள்ளத் தீர்க்கதரிசிகள் சபைகளிடமே தசமபாகம் கேட்கிறார்களே அது எந்த அதிகாரத்தில் என்பதை நிச்சயமாகவே ஆராயவேண்டும்.
// சகோதரரே! தசமபாகம் என்பது ஊழியருக்கான ஊதியமல்ல. அது தேவனுக்குரியது, சபை வளர்ச்சிக்கானது என்று சொல்லித்தானே வாங்குகிறார்கள். ஊதியமென்றால் கணக்குச் சொல்லத் தேவையில்லை. ஆனால் தசமபாகம் என்பது தனக்கான ஊதியம் என்று எந்த பாஸ்டரும் சொன்னதாகத் தெரியவில்லை.
தசமபாகம் என்பது பாஸ்டருக்கான ஊதியம் மாத்திரமே என்றால் சபையின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சபையில் உள்ள ஏழைப் பரிசுத்தவான்களுக்கு கொடுப்பதெல்லாம் எப்படி?அதற்கு தனியாகக் கொடுக்க வேண்டுமா? அது எத்தனை சதவிகிதம்? தசமபாகம் என்பது தனக்கான ஊதியம் மட்டுமே என்பதை இன்று எத்தனை பாஸ்டர்களால் வெளிப்படையாக அறிவிக்க இயலும்?? //
நண்பர் விஜய் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கும் மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் கிறிஸ்துவை ஆராதிக்கும் சபைகளில் சேகரிக்கப்படும் தசமபாகம் எனப்படும் சிறப்பு காணிக்கையானது மேய்ப்பருக்கான ஊதியமா அல்லது சபை வளர்ச்சிக்கானதா அல்லது சபை வளர்ச்சிக்கென தனியாக சேகரிக்கவேண்டுமா என்பதைக் குறித்து தனி கட்டுரை வரைய ஆயத்தமாக இருக்கிறேன்.
வாசகர்களின் ஆர்வத்தைப் (லைக்) பொறுத்து இதனை செய்வேன்.
08 November at 02:08
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Vijay Kumar // தசமபாகம் எப்படிக் கொடுப்பது என்ற நியமங்களையும் ஆலோசனைகளையும் எங்கும் காண்கிறோம். ஆனால் பாஸ்டர்கள் தங்கள் பெற்றுக்கொண்ட தசமபாகத்தை எப்படி செலவிடுவது என்ற நியமங்களையோ ஆலோசனைகளையோ எங்காவது யாராவது பார்த்திருக்கிறீர்களா? இது முக்கியமென்றால் அதுவும் முக்கியமில்லையா?//
மேற்காணும் கருத்து பின்வரும் தலைப்பில் பதிக்கப்பட்டுள்ள கட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது.
by Arputharaj Samuel on Monday, 07 November 2011 at 02:35
அதுகுறித்த நமது கருத்தை இங்கே பகிருகிறோம், தற்காலத்தில் தசமபாகத்தில் எந்த ஊழியரும் திருப்தியாகிறதில்லை என்பதே உண்மை; எனவே இந்த வாதமே தேவையற்றது.
உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் தரும் முதலாளி நீங்கள் அதனை எப்படி செலவு செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரா என்ன,இது என்ன அநியாயமாக இருக்கிறதே..? அல்லது நீங்கள் சம்பாதித்துக்கொடுக்கும் பணத்தை அவர் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று உங்களிடம் கேட்கிறாரா..?
குறைந்தபட்சம் உங்கள் தகப்பனார் செய்யும் செலவுகளைக் குறித்து கேட்கும் தைரியம் இருந்ததுண்டா..? சபையும் குடும்பம் தான். அவரிடம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து செலவைப் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாவிட்டால் உடனே தனிக்குடித்தனம் போய்விடுவீர்கள்,அப்படித்தானே, இதுவே சபைக்கும் நடந்தது.
”அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” (எபிரெயர்.4:13)
என்று வேதம் சொல்லவில்லையா..? எனவே இந்த காரியத்தில் அதாவது தசமபாகம் மற்றும் காணிக்கை விஷயத்தில் கேள்வி கேட்க விசுவாசிக்கு எந்த உரிமையுமில்லை.
// தசமபாகம் என்பது தேவனுக்குரியது,அது பரிசுத்தமானது,அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. அதனைப் பெறும் உரிமை முழுநேர ஊழியம் செய்பவனுக்கு மட்டுமே உண்டு;தசமபாகத்தை தன்னிஷ்டத்துக்கு பிரித்து செலவு செய்ய விசுவாசிக்கு எந்த உரிமையுமில்லை.திருவசனத்தில் உபதேசிக்கப்படும் விசுவாசி ஒரு சபைக்குட்பட்டு திருவிருந்து போன்ற ஐக்கியங்களில் வளர்ந்து சாட்சியாக நிற்க உதவும் மேய்ப்பருக்கு தனது வருமானத்தில் பத்து சதவீதம் ஒதுக்கித் தருவது பெரிய காரியமே இல்லை.அவன் அன்றாட வாழ்வில் இதைவிட அதிகமாகவே உலகத்துக்காக செலவுசெய்கிறான்...//
இதுவே நான் வளர்ந்த சபைத் தலைவர்களால் போதிக்கப்பட்டது;நான் இதனைக் கடைபிடித்து பலனடைந்த அனுபவத்தினால் இந்த ஒழுங்குக்கு எதிராக என்னால் பேசமுடியாது.ஆனால் இந்த ஒழுங்குக்கு விரோதமாகத் தொடர்ந்து பேசுவோருக்கு எதிராக நீண்ட விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். சாமர்த்தியமிருந்தால் யார் வேண்டுமானாலும் மோதிப்பார்க்கட்டும்.
ஒரு அமைப்பையோ ஒழுங்கையோ இடிப்பது எளிது,கட்டுவது கடினம் என்பதை நினைவில் கொள்ளவும்.இதுபோல ஒரு ஒழுங்குக்கு எதிராகப் பேசுவதைவிட ஒழுங்கீனமாகிவிட்ட அதனை எப்படி ஒழுங்குபடுத்தலாம் என்பதைக் குறித்து யோசிக்கவேண்டும். நான் இவற்றை எழுதக்காரணம் பளபளா ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல,ஆயிரக்கணக்கில் சிதறியிருக்கும் உண்மையான ஊழியர்களின் ஏழ்மை நிலைமையை கருத்தில் கொண்டே யோசிக்கிறேன். அவர்களுடைய ஏழ்மை நிலையை என்னால் மாற்றமுடியாது.ஆனால் அவர்கள் ஊழியம் செய்யும் மந்தையே அவரைப் போஷிக்கவேண்டும் என்பதை ஓங்கி சொல்லமுடியும்.
வேதகலாசாலையில் படிப்பை முடித்து விட்டு கனவுகளோடு களம் நோக்கி செல்லும் புத்தம்புது மலரான ஊழியனை குளவியாக்குவதே சமநிலையில்லாத பிரமாணமே.அவனை வெறுமனே விசுவாசத்தில் பிழைத்துக்கொள் என்று விரட்டிவிடும் ஸ்தாபனம் அவனுக்கு போதுமான ஊதியம் வழங்குகிறதில்லை; எனவே அவனுக்கு யாரும் பெண் கொடுப்பதுமில்லை. சபையிலுள்ள பெண்ணை திருமணம் செய்தால் சபையே உடைகிறது.பிரச்சினையின் அடிமட்டத்திலிருந்து ஆராயாமல் மேலோட்டமாக ஆராய்ந்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் கண்களுக்குத் தெரியாது.
கர்த்தருடைய வருகை பரியந்தம் திருச்சபையால் சூழ்நிலைக்கேற்ப காலாகாலங்களில் திருச்சபையின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகளுக்கு எதிராகப் பேசாமலும் வேத வசனங்களைத் தவறாக வியாக்கியானம் செய்யாமலுமிருந்து மோசடி ஊழியர்களுக்கு எதிராகவும் துருபதேசக்காரர்களுக்கு எதிராகவும் கள்ள உபதேசம் செய்யும் ஓநாய்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)