Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நண்பர்களை சம்பாதியுங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
நண்பர்களை சம்பாதியுங்கள்..!
Permalink  
 


"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்." (லூக்கா 16:9)

 நம்முடைய ஆண்டவர் சொல்லிச்சென்ற இந்த வசனத்தை நாம் செயல்படுத்தினோமோ இல்லையோ உலகம் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு வேகமாக செயல்பட்டு எத்தனையோ சமுதாயத் தளங்களை உருவாக்கி நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது;அதிலும் இலவசமாக..!

 ஆனால் இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கிருபையால் பெற்றிருக்கும் தேவஜனமோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது; இதில் சபைத் தலைவர்களும் விதிவிலக்கல்ல, இன்னும் அவர்களே எல்லாவற்றுக்கும் மூலக்காரணமாக இருக்கிறார்கள்;

 நண்பர்களை சம்பாதியுங்கள் என்று நம்முடைய ஆண்டவர் என்ன நோக்கத்துடன் சொன்னாரோ, நாம் சம்பாதித்த நண்பர்களைவிட பகையே அதிகம் போலத் தோன்றுகிறது;என்னைப் போன்றோர் சமாதானத்தையும் இணக்கத்தையும் உறவையும் நாடி இயன்ற மட்டும் சாத்வீகமாக எழுதி வருகிறோம்; ஆனால் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் முகமறியாத என்னைப் போன்ற அப்பாவிகளை (?) தூஷிப்பதைக் காண சகிக்கவில்லை; என்னை நேருக்கு நேர் பார்த்து நலன் விசாரித்தறிந்து எனக்கு சிங்கிள் டீ கூட வாங்கி தராத ஒரு நண்பருக்கு என்மேல் ஏன் அல்லது எங்கிருந்து அவ்வளவு கோபமும் பகையுணர்ச்சியும் வருகிறது? மெய்யாகவே எனக்கு இரகசியம் புரியவில்லை.

http://chillsam.activeboard.com/t45498141/topic-45498141/

 ஆனாலும் பாலைவன நீரோடை போல சில நல்ல நண்பர்களையும் இந்த சமுதாய நட்புணர்வு தளங்களால் என்னைப் போன்ற வழிப்போக்கர்கள் பெற்றிருக்கிறோம் என்பதே உண்மை..!

 கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் ஃபேஸ்புக்  (Facebook) தளத்தை கிறிஸ்தவ நட்புணர்வுக்கு அடையாளமான த()ளமாக மாற்றிட உறுதிகொள்வோம்..!

எச்சரிக்கை:இந்த கட்டுரை வதனநூல் தளத்துக்காக எழுதப்பட்டது.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard