பேதுரு மற்றும் பவுல் உள்ளிட்ட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கில்லை. பெரியவர் அன்பு அறிவிப்பு..!
பெரியவர் அன்பு அவர்கள் தனது பூரண சற்குணராகுங்கள் எனும் அக்டோபர் மாதத்துக்கான இதழில் மேற்கண்டவாறு அறிவித்திருக்கிறார்; அதன் முழுவிவரத்தை காப்பி பேஸ்ட் இயலாத காரணத்தினால் பதிக்கவில்லை; ஆனாலும் அதன் விவரத்தையறிய தொடுப்பைத் தொடரவும்.
எந்தவொரு உபதேசத்திலும் மேலோட்டமாகப் பார்த்தால் தவறுகள் இராது; ஆனால் சற்று நேரமெடுத்து கவனித்தாலே துருபதேசங்களை அடையாளங்காண இயலும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இவர் இயேசுவைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுப்பதுடன் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்காக சீனாய் மலையின் அடிவாரத்தில் வழங்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் கற்பனைகளைக் கைக்கொண்டாலே நித்திய ஜீவன் என்று போதிக்கும் பிரிவைச் சேர்ந்தவர்;(எல்லாம் யானையைத் தடவி கருத்து கூறிய குருடர்களின் நிலைமைதான்..!)
இவர் அண்மையில் கோவை வெறியன் க்ரூப்புடன் கடுமையாக மோதிவருகிறார்;மேலும் சுந்தர் அவர்களுடனும் மோதல்கள் வெடித்திருக்கிறது; இவர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழியவேண்டுமென்பதே ஆண்டவரின் தீர்மானமாக இருந்தால் அதனை யார் தடுக்க இயலும்?
இந்நிலையில் ஏனோ (என் கண்ணில் தானா இவைபடவேண்டும்?) இவருடைய பத்திரிகையை நான் பார்வையிடப் போக அதில் இருந்த பல்வேறு மாறுபாடான உபதேசங்களினிடையே கேள்விபதில் பகுதியில் இவ்வாறு இருந்தது,அதனை காப்பி பேஸ்ட் செய்ய இயலாத காரணத்தினால் கைப்பாடாக எழுதுகிறேன்.
கேள்வி: வெளிப்படுத்தல்.20:6ன் படி முதலாம் உயிர்த்தெழுதல் உண்டு என்றால் எவர்களுக்கெல்லாம் அந்த உயிர்த்தெழுதல்? அந்த உயிர்த்தெழுதலுக்குப் பின் 2ம் உயிர்த்தெழுதல் உண்டா?
பதில்: முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்கள் பரிசுத்தவான்களாயிருப்பார்கள் என வெளி.20:6 கூறுகிறது.இவர்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் என 1.தெச.20:6 கூறுவதால் (எழுத்துப்பிழை..) பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையமாட்டார்கள் என்று அறிகிறோம்.கிறிஸ்துவை விசுவாசித்து அவரது கற்பனைகளின்படி (?) வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள்.இந்த பரிசுத்தவான்களில் பலர் எப்படிப்பட்டவர்களாக வாழ்ந்து மரித்தார்கள் என்பதைத்தான் வெளி.20:4 கூறுகிறது;
"அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்."(வெளிப்படுத்தல்.20;4)
இவ்வசனத்தில் யோவான் கண்டதாகக் கூறுகிறவர்கள் மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள் எனக் கூறமுடியாது.ஏனெனில் யோவான் கண்ட இவர்களைப் போலவே எல்லா பரிசுத்தவான்களும் சிரச்சேதத்தால் மரித்தவர்களும் அல்ல,அந்திகிறிஸ்துவின் நாட்களில் மிருகத்தை வணங்காமல் அதன் முத்திரையை தரியாமல் வாழ்ந்தவர்களும் அல்ல.அப்போஸ்தலன் பேதுரு சிரச்சேதம் பண்ணப்படாமல் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததாக சரித்திரம் கூறுகிறது.பேதுருவோ பவுலோ அந்திகிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்தவர்களல்ல. நியாயத்தீர்ப்பு கொடுக்கும்படி அதிகாரம் பெற்ற பரிசுத்தவான்களில் தான் கண்ட சிலரைப் பற்றி மட்டுமே வெளி.20:4ல் யோவான் கூறுகிறார்.மற்றபடி கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து மரித்த பரிசுத்தவான்கள் அனைவரும் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள்.அவர்கள் எத்தனை உபத்திரவம் நிர்ப்பந்தம் வந்தாலும் பிசாசுக்கு இணங்காமல் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்வதிலும் தேவ வசனத்தின்படி வாழ்வதிலும் வைராக்கியமாயிருப்பார்கள் என்பதைத்தான் வெளி.20:4லிருந்து அறிகிறோம்.
முதலாம் உயிர்த்தெழுதல் என்பது 2 அர்த்தங்களை உடையது.1.வரிசையின்படி முதலாவது உயிர்த்தெழுவது 2.தரத்தின்படி முதல் பலனானவர்கள் உயிர்த்தெழுவது மூலபாஷை அகராதிபடி முதலாம் எனும் வார்த்தைக்கு இவ்விரு அர்த்தங்களும் உண்டு.எனவே இவ்விரு அர்த்தங்களையும் முதலாம் உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுவோருக்குப் பொறுத்தமானதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
முத்லாம் உயிர்த்தெழுதல் என ஒன்று இருந்தால் 2ம் உயிர்த்தெழுதம் என ஒன்றும் கட்டாயம் இருக்கவேண்டும்.கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் அனைவரும் 2ம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள்.மற்ற அனைவரும் 2ம் உயிர்ததெழுதலில் பங்கடைவார்கள்.ஆனால் 2ம் உயிர்த்தெழுதலில் பங்கடைபவர்கள் ஒரே சமயத்தில் மொத்தமாக உயிர்த்தெழுவதில்லை.அவரவர் தங்கள் தங்கள் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.(1.கொரி.15;23)
பின்குறிப்பு:இம்மாதிரி கேள்விகளுக்கு வேதாகமத்தில் நேரடியாக பதில் இல்லாததால் கூடியவரை பொருத்தமான வசனங்களைக் கொண்டு அவற்றின் கருத்துக்களின் அடிப்படையில் பதில் கூறப்பட்டுள்ளது.ஆகிலும் இப்பதில்களே முடிவானது எனக் கூற இயலாது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.(ஆசிரியர்)
மேற்கண்டவாறு அந்த பத்திரிகையில் பெரியவர் அன்பு குறிப்பிடுகிறார்;தான் கொடுத்துள்ள தாறூமாறான விளக்கங்களுக்கு பொறுப்பேற்கும் துணிச்சலும் அவருக்கு இல்லை;சில பத்திரிகைகளில் அவதூறான காரியங்களை எழுதிவிட்டு இறுதியில் சின்னதாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கும்,"இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை" என்பதாக.அதுபோல இவரும் குறிப்பிட்டிருக்கிறார்.