அன்பான சகோதரர் ஜேம்ஸ் துரை அவர்களை இந்த் தளத்திலும் சந்திப்பது மிகவும் சந்தோஷம்.இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ள விவாதங்களை படித்தபிறகே நான் கள்ள உபதேசங்களைக் குறித்து எச்சரிப்படைந்தேன்.எனவே உங்களுக்கு இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தாங்கள் நேர்த்தியான ஆரோக்கிய உபதேசத்தில் வளர்ந்து நிற்கும் கர்த்தருடைய பிள்ளை என்பது தங்கள் எழுத்துக்களிலிருந்து தெரிகிறது. நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். பல்வேறு உபதேச குழப்பங்கள் பெருகியிருக்கும் இந்த காலத்தில் கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திருப்பது சவால் மிகுந்ததாக இருக்கிறது.
14. நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
But continue thou in the things which thou hast learned and hast been assured of, knowing of whom thou hast learned them;
15. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
And that from a child thou hast known the holy scriptures, which are able to make thee wise unto salvation through faith which is in Christ Jesus.
நேற்று இந்த கவிதையை பீட்டர் அவர்கள் வதனநூலில் பகிர முயற்சித்து அது இயலாமற் போனதன் மூலம் நான் அடைந்த ஏமாற்றமும் தேடலும் எனக்கே தெரியும்;இதோ அந்த நல்ல கவிதையை (மறு) விதைத்த நண்பருக்கு அல்ல, நண்பனுக்கு நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)