Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுந்திரு வாலிபா....
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: எழுந்திரு வாலிபா....
Permalink  
 


jamesdhurai wrote:

அறுமை


அன்பான சகோதரர் ஜேம்ஸ் துரை அவர்களை இந்த் தளத்திலும் சந்திப்பது மிகவும் சந்தோஷம்.இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ள விவாதங்களை படித்தபிறகே நான் கள்ள உபதேசங்களைக் குறித்து எச்சரிப்படைந்தேன்.எனவே உங்களுக்கு இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தாங்கள் நேர்த்தியான ஆரோக்கிய உபதேசத்தில் வளர்ந்து நிற்கும் கர்த்தருடைய பிள்ளை என்பது தங்கள் எழுத்துக்களிலிருந்து தெரிகிறது. நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். பல்வேறு உபதேச குழப்பங்கள் பெருகியிருக்கும் இந்த காலத்தில் கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திருப்பது சவால் மிகுந்ததாக இருக்கிறது.

14. நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,

But continue thou in the things which thou hast learned and hast been assured of, knowing of whom thou hast learned them;

15. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

And that from a child thou hast known the holy scriptures, which are able to make thee wise unto salvation through faith which is in Christ Jesus.

>2.தீமோத்தேயு.3:14,15



__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

அறுமை


__________________
hi


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

That's very nice. Thanks for posting..!


 நேற்று இந்த கவிதையை பீட்டர் அவர்கள் வதனநூலில் பகிர முயற்சித்து அது இயலாமற் போனதன் மூலம் நான் அடைந்த‌ ஏமாற்றமும் தேடலும் எனக்கே தெரியும்;இதோ அந்த நல்ல கவிதையை (மறு) விதைத்த நண்பருக்கு அல்ல, நண்பனுக்கு நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

That's very nice. Thanks for posting!

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

by Joshuas'army Srilanka on Tuesday @ facebook

இளைஞனே!!!

திடப்படுத்தலுக்குப்பின் நீ

பலவீனப்படுத்தபடுவது எனக்கு தெரியும்..!!!

இராப்போஜனத்திற்க்குப் பின் நீ

இரத்த சோகையடைவதும் எனக்கு புரியும்!

 

ஆகவே நான் உனக்கு

அறிமுகப்படுத்துவது

ஆராதனை கஞ்சிகளையல்ல;

புதுக்கவிதையினுள் சில 

புரதச் சத்துக்களைத்தான்!!

 

கிறிஸ்மஸ் வந்தால்

சிரிப்பதற்க்கும்,

லெந்து காலங்களில்

அழுவதற்கு மட்டுமே உன்னை

ஆயத்தப்படுத்துவார்கள்!

தேதி குறித்து

உணர்ச்சிகளை உந்திவிட,

நீ ஒன்றும் நடிகனல்லவே?

 

பேசிவிடுவாயே என

பிரசங்கத் தொட்டிலில்

தாலாட்டுவார்கள்;

ஏசிவிடுவாயே என

பாடகர் குழுவிற்காக

பயிற்ச்சியளிப்பார்கள்!

 

அத்தனையும் ஏற்று நீ

ஆயத்தமானாலும்

உனது உரிமை,

ஒப்பாரிவைக்கும் பொழுது

ஒதுங்கியே இருப்பார்கள்!!

 

அடிமனசுக்குள்

அழுக்கை அப்பிக்கொண்டு

அங்கி வெள்ளையைக் காட்டி

ஆச்சரியபட வைப்பார்கள்;

திருவிருந்துக்கு பின்

இவர்கள் கை கழுவுவது

சாப்பாட்டிற்க்கு மட்டுமல்ல

சமத்துவதிற்கும்தான்!

 

இரு!!

இரண்டு கைகளாலும் 

உன்னை ஆசீர்வதித்துவிட்டு

மூன்றாவது கையாக

ஒரு

உண்டியலையும் நீட்டுவார்கள்!

இதைவிட ஒரு

பிச்சைகாரனுக்கு 

நீ பிச்சையிட்டு நீ

பெருமிதப்படலாமே!!

 

உண்மையிது!

உண்டியல்களின்

உள்ளங்கைகளைவிட

தொழுநோயாளிகளின் கைகள்

தூய்மையானவை!

 

பலமானவனே!!

இயேசுவின் பிறப்பின்போது

பளபளப்புகளை கண்டு

பரவசப்படாதே!

கந்தலின் மீதே உன் கவனம் இருக்கட்டும்!

அவரது இறப்பின்போது

தண்ணீர்ப் பந்தல்களில்

தவமிருக்காதே!!

கட்டாயச் சோகத்தை 

கழற்றி எறிந்துவிட்டு

அது,

உயிர்தெழுதலுக்கான உத்தியென்பதில்

உன்னிப்பாக இரு!

 

பெட்டியினுள் பூட்டி

வெளியில் விசிறிவிடுவார்கள்

தேர்தலெனும் 

ஏலப்பண்டிகையின்போது

உனது விலையை

நிதானமாக நிர்ணயிப்பார்கள்!

 

முத்திரை முகம் காட்டினால்

மறைமுகமாக நீ

கைகளில் ஏந்திவரும்

சிலுவையை உனது

முதுகிற்க்கு மாற்றவும்

முயற்ச்சி செய்வார்கள்!!

 

அறிகிறாயா?

நீர் மோரைவிட உன்

ஆயுள்விடும் கண்ணீருக்கு

அடர்த்தி அதிகமென?

 

இறையியலின் இன்னொரு தூணே!!

ஆலயங்களின் அடித்தளம்

சாதிகளால் பூசப்படுவதை கண்டு - நீ

ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

இயேசு எனும்

இளைஞனைபோல

ஆலயங்களில் நீ

ஆத்திரப்பட வேண்டும்!!

 

சுயநிறக்காரனே!!

அரசியல் வெள்ளையடித்த

ஆலயங்களை அலட்சியப்படுத்து...

அவற்ரை 

ஆதரித்து அமர்வதை விட

கல்லறைத் தோட்டத்தில்

வசனப் பூக்களையாவது

வாசித்து பறிக்கலாம்!!

 

உன்னை 

அறைய நினைக்கும்

ஆணிகளை அலட்சியப்படுத்து;

ஆணிகளே

வாட்களானதாக

வரலாறு இல்லை!!

 

உன் 

சுட்டு விரலுக்குள்

சூரியன் இருக்கிறது...

அதை நீ

திருப்பும் திசையெல்லாம்

வெளிச்சம் அடிக்குமென

விளங்கிக் கொண்டால் போதும்!!!



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard