ஊழியம் செய்பவர்கள் தியாகத்தோடுதான் ஊழியம் செய்ய வேண்டும். உலக வேலை செய்பவர்கள் போல் உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது. எல்லா சலுகைகளும் உள்ள உலக வேலை போல் தான் ஊழியமும் என்று நினைத்தால், அவர்கள் முழு நேர ஊழியத்திற்கு வராமலே இருக்கலாம். ஊழியர்கள் தன்னை ஒரு CEO என்று நினைத்துக் கொள்கிறார்கள்.சாம் P செல்லத்துரை 80,000 ரூபாய்க்கு கண்ணாடி வாங்கினார் என்று ஒரு செய்தி முன்பு சொல்லப்பட்டதே.
தன் சபை மக்களின் காணிக்கையில் வீடு கட்டுகிறார்கள். கார் வாங்குகிறார்கள்.ஒன்றும் இல்லாமல் இருக்கும் தன் எளிய சபை மக்களைக் காணும் போது என்ன நினைப்பார்கள்? அந்த காணிக்கை, இந்த காணிக்கை என்று எடுக்கிறோம், ஏன் தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்ய என்று , பண்டிகை காலங்களிலாவது ஒரு காணிக்கை எடுப்பதில்லை? ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றித்தான் எப்பொழுதும் கேட்கிறோம். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வசனத்திலிருந்து ஏழைகளுக்கு கொடுப்பது எப்படி என்று ஏன் யாரும் பிரசங்கம் பண்ணுவதில்லை? சுயத்தை மற்றும் பணத்தை மையமாக வைத்தே நடைபெறும் நம் சபைகள் ஆண்டவருக்கு கண்டிப்பாக கணக்கு கொடுக்க வேண்டி வரும்.
தன் சபையும் சபை மக்களும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஒரு ஊழியக்காரனும் இருக்க வேண்டும்.சபையில் 50 சதவிகித மக்களுக்கு மேல் கார் வைத்திருந்தால் ஊழியரும் தன் சொந்த உபயோகத்திற்கென்று கார் பயன்படுத்தலாம்.இல்லாவிட்டால் ஏழைகளோடு ஏழையாக இருந்து ஊழியம் செய்வதுதான் ஒரு மேய்ப்பனுக்கு அழகு.ஒரு ஊழியக்காரனை சமுகத்தில், பொருளாதாரத்தில் உயர்த்தவா ஜனங்கள் காணிக்கை கொடுக்கிறார்கள்?
//இன்று அவருடைய ஊழியர் காரில் சென்றால், கழுதையின் பயன்பாடு அறிவியல் வளர்ச்சியில் காராகிவிட்டது அதை மட்டும் குறைசொல்ல துணிவதும் பேதமை.//
கார் தேவை சரிதான், ஆனால் Benz, BMW, AUDI கார் தான் வேணும், நான் ராஜா வீட்டு பிள்ளையாக்கும் என்றால் அது ஆடம்பரம் இல்லாமல் வேறென்ன, காடு மேடு மலைகளில் செருப்பு தேய கைப்பிரதி, சுவிஷேச பிரதிகளை கொடுப்பவன் ஆண்டவர் பார்வையில் இவர்களை விட கீழானவனா. ஆடம்பர ஊழியர்களால் தான் மேசியாவின் எதிரிகள் ஊழியங்களின் தன்மைகளையே கேலிப்பொருளாக்கி அவதூறு செய்கின்றனர்.
பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும்... தவறில்லை ஆனால் ஆடம்பரம்........!!!!!
சொந்த காசில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; ஆனால் எப்படிப்பட்டவர்களிடம் காணிக்கை வாங்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆடம்பரமாய் வாழ்வது தான் வேதத்தில் கூறப்பட்ட பிழைப்பா...???
காணிக்கை யாரிடத்தில் வாங்குகிறோம், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள் என கவலைப்பட தேவையில்லை என்பதுதான் புதிய ஏற்பாடு போதிக்கும் சமநிலைப் பிரமாணமா...??? நமக்கு வசதியானபடி வேதத்தில் பழைய ஏற்பாடை துணைக்கு அழைப்பதும், வசதியில்லாதபோது புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் காலத்தை துணைக்கு அழைப்பதும்............... என்ன நியாயம்...
பொதுவுடைமை கொள்கை புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தான் துவங்கியது அதுவும் அப்போஸ்தலரிடமிருந்து,,, ஆனால் இன்று அது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களிடம் சிக்கிவிட்டது... கிறிஸ்தவ நாடுகளிலும் சரி, கிறிஸ்தவர்களிடமும் சரி முதலாளித்துவமே மேலோங்கியிருக்கிறது.
எந்த சபையில் நோக்கினாலும் அதிக காணிக்கை கொடுப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் பெரும்புள்ளிகள் பாஸ்டரின் வீடுவரை சென்று உறவாடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள்......
communism இல்லாத communion service - பெரும்பாலான சபைகளில் இதுதான் நிலைமை....
ஆடம்பரம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? தேவன் ஒருவரை ஏவுகிறார். அவர் காணிக்கை கொடுக்கிறார், ஊழியத்துக்குப் போக மீதியை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொள்கிறார்., அதில் என்ன தவறு?
தேவனுக்கு ஊழியம் செய்து அவரிடம் ஊதியத்தை எதிர்பார்க்காமல், தன்னுடைய வாடிக்கையாளர்களாகிய விசுவாசியிடம் தன்னுடைய ஊதியத்தைக் கேட்பதும், தசமபாகம் கொடுத்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிப் பணம் பரிப்பதும் தான் தவறு,
எனக்கு ஒரு மூத்த நண்பர் இருக்கிறார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார், ஆனால் தேவன் அவரை ஊழியத்துக்கு அழைத்தார். எதேச்சையாக ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டிய சூழ்னிலை தன் முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பே தத்தெடுத்தார், இன்று ஊழியத்தோடு 40 குழந்தைகளை வைத்து ஆதரரித்து வருகிறார்,
வேலையைத் துறந்தார், முதலில் தன் வருமானத்தில் குழந்தைகளுக்கு 20% தன் குடும்பத்திற்கு 80% என்று தேவனிடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தைகள் காப்பகத்தை ஆரம்பித்தார்.
பிறகு 50% 50% என்று ஒப்பந்தத்தை மாற்றினார், இன்று குழந்தைகளுக்கு 80% தன் குடும்பத்திற்கு 20% என்ற நிலைக்கு வந்துவிட்டார்,
தேவன் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார் யாரிடமும் 1 ரூபாய் கூட கேட்பதில்லை, தன்னுடைய ஆடைகளை குறைந்த பட்சம் 5000க்கு கீழ் அவர் அணிவதில்லை, தன்னுடைய கிராமத்திலிருந்து காரில்தான் வருவார், வாரத்திற்கு 1 பாட்டில் விலையுயர்ந்த வாசனை திரவியத்தை செலவு செய்துவிடுவார்.
இன்று அவருடைய குடும்பத்தில் அவருடைய குழந்தைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் தத்தெடுக்கப்பட்டவகள் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். தன் புத்திர சுவீகாரத்தைக் கூட மற்றவர்களின் குழந்தைக்காக சுருக்கிக் கொண்ட இளம் தம்பதிகள் அவர்கள். பெரிய பெரிய அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள் புகழ் அடைவதற்காகக் கொடுக்கும் அனைத்து பணத்தையும் துச்சமாக மதித்து மறுத்து வருகிறார்.
நாம் சாப்பிடுவதற்கே அருவருப்பு படும் சிறிய உணவகத்தில் தன் மதிய உணவை முடித்துக் கொள்வார். மற்ற வேளைகளில் அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் தான் அவரும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு பெய்த மழையில் அவருடைய வீடு இடிந்து விட்டது, இன்று தேவனுடைய சித்தத்தால் அருமையாக, இன்னும் விசாலமாகக் கட்டப்பட்டு வருகிறது, இத்தனைக்கும் தனக்கென 1 ரூபாய் கூட சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அவர்
எங்களைப் போன்ற எளியவர்கள் மனதில் ஏவப்பட்ட காணிக்கையைக் கொடுப்பதை மாத்திரம் பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் போஷித்தும் வாழ்ந்தும் வருகிறார்.
காரில் வராமல் பேருந்தில் வந்தால் 8 ரூபாயில் தன் பயனச்செலவை முடித்துக் கொள்ளலாம், 200 ரூபாய் சட்டை அணியலாம். என்றெல்லாம் யாரும் அவரிடம் கேட்பதில்லை காரணம் அவரது நேர்மை.
இப்படிப்பட்ட வாழும் உதாரணங்களான சில தேவமனிதர்களை நேரடியாகப் பார்த்து பேசி பழகியதால் தான் இப்படி வாதிடுகிறேன்.
நமக்குள்ளவைகள் முழுவதையும் ஆண்டவருக்குக் கொடுக்கலாம். அதெப்படி நான் என் வருமானத்தில் தசம பாகத்தை மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னால் பணத்தாசையால் தேவனை ஏமாற்ற நினைக்கிறோம் என்று அர்த்தம்.
அப்படிப்பட்டவன் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் காட்டிலும் ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளியது என்று நம்முடைய அருள்நாதரும் சொல்லியிருக்கிறார்(லூக் 18:25).
ஹா... ஹா...ஹா...... ஆமாமா... உங்களுக்குரியதை முழுதும் கொண்டு ஏதாவது பாஸ்டருக்கு முதலில் கொடுங்கள்... மிச்சம் மீதி வைக்காதீர்கள்... அப்படி வைத்தீர்கள் என்றால் பின் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது....!!!
இன்றைய காலத்தில் தைரியமாக மனைவியை சில பாஸ்டர்களின் கண்ணில் காட்ட முடியவில்லை... அது வேறு விஷயம்.....
வேதம் யாருக்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்கவேண்டும் என கூறுகிறது என முதலில் வேதத்தை முழுவதும் வாசித்து புரிந்துகொண்டு அதன்பின் கருத்து கூறுங்கள். எல்லா பாஸ்டரும் பிரசங்கிக்கும் மல்கியாவை மட்டும் வாசிக்காமல் கூடவே உபாகமம் 26:12 போன்ற வசனங்களையும் வாசியுங்கள்... மல்கியா எருசலேம் தேவாலயத்தை குறித்து கூறுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.... மேலும் அது யாருக்காக எந்த சூழ்நிலையில் கூறப்பட்டதென்பதையும் ஆராயுங்கள்....
அந்தப்படியே தற்போது சுவிஷேசம் அறிவிக்கும் ஊழியர்களுக்கும், சுவிஷேசத்தினாலே அவர்களுக்கு பிழைப்பு உண்டாயிருக்க வேண்டும் என்பதும் தேவனுடைய கட்டளை.
பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும்... தவறில்லை ஆனால் ஆடம்பரம்........!!!!!
சொந்த காசில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; ஆனால் எப்படிப்பட்டவர்களிடம் காணிக்கை வாங்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆடம்பரமாய் வாழ்வது தான் வேதத்தில் கூறப்பட்ட பிழைப்பா...???
காணிக்கை யாரிடத்தில் வாங்குகிறோம், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள் என கவலைப்பட தேவையில்லை என்பதுதான் புதிய ஏற்பாடு போதிக்கும் சமநிலைப் பிரமாணமா...??? நமக்கு வசதியானபடி வேதத்தில் பழைய ஏற்பாடை துணைக்கு அழைப்பதும், வசதியில்லாதபோது புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் காலத்தை துணைக்கு அழைப்பதும்............... என்ன நியாயம்...
பொதுவுடைமை கொள்கை புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தான் துவங்கியது அதுவும் அப்போஸ்தலரிடமிருந்து,,, ஆனால் இன்று அது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களிடம் சிக்கிவிட்டது... கிறிஸ்தவ நாடுகளிலும் சரி, கிறிஸ்தவர்களிடமும் சரி முதலாளித்துவமே மேலோங்கியிருக்கிறது.
எந்த சபையில் நோக்கினாலும் அதிக காணிக்கை கொடுப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் பெரும்புள்ளிகள் பாஸ்டரின் வீடுவரை சென்று உறவாடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள்......
communism இல்லாத communion service - பெரும்பாலான சபைகளில் இதுதான் நிலைமை....
தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்....
தசமபாகம் என்பது பழைய உடன்படிக்கையில் சொல்லப்பட்டது, புதிய உடன்படிக்கையில், நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கிரயத்துக்கு வாங்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் முற்றிலும் தேவனுக்கு சொந்தமானவர்கள், தன்னுடைய வருமானத்தில் 10 ஒரு பகுதி மட்டுமே தேவனுக்குச் சொந்தம், மற்றவைகள் நமக்குச் சொந்தம் என்று நினைப்பதும், போதிப்பதும், தவறானது நாம் தேவனுக்குக் கொடுப்பதாக இருந்தால் நம் சொத்து,ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பிள்ளைகள், என்று நமக்குள்ளவைகள் முழுவதையும் ஆண்டவருக்குக் கொடுக்கலாம். அதெப்படி நான் என் வருமானத்தில் தசம பாகத்தை மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னால் பணத்தாசையால் தேவனை ஏமாற்ற நினைக்கிறோம் என்று அர்த்தம்.
அப்படிப்பட்டவன் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் காட்டிலும் ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளியது என்று நம்முடைய அருள்நாதரும் சொல்லியிருக்கிறார்(லூக் 18:25).
golda wrote:ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல
இது ஒரு முக்கியமான காரியம் சகோதரி.... சபையில் தசம பாகம் தருகிற 10 பேரின் சராசரி வருமானத்தில் வாழ்க்கையை உண்மையாய் வாழ்ந்தாலே பெரிய விஷயம். ஆனால் தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்.... மட்டுமல்ல இந்த பிள்ளைகளைக்காணும்போது இளக்காரமான பார்வை.... சமநிலைப் பிரமாணம் எங்கே.... 10 பேரின் தசம பாகத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், மீதி 990 பேரின் தசம பாகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவலாமே....
ஊழியர்கள் என்றால் ஏதோ முற்றும் துறந்த துறவிகள் போலவும் உலக ஆசா பாசங்கள் இல்லாதவர்கள் போல இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது வேதத்துக்கு முரனானது ஆகும்,.
ஊழியர்களுக்கு புஷிக்கவும் குடிக்கவும், மனைவியோடே விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்று வரவும், சொந்தமாக வேலை அல்லது தொழில் செய்யாமல் இருக்கவும், உரிமை உள்ளது.
தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து யார் மற்றவர்களுக்கு சேவகம் செய்வார்கள்? யார் சொந்தமாக ஒரு தோட்டத்தை உண்டாக்கி அதில் விளையும் கனிகளை சுவைத்துப் பார்க்காமல் இருப்பான்? யார் வீட்டில் மாடுவளர்த்து அதன் பாலை குடிக்காமல் இருப்பான்?
பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமானமும் இதைத்தான் சொல்லுகிறது போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.(உபா25:4)என்று தேவன் மாடுகளை நேசித்தா இதைச் சொன்னார்? இல்லை நம்மை நினைத்துதான் எப்படியெனில் உழுகிறவன் இந்த விளைச்சலில் நமக்கும் பங்கு உண்டு என்ற நம்பிக்கையோடே செய்வதற்காகவே தேவனால் அப்படிச் சொல்லப்பட்டது.
ஊழியர்கள் இருளிலே இருக்கும் நம்மை நித்திய வெளிச்சத்துக்கு நேராக நம்மை நடத்துவதன் பலன் மட்டும் வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் ஏற்பட்டால் அதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது பேதமை.
அந்தப்படியே பழைய உடன்படிக்கைக் காலத்தில் ஆசாரிய ஊழியம்செய்தவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும். தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் நீங்கள் அறிந்ததே...
அந்தப்படியே தற்போது சுவிஷேசம் அறிவிக்கும் ஊழியர்களுக்கும், சுவிஷேசத்தினாலே அவர்களுக்கு பிழைப்பு உண்டாயிருக்க வேண்டும் என்பதும் தேவனுடைய கட்டளை.
அப்படி இருக்கும் போது, அந்த ஊழியர் ஒரு இஞ்ச் அளவுக்கு மேக்கப் போடுகிறார், காணிக்கையில் வாங்கிய காரில் ஊழியரின் குழந்தை பள்ளிக்குப் போகிறது என்றால் தேவன் அவர்களை ஊழியத்திற்கு ஊதியம் கொடுத்து போஷிக்கிறார், அதற்காக நாம் கவலைப்பட வேண்டுவதில்லை.
நாம் கவலைப் படவேண்டிய ஒரே விசயம், அவர்கள் அரசாங்கத்திடம் தன் வருமானத்தை சரியாகக் கணக்குக் காட்டுகிறார்களா? வருமானவரி கட்டுகிறார்களா? என்பதைக் குறித்து மாத்திரமே..
அன்று இயேசு கிறிஸ்து கழுதையில் பயனம் செய்தார் அதை நாம் ஏற்றுக் கொண்டோம், ஏன் அந்தக் கழுதையில் ஒரு முடவனை ஏற்றி விட்டுவிட்டு, அவர் நடந்து வந்திருக்கக் கூடாது என்று எதிர்கேள்வி வைக்கவில்லை,
இன்று அவருடைய ஊழியர் காரில் சென்றால், கழுதையின் பயன்பாடு அறிவியல் வளர்ச்சியில் காராகிவிட்டது அதை மட்டும் குறைசொல்ல துணிவதும் பேதமை.
ஊழியர்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை வேதம் சொல்வதை அப்படியே சொல்லியிருக்கிறேன். ஆதாரம் I கொரிந்தியர் 9 அதிகாரம்
golda wrote:ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல
இது ஒரு முக்கியமான காரியம் சகோதரி.... சபையில் தசம பாகம் தருகிற 10 பேரின் சராசரி வருமானத்தில் வாழ்க்கையை உண்மையாய் வாழ்ந்தாலே பெரிய விஷயம். ஆனால் தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்.... மட்டுமல்ல இந்த பிள்ளைகளைக்காணும்போது இளக்காரமான பார்வை.... சமநிலைப் பிரமாணம் எங்கே.... 10 பேரின் தசம பாகத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், மீதி 990 பேரின் தசம பாகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவலாமே.... அதுதானே சமநிலைப்பிரமாணம்... யாக்கோபு சொல்வதுபோல நீங்கள் போய் குளிர்காய்ந்து இளைப்பாறுங்கள், உங்களுக்கு ஆண்டவர் உதவிசெய்வார் என சொல்லி அவர்களை வெறுமையாய் அனுப்பிவிடுவதா சமநிலைப் பிரமாணம்?... ஊழியரின் வாலிப மகள் கட் பனியன் போட்டுக்கொண்டு கொயர் பிராக்ட்டீசில் பங்கேற்கலாம், ஆனால் சபையில் audio operator பையன் டீ சர்ட் போட்டால் திட்டு.... இது தான் சபைகளில் இன்றைய நிலை....
பாஸ்டரின் மகள் 700 கி.மீ. தூரத்தில் காரில் கொண்டு சென்று தன் காலேஜில் விடப்படும் நிலையில் கிராம ஊழியத்திற்காக வெளியூர் செல்லும் உதவி ஊழியர்கள், வாகன வசதியில்லாமல் அலைக்களிக்கப்படுவதுதான் நியாயமா???
நான் ஏதேதோ எழுதிவிடுவேன் சகோதரி இறுதியில் யாரையாவது காயப்படுத்திவிட்டோமே என எண்ணி வருந்துவதும் என் வாடிக்கை... எனவே தான் பொதுவாக எழுத சற்றே தயங்குவது...
>>அவர் T.V. ல் தோன்றும்போது அவருடைய முகத்தில் எத்தனை inch makeup போட்டிருக்கிறார் என்று மட்டும் கவனியுங்களேன்...
That is an occupational hazard. எண்ணை வழியும் முகத்தோடு கேமரா முன் நின்று பேச முடியுமா? அத்துடன் எந்த இஞ்சும் எனக்குத் தெரியவில்லை. மோசேயின் முகம் மேக்கப் போடாமலே பிரகாசித்தது என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். தேவ பிரசன்னமே நல்ல களையை கொடுக்கும்!
>>ஒன்று தாங்கள் காணிக்கை வாங்கும் மக்களில் மிகவும் வசதிகுறைந்த ஒருவர் வாழும் வாழ்க்கையை தாங்களும் வாழ வேண்டும
ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல
>>அல்லது தாங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறோம்...
ஒரு ஊழியக்காரர் சொன்னது. மகன் பைக் வாங்கி ஓட்டிச் செல்கையில், சில விசுவாசிகள் எங்க காணிக்கைப் பணத்தில் தானே இப்படி வாங்குகிறீர்கள் என்று கேட்க, அவன் அதன் பின் வேலை பார்த்துக் கொண்டுதான் இனி ஊழியம் செய்வேன் என்று சொல்லி விட்டு, வேலை பார்த்துக் கொண்டுதான் ஊழியமும் செய்கிறான் என்று சொன்னார்.
வரவு என்ன, செலவு என்ன, யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று கணக்கு காட்டினாலே போதும். எந்த சபையிலும் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. சபையின் பண விஷயங்கள் ஒளிவு மறைவின்றி சபையார் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல, மனுஷருக்கும் முன்பாக யோக்கியமாக நடக்க விரும்புகிறேன் என்று பண விஷயத்தைப் பற்றித்தான் பவுல் சொன்னார்.
>> floor-ல வந்து பாருங்க...ஷூட்டிங் நேரத்தில் டீ ஷர்ட் ஜீன்ஸில் கும்முன்னு ஹீரோ மாதிரி இருப்பார்...
ஹீரோ மாதிரியா?? குட்டையாக அல்லவா இருப்பார்? டீ ஷர்ட் ஜீன்ஸ் ஒரு வசதிக்காக ஷூட்டிங் நேரத்தில் அணிவது.
>>அவருடைய தலைமுடியே விக் என்கிறேன், நம்புவதற்குத் தான் ஆளில்லை..!
மூக்கு கூட பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று கண்டு பிடிச்சிருப்பீங்களே!
>>திருந்தி வந்த ஒரு நடிகையின் அழகை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து அவளை மீண்டும் நடிகையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் தான் சாது...இதை மறுத்து என்மீது வழக்கு போடச்சொல்லுங்க...நான் நிரூபிக்கிறேன்..!
எந்த நடிகை என்று சொல்லுங்கள். இப்ப நடிக்கிறாங்களா என்று செக் பண்ணுவோம்.
golda wrote:அவரிடம் என்ன உலகத்தின் மயக்கம் இருக்கிறது? கசங்கிய காவிதான் போட்டிருக்கிறார். அது பார்க்கக் கூட நல்லா இல்லை!
floor-ல வந்து பாருங்க...ஷூட்டிங் நேரத்தில் டீ ஷர்ட் ஜீன்ஸில் கும்முன்னு ஹீரோ மாதிரி இருப்பார்... அவருடைய தலைமுடியே விக் என்கிறேன், நம்புவதற்குத் தான் ஆளில்லை..!
அப்புறம் என்ன வெங்காயம் உரிக்கறதுக்கா ஊழியத்துக்கு வந்தார்..? திருந்தி வந்த ஒரு நடிகையின் அழகை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து அவளை மீண்டும் நடிகையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் தான் சாது...இதை மறுத்து என்மீது வழக்கு போடச்சொல்லுங்க...நான் நிரூபிக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அவரிடம் என்ன உலகத்தின் மயக்கம் இருக்கிறது? கசங்கிய காவிதான் போட்டிருக்கிறார். அது பார்க்கக் கூட நல்லா இல்லை! __________________________________________________________
ஹா..ஹா.. ஹா.... அவர் T.V. ல் தோன்றும்போது அவருடைய முகத்தில் எத்தனை inch makeup போட்டிருக்கிறார் என்று மட்டும் கவனியுங்களேன்... ஒரு சினிமா நடிகர் கூட அவ்வளவு போடமாட்டார்.... ____________________________________________________________
அப்படி விலகினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்!! பொல்லாங்காய் தோன்றுகிற தசம பாகத்தை போதிக்காதவர்கள் எத்தனை பேர்? என் சபை , என் ஊழியம் என்று சுயத்தை மையப்படுத்தாமல் ஊழியம் செய்பவர்கள் எத்தனை பேர்?
________________________________________
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் சகோதரி.... இதற்காகத்தான் பாடுபடுகிறோம்... மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வராதா என ஏங்குகிறோம்.... ஒன்று தாங்கள் காணிக்கை வாங்கும் மக்களில் மிகவும் வசதிகுறைந்த ஒருவர் வாழும் வாழ்க்கையை தாங்களும் வாழ வேண்டும் அல்லது தாங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறோம்...
-- Edited by spetersamuel on Tuesday 4th of October 2011 10:46:49 AM
அப்படி விலகினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்!! பொல்லாங்காய் தோன்றுகிற தசம பாகத்தை போதிக்காதவர்கள் எத்தனை பேர்? என் சபை , என் ஊழியம் என்று சுயத்தை மையப்படுத்தாமல் ஊழியம் செய்பவர்கள் எத்தனை பேர்?
வின்சென்ட் செல்வகுமார் அவர்களை நான் சாது சுந்தர் சிங், டிஜிஸ் தினகரன் போன்றோரை நம்புவது போல் நம்புகிறேன். எனவே, இதை கேலி போலோ, criticise பண்ணுவது போலவோ கேட்க வில்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சாது சுந்தர் செல்வராஜைப் போல அல்லவே....... நல்லது.... சாது சுந்தர் சிங் இறுதிவரை தம் அழைப்பில் உறுதியாயிருந்தார். பிந்தின சாது அவரை பின்பற்றி இறங்கி, உலகத்தின் மேல் மயக்கம் கொண்டு தம் அழைப்பை தம் வசதிக்காக மாற்றிக்கொண்டவர்.
தினகரன் ஆண்டவருடைய அன்பை தமிழ்நாட்டுக்கு அறிவிக்க ஆண்டவரால் விசேஷமாக அழைக்கப்பட்டவர், தன் மகனுடைய சுயநலத்தில் இழுப்புண்டு, தம் அழைப்பை தொலைத்தவர், இறுதியில் தம் மகனுடைய செயல்பாடுகளில் வெறுப்புற்று வேதனையோடு உலக வாழ்வை முடித்தவர்.\
வி.செ. வேதத்தில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். சேருமிடம் சரியில்லாததால் .......... தொடர விரும்பவில்லை....
எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிதானித்து நலமானதை பிடித்துக்கொள்ளவும் பொல்லாங்காய் “தோன்றுகிற” யாவற்றையும் விட்டு விலக வேதம் போதிக்கிறது சகோதரி...
It is pity that people like Golda are still supporting and 'glorifying' these liars. These shameless beggars will go to any extent to fool the people around. They demean the value of the Blood of Christ. The blood has become their selling topic. This is just one example of the 'last days' where many shall be deceived.
Thank God that He redeemed us from these nonsense!
-----
I'm not at all interested in these type of signs and wonders. But when Vincent Selvakumar ministers, the presence of God will be very thick , and the anointing very heavy, and may be that's why these things happen. Next time, do attend , when he comes to Coimbatore! Ok?
This is what I wrote to them after this 'blood' sign!
--
கோயம்புத்தூர் மீட்டிங்கில் இயெசுவின் இரத்த துளிகள் விழுந்தது என்று சொன்னீர்கள். ஒரு வேளை அதை test பண்ணி பார்த்திருந்தால் என்ன result வந்திருக்கும்? இயேசு கிறிஸ்துவின் blood group என்ன என்று கண்டு பிடித்திருக்கலாமா?
வின்சென்ட் செல்வகுமார் அவர்களை நான் சாது சுந்தர் சிங், டிஜிஸ் தினகரன் போன்றோரை நம்புவது போல் நம்புகிறேன். எனவே, இதை கேலி போலோ, criticise பண்ணுவது போலவோ கேட்க வில்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
I hope you do not mind posting a line from your msg here.
ஊழியர்களை குறை சொல்வது...
//.... இச்சையில் விழுந்துபோன ஆவிக்குரிய தலைவர்களுக்கு ஆதரவளிப்பதைப் பார்த்தால் ....//
This is a serious allegation! இது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? நாம் நேரடியாக சமபந்தப்பட்டிருந்தாலொழிய , இது போன்ற விஷயங்களில் உண்மை எது என்று நமக்குத் தெரிய வராது. ஏஞ்சல் டிவியில் ஒரு சிலரை சில தவறுகளினிமித்தம் அவராக வெளியே அனுப்பி இருப்பதாக சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவர்கள் எப்படியாவது இவர் மேல் சேறு பூச வேண்டும் என்று கிளப்பி விடும் புரளிகளாகக் கூட இவை இருக்கலாம். இப்படிப்ப்பட்ட வதந்திகள் கண் காது மூக்கு வைக்கப்பட்டுதான் உலா வரும். உண்மை இருக்காது.
விசெ வுக்கும் உடனிருக்கும் ஊழியர்களாலே பிரச்சினை வந்தது. அவர்கள் கிளப்பி விட்ட கதையாக இருக்கலாம்.
பிசாசு இவர்கள் இருவரையும் தீவிரமாக எதிர்க்கிறான், பகைக்கிறான் என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. இவர்கள் ஊழியம் அவனுக்கு கசப்பாக இருக்கிறது. அந்தக் கசப்பு நமக்கும் வந்து விடாதபடி எச்சரிக்கையாக இருப்போம்.
--
மற்றபடி உங்க கணிப்பு சரிதான்! பாராட்டுக்கும் நன்றி!