Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒளியின் தூதன்-ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவா


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஒளியின் தூதன்-ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவா
Permalink  
 


golda wrote:

விழுந்து போன தூதனான சாத்தான், நல்ல தூதனாக நடித்து ஏமாற்றுவான் என்பதுதான் அந்த வசனத்தின் அர்த்தம். சரியா சொல்லிட்டேனா?

பிசாசு ஒளியின் தூதனாகவோ, வேற இயேசுவாகவோ கூட காட்சியளித்து ஏமாற்றக்கூடும். ஜாக்கிரதை, என்று அறிவுரை சொல்லுவது தவறல்லவே.


 இதே பதிலை பாஸ்டருடைய மகனும் ஏற்கனவே சொல்லிவிட்டார், பிரச்சினை அதுவல்ல, பேச்சுவாக்கில் இயேசுவோ ஒளியின் தூதன் என்று சொன்னது சரியா, என்பதே சர்ச்சை.

உங்களுக்கு வெளக்கம் சொல்லியே ஓஞ்சு போனேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

விழுந்து போன தூதனான சாத்தான், நல்ல தூதனாக நடித்து ஏமாற்றுவான் என்பதுதான் அந்த வசனத்தின் அர்த்தம். சரியா சொல்லிட்டேனா?

 

பிசாசு ஒளியின் தூதனாகவோ, வேற இயேசுவாகவோ கூட காட்சியளித்து ஏமாற்றக்கூடும். ஜாக்கிரதை, என்று அறிவுரை சொல்லுவது தவறல்லவே.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

சில்சாம் அவர்களே, அதான் தவறென்று ஒத்துக் கொண்டார்கள் அல்லவா. அதன்பின்னும் ஏன் torture கொடுக்கிறீர்கள்?? பாவம், அந்தளவிற்கு அந்த வசனத்தை ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். பிசாசு இயேசு போல் காட்சியளித்து ஏமாற்றுவான் என்ற அர்த்தத்தில்தான் முதலில் சொல்லியிருப்பார். யாரைப் பார்த்தாலும் உங்களுக்கு மேசியாவின் எதிரியாகவே தெரியுது என்று நினைக்கிறேன்!


 ஹலோ மேடம்,

நான் டார்ச்சர் கொடுக்கலை அவர்கள் தான் எனக்கு டார்ச்சர் கொடுத்து வேதனைப்படுத்துகிறார்கள்; அவர்கள் குரலையெல்லாம் நீங்கள் கேட்கணுமே, கொஞ்சமும் தாழ்மையோ இணக்கமோ கிடையாது, பெரும்பாலும் அவாய்ட் பண்ணுவது போலவே பேசுகிறார்கள்; குரலிலேயே திமிரும் கொழுப்பும் நிரம்பி வழிகிறது; என்னை கேட்க நீ யார் என்ற அகம்பாவம், கொஞ்சமும் சிநேகம் கிடையாது, அதே நீங்கள் ஒரு இலட்சம் ரூபாய் காணிக்கை வைத்திருக்கிறேன், என்று சொல்லிப்பாருங்கள், உங்கள் வீட்டுக்கே வருவார்கள்;

நான் தான் தெளிவாகச் சொல்லுகிறேனே, ஊழியர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும், பிசாசும் ஒளியின் தூதனுடைய வேஷத்தில் வருவான் என்று சொல்லிவிட்டு இயேசு ஒளியின் தூதன் என்று சொன்னார், இப்போது அவருக்காகக் காத்திருந்தும் அவருடன் பேசமுடியாத நிலையில் மகன் சொல்லுகிறார், ஒளியின் தூதன் இயேசு அல்ல, சாத்தானே என்று; அப்படியும் நான் ஒளியின் தூதனுடைய வேஷந்தரித்தவந்தானே பிசாசு என்று மீண்டும் மீண்டும் கேட்டதற்கு இல்லை இல்லை பிசாசு ஒளியின் தூதனே என்று ஓங்கிச் சொன்னார்;இது புதுபிரச்சினையல்லவா, இன்னும் இந்த வசனம் 1.கொரிந்தியர் புத்தகத்தில் எங்கோ இருக்கிறதாம், தேடிப்பாருங்கள்...

ஏதோ சில்சாம் எனும் தனிமனுஷன் சொன்னா ஏதோ உளறுகிறான் என்று விட்டுவிட்டுப் போகலாம், இவர்களெல்லாம் சில ஆயிரம் பேர்களை வளைத்துப் போட்டு சாம்ராஜ்யம் நடத்துபவர்களல்லவா, இந்த சின்ன காரியத்திலேயே தெளிவில்லாத இவர்கள் எப்படி கர்த்தருடைய மந்தையைக் கருத்தாய் மேய்ப்பார்கள்; இவர்களிடம் வளரும் ஆடுகளின் தரம் எப்படியிருக்கும்..?

இப்பவும் நீங்க என்ன சொல்றீங்க, இயேசுவானவர் ஒளியின் தூதன் என்பதாக, இது வேற எனக்கு புது பிரச்சினை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சில்சாம் அவர்களே, அதான் தவறென்று ஒத்துக் கொண்டார்கள் அல்லவா. அதன்பின்னும் ஏன் torture கொடுக்கிறீர்கள்?? பாவம், அந்தளவிற்கு அந்த வசனத்தை ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

பிசாசு இயேசு போல் காட்சியளித்து ஏமாற்றுவான் என்ற அர்த்தத்தில்தான் முதலில் சொல்லியிருப்பார்.

யாரைப் பார்த்தாலும் உங்களுக்கு மேசியாவின் எதிரியாகவே தெரியுது என்று நினைக்கிறேன்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒளியின் தூதன்-ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவா எனும் ஐயம் தொடர்பாக வதனநூல் (facebook) தளத்தில் நடந்த வாதப்பிரதிவாதங்கள்...

இன்று காலை தமிழன் டிவியில் செய்தியளித்த ஏஜி சபையின் பாஸ்டர். சுவர்ணராஜ் அவர்கள் சாத்தானின் மாயத்தைக் குறித்து பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளுவான்; ஒளியின் தூதன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே என்றார்;இது சரியா..?

http://www.facebook.com/chillsam

Sujatha Selwyn

Brother, I didnt hear this msg but I think what he may have meant is this : the true light is Jesus, the evil one will imitate him and deceive. The character of anti-christ is that he will imitate Jesus. When a counterfeit note is printed, it is made as close to the original as possible. Similarly the anti-christ will try to be as similar to Christ as posible. That is why the bible says 'veshathai' meaning he will imitate, while the original light is Jesus. Oliyin thoothan Yesu, antha vesham tharipavan Pisasu. this is my understanding. 24 September at 10:16
Chill Sam
அன்பான சகோதரி,தங்கள் கருத்துக்காக நன்றி;இதுகுறித்து இங்குள்ள நண்பர்களுடைய கருத்தையும் கவனிக்குமாறு பட்சமாய் வேண்டுகிறேன்.

http://www.facebook.com/chillsam/posts/1556570810855?ref=notif&notif_t=like

தங்களுடைய கருத்திலிருந்து ஒரு புதிய கருத்து அதாவது புதிய தேடல் ஆரம்பிக்கிறது;பாஸ்டர் ஸ்வர்ணராஜ் சொன்னது நீங்கள் சொல்லும் விளக்கத்தின்படி சரியானதே; அவருடைய மகனும் இதே விளக்கத்தை தொலைபேசி மூலம் எனக்குக் கொடுத்தார்; அதாவது ஒளியின் தூதன் யார் என்பது அல்ல, வேஷத்தை யார் தரித்திருப்பது அதன் பாதிப்புகள் என்ன செய்தியின் மையப் பொருள் என்கிறார்.

ஆனால் என்னுடைய தேடல் அதுவல்ல,இது பலகாலமாக கிறிஸ்தவ வட்டாரத்தில் விவாதிக்கப்படும் ஒரு பொருளே. இதன்படி இயேசுவானவர் ஒளியானவரா, ஒளியின் தூதனா என்று சற்று யோசித்து சொல்லுங்கள்; ஏனெனில் தங்கள் வரிகளில் இயேசு ஒளியானவர் என்று ஒப்புக்கொள்ளும் நீங்கள் அடுத்த வரியிலேயே அவர் ஒளியின் தூதன் என்கிறீர்கள்,

while the original light is Jesus. Oliyin thoothan Yesu,

இது எப்படி சரியாகும்? இரண்டும் வெவ்வேறான தன்மையுடையது என்று நான் நினைக்கிறேன்; தயவுசெய்து என்னை சலித்துக்கொள்ளவேண்டாம், சத்தியத்தின் தேடல் நித்தியத்தில் நிறைவடையும் என்பதையே நான் நம்புகிறேன்.Thanks.
John Edward
சரி என்று படவில்லை. To be close, வேதம் கிருஸ்துவை பிரகாசமுள்ள விடி வெள்ளி நட்சத்திரம் என்று சொல்லுகிறது. ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது "காணாதவைகளிலே துணிவாய் நுழையாதிருப்பது நலம் "

கொலோசெயர்:2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
Chill Sam பாருங்க,யாரைத் தான் நம்புவதென்றே தெரியவில்லை..!

ஆவியானவர் இல்லேனு, (மேசியாவின்) எதிரிகள் சொன்னாலும் அவர் உடனிருப்பதாலேயே இதுபோன்ற தவறான் கூற்றுகளைக் கேட்கும்போது உள்ளேயிருந்து எச்சரிக்கிறார்..அது ஒன்றே நாம் செய்த பாக்கியம்..!
Peter Samuel S
ஒளியின் தூதன் என்பது, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும் தேவதுடைய தூதர்களைக் குறிக்கும் ஒரு சொல். பரலோகமே ஒளிமயம் என்பதிலிருந்து பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகத்தின் ஒளியாய் வந்தவருக்கு பணிவிடை செய்யும் தூதர்கள் ஒளியின் தூதர்கள்.....

பிசாசும் ஒருகாலத்தில் ஒளியின் தூதனாக இருந்தவனே. எனவே அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு வேஷம் எடுப்பது கடினமானதல்ல.... அவன் அப்படிப்பட்ட தூதர்களில் ஒருவனாக வேஷமெடுத்து இன்று சாது போன்ற அனேகருக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கவில்லையா..?

இயேசுவை தூதனாக கூறிய அந்த பாஸ்டருடைய phone no. கிடைக்குமா.? ஒருமுறை பேசிப்பார்க்கலாமே...? T.V. - ல் அனேகர் பார்க்கும் நிலையில் ஒரு அமைப்பின் பாஸ்டர் இப்படி கருத்தைக்கூறினால் அது அந்த அமைப்பே இந்த கருத்தைக் கொண்டிருப்பதாக அர்த்தம். என்வே A.G. சபை அமைப்பு இதற்கு நிச்சயம் மறுப்பு தெரிவிக்கவேண்டும்....
Chill Sam
நண்பர் பீட்டர் அவர்களே,பாஸ்டர் ஸ்வர்ணராஜ் அவர்களைக் குறித்த தகவல்களை இணையத்திலிருந்து தேடியெடுத்து கிடைத்த ஒரே எண்மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தேன்;ஆனாலும் தொடர்புகொள்ள முடியவில்லை;ஆனால் அவருடைய மகனோடு அலுவலக எண்ணுக்கு பேசினேன்,அவரோ அந்த செய...See more
நன்றி சகோதரரே... நானும் தொடர்ந்து கவனிக்க முயற்சிக்கிறேன்...
Chill Sam
பாஸ்டர் ஸ்வர்ணராஜ் அவர்கள் இயேசுவானவரை ஒளியின் தூதன் என்று சொன்னதும் நல்லதே; அதனால் ஒளியின் தூதன் என்பதைக் குறித்த சத்தியத்தை நாம் அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பு உண்டானது.நண்பர்கள் John Edward ஜாண் மற்றும் Peter Samuel S பீட்டர் அவர்களின் ஞானத் தெளிவைக் குறித்து ஆண்டவருக்கு மகிமையை செலுத்துகிறேன்.

II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

ஒரு உப தகவல்: ஒளியின் தூதன் எனும் வார்த்தை பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் மேற்காணும் ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
ஒளியானவர் இயேசுவா அல்லது அந்த ஒளியானவரின் தூதன் இயேசுவா என்பதே இங்கே அலசப்படுகிறது. Sis. Sujatha Selwyn இங்கே //original light is Jesus// என்று சொன்ன அடுத்த வார்த்தையில் //Oliyin thoothan Yesu...... this is my understanding// என்றும் கூறுகிறார். வார்த்தைகள் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டும். அது என்றால் அது, இது என்றால் இதுதான். அது இதுவாக முடியாது, இது அதுவாக முடியாது.....
Sujatha Selwyn
Please note that I said, 'this is what the preacher may have meant' and he seems to have given you the same explanation. In that context you agree that what he said made sense. I agree too with him that the focal point is not whether Jesus is Oli or Oliyin thoothan, but about the one who will imitate and to be wary of him. Instead of reading Oliyin thoothan together, try reading Oliyin, 'thoothanin veshathai' it might give us better understanding. Personally for me, whether Jesus is or is not 'oliyin thoothan' is not important and I do not intend to get into that debate. I prefer reading and understanding the whole passage in the context in which it was said and not see single words, that can be dangerous Please excuse me. thavaraga ninaikka vendam.
Chill Sam
Sujatha Selwyn //whether Jesus is or is not 'oliyin thoothan' is not important //

கர்த்தருக்குள் பிரியமான சகோதரி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்; நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள வண்ணமாக இயேசுவானவர் ஒளியின் தூதனா அல்லது அவரே ஒளியா என்பதிலேயே நம்முடைய விசுவாசம் அடங்கியிருக்கிறது.

வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வரும் ஒளியின் தூதன் எனும் இந்த வார்த்தையிலிருந்து இது இயேசுவைக் குறிப்பிட்டு சொல்லுகிறதா, இயேசுவானவர் ஒளியா அல்லது ஒளியின் தூதனா என்று முடிவுசெய்ய வேண்டியதிருக்கிறது.

ஏனெனில் இயேசுவானவர் ஒளி எனும் அடிப்படையில் ஒரு கொள்கையும் அவர் ஒளியின் தூதன் மாத்திரமே எனும் அடிப்படையில் ஒரு கொள்கையும் பரவியிருக்கிறது.

எனவே அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? வாதங்களைப் பற்றிய நோய்கொண்டோர் ஆரோக்கிய உபதேச்த்தை நிதானமாகவும் நேர்த்தியாகவும் கற்பிப்போரை முடக்க பக்கவழியில் நுழைந்திருக்கிறார்கள்.

மருத்துவர்கள் சில அறிகுறிகள் மற்றும் நுண்ணோக்கியின் மூலம் மேற்கொள்ளப்படும் சில சோதனைகள் மூலமே வியாதிகளைக் கண்டறிகிறார்கள் அல்லவா,அதுபோலவே இதுபோன்ற ஒரு சில அடையாளங்கள் மூலமே நாமும் தவறானதும் எளியோரை வஞ்சிக்கிறதுமான உபதேசங்களைக் கண்டறிந்து எச்சரிக்கவேண்டும்.

context -பற்றி எழுதியிருக்கிறீர்கள்;ஆம்,ஒரு குறிப்பிட்ட வேதபகுதியிலிருந்து ஒரு வசனத்தை மாத்திரமே நான் பகுத்து எழுதியிருக்கிறேன்,பகுக்க அதாவது பிரிவினைக்காக எழுதவில்லை.அதனால் வேதத்தின் மொத்தக் கருத்துக்கு பங்கமுண்டாகாமல் விசுவாச விருத்திக்காகவே எழுதியிருக்கிறேன்.இதுபோல தீர்வு காணப்படாத கருகலான வேதபகுதிகளே "CULT" எனப்படும் துருபதேசக்காரர்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது என்பதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
//இதுபோல தீர்வு காணப்படாத கருகலான வேதபகுதிகளே "CULT" எனப்படும் துருபதேசக்காரர்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது //
சகோ. சில்சாம் போன்றவர்கள் அப்படிப்பட்ட துருபதேசக்காரர்களோடு முழு பெலத்தோடும் எப்போதும் போராடிவருவதால் எப்போதும் microscopic கண்ணாடி அணிந்தே நடக்கவேண்டியுள்ளது... எனவே வைரஸ் சிறியதா, பெரியதா என்பதல்ல, அது எத்தன்மையது என்பதே சிந்திக்கவேண்டியது....
சில் சாம் நீங்கள் சொன்னது சரிதான். மைக்ராஸ்கோப் கொண்டு பார்க்கவேண்டியுள்ளது . ஆனால் அநேகர் இதல்லாம் பெரிதுபடுத்தகூடாது என்பார்கள். அவர்கள் சப்பை கட்டு கட்டுபவர்கள். வார்த்தை என்பது மிகவும் முக்கியமானது அதுவும் 'ஆதி வார்த்தை ' என்றால் ஆத்துமவிற்கு மிகவும் முக்கியம். நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வரைவில் எழுதுவேன். தேவன் நாமம் மகிமைபட வேண்டும். ஆத்துமாவை கூட்டி சேர்க்கவேண்டும்.
ஆம் நண்பரே,உங்களைப் போன்ற ஆசிரியர்கள் எழும்பினால் ஒரு தலைமுறையே மாறிவிடும்;நான் 10வது வகுப்பு படிக்கும்போது எனது ஆசிரியரால் ஆண்டவரிடம் நடத்தப்பட்டேன்;எத்தனையோ மாணவர்கள் இருக்க என்னை மட்டும் அவர் ஏன் விசேஷமாக கவனித்தார் என்பதே ஆச்சர்யம்,அதுவே தேவ அன்பு அல்லவா..? நீங்களும் கூட உங்கள் எல்லையிலிருந்து உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்,மற்றதை ஆண்டவர் பார்த்துக்கொள்ளுவார்.
Devamanohar Michael
உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே. இபொழது நான் மிஷன் பள்ளியில் வேலை பார்கிறேன். அனால் என் சக ஆசிரியர்களுக்கு மிஷன் பள்ளி என்றே மறந்துவிட்டது. அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே நான் மாணவர்கள் முன் ஒரு நல்ல ஆசிரியராகவும் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் இருக்கவே முயலுகிறேன். ஓரளவு வெற்றி. மேலும் வெற்றி பெற இயேசுவை விசுவாசிக்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேள்வி மூலம் சுவிஷதிற்கான அடிகல்ல்லை நட்டிவிடுவேன். அவை அவர்கள் மனதில் ஆறாத ஒரு தாகத்தை ஏற்படுத்தும். வயசு அந்தமாதிரி. அந்த தாகத்தை மேசியவின் எதிரளிகளால் அழிக்கமுடியாது. சரிதானே ?
Chill Sam Yes...
‎.. இப்படி புத்தி சொல்ல அதை கேட்க .... சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்வது எவ்வளவு இன்பமானது. மாணவர்களிடம் நான் சொல்வதுண்டு "நல்லதை நாடு தீயவை ஒழிந்துபோம்" இயேசுவில் வளருவோம்.
Chill Sam
எனது ஆசிரியர் வகுப்பு வந்ததும் ஜெபிக்காமல் பாடம் எடுக்கவே மாட்டார்,ஆனாலும் எல்லா ஆசிரியரும் அப்படியல்ல.

நீங்களும் கூட மாணவர்களிடையே அல்லது ஆசிரியர்களுடன் ஒரு சிறிய ஜெபக்குழுவைத் துவக்க முயற்சியுங்கள்,நோக்கம் ஜெபிப்பது மட்டுமே.

ஒவ்வொரு மாணவன் வீட்டிலும் ஏதாவதொரு பிரச்சினை நிச்சயமாக இருக்கும்,வார இறுதி வகுப்பில் ஒரு பொது அறிவிப்பைப் போடுங்கள்,யாருக்காவது வீட்டில் பிரச்சினை இருந்தால் அதற்காக நான் விசேஷித்த ஆலோசனையும் பிரார்த்தனையும் செய்கிறேன்,உன் பிரச்சினையை எழுதி கொடு நாளை மறுநாள் (ஞாயிறு) நான் ஆலயத்துக்குச் சென்று உனக்காக பீடத்திலிருந்து ஜெபிக்கிறேன்,என்பதாக.

அவ்வளவு தான்,நல்லாசிரியர் விருது உங்களுக்குத் தான்,மாணவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுவீர்கள்... யோசனை ரொம்ப ஓல்டா இருந்தாலும் கோல்டா இருக்கும் பாருங்க,ஸார்..!
Devamanohar Michael
நன்றி. இப்படி செய்து அநேக ஆசிரியர் பாடத்தை நடத்தாமல் கெட்ட பெயர் எடுத்துவிடுகிரர்கள். ஆனால் அந்த முறை சரிதான். ஆனால் பத்தோடு பதினொன்றாக இருக்கவிரும்பவில்லை. மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ நன்றாக judgement செய்வார்கள். படத்தை கற்பித்து பின் மாணவர்கள் முன் சாட்சியாக நின்றால் அது அவர்களின் மனதில் கேள்வி தோன்றும். இவர் மட்டும் எப்படி இப்படி என அவர்கள் மனதில் தோன்றும். அபோது அங்கே கேள்வி மூலமாக சுவிஷதின் அடிக்கல் நாடப்படும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

எல்லா சகோதருக்கும் என வேண்டுகோள் : கர்த்தர் கற்பித்த விதை விதைப்பவன் உவமையில் நல்ல இடத்தில் விழுந்தவிதை பலன் தந்தது. எனவே நிலத்தை பண் படுத்தி விதைப்போம். பண் படுத்தவும் விதை விதைக்கவும் கர்த்தருடைய கிருபை நமலோடிருக்கும் நம் விசுவாசத்தின் மூலம் காத்துகொள்வோம்.
சில் சாம் // அவ்வளவு தான்,நல்லாசிரியர் விருது உங்களுக்குத் தான்,மாணவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுவீர்கள்... // ஐயோ வேண்டவவேண்டாம். யாரும் விருது பெறவில்லை மாறாக வாங்கினார்கள். புரிகிறதா ? மாணவர்கள் என் மூலமாகவும் கர்த்தரை காணவேண்டும். உங்கள் மூலமாக உங்கள் சகாக்களும் இணைய நண்ன்பர்களும் இயேசுவை காணவேண்டும், அறியவேண்டும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
Devamanohar Michael// இப்படி செய்து அநேக ஆசிரியர் பாடத்தை நடத்தாமல் கெட்ட பெயர் எடுத்துவிடுகிரர்கள்.// ஜெபம் என்பது ஐந்தே நிமிடம் தான் நண்பரே,அதையும் மாணவர்களே செய்வார்கள்.
Chill Sam
// இப்படி புத்தி சொல்ல அதை கேட்க .... சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்வது எவ்வளவு இன்பமானது. //

ஆம் ந்ண்பரே,இதுவே எருசலேமின் சு (ச) கவாசமாக இருக்கும்;ஆனால் ஒவ்வொருவரும் தங்களை ஸ்மார்ட்டாகக் காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன் வரும் காரணத்தினால் இங்கே பலமுறை விரும்பத்தகாத வாதங்களும் மோதல்களும் வெடிக்கிறது;அதற்குக் காரணம்,நான் யோசிக்கிறேன், பெரும்பாலான நண்பர்கள் அலுவலக சூழலிலிருந்து பொழுதுபோக்குக்காக இதுபோன்ற தளங்களில் விளையாடுகிறார்கள்;அலுவலகம் என்பது பொதுவாகவே ஆணவமும் அடக்குமுறையும் குமுறல்களும் நிறைந்த இடம் அல்லவா,அதுவே நண்பர்களுடைய உணர்விலும் கலந்துவிடுகிறதோ என்று யோசிக்கிறேன்.

ஆனால் தங்களிடம் காணப்படும் இயல்பான மனத் தாழ்மையெனும் தெய்வீக குணத்தினால் இணங்கிப்போகிறீர்கள் என்றெண்ணுகிறேன்;நீங்கள் இந்த நிலைமைக்கு வருவதற்கும் பல அனுபவங்களே காரணமாக இருக்கிறதல்லவா..?
ஆம் சரிதான். தவறு என்று சொல்லவில்லை. நான் ஜெபத்தோடு செல்லவேண்டும். அவர்கள் வித்தியாசத்தை உணரவேண்டும். அங்கே அவர்கள் இயேசுவின் அன்பை கண்டு அவர்களுக்கு அதே வாஞ்சை உண்டாக்கவேண்டும். பின்பு அவர்கள் நரிகூட்டதில் சென்றாலும் இயேசுவின் வார்த்தை அவர்களோடிருக்கும் (நான் அல்ல )
ஆம். ஆனால் நான் கோபக்காரன் (வாலிப வயதில்) என்று பெயர் எடுத்தவன். ஆனால் அந்த கோபம் அநீதிகாரர்களுக்கு எதிரானது. அப்போது என்னுடைய நிலையை நிருப்பிக்க போதிய அறிவு இல்லை. அதே சமயம் தேவமனோகரிடம் இந்த வேலையை கொடுத்தால் சரியாய் செய்வான் என்று வேலை மட்டும் வாங்கிவிடுவர்கள். அது எனக்கு நஷ்டம் இல்லை. பெயர் மட்டும் இன்னும் இருக்கிறது அநீதிகரகளிடம்.
//நான் கோபக்காரன் (வாலிப வயதில்) என்று பெயர் எடுத்தவன்.//

கோபம் இருக்குமிடத்தில் தானே குணம் இருக்கும் என்பார்கள், நீங்கள் ஒரு அன்பான கணவன்,பாசமுள்ள தந்தை,ஐக்கியத்தை நாடும் விசுவாசி,பொறுப்புள்ள ஆசிரியர்,எல்லாமும் எல்லார்க்கும் வாய்க்கும் என்றாய்ந்து தரும் நல்லாயன் அருட்கொடையால் நீவிர் பல்லாண்டு வாழ்க..!

(ஒளியின் தூதன் வாதம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது..!)
நான் பலமுறை நினைத்தேன். ஆனால் ஒருமித்து வாசம் ..... தடுக்கவில்லை சற்று தள்ளிபோட்டது. நம்முடைய வரிகளை நீக்கினாலும் சரிதான். 25 September at 01:29

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒளியின் தூதன் இயேசுகிறிஸ்து என்று பாஸ்டர் சுவர்ணராஜ் சொன்னதைக் குறித்து புதன்கிழமையன்று விசாரித்து சொல்லுவதாக அவருடைய மகன் ஜெக்கி சொல்லியிருந்தார்; நான் இன்னும் இரண்டு நாள் தாமதித்து இன்று கேட்டேன்; ஆபீஸில் அவசரப்பட்டு நான் ஏதோ காணிக்கை தருவதற்காகக் கூப்பிடுகிறேன் என்று நினைத்தார்களோ என்னவோ, தெரியாமல் பாஸ்டருடைய செல் நம்பரைக் கொடுத்துவிட்டார்கள்;

பிறகு நான் சும்மா இல்லாமல் நான் கேட்ட ஐயத்தைக் குறித்து ஏதேனும் தகவல் உண்டா என்று ஆபீஸ் போனை அட்டெண்ட் பண்ணிய சகோதரியிடம் கேட்டதும் பரபரப்பாகி,எதுவும் தகவல் இல்லையே, ஓ..நீங்களா...அந்த செல் நம்பரைத் தொடர்பு கொள்ளவேண்டாம்,என்று வேண்டினார்கள்; ஆனாலும் நான் துணிந்து பாஸ்டருக்கு போன் போட்டேன், ஒருமணிநேரம் கழித்து பேசச் சொன்னார், சரியாக ஒருமணிநேரம் கழித்து அழைத்தேன். இப்படி அலைக்கழித்தால் எப்படி உண்மையைத் தெரிந்துகொள்ளுவது? இவர்களெல்லாம் தலைவர்களா? இப்படியே முன்பு ஏஞ்சல் டிவியின் சாதுவும் அலைக்கழித்தார்; இவர்களையெல்லாம் குறைசொல்லி பயனில்லை, இவர்களையெல்லாம் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கும் ஆட்டுமந்தை மனப்பான்மையுள்ள மக்களையே சொல்லவேண்டும்;

சுவர்ணராஜ் ஐயா லைனில் வரவில்லை,அவருடைய மகன் எடுத்தார், முதலில் மறுத்தவர் நான் சம்பந்தப்பட்ட செய்தியைப் பதிவுசெய்து வைத்திருப்பதாக விளக்கமாகச் சொன்னதும், மிக தீர்க்கமாக பாஸ்டர் அவ்வாறு சொல்லவில்லை என்று சொல்லாமல் அது தவறு என்று மட்டும் சொன்னார்; அப்படியானால் ஒளியின் தூதன் யாருங்க என்றதற்கு சற்றும் தயங்காமல் அது இயேசுகிறிஸ்து அல்ல, பிசாசே ஒளியின் தூதன்,1.கொரிந்தியரில் தெளிவாக இருக்கிறதே என்றார்; இல்லங்கையா, அங்கே சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷம் தரிதது என்று இருக்கிறதே என்று மீண்டும் மீண்டும் கேட்டபோது அவர் பொறுமையிழப்பது போலிருந்தது, எனவே சரிங்க என்று கட் பண்ணினேன்;

என்னுடைய நேர்மையில் சந்தேகப்படுவோர் மதிப்பிற்குரிய பாஸ்டர் சுவர்ணராஜ் அவர்களின் மகனுக்கோ அல்லது ஆபீசுக்கோ போன்செய்து விசாரித்து சொல்லுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

Pastor Jecky: 044-26176816

 http://www.blessingag.com/live/index.php



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிசாசு எப்படியெல்லாம் ஆண்டவரை மட்டம் தட்டணுமோ அப்படியெல்லாம் செய்கிறான். உதாரணத்திற்கு கடவுள் என்று பிறர் வணங்கும் தெய்வ உருவங்களைப் பாருங்கள். நான் கானானியர்,எகிப்தியர், பாபிலோனியர், பெலிஸ்தியர் வணங்கிய தெய்வங்களைப் பற்றி சொல்கிறேன்!! ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவரை, வெண்மையும் சிவப்புமானவரை, சர்வ வல்லமையுள்ள சகலத்தையும் படைத்த ஆண்டவரை பாம்பாகவும் பல்லியாகவும் பார்த்து வணங்கும்படி செய்கிறான். நான் பெரேயன்ஸைப் பார்த்ததில்லை, எப்படி இருப்பார் என்று ஒருத்தர் கேட்க, நான் ஒரு பாச்சானைக் காட்டி இதுதான் பெரேயன்ஸ் என்று சொன்னால் அது எப்படி இருக்கும்? அது பெரெயன்ஸை அவமதிப்பது போன்ற ஒரு செயல்தானே! அப்படித்தான் இயேசு கிறிஸ்துவை வெறும் தூதர் என்று சொல்வதும் அவரை அவமதிப்பதாகும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

May be it is just a slip of the tongue. இயேசு கிறிஸ்து தூதன் என்று நினைத்து அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.


 நாக்கு தெல்லேது என்றானாம், ஒரு தெலுங்கு பிரசங்கி;என்னது நாக்கு தள்ளுதா என்று கேட்டானாம், தமிழ் பிரசங்கி....எல்லாம் ஒரே தமாஸு...சந்து சிந்து பாடறவனப் பிடிச்சி கம்பத்துல கட்டி வெச்சி கட்டையால அடிச்சாலும் அவன் சொல்லுவான், அந்த பிரசங்கி சரியாத்தேன் ஷொன்னாரு,இயேசு ஒளியின் தூதந்தேன்,ஏன்னா இரஸலும் அப்படியே ஷொல்லிக்கின்னாரு,என்பதாக.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

May be it is just a slip of the tongue. இயேசு கிறிஸ்து தூதன் என்று நினைத்து அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

chillsam wrote:

இன்று காலை தமிழன் டிவியில் செய்தியளித்த ஏஜி சபையின் பாஸ்டர் சுவர்ணராஜ் அவர்கள் சாத்தானின் மாயத்தைக் குறித்து பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளுவான்; ஒளியின் தூதன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே என்றார்.,

 

இது சரியா..?


 ஒளியின் தூதன் என்பது, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும் தேவதுடைய தூதர்களைக் குறிக்கும் ஒரு சொல். பரலோகமே ஒளிமயம் என்பதிலிருந்து பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகத்தின் ஒளியாய் வந்தவருக்கு பணிவிடை செய்யும் தூதர்கள் ஒளியின் தூதர்கள்.....


பிசாசும் ஒருகாலத்தில் ஒளியின் தூதனாக இருந்தவனே. எனவே அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு வேஷம் எடுப்பது கடினமானதல்ல.... அவன் அப்படிப்பட்ட தூதர்களில் ஒருவனாக வேஷமெடுத்து இன்று சாது போன்ற அனேகருக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கவில்லையா..?


இயேசுவை தூதனாக கூறிய அந்த பாஸ்டருடைய phone no. கிடைக்குமா.? ஒருமுறை பேசிப்பார்க்கலாமே...? T.V. - ல் அனேகர் பார்க்கும் நிலையில் ஒரு அமைப்பின் பாஸ்டர் இப்படி கருத்தைக்கூறினால் அது அந்த அமைப்பே இந்த கருத்தைக் கொண்டிருப்பதாக அர்த்தம். என்வே A.G. சபை அமைப்பு இதற்கு நிச்சயம் மறுப்பு தெரிவிக்கவேண்டும்.... 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இன்று காலை தமிழன் டிவியில் செய்தியளித்த ஏஜி சபையின் பாஸ்டர் சுவர்ணராஜ் அவர்கள் சாத்தானின் மாயத்தைக் குறித்து பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளுவான்; ஒளியின் தூதன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே என்றார்.,

 

இது சரியா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard