Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதமாணாக்கர் (BIBLE STUDENT) என்பார் யார்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வேதமாணாக்கர் (BIBLE STUDENT) என்பார் யார்..?
Permalink  
 


Richard Felson
Who are the Bible Students? Who are we?

The Bible Students are an independent, non-denominational Christian fellowship. Congregations are worldwide. Each local congregation is totally independent; we have no central headquarters.

Chill Sam

Richard Felson The Bible Students-
>No,u r the (false) teachers of the Holy Bible

independent -
>But we are dependent on Christ.
...
non-denominational-

>No you've Russel's Scripture in base.

Christian fellowship.-

>No.A Christian Should accept Christ as the personal savior of his life

Congregations are worldwide. -

>Yes,Satan's...

Each local congregation is totally independent; we have no central headquarters.-

>No.you've an Hq@Hell.But Satan says No.b'coz of his fear the wickedness.

நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (மேசியாவின்) எதிரி இங்கேயும் (நாறடிக்க) வந்துவிட்டார்.இங்கே பதிவிட்டிருக்கும் Richard Felson திரு.ரிச்சர்டு அவர்கள் இயேசுவைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்காத- அவர் வெறும் தூதன் மாத்திரமே என்று போதிக்கும் குழுவைச் சேர்ந்தவர்; இதனை நண்பர் விஜய்குமார் அவர்களுடைய கவனத்துக் கொண்டுவருகிறேன்.

Chill Sam @ Richard Felson
தாங்கள் யெகோவாவுக்கு சாட்சிகளும் அல்ல,வேதாகமத்தின் மாணவர்களும் அல்ல என்று மறுக்கும் இவர்கள் கரத்தில் எதற்கு வேதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை; 1914‍‍ இலேயே இயேசுவின் இரண்டாம் வருகை நிகழ்ந்துவிட்டது...,தற்போது இரண்டாம் கட்ட அறுப்பு நடந்துகொண்டிருக்கிறது; அதன்பின்னர் ஆயிரம் வருட அரசாட்சி துவங்கும்;அப்போது லோகத்தார் அனைவரும் ஒரே நேரத்தில் உயிரோடு எழும்பி பாடம் கற்பார்கள்,அதிலும் கீழ்ப்படியாதோர் மரணமடைவார்கள்;அதாவது ஆயிரம் வருட அரசாட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படும்;அப்போது கீழ்ப்படியாதோர் மரண்ம அடைவார்கள்,ஆனாலும் ஆக்கினை தீர்ப்பு,நரகம்,வேதனை என்பதெல்லாம் இல்லை,என்பது தானே உங்கள் போதனை..?

இதையே இரசலும் போதித்தார்;உங்கள் போதகர் யாரென்று ஒப்புக்கொள்ளும் துணிச்சலே இல்லாத உங்களை எப்படி நம்புவது? பவுலும் பர்னபாவும் கூட போதித்தார்கள்,எந்த அதிகாரத்தில்? எருசலேமில் நிருபம் எழுதி கேட்டு அந்த உத்தரவாதத்துடனே போதித்தனர்;பவுலும் கூட நிருபம் எழுதி உத்தரவாதத்துடனே தன்னுடைய உடன் பணியாளர்களை அனுப்பினார்;இயேசுவை நோக்கியும் இதே கேள்வி எழுந்தது;அவர் தேவனையே உத்தரவாதியாக்கினார்;நீங்கள் போதிப்பவற்றுக்கு எந்த சமகால தலைவரையும் உத்தரவாதியாகக் காட்டமுடியாவிட்டால் எத்தனை பரிதாபம்..?

Chill Sam @ Richard Felson //Not just 'accepting'... One must follow what Christ taught...//

ஏற்றுக்கொள்ளாதோர் எப்படி பின்பற்றமுடியும்? பிதா யாரென்று குமாரன் சொன்னதை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் நீங்கள் பிதாவாகிய தேவன் குமாரனைக் குறித்து சொன்ன சாட்சியை...யும் இன்னும் தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் சொன்ன சாட்சியையும் ஏற்க மறுக்கிறீர்களே..?  (வாசிக்க: யோவான்.17:3)

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்."

இயேசுகிறிஸ்துவை அறிவது என்றால் என்ன என்பதில் தானே உதைக்கிறது?

இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும் நீங்கள் அவரால் அனுப்பப்பட்ட ஏதேதோ வியாக்கியானம் கொடுத்து பரிசுத்தாவியானவர் ஒரு ஆள்தத்துவமுடையவர் என்பதையும் மறுக்கிறீர்கள்.அவருக்கு விரோதமான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்று இயேசுவானவரே சொல்லியிருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் நண்பர்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாது இங்கே தத்தமது விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடவும் (மேசியாவின்) எதிரிகளின் வாதத்திலுள்ள சூழ்ச்சிகளையறிந்து குறிப்பெடுத்து தங்கள வட்டாரத்திலுள்ள விசுவாசிகளை எச்சரிக்கவும் அன்போடு வேண்டுகிறேன்.

John Edward  @Richard Felson

கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தார் என்பது அதிமுக்கியம் ஆனால் அதை விட முக்கியம் அவருடைய தெய்வத்தன்மை மற்றும் அவர் தொழதக்கவர் என்பதே! இதனை வலியுருத்தி யௌவன ஜனம் தளத்தில் அனேக கேள்விகளை எழுப்பியிருந்தேன் ஆனால் தங்களோ அல்லது தங...்கள் குழுவினரோ ஒன்றுக்கும் உருப்படியாக பதிலளிக்கவில்லை. இங்கே முக புத்தகத்திலாவது பதில் கிடைக்குமா?

இயேசு "மகா தேவன்"

தீத்து 2:13 "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ..."

இயேசு சர்வத்திற்கும்மேலான தேவன்

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship) என்றால், படைப்புக்கு முன்பு அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும். ஒருவர் பிதாவாகவும் , மற்றொருவர் குமாரனாகவும் இருக்க வேண்டும் அதேசமயம் நேற்றும் , இன்றும் , என்றும் மாறாதவராக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எப்போதும் அப்படியே இருந்து இருக்க வேண்டும்

யோவான் 17:24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால்...

எந்த கர்த்தர் வருகிறார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? இல்லை இல்லை இது இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றிய வசனம் இல்லை என்று மறுத்தாலும், திரும்பவும் வரப்போவது அவரே!

"ஏசாயா 40:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்"

இயேசு கிறிஸ்து ரட்சகரா அல்லது பிதா மட்டும் தாம் ஒரே ரட்சகரா? பிதாவுக்கு அப்புறம் தேவன் இல்லையா?

ஏசாயா 43:10-11 எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை
"தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)

தேவன் ஆவியா...ய் இருக்கிறார். தேவனுடைய ஆவி அளவில்லாமல் (Infinitely) தேவனைத்தவிர யாரிடமாவது இருக்குமா?

•தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)

"உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை

சபையின் மணவாளன் யேகோவா தேவனா?

ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.ய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

அல்லது இயேசு கிறிஸ்துவா? (இயேசுதான் மிகாவேல் என்று சொல்லுபவர்கள் தேவனை ஒரு அருவருப்பான பாவம் செய்தவராக்குகிறார்கள்)

வெளி 19:9 ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...."

என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)

ஏசாயா 6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

யோவான் 12:41 ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.


Chill Sam @ John Edward // நரகம் இல்லை என்றால் இரண்டாம் மரணம் எதற்கு? //
@
ஹை,இது நல்லாருக்கே...அதான் இரண்டாம் மரணமே இல்லேங்குறோமில்ல..? பாவத்துக்கான ஒரே தண்டனை, மரணமே;அது வயசாகியோ,விபத்திலேயோ,தற்கொலை பண்ணிண்டோ செத்துப்போவது.அதுவே பாவத்தின் சம்பளமாகிய ...மரணம்.

கிறிஸ்து எனும் ஈடுபலி ஆதாமுக்காக பலியானதினால் எல்லோரும் உயிரோடு எழும்புவார்கள்; ஆனாலும் ஆதாம் உயிரோடு வரமாட்டான், ஏனெனில் அவன் ஒருவேளை இயேசுவுக்கு போட்டியா எழும்புவதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவன் எழுந்திருக்க அனுமதியில்லை; ஏனெனில் இயேசுவே பிந்தின ஆதாம்; இதுவே நற்செய்தி;அடுத்ததாக அந்த உயிர்த்தெழுதலில் எல்லோருக்கும் சுவிசேஷம் சொல்லப்படும், இப்ப சொல்றதே வேஸ்ட், சாகப்போறவங்ககிட்ட சுவிசேஷம் எதுக்கு சொல்ல்ணும்?

ஆயிரம் வருட அரசாட்சிக்கு அல்லாரும் ரெடியா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

/ நான் சரி, நீ சரி என்று 2000 சபைக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு ஒன்றுகொன்று முரணாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய போலிக் கிறிஸ்தவம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். //

 ஆத்துமா சாகும் (!) , நரகம் இல்லை (!!) என்ற கொள்கையுடையவர்களும் வேறுபட்ட கருத்துள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அர்மகெதான் யுத்தம் பற்றி சோல் சொன்னது:

--

அர்மகெதான் என்று வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தம் ஏதோ வரும் காலத்தில் நடக்கப்போகும் ஒரு நிகழ்வு என்று போதிக்கப்பட்டு வருகிறது. அர்மகெதான் யுத்தம் இப்போது நடந்துவருகிறது என்று வேதத்தை ஆராயும் அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

--

அர்மகெதான் பற்றி இப்படிப்பட்ட தவறான வஞ்சக கொள்கையுடைய இன்னொரு தளத்தில் சொல்லப்பட்டிருப்பது:

--

வேதாகம தீர்க்கதரிசனத்தின் படி சகல யுத்தங்களையும் ஓயப்பண்ண ஓர் மகாயுத்தம் நடந்தேற வேண்டுமென்றும், இந்த மகாயுத்தம் யார் யாருக்கும் இடையே நடக்க வேண்டுமென்றும், இதில் வெற்றி பெறுவோர் யார் என்றும், இந்த மகா யுத்தத்தின் நோக்கம் என்ன என்பதைப் பற்றியும் திட்டமாக வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளதை காணலாம். வெளி. 16:12,16 வசனங்களில் ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான். அந்த நதியின் தண்ணீர் வற்றிப் போயிற்று. சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு இது வழியை ஆயத்தம் பண்ணினது என்றும், அப்பொழுது அற்புதங்களை செய்கிற பிசாசின் ஆவிகள் புறப்பட்டு போய் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு கூட்டி சேர்க்கும்படி புறப்பட்டுபோனது என்றும், இந்த இடம் எபிரேய பாஷையிலே அர்மகெதோன் எனப்பட்டது என்றும் வாசிக்கிறோம்.


-- Edited by golda on Thursday 22nd of September 2011 06:53:24 PM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகள் ஃபேஸ்புக் தளத்திலும் இந்த எளியவனுடன் யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள்; அதன் முழுவிவரத்தையும் அறிய தொடுப்பைத் தொடரவும்...

276071_1737294815_2106995141_q.jpg

Richard Felson

// நான் சரி, நீ சரி என்று 2000 சபைக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு ஒன்றுகொன்று முரணாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய போலிக் கிறிஸ்தவம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். //

திரு.ரிச்சர்டு அவர்களே,

சரியாக நூறு வருடமுன்பு எழுந்த காஞ்சொறியான இரஸல் என்பாருடைய வஞ்சக உபதேசத்தின் பாதிப்பினால் உருவான வேதாகம மாணவர் இயக்கமானது எத்தனை பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பல்லாயிரமாக உலகமெங்கும் சிதறியிருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறோம்;

ஒரு மனுஷனுடைய துருபதேசத்தினால் இத்தனை ஆயிரம் குழுக்கள் தோன்ற முடியுமானால் அதே நிலைமை எந்தவொரு மார்க்கத்துக்கும் தவிர்க்கமுடியாதது;கிறிஸ்தவம் மாத்திரமல்ல,மனிதன் இறைவனைத் தேடும் அனைத்தும் மார்க்கங்களும் அவ்வளவு ஏன்,அரசியல் கட்சிகளும்,சமுதாய இயக்கங்களும் பிரிந்துகொண்டு தானிருக்கிறது;பிரிவு இரண்டு வகைப்புடும்;ஒன்று சிதைவுக்கும் மற்றது பெருக்கத்துக்கும் அடையாளமாகும்.எங்கள் நிலைமையை நாங்கள் அறிந்திருக்கிறோம்;உங்கள் நிலைமையைக் குறித்தே கவலையாக இருக்கிறது.

உங்கள் தலைவரையும் பொய்யன் என்று ஒப்புக்கொண்டீர்களானால் நலமாயிருக்கும்; நீங்கள் வேதத்தை ஆராய்ச்சி செய்து கற்பதாகச் சொல்லிக்கொண்டாலும் அதற்கு உதவும் அத்துணை உபகரணங்களையும் கொடுத்தது மனிதர்களே என்பதையும் அதிலும் அவர்கள் அனைவரும் தேவத்துவத்துவத்தின் முப்பரிமாணத் தன்மையை ஏற்றுக்கொண்டு அவருடைய ஞானத்தினாலேயே பல்வேறு அகராதிகளையும் வியாக்கியான புத்தகங்களையும் எழுதினார்கள் எனபதையும் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;மனிதர்களி
ஞானத்தினால் எழுதப்பட்ட எந்தவொரு புத்தகத்தையும் படிக்காமலே கொள்கையை நிலைநாட்டவும் உங்களால் முடியாது.

உங்களுக்கு
ஒரு ஹோம் வொர்க் தருகிறேன், DSP. வர்மா பற்றி ஒரு சிறுகுறிப்பு வரையமுடியுமா? இல்லை இயேசுவை மறுதலிப்பது போலவே இவரையும் அறியேன் என்று மறுதலிப்பீர்களா?

pyr_11.jpg


pyr_21.jpg

Watchtower's pyramid memorial, with cross and crown emblem and capstone. Note Russell's headstone in background.

இரஸல் என்பாருடைய உபதேசத்தினால் சிதைந்து சிதறியவர்களே வேதாகம மாணவர்கள் எனும் இயக்கம்;அதிலிருந்து பிரிந்ததே யெகோவா சாட்சிகள் இயக்கம்; இரஸலின் சொத்துக்களை அபகரிக்கத் தோன்றியதே யெகோவா சாட்சிகள் இயக்கம் என்பதை கிறிஸ்து சபையின் விசுவாசிகளின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;பைபிளை வைத்திருப்பவனும் அதை வாசிப்பவனும் அதன் மாணவனாகவோ அதற்கு ஆசிரியனாகவோ ஆகிவிடமுடியாது;அப்படியானால் இன்றைக்கு கிறிஸ்தவர்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களே அதிகமாக பைபிளை வாசிக்கிறார்கள்,அதற்காக அவர்களை வேதமாணாக்கர் என்று சொல்லிடமுடியுமா..?

http://www.freeminds.org/organization/russell/charles-t.-russell-gravesite-rosemont-united-cemetery.html

http://en.wikipedia.org/wiki/Charles_Taze_Russell



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

avatar_7120.gif

Senior Executive

ai.gif
Status: Online
Posts: 979
Date: 00:06:36 Sep 22, 2011

//உங்கள் பகுதியில் எங்காவது மோசடி ஊழியரோ இதுபோன்ற துருபதேசக்குழுக்களோ கடைவிரித்திருந்தால் விலகிச் செல்லாமல் அருகில் சென்று கேள்வி கேளுங்கள்;அவர்களுடைய பதில்கள் மனித பதில்களே என்ற தீர்மானத்துடன் அந்த கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்;நாங்கள் ஆவன செய்வோம்;//

கிழிச்ச‌.... 

எங்க மரணம் என்றால் என்ன பதில் சொல் பார்க்கலாம்....?

நான் ஃபேஸ்புக் தளத்தில் பதித்திருந்த ஒரு பொதுவான கருத்துக்கு எதிர்பாட்டு பாட‌ முந்திக்கொண்டு முந்திரிக்கொட்டை மாதிரி வந்திருக்கிறது, ஒரு ஜந்து; அடியே செல்லம், நீ ஜீவன்'னா என்னா'ன்னு சொல்லு, பெறவு மரணம்'னா என்னன்னு தானா விளங்கிரும்,சரியா..?

எப்படியோ நீ ஒரு (மல்டி லெவல்?) மோசடியாளன் என்பதையும் நீ துருபதேசக்காரன் என்பதையும் ஒப்புக்கொண்டாயே,அதுவே போதும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அடியேன் ஃபேஸ்புக் தளத்தில் பதித்துள்ள இந்த கட்டுரைக்கு பேராதாரவும் ஊக்கமும் கிடைத்துள்ளது;அங்கே நான் பதித்த ஒரு பின்னூட்டத்தை இங்கே நமது வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்ளுகிறேன்.

நண்பர்களே, உங்கள் பாராட்டுகளுக்காகவும் ஊக்கத்துக்காகவும் மிக்க நன்றி;அதுமாத்திரமல்ல,தமிழ் கிறிஸ்தவத்தில் புரையோடிப் போயிருக்கும் இதுபோன்ற துருபதேசங்களையும் கள்ள உபதேசங்களையும் அடையாளங் கண்டு தோலுரிக்கவேண்டும்; "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" எனும் பாடல் வரிகளைப் போல சற்றும் தயங்காமல் கைகோர்க்கவேண்டும்;

இந்தியாவை மாற்றியமைக்க நூறு இளைஞர்களைக் கேட்டாராம், இந்து துறவியான விவேகானந்தர்; நம்முடைய ஆண்டவரோ உலகையே மாற்றியமைக்க‌ நூறு பேரையல்ல, ஒருவனையே தேடுகிறார்; காட்டிக்கொடுக்க நானோ நானோ என்று போட்டி போட்ட சீடர்களும் உடன் நிற்காமல் ஓடிப்போயினர்;

எனவே தற்கால நிலைமையின் தீவிரத்தையுணர்ந்து ஆங்காங்கு கருத்தொற்றுமை ஏற்படுத்தி தகவல்களை சேகரித்து எமக்கு அனுப்புங்கள்;பாரபட்சம் பாராது வெளிப்படையாகக் கண்டிக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்;தயவுசெய்து ஒரு சிறு ஐயம் எழும்பினாலும் கேள்வி கேளுங்கள்,பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்;

பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை வெளியேற்றினால் மட்டும் போதாது, அழித்தொழிக்கவேண்டும்;பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே மனுஷ குமாரன் வெளிப்பட்டார் எனில் நாம் அவரால் நியமிக்கப்பட்ட‌ தொடர்பணியாளர்களாக இருக்கிறோம்;

எனவே ஸ்தாபனங்களும் கலாசாலைகளும் தரும் அங்கீகாரத்தையும் பட்டம் பதவிகளையும் பொருட்படுத்தாது அங்கிகளையும் குல்லாக்களையும் கண்டு மிரளாது உள்ளதை உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்;

ஐயா,பிரசங்கமெல்லாம் ஸூப்பர்,என்னா சில தனிப்பட்ட காரியங்களில்தான் கொஞ்சம் வீக்,யார் தான் யோக்கியம், நீங்களே சொல்லுங்களேன்,என்பன போன்ற ஈயங்களை வெளியேற்றுங்கள்;இந்த தலைமுறையில் சாதிக்காததை இன்னொரு தலைமுறை வந்து சாதிக்கும் என்று நாம் நினைக்கவேகூடாது.

உங்கள் பகுதியில் எங்காவது மோசடி ஊழியரோ இதுபோன்ற துருபதேசக்குழுக்களோ கடைவிரித்திருந்தால் விலகிச் செல்லாமல் அருகில் சென்று கேள்வி கேளுங்கள்;அவர்களுடைய பதில்கள் மனித பதில்களே என்ற தீர்மானத்துடன் அந்த கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்;நாங்கள் ஆவன செய்வோம்;கர்த்தர் தாமே நம்முடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன்களைத் தருவாராக.

(விரைவில் "மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்" என்ற பெயரில் வழக்கமான மத சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டு தெருமுனைக் கூட்டங்களை நடத்த விருப்பம் கொண்டிருக்கிறோம்;அதற்கும் நண்பர்களுடைய ஆதரவும் ஆலோசனையும் வேண்டும். )



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Facebook-ல்  " (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..! " எனும் திரியின் லிங்க்கிலிருந்து ஒரு நண்பர் பின்வருமாறு கேட்டார்...

 // What are you trying to say bro. Could not get your message. Who are these enemies. You have also mention you had fight with them yesterday. Are you mention the discussion on Baptism went on the wall posting? //

அதற்கு நான் கொடுக்கும்  விளக்கம்..

 

பிரியமான நண்பரே,

 எனது எழுத்துக்களிலேயே ஒவ்வொன்றையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேனே, (மேசியாவின்) எதிரிகள் என்று நான் குறிப்பிடுவது வேதமாணாக்கர் எனும் இயக்கத்தவரையே; இவர்கள் தங்களை "யெகோவா சாட்சிகள்" என்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை;யெகோவா சாட்சிகளைக் குறித்த அனைத்து காரியங்களும் ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் அந்த பெயரால் அழைக்கப்படுவதை இவர்கள் விரும்பாமல் நாங்கள் இயேசுவை தேவக் குமாரனாக ஏற்றுக்கொள்ளுகிறோம், என்று மாயம்பண்ணி ஊடுறுவுகிறார்கள்;

இரு தரப்பாருமே இயேசுவானவரின் தெய்வத்தன்மையை, அதாவது அவருடைய தொழத்தக்க தன்மையை- தேவத்துவத்திலுள்ள கோ ஈக்வல் (Co-equal) தன்மையையும் திரித்துவம் என்பதையும் மறுக்கிறார்கள்;அதற்குக் காரணம் வேதத்தில் திரித்துவம்  (Trinity) என்ற வார்த்தை இல்லையாம். வேதத்தில் தாத்தா என்ற வார்த்தையில்லாத காரணத்தினால் யாரையும் தாத்தா என்று சொல்லக்கூடாது என்பது போலவே இருக்கிறது இந்த வாதம்;ஒரு மனிதன் தன்னுடைய சரீரத்தின் உள்ளுறுப்புகளை இதுவரை பார்க்காத காரணத்தினால் அதெல்லாம் வெறும் கட்டுகதை என்பானா..? இன்னும் வேதத்தில் மூளை என்ற வார்த்தை இல்லாத காரணத்தினால் தனக்கு மூளை என்பதே இல்லை என்று ஒருவன் சொல்லுவானா? இப்படி நாமும் இடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்களோடு கடந்த் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறேன்;இப்படியே கடந்த ஞாயிறன்று மதியம் இவர்கள் இரகசியமாக நடத்திவரும் ஒரு வேத ஆராய்ச்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன்;அங்கே அவர்கள் என்னை எதிர்பாராததால் திகைத்துப்போனார்கள்; இனி புதியவர்கள் யாரையும் அழைத்துவரவேண்டாம் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது;ஏன் நமக்கு மட்டும் வேத ஆராய்ச்சி செய்ய தடைவிதிக்கிறார்கள்,புரிகிறதா?

ஏனெனில் அவர்கள் விவாதத்துக்கு வரவேமாட்டார்கள்;அவர்களை யாரும் கேள்வி கேட்டு தப்பிக்கவும் முடியாது; இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கொள்கையில் எந்த வித்தியாசமுமில்லை; இவர்கள் யாரென்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் உபதேசத்தில் வளராத காரணத்தினால் இவர்களை அவ்வளவு எளிதில் அடையாளங் காணவும் முடியாது;

உதாரணமாக அதோ வர்றானே அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு,அவனுக்கு நீ உன் மூக்கைத் தொட்டாலே பிடிக்காது,உன் மீது பாய்ந்து விழுந்து உன் கையைக் கடிச்சுருவான், என்று ஒருவனைக் குறித்து சொல்லிவிட்டால் எப்படி இருக்கும்? அதுபோலவே இயேசுவைக் குறித்த இரகசியத்தை சொல்வதாகச் சொல்லி மெயின்லைன் சபைகளைக் குறித்த ஒரு தவறான கதையைப் பரப்பிவிட்டு விசுவாசிகளுக்குள் ஒருவித இடைவெளியை முதலாவது தோற்றுவிக்கிறார்கள்;

இதனால் நேற்றுவரை நம்மில் ஒருவராகப் பழகிக்கொண்டிருந்த ஒரு நண்பர்,இவர்களுடைய வேதபாட வகுப்பில் சென்று வந்த காரணத்தினால் நம்மை உளவு பார்ப்பவராக மாறிவிடுகிறார்;நன்றாக சிரிப்பார், பேசுவார், பழகுவார், ஆனால் அவருடைய இருதயமோ நம்மைவிட்டு விலகி வேறொன்றைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கும்;காரணம்,எனக்குத் தெரியாத ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்ட மாயையில் அவர் சிக்கிக்கொண்டிருக்கிறார்;

 ஒரு சுபயோக தினத்தில் என்னுடைய அப்பாவித் தனத்தைப் பொறுத்து எனக்கும் அந்த வேதபாட வகுப்புக்கு அழைப்பு விடுக்கிறார்;கலந்துரையாடலே இல்லாத ஏற்கனவே நன்கு திட்டமிட்ட பாடம்,தேர்ச்சிபெற்ற ஒருவரால்  2 மணிநேரம் பயிற்றுவிக்கப்படுகிறது;இது 52 வாரங்கள் நடத்தப்படும் தொடர் பாடமாகும். சில வாரங்களிலேயே மிக இயல்பாக உருவாகக் கூடிய நட்பு இந்த குழுவுக்குள் ஒருவித இணக்கத்தை ஏற்படுத்துகிறது,

 இதனிடையே நாம் சென்றுகொண்டிருக்கும் சபை ஐக்கியத்துக்குச் செல்லுவதற்கு எந்த தடையும் இல்லை;ஆனால் அங்கே சொல்லப்படாத நூதனமான காரியங்கள் இங்கே கற்றுக்கொடுக்கப்படுவதால் சபை ஐக்கியத்தின்மீது ஒருவித சலிப்பு ஏற்பட்டு விசுவாசி சபையைவிட்டு பிரிக்கப்படுகிறார்; மேலும் ஊழியங்களில் இருக்கும் தாறுமாறுகள் மற்றும் சுயநலப் போக்குகள் குறித்து தொடர்ந்து விஷமத்தனமான வித்துக்கள் விதைக்கப்படுகிறது;எப்போதுமே பிரபலமாகவும் நல்ல நிலையிலும் இருக்கும் ஒருவர் மீது இன்னொருவருக்கு இயல்பாக உண்டாகும் பொறாமை உணர்வைத் தூண்டிவிட்டாலே அனைத்தும் நடைபெறுகிறது;வகுப்பு எடுக்க வருபவர் காணிக்கை வாங்காமலே தியாகத்துடன் ஊழியம் செய்பவராக ஒருவித மாயத் தோற்றமானது ஏற்படுத்தப்படுகிறது;இதனால் என்னைப் போன்றோர் சென்று அவர்களைக் கேள்விகேட்டால் அவர்களுடைய மாணவரே எல்லா பதில்களையும் சொல்லுகிறார்;ஏனெனில் இவர் சுமார் 52 வாரங்களாகப் பாடுபட்டு அந்த் சைத்தானை உருவாக்கியிருக்கிறார்;எனவே அவருக்கு ஓய்வு..!

 ஆதியில் ஏதேனில் அனைத்துக்கும் காரணமான பிசாசானவன் ஓடி ஒளிந்துகொண்டான்; விசாரிக்கப்பட்டவனோ வஞ்சிக்கப்பட்டவன் அல்லவா? இப்படியே பட்டத்துக்குத் தகுதியான அப்சலோம்கள் துராலோசனைகளால் பட்டத்தை இழந்து அகால மரணமடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 இவர்கள் வேத மாணவர்கள் அல்ல,சபை விசுவாசிகளின் மனதை பேதலிக்கச் செய்யும் பேத மாணவர்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard