Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு புதுயுகம், கடைசி யுகம் ஆரம்பம்.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: ஒரு புதுயுகம், கடைசி யுகம் ஆரம்பம்.
Permalink  
 


chillsam wrote:
golda wrote:
//தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!!//

 தேவனின் சித்தமா என்று எப்படிப் பார்ப்பது?


 ஜெபிச்சா தெரியாதா... ஆனா ஜெபிக்கலாமா வேண்டாமா என்பதைக் குறித்த தேவ சித்தத்தை எப்படி அறிவது..!


 சோழி குலுக்கிப் போட்டுத்தான் .... !!biggrinbiggrinbiggrin



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
golda wrote:
//தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!!//

 தேவனின் சித்தமா என்று எப்படிப் பார்ப்பது?


 ஜெபிச்சா தெரியாதா... ஆனா ஜெபிக்கலாமா வேண்டாமா என்பதைக் குறித்த தேவ சித்தத்தை எப்படி அறிவது..!


 

ஜெபிக்கக் கூடாது என்பதுதான் (அவர்கள் தேவனின்) தேவ சித்தம்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans: //காணிக்கை தொட்டிகள், காணிக்கை பெட்டிகள்,//

 

அதுக்குப் பேரு ஞானஸ்நானத்தொட்டி பெரேயன்ஸ் அவர்களே. அதுலயா காணிக்கை போட்டீங்க??

 

//இது நடக்கும் என்கிறது வேதம், இது தேவ சித்தம்!! இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவது தேவ சித்தம்!! வாருங்கள் நாம் கூடி இப்படிப்பட்டவைகள் நடக்க கூடாது என்று ஜெபிக்கலாம் என்பது தேவ சித்தத்திற்கு விரோதமான "ஜெபம்"!!//

 

அப்ப எது தேவ சித்தப்படியான ஜெபம் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
//தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!!//

 தேவனின் சித்தமா என்று எப்படிப் பார்ப்பது?


 ஜெபிச்சா தெரியாதா... ஆனா ஜெபிக்கலாமா வேண்டாமா என்பதைக் குறித்த தேவ சித்தத்தை எப்படி அறிவது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //ஆச்சர்யமா தான் இருக்கிறது!!?? எப்படி தான் ஜெபம், உபவாசம் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் என்கிற ஆச்சரியம்!!//

இதில் காசு எப்படி பார்க்க முடியும்??

 

//தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!!//

 

தேவனின் சித்தமா என்று எப்படிப் பார்ப்பது?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: லூசுகளின் கூட்டம் வெட்டியாக பேசுவதை உட்கார்ந்து கேட்கும் பழக்கம் இப்போ கிடையாது

 

பரவாயில்லை பாருங்க. நீங்க பேசறதை நாங்க கேட்கவில்லையா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Ali.No.1@Great Prophets of Christiandom!!

// பால் தினகரன் 2008ல் புதிய யுகம் துவங்கியதாக சொல்லுகிறார், சாது 2011ல் புதிய யுகம் துவங்குகிறது என்கிறார்!! இதில் யார் தான் தீர்க்கதரிசி!! //

ஹயோ...ஹயோ...இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலயே, ஹலோ, இதையெல்லாம் குழந்தைங்க கிட்ட கேட்டா கூட சொல்லிடுமே,ரெண்டு பேரும் தீர்க்கதரிசி தான், ரெண்டு பேருக்குமே புதுயுகம் தான், இரகசியம் இன்னான்னா, புதுயுகம் அவிங்கவிங்க ஊழியத்துக்கு ஓகேவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: செப்டம்பர் 2012 முதல் தான் புதிய யுகம் ஆரம்பமாக போகிறதாம்!!

--

 

நாங்கள்லாம் இன்னும் 2011 இல் தான் இருக்கிறோம். நீங்க வேற வேதம் வைத்திருப்பது போல் வேற காலண்டர் வைத்திருக்கிறீர்களோ?

அத்துடன் உங்களுக்கோர் நற்செய்தி!. நீங்க ”புது யுகம்” பற்றிய செய்தியை கேட்கவில்லை என்பதால், நாளை சனிக்கிழமை(24.9.11) மாலை 5 மணிக்கு திரும்ப ஏஞ்சல் டிவியில் ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans: ஒரே ஆவியில் இருப்பவர்களாம், ஒரே கர்த்தர் வந்து இவர்களிடம் பேசுவாராம், ஒரே வேதத்தை வைத்திருப்பவர்களாம், அப்படி என்றால், இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்!!

--

 

ஒரே ஆவியானவர்தான் அனைவரையும் நடத்துகிறார். இரண்டாம் வருகைக்கு ஜனங்களை ஆயத்தம் பண்ணுவதுதான் இனி இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று பால் தினகரன் சொன்னது எனக்கு நம்ப முடியாத அதிசயமாகத்தான் இருந்தது. எப்படி ஆண்டவர் அனைவர் கண்களையும் வருகை, கடைசிக் காலம் பற்றித் திருப்புகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் எல்லை பெரியது. எனவே பால் தினகரன் வருகை பற்றி பேசினால் அது விரைவில் பலரை சென்றடைந்துவிடும்.

 

எங்க பாஸ்டர் சமீபத்தில் ஒரு மாத ஊழியத்திற்கென்று ஐரோப்பா சென்றார். ஒரு வாரத்தில் திரும்பி வந்து விட்டார். ஏனென்றால், உன் ஊர் நினிவே போல் இருக்கிறது. நீ இருந்து ஊழியம் செய்ய வேண்டியது அங்கு தான். இங்க இல்ல. ஊருக்கு போய் ஜெபத்தை தீவிரப்படுத்து என்று சொன்னதால் கீழ்ப்படிந்து வந்து விட்டேன். இனி இந்த வருட முழுவதும் அதிகம் ஜெபம் தான், ஜெப ஊழியம் தான் என்று சொன்னார். அதே ஜெபிக்க வேண்டும் என்ற வெளிப்பாட்டைத்தான் சாதுவிற்கும் ஆணடவர் கொடுத்திருக்கிறார். அதே வெளிப்பாட்டுடன் தான் National Prayer Network 50 நாள் ஜெபம் ஒழுங்கு செய்திருக்கிறது. இதையெல்லாம் கேட்க ஆச்சர்யமா இல்லையா?

 

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

தேசத்தின் ஷேமத்திற்காய் ஜெபிப்போம் செயல்படுவோம்!

 

 

 

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Vertical Call Prayer Festival India !

 

http://verticalcallprayerfestival.com/



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இதோடு தொடர்புடைய ஒரு செய்தி. தேசத்திற்காக மன்றாட்டு ஜெபம் என்று National Prayer Network மூலமாக 50 நாள் ஜெபம் செப் 23 - நவம்பர் 11 வரை தொடர்புடைய சபைகளில் நடக்கப்போகிறது. கடைசி 5 நாட்கள் இந்தியாவில் உள்ள எல்லா பெரிய ஊழியக்காரர்களும் ஹைதராபாத்தில் கூடி ஜெபிக்கப் போகிறார்களாம்.

எங்க சபையில் முதலில் சபையில் 50 நாள் ஜெபம் நடக்கப் போகிறது என்று சொன்னார்கள். பரவாயில்லையே சபையில் ஒரு ஜெப எழுப்புதல் வந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டேன். பின் தான் தெரிந்தது இது எங்க சபையின் முயற்சி இல்லை என்று. பெந்தேகோஸ்தே சினாடிலிருந்து தகவல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

எது எப்படியோ ஜெபிக்கும்படி இக்காலத்தில் இந்திய கிறிஸ்தவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்பது நல்ல விஷயம் தான்.ஒரு வேளை சகோ சில்சாமிற்கு இன்னும் அதிகமான தகவல் இது பற்றி தெரிந்திருக்கலாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
ஏஞ்சல் டிவி புகழ் சகோ சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தியாக செப்டம்பர் 28-ல் Church is going to enter into a new season - era என்கிறார். இது குறித்ததான அவரது செய்தியை ஆங்கிலத்தில் கீழே நீங்கள் mp3 டவுண்லோடு செய்துகொள்ள்லாம். செப்டம்பர் 28-ல் சபைகளுக்கான ஒரு புது/இறுதி யுகம் ஆரம்பிப்பதாகவும் இந்த புது யுகத்தில் இப்போது போல் விசேசித்த ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் தீர்க்கதரிசனங்கள் சொல்வார்கள் எல்லோரும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பார்கள். இயேசுவின் சீசர்கள் காலத்தில் நடந்தது போல மனிதர்கள் பிரத்தட்சியமாக தேவதூதர்களை காண்பார்கள். அது மிக சாதாரண விசயமாக கருதப்படும். அற்புதங்கள், அதிசயங்கள் பயங்கரமாக நடக்கும். மரித்தோர்கள் உயிர்த்தெழுவார்கள். சபை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு லெலலுக்கு போய்விடும் என்கிறார்.

 கர்த்தருக்குள் பிரியமான தோழி கோல்டா அவர்களே,

(மேசியாவின்) எதிரிகளுக்கான சரியான மாற்று ஏஞ்சல் டிவி தான்;ஆனால் அது இன்னொரு எக்ஸ்ட்ரீம் ஆகவே இருக்கிறது; என்னுடைய கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமோ அறியாமையோ இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்; உறுதிபடுத்திக்கொள்ளாத செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கொள்கையின் காரணமாக இன்னும் பதிக்காத செய்திகள் என்னிடம் உண்டு;ஆனால் சாதுவின் காரியங்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது;வழக்கமாகவே மக்கள் மனநிலைக்கேற்ப சிலர் செட் ஆகிவிடுவார்கள்;அது ஒரு அசைக்கமுடியாத க்ரூப் ஆகிவிடும்;பேரும் புகழும் கூட சேர்ந்துவிடும்; ஆனால் சத்தியம் தனித்திருக்கும்; கவனியுங்கள், உங்களால் பதிக்கப்பட்டுள்ள மேற்காணும் கருத்தை ஊன்றி வாசிக்கும்போதே யோவேல் தீர்க்கதரிசியும் பேதுருவும் நினைவுக்கு வரவில்லையா? அப்படியானால் ஏற்கனவே ஆரம்பித்து தொகையிடுதல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காரியம் இப்போது தான் துவங்கப்போவதாகச் சொல்லுவது எத்தனை அறியாமை அல்லவா? அல்ல,சொல்லுவது அறியாமையல்ல; நம்புவதே அறியாமை ஆகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

செப்டம்பர் 28-க்கு பின்

http://www.thewayofsalvation.org/2011/09/28.html

 

இந்த செப்டம்பர் மாதம் குறித்து பல்வேறு செய்திகளும் ஊகங்களும் கிறிஸ்தவ உலகில் உலாவருகின்றன. அவற்றை இங்கே நாம் தொகுத்து கொடுக்க முயற்சித்துள்ளோம்.

1.வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாட்டு சபையில் (UN) இஸ்ரேல் தேசத்தையும் எருசலேம் நகரத்தையும் இரண்டாக பிரிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட முயற்சிக்கப்படுகின்றன. இஸ்ரேலிலிருந்து புதிதாக பாலஸ்தீன தேசத்தை உருவாக்க முயற்சி இது. புதிய தேசத்துக்கான கொடிகள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றன. என்ன நடக்கும்? இது சகரியா 12-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள விளைவுகளை உண்டாக்கும்.

2.எகிப்து தேசத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேலுக்கு எதிரான இன்னொரு பெரிய எதிரியை தெற்கில் உருவாக்கும்.(வடக்கில் ஏற்கனவே துருக்கி இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்துள்ளது).

3.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே “Comet Elenin" எனும் கோள் வருவதாகவும் இதனால் மூன்று நாட்கள் வரைக்கும் பூமியின் சில இடங்களில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் என்றும் செய்திகள் பரவியுள்ளன. இது செப்டம்பர் 28 வாக்கில் சம்பவிக்குமாம். காமெட் எலனின் வருவது உண்மைதானெனினும் மூன்று நாட்கள் காரிருள் என்பது இதுவரை உறுதிபடாத செய்தியாகும்.

 

4.இதில் இன்னொரு சுவாரசியம் செப்டம்பர் 28-ல் யூதர்களின் புதிய ஆண்டு தொடங்கவிருக்கிறது.இதனை ரோஷ் ஹஷன்னா (Rosh Hashanah) என்பார்கள். அதாவது வேதத்தில் இது யூதர்களின் ஐந்தாவது பண்டிகையான “எக்காளப் பண்டிகை” என குறிப்பிடப்படுகிறது. இந்த எக்காளம் ஊதும் சமயம் யாராலுமே முன்னறிவிக்க முடியாதாம். பூரண சந்திரனின் தோற்றத்துக்கு ஏற்ப அது மாறுபடுமாம்.(மேலே மூன்று நாள் காரிருள் நினைவில் கொள்க). அது போலவே முன்னறிவிக்க முடியாத கிறிஸ்துவின் இரகசிய வருகையும் இருக்கும் என்பது சிலரின் யூகம்.

 

5.ஏஞ்சல் டிவி புகழ் சகோ சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தியாக செப்டம்பர் 28-ல் Church is going to enter into a new season - era என்கிறார். இது குறித்ததான அவரது செய்தியை ஆங்கிலத்தில் கீழே நீங்கள் mp3 டவுண்லோடு செய்துகொள்ள்லாம். செப்டம்பர் 28-ல் சபைகளுக்கான ஒரு புது/இறுதி யுகம் ஆரம்பிப்பதாகவும் இந்த புது யுகத்தில் இப்போது போல் விசேசித்த ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் தீர்க்கதரிசனங்கள் சொல்வார்கள் எல்லோரும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பார்கள். இயேசுவின் சீசர்கள் காலத்தில் நடந்தது போல மனிதர்கள் பிரத்தட்சியமாக தேவதூதர்களை காண்பார்கள். அது மிக சாதாரண விசயமாக கருதப்படும். அற்புதங்கள், அதிசயங்கள் பயங்கரமாக நடக்கும். மரித்தோர்கள் உயிர்த்தெழுவார்கள். சபை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு லெலலுக்கு போய்விடும் என்கிறார்.

காத்திருப்போம்.

----

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இது என்ன கிறிஸ்தவ பிரசாத பிசினஸா?? தகவலுக்கு நன்றி சில்சாம் அவர்களே!

 

http://endtimespropheticwords.wordpress.com/2008/12/31/is-perry-stone-biblically-sound/

 

இந்த வெப் சைட்டின் ஆசிரியர் மிரியம் என்ற பெண்மணி. I followed Todd Bentley through her site, when the Lakeland revival was going on.மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நல்ல discernment உள்ள பெண்மணி.இப்ப போஸ்ட் பண்ணுவதில்லை.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புண்பட்டாலும் புண்படுத்தாத பண்பட்ட பதில்களுக்காக நன்றி, கோல்டா அவர்களே..!

பெர்றி ஸ்டோன் சம்பந்தமான செய்திக்குரிய தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன், வாசித்துவிட்டு சொல்லுங்கள்..!

http://www.jesus-is-savior.com/Wolves/perry_stone.htm

perry_stone-false_prophet.jpg

Perry Stone EXPOSED!

http://endtimespropheticwords.wordpress.com/2008/12/31/is-perry-stone-biblically-sound/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//அதன்படி கடந்த 2004 வருடத்திலிருந்து இந்த யூதப் பண்டிகைகள் சம்பந்தமாக எந்த சபையிலும் போதிக்காத நான் இதுவரை கேட்டிராத காரியங்களை அறிந்து அவற்றை எனது குடும்பத்தாருடன் பகிர்ந்துகொண்டு அதன்மூலம் அளவற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களையும் அடைந்தோம்; எனவே ஒவ்வொரு வருடமும் இதனை செய்து வந்தோம்;இந்த வருடமும் செய்யப்போகிறோம்.//

 

யூதப்பண்டிகைகளை கொண்டாடுவீர்களா? Interesting! என்ன செய்வீர்கள்?

 

//ஆனாலும் தற்போது மேற்கத்திய மீடியாக்களில் நடைபெறுவதுபோல எக்ஸ்ட்ரீமாக (Extreme) போக எனக்கு தைரியமில்லை; யூத கலாச்சார போதனை (Judaism) என்பதே ஒரு பெரிய மாயையான ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்கிறது;//

 

Correct!

 

//இப்போது தானே சாதுஜி யூதப் பண்டிகைகளை கடைசரக்காக்க துவங்கியிருக்கிறார்,ஆனால் இதனை துவங்கி வைத்த முன்னோடி எங்கோ போய்விட்டனர்;அதாவது இவர்கள் இதே காலக்கட்டத்தில் ஃபீஸ்ட் அஃப் த டேபர்னாக்கிள் என்று அறிவித்து த மீல் தட் ஹீல்ஸ் என்ற பெயரில் அதனை பார்சலில் விற்கிறார்கள்;இதனால் தீராத வியாதியெல்லாம் குணமாகிறதாம்;செல்வம் குவிகிறதாம்;இது எப்படியிருக்கு..?//

 

அந்த வீடியோவில் இராப்போஜனத்தைத்தான் அவர் the meal that heals என்று சொல்கிறார்.

 

//சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக‌ இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;//

 

சாது தப்பித்தார்? நானும் கொஞ்சம் சந்தேகப் பிராணிதான். எளிதில யாரையும் நம்ப மாட்டேன்.

 

நானாக எதையும் ஆராய்ச்சி செய்து காரியங்களை புரிந்து கொள்வதுதான் எனக்குப் பிடிக்கும். ஒரு முறை ஆண்டவரே யூத பண்டிகைகளை பற்றி ஆராயும்படி என்னைத் தூண்டினார். எப்படி முதல் வருகையில் முக்கிய சம்பவங்கள் எல்லாம் பண்டிகை நாட்களில் நடந்ததோ அப்படியே இரண்டாம் வருகையின் போதும் சம்பவிக்கும் என்று  தெரிந்து கொண்டேன்.

 

//அது என்னவென்றால் இப்போதே இவர்கள் யூதர்கள் முறைமையின்படி புத்தாண்டை அதுவும் வேத ஆதாரத்துடன் கொண்டாடி விட்டதால் 2012 எனும் ரோம புத்தாண்டை இனி கொண்டாடக்கூடாது;கொஞ்சம் கேட்டு சொல்றீயளா..?//

 

இது நல்ல கேள்வி!!

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தோழி கோல்டா அவர்களே,

நானே இதுகுறித்து எழுத இருந்தேன், நீங்கள் முந்திகொண்டுவிட்டீர்கள்; இந்த காரியங்கள் அடியேனுக்கு 2004 வருடமே வந்து சேர்ந்தது; அப்போது ஏஞ்சல் டிவி- யெல்லாம் இல்லை; சாதுஜி ராஜ் டிவி மூலம் மாத்திரம் வாரத்துக்கொரு முறை ஞாயிறு மாலையில் சரியாக இயேசு அழைக்கிறார், நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வரும் குணமாக்கும் அன்பு நிகழ்ச்சியின் மூலம் "கண்ணுங்களா.. செல்லங்களா " என்று ஜனங்களைக் கொஞ்சிக்கொண்டிருந்த காலம்; சாதுஜி வளர்ந்த உபதேசத்தின்படி அவர் முதற்கட்டத்தில் அப்போது இருந்தார்;

அதாவது அவருடைய உபதேசத்தில் 3 இழுப்புகள் (3 Pulls) என்று ஒரு யுக்தி உண்டு; அதில் முதல் இழுப்பு காலத்தில் சாதுஜி இருந்ததால் சர்ச்சைக்குரிய எதையும் அப்போதெல்லாம் அவர் சொன்னதில்லை;அதனால் அவர் அப்போதெல்லாம் ஆவி பெறாதவர் என்றோ பரிசுத்தம் குறைந்தவர் என்றோ ஞானம் குறைந்தவர் என்றோ சொல்லமுடியாது;அவர் எல்லாவற்றையும் அறிந்து- கற்றுணர்ந்து ஆயத்தமாகவே இருந்தார்;ஆனால் சூழ்நிலை சரியில்லையே,அதனால் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தார்;ஆனாலும் அவருடைய அணுகுமுறையும் அவர் ஒளிபரப்பும் பாடல்களும் அவர் வித்தியாசமானவர் அதாவது எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட சபையுடனும் ஐக்கியம் இல்லாதவர் என்பதை வெளிப்படுத்தியது;ஆனாலும் என்னைப் போன்றோர் கொஞ்சமும் சந்தேகப்படாமல் அவரை விரும்பினோம்.

என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பமான அந்த காலக்கட்டத்தில் புதுப்புது காரியங்களை அறிவதிலும் ஆராய்வதிலும் துடிப்பாக இருந்தேன்; ஆனாலும் துருபதேசங்களே பெரும்பாலும் என்னிடம் வந்து சேர்ந்தது;எனவே மிக எச்சரிக்கையாகவே முன்னேறினேன்;எதையும் லேசில் நம்பிவிடாமல் எதையும் சார்ந்துவிடாமல் கவனமாக இருந்தேன்;(இப்போதும்கூட..) இதே காலக்கட்டத்தில் ஜான் ஹேகி (John hagee) மற்றும் பெர்றி ஸ்டோன் (Perry Stone) ஆகியோரின் செய்திகள் ஆங்கில சானல்களான காட் (GOD TV) மற்றும் டேஸ்டார் டிவி (DAYSTAR TV) மூலம் அடிக்கடி ஒளிபரப்பாகி என்னைக் கவர்ந்தது; நான் அதிகமாக கவனித்த இவ்விருவருமே யூதர்களை மையப்படுத்தியே ஒப்புமை முறையில் செய்திகளைத் தருவார்கள்;

அந்த காலத்தில் என்னிடம் நல்லதொரு ஒத்தவாக்கிய (Concordance)அகராதிகூட இருந்ததில்லை; காசு கொடுத்து வாங்க வசதியில்லை;ஊழியர்களிடம் கேட்டு கடிதம் எழுதினால், ஜெபம் பண்ணு.. ஆவியானவரே வெளிப்படுத்துவார், என்று பதில் போடுவார்கள்;இதே மோகன் சி கூட எத்தனையோ புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும் நான் இதுபோல வேண்டி எழுதிய கடிதத்துக்கு எழுதிய பதில் கடிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது;அவர் எழுதியது,"வேதத்தை மாத்திரம் ஜெபத்துடன் படியுங்கள்,ஆவியானவரே கற்றுகொடுப்பார்.." என்பதே;அப்படியானால் இவர்கள் எதற்கு புத்தகங்களை எழுதி குவிக்கிறார்கள் என்று அப்போதே யோசித்தேன்,போகட்டும்.

இவ்வாறு புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியில்லாவிட்டாலும், போதகர்களெல்லாம் கைவிட்டாலும் எனது பசிக்கு உணவளிக்கத் தவறினாலும் அவர்கள் சொன்னது போல ஆவியானவர் எனக்கு மெய்யாகவே சமயத்துக்கேற்ற வார்த்தைகளைத் தந்து ஊக்கப்படுத்தினார்;உதாரணமாக ஏசாயா.50:4-ன் படி மெய்யாகவே அதிகாலையில் என்னை எழுப்புவார், தூக்கம் போய்விட்டதால் டிவி-யை ஆன் பண்ணுவேன்,அதில் இதுபோன்று ஆதார சத்தியங்கள் தொடர்பான செய்திகள் போய் கொண்டிருக்கும்;அவற்றை உடனே ஏற்றுக்கொள்ளாமல் குறிப்பு எழுதி வைத்து ஜெபத்துடன் வேதததுடன் ஒப்பிட்டுப்பார்ப்பேன்; அதன்மூலம் சில காரியங்களை கிரகித்துக்கொண்டேன்;

அதன்படி கடந்த 2004 வருடத்திலிருந்து இந்த யூதப் பண்டிகைகள் சம்பந்தமாக எந்த சபையிலும் போதிக்காத நான் இதுவரை கேட்டிராத காரியங்களை அறிந்து அவற்றை எனது குடும்பத்தாருடன் பகிர்ந்துகொண்டு அதன்மூலம் அளவற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களையும் அடைந்தோம்; எனவே ஒவ்வொரு வருடமும் இதனை செய்து வந்தோம்;இந்த வருடமும் செய்யப்போகிறோம். ஆனாலும் தற்போது மேற்கத்திய மீடியாக்களில் நடைபெறுவதுபோல எக்ஸ்ட்ரீமாக (Extreme) போக எனக்கு தைரியமில்லை; யூத கலாச்சார போதனை (Judaism) என்பதே ஒரு பெரிய மாயையான ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்கிறது; இந்த காலக்கட்டத்திலேயே ஹோலி லேண்ட் (HOLY LAND) டூர் மோகம் எல்லாம் வந்து வளர்ந்து பெருகியது;

நான் ஆரம்பத்தில் இரசித்த பல முன்னணி மேற்கத்திய ஊழியர்கள் விழுந்துவிட்டனர்; அவர்களில் பலரது வேடமும் முகமூடியும் கலைந்து இன்றைக்கு அவை இணையத்தில் நாறி புழுபுழுத்து நெளிந்துகொண்டிருக்கிறது; இதையெல்லாம் நம்முடைய சபையார் அனைவரும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்தால் இந்து தீவிரவாதிகள் சொல்லுவது போல இந்திய கிறிஸ்த‌வர்கள் தங்கள் தாய்மதத்துக்குத் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை;அந்த அளவுக்கு வெளிநாடுகளில் கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கையானது கலாச்சார மாற்றங்களின் காரணமாகவும் ஊழியர்களின் தாறுமாறுகள் காரணமாகவும் தளர்ந்து தகர்ந்துகொண்டிருக்கிறது;இந்தியாவிலும் அதே நிலைமையை உருவாக்கவே சாதுஜி போன்றவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர்;எப்போது விசுவாசிகள் வட்டார சபைகளை விட்டு சிதறப்பட்டு மீடியா மாயை வலையில் சிக்கினார்களோ அப்போதே சபையானது சீர்கெட்டுப்போயிற்று.

இப்போது தானே சாதுஜி யூதப் பண்டிகைகளை கடைசரக்காக்க துவங்கியிருக்கிறார்,ஆனால் இதனை துவங்கி வைத்த முன்னோடி எங்கோ போய்விட்டனர்;அதாவது இவர்கள் இதே காலக்கட்டத்தில் ஃபீஸ்ட் அஃப் த டேபர்னாக்கிள் என்று அறிவித்து மீல் தட் ஹீல்ஸ் என்ற பெயரில் அதனை பார்சலில் விற்கிறார்கள்;இதனால் தீராத வியாதியெல்லாம் குணமாகிறதாம்;செல்வம் குவிகிறதாம்;இது எப்படியிருக்கு..?


சாதுஜி நல்ல வியாபாரி, ஆனால் மோசமான ஊழியர்;தனக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு அதை வைத்து கல்லா கட்டப்பார்க்கிறார் என்றே சொல்லுவேன்;அடுத்த வருடம் இவரும் இதுபோல எதையாவது அறிவிப்பார் பாருங்கள்.இவர் சரியான ஊழியராக இருந்திருந்தால் முன்னரே இதனை முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும்; அவருடைய மனசாட்சிக்கு நன்கு தெரியும்,இதை கிறிஸ்தவ உலகம் ஏற்காது, என்பது;எனவே இத்தனை வருடம் இல்லாமல் இப்போது அதனை இங்கே முயற்சிக்கிறார்; இப்படியே இதே சீஸனில் 2007-ம் வருடம் எருசலேமில் வைத்து திறந்த வானம் (Open Heavens) தீர்க்கதரிசன மாநாட்டை ப்ரன்ஹாம் ஆதரவாளர்களுடன் இணைந்து நடத்தினார்; அப்போது தான் ப்ரன்ஹாமின் ஆவி ஒரு பிரபல ஊழியர் அருகில் நிற்பதைத் தான் காண்கிறதாகவும் ப்ரன்ஹாமின் ஆவி அந்த குறிப்பிட்ட ஊழியர் மேல் இறங்குகிறதாகவும் தீர்க்கதரிசனம் சொன்னார்; நள்ளிரவில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த நான் ஏஞ்சல் டிவி -க்கு போன்செய்து விளக்கம் கேட்டதற்கு யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை; அவர்களுடைய விளக்கத்துக்காக 15 நாட்களுக்கு மேலாகக் காத்திருந்தேன்; அதெல்லாம் பழைய கதை..! ஆனால் அன்று முதல் இந்த ஆளுடைய போதனைகளை கவனித்து வருகிறேன்; தற்போது எனக்கு எல்லாம் விரல்நுனியில் இருக்கிறது;இவர்கள் இதற்கு மேல் என்னை ஏமாற்றமுடியாது;சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக‌ இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;

இவர்களுக்கு யூதர்கள் மீதும் அக்கறையில்லை;கிறிஸ்தவர்களின் ஆசீர்வாதத்தின் மீதும் அக்கறையில்லை;வேதத்தின் மறைபொருள்களையெல்லாம் எடுத்து விளக்கவேண்டுமே என்ற பொறுப்புணர்வும் இல்லை;ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள்,காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும்;
மோகன்.சி, ஆல்வின் தாமஸ் இப்படி மீடியாவில் யார் யாரையோ பிடித்துப்போட்டு பிரபலமாகிவிட்டோம்,அதனை தக்கவைத்துக்கொள்ள புதிது புதிதாக ஏதாவது பூதத்தைக் கிளப்பிக்கொண்டே இருக்கவேண்டும்;இல்லாவிட்டால் காணாமற்போய்விடுவார்களே..!
ஆனால் ஆலன்பால் அவர்களையும் பால் தினகரனையும் ஏனோ அழைத்து பேட்டி காண சாதுவுக்கு மனமில்லை;அதுவும் விரைவில் நிகழலாம்;அப்போதும் ஒருவரையொருவர் ப்ரமோட் (Promote) பண்ணும் வியாபார நோக்கத்துடனே இவர்கள் இணைவார்கள் என்பது நிச்சயம்.

வியாபாரியும் இதையே செய்கிறான், ஹார்லிக்ஸ் மற்றும் ஹமாம் சொப் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட ப்ராண்ட்டுகள்;ஆனாலும் அதன் பாக்கிங் ஸ்டைலையும் விளம்பர யுக்தியையும் பாருங்களேன்,இல்லாவிட்டால் மார்க்கெட்டில் காணாமற் போய்விடுவோமே என்ற பதட்டமே இத்தனை புதுமைக்கும் காரணமாகிறது;அவ்வாறே சாதுஜி போன்றவர்களும் வேதத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும் தேவையற்றதாக இருந்தாலும் மனசாட்சியை விற்றுவிட்டு துணிகரமாக இதுபோன்ற உபதேசங்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்;

images?q=tbn:ANd9GcTUaENCRMif5E8H_6zaWkBjkaVVCltOz7gby5BWnP2gdnfXszyQNwimages?q=tbn:ANd9GcT6AgWtZgCU3jeoLK21uaNj-ym97R_kQD8F_RQzuU7kcIU1sgU8

இதையெல்லாம் எழுதும்போது என்னுடைய நிலையைக் குறித்து ஒருவித சுயபரிதாபம் எழுகிறது;எப்படியெனில் மகாநதி எனும் திரைப்படத்தில் ஹீரோவின் மகள் விபச்சார விடுதியில் சிக்கிக் கொண்டு பாடுபடுவாள்;அவளை மீட்கச் செல்லும் ஹீரோ,ஒவ்வொருத்தனா வாங்கடா என்று மயக்க நிலையில் மகள் முனங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துப்போவான்; அவ்வாறே ஆவிக்குரிய உலகின் வியாபாரிகளின் துருபதேசங்களையெல்லாம் கிரகித்து ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் எழுத துடிக்கும்போது அந்த சிறுமியின் சத்தம் எனக்குள்ளிருந்து எழுகிறது;நான் யாரைத்தான் சமாளிப்பேன், என்பது போல.ஒருபக்கம் இரஸல் கூட்டத்தார்;மறுபக்கம் இரஸலுடைய பாதிப்பிலேயே உருவான ப்ரன்ஹாம் கூட்டத்தார்;இருவருமே அமெரிக்கர்கள்;பொதுவாக அமெரிக்கர்கள் புதுமை விரும்பிகள்;எனவே அவர்கள் புத்திசாலிகள் போல காணப்பட்டாலும் விரைவில் புதிய ஒன்றுக்கு மாறிவிடுவார்கள்;அதனால் ஏமாற்றப்பட்டாலும் அதைக் குறித்து அவர்கள் கவலைகொள்ளுகிறதில்லை;காரணம் டேக் இட் ஈஸி பாலிஸி..! ஆனாலும் எந்தவொரு மேற்கத்திய நாட்டிலிருந்தும் ஆரோக்கிய உபதேசம் இதுவரை சபைக்கு வந்ததே இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்;வந்தார்கள்,வென்றார்கள்,பணத்தால் என்பதே நிலைமை; ஒரு அமௌண்ட் இன்வெஸ்ட் பண்ணிவிட்டு அவர்கள் சரக்கையும் இறக்கிவிட்டு போய்விடுவார்கள்;அப்புறம் அவரவர் சாமர்த்தியத்தில் கடையை டெவலப் பண்ணிக்கொள்ளவேண்டும்; வருடத்துக்கொரு முறை இலவச விமான டிக்கெட்டுடன் வெளிதேச சுற்றுலா, மாநாடு என்ற பெயரில் உண்டு;என்ன கொஞ்சம் ஆங்கில அறிவு வேண்டும் அவ்வளவுதான்.

2004 வருடமே எனக்கு அளிக்கப்பட்ட செய்தியின் ஆதார அம்சங்கள் எதுவுமே இல்லாத இந்த யூதப் பண்டிகைக் கொண்டாட்டங்களால் சபைகளில் வீணான குழப்பமே ஏற்படும்;மேலும் இன்னொரு உறுதியையும் சாதுஜி கூட்டத்தார் அளித்து எக்காளப் பண்டிகை கொண்டாடட்டும், அது என்னவென்றால் இப்போதே இவர்கள் யூதர்கள் முறைமையின்படி புத்தாண்டை அதுவும் வேத ஆதாரத்துடன் கொண்டாடி விட்டதால் 2012 எனும் ரோம புத்தாண்டை இனி கொண்டாடக்கூடாது;கொஞ்சம் கேட்டு சொல்றீயளா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[1. அற்புதங்கள், அதிசயங்கள் இது வரை கண்டிராத அளவில் ஊழியக்காரர் மூலமாக மட்டுமல்லாமல் , விசுவாசிகள் மூலமாகவும் நடக்கும். மரித்தோரும் உயிர்த்தெழுவார்கள்.

 

ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. இது என் தீர்க்க தரிசனம். மரித்த யாரும் எழும்பப் போவதில்லை. மரித்த தினகரனை சாது ஓநாய் எழுப்புமா?]

 

ஏன் அவசரப்படறீங்க? Lets us wait and see. பழைய தினகரன் எதுக்கு நமக்கு? ஆண்டவர் புதிதாய் பல தினகரன்களை உருவாக்குவார்.

என்னைக் கேட்டால் மரித்தவர்கள் பாக்கியவான்கள். நிம்மதியா பரலோகில் இருக்கட்டுமே! அவங்களை எதுக்கு திரும்ப எழுப்பி இந்த பூமிக்குக் கொண்டு வரணும்? என்றாலும் ஆண்டவரின்  மகிமையை வல்லமையை உலகம் காணும்படி இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்று நம்புகிறேன்

 

[4. ஆத்தும அறுவடை பெரிய அளவில் நடக்கும். நாம் கேள்விப்படாத இடங்களிலெல்லாம் ஆத்துமாக்கள் கர்த்தர் பக்கம் திரும்புவார்கள்.

 

ஆத்துமாக்கள் இருக்கட்டும் மனிதர்கள் திரும்புவார்களா? அவர் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ என்ற வசனம் பொய்யாய்ப் போகுமோ?]

 

நாம் இப்ப கிருபையின் காலத்தில் இருக்கிறோம். நடக்க வேண்டியவைகள் எல்லாம் நடந்து முடிந்தபின், வாசல் அடைக்கப்படும். ஒருவரும் கிரியை செய்யக் கூடாத இராக்காலம் வரும்.எடுத்துக் கொள்ளப்படுதல்(rapture) நடைபெற்றபின் இரட்சிக்கப்படுபவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

 

[5. ஆவிக்குரிய மண்டலம்/ஆவிக்குரிய காரியங்கள் இன்னும் தெளிவாக பலருக்குத் தெரியும். ஆவி மண்டலமும், பூமி மண்டலமும் ஒன்றாகும்.

 

ஆவி, பூமி????????????]

 

கண்ணால் பார்ப்பது பூமி மண்டலம். கண்ணால் பார்க்க முடியாதது ஆவி மண்டலம். இரண்டையும் ஒரு திரை மறைப்பதால் நம்மால் ஆவி மண்டலத்தை , உதாரணத்திற்கு தூதர்களைப் பார்க்க முடிவதில்லை. கடைசிக் காலத்தில் இத் திரை விலகும். பலர் தரிசனம் பார்ப்பார்கள். தேவ தூதர்களைப் பார்ப்பார்கள் என்பது தான் இதன் அர்த்தம். புரிஞ்சிச்சா?

 

[6. ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழும்பப் போகிறது.

 

சாதுவுக்கா?]

 

திருந்த மாட்டீங்க??

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: செப் 28 முதல் அக் 8 வரை தேவனை தீவிரமாக தேடுனமுமாம்!! மற்ற நாட்களில் சுமாராக தேடலாம் போல்!!

--

 

சரி 365 நாளும் ஆண்டவரைத் தீவிரமா தேடுங்க. யாரு வேண்டாங்கிறா???

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்: //அந்த மனிதனின் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய தேவசித்தம் (?) புது வருட நாளில்தான் எழுதப்படுமாம். செய்த பாவத்திற்கு வர வேண்டிய தீமைகளும் எழுதப்படும். அடுத்த 10 நாட்கள் நாம் அப்பீல் செய்து மனம் திரும்பினால் தீமை வராது , ஆசீர்வாதம் வரும். இதைத்தான் ஒக்காந்து யோசிக்கும் மூடக்கூட்டம் செய்துவருகிறதோ? எத்தகைய அபத்தம்? வேதத்துக்கு முற்றிலும் முரணான ஒரு விஷயத்தைப் பதித்துவிட்டு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேசி மார்க்கத்தின் போதையின் உச்சம் இது. இதை மனிதன் செய்ய முடியுமானால் எதற்கு இயேசு கிறிஸ்து?//

 --

 

ஆண்டவர் அப்படித்தான் அந்த 10 நாட்களைக் கைக் கொள்ள சொல்லியிருந்தார். Those ten days were high holy days for the Jews. யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அப்படித்தான் காரியங்கள் நடப்பதாக நம்பினார்கள்.

 

கிறிஸ்தவர்களும் இந்த நாட்களை அப்படித்தான் கைக் கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை!. வருடத்தில் ஒரு 10 நாட்கள் ஆண்டவரை உபவாசத்தோடு நம்மைத் தாழ்த்தித் தேடுவது நல்ல விஷயம் தானே! ஆவிக்குரிய சபைகளில் சுத்திகரிப்பு கூட்டம் என்று வருட இறுதியில் வைப்பார்கள். அது அந்த வருடத்தின் நம் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் ஒரு நல்ல தருணமாக இருக்கும்.அப்படியாக இந்த நாட்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்களை விசேஷித்துக் கொள்கிறவன் கர்த்தருக்கென்றே விசேஷித்துக் கொள்கிறான்!

 

//இதை மனிதன் செய்ய முடியுமானால் எதற்கு இயேசு கிறிஸ்து?//

 

ஜெபம், உபவாசம், மனந்திரும்புதல் எல்லாம் மனிதன் தான் செய்யணும்?? இயேசு கிறிஸ்துவா செய்வார்??

 



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard