bereans: //அல்லது இது ரஸ்ஸல் எழுதியது இதை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன் என்று சொன்னதே இல்லை!!//
ஏன் பொய் சொல்றீங்க? ரே ஸ்மித் எழுதியதை மொழி பெயர்த்து எழுதவில்லையா?
//இயேசு கிறிஸ்து தேவனுக்கும் மேலானவர் என்று நிரூபிக்க நினைக்கிறார்கள்.....மற்றபடி இயேசு கிறிஸ்து தன்னை ஒரு போதும் பிதா என்றோ, பிதாவிற்கும் மேலானவர் என்றோ சொன்னது கிடையாது!! //
இது என்ன புதுக்கரடி? முதலில் இயேசு கிறிஸ்து தேவன் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அப்புறம் அவர் தேவனுக்கு மேலானவரா, கீழானவரா, சமமானவரா என்று பார்ப்போம்.
'பிச்சையெடுத்தானாம் பெருமாள், அத எறந்து தின்னுதாம் அனுமார்' என்பார்கள், அதுபோல நான் எங்கிருந்தோ இரவலாகப் பெற்ற கட்டுரையை எடுத்துப்போட்டுக்கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிற (மேசியாவின்) எதிரிகளை நினைத்தால் சிரிப்பாக வருகிறது; நாம் என்ன தான் திட்டினாலும் ஒன்றையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நம்முடைய பக்கத்தை காப்பி பேஸ்ட் செய்து நமக்காக (மேசியாவின்) எதிரிகள் பணிசெய்வதை எண்ணி உடம்பெல்லாம் சிலிர்க்கிறது, நெஞ்செல்லாம் இனிக்கிறது, கண்களிரண்டும் கலங்குகிறது; ஆனா என்ன தாங்கள் பொறம்போக்குகள் என்பதை நிரூபிக்கும்வண்ணமாக நம்முடைய தளத்தின் (Link) தொடுப்பைத் தராமலே திருடியெடுத்து போடுகிறார்கள்; அந்த நாகரீகமெல்லாம் இரஸலின் தண்ணீரைக் குடித்தோருக்குத் தெரியாதல்லவா..?
இரஸலுடையதைத் திருடி அவனுக்கே ஆப்பு வைப்பவர்கள்தானே இவர்கள்..! அந்த நாய் இவனுங்கள முதல்ல சபையிலிருந்து பிரிச்சிகிட்டு போய் வி(வ)காரமாக சிந்திக்க வைத்தான்; இப்போ இவனுங்க அவனையே முந்திகிட்டு இரஸல் சொன்னது இதெல்லாம் சரி, இதெல்லாம் சரியில்லை'னு அவனுக்கே பாடம் நடத்தறானுங்க; இப்ப அந்த நாய் மட்டும் உயிரோடு இருந்தான்னா நாக்கைப் பிடுங்கிக்காமலே செத்துப்போவானாமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"தேவன் மரிக்க இயலுமா?" என்ற கேள்வியையும் பதிலையும் வாசித்தேன். இப்போது என் கேள்வி: தேவன் அனைத்தையும் படைத்தவராயின் ஏன் அவர் மனிதனாக அவதரிக்க வேண்டும்? அவர் எல்லாம் அறிந்தவராய் இருப்பின், இதற்கு அவசியம் என்ன?
பீட்டர் பாலார்து பதிலளிக்கிறார்:
தத்துவ ரீதியான பதில்:
1. தேவன் பாவங்களை வெறுக்கிறார். பாவநிவர்த்திக்கு ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும்.
2. மனிதர்களே அதை செலுத்த வேண்டும். ஏனென்றால் பாவம் அவர்கள் செய்ததே.
3. ஆனால் தேவன் மட்டுமே அந்த விலையைக் கொடுக்க முடியும். காரணம், மனிதர்கள் பரிபூரணமான பரிசுத்தவான்கள் அல்ல.
4. எனவே மனுக்குலத்தின் பாவங்கள் தீர தேவனே மனிதனாக வந்து பாவத்திற்கான விலையைத் தருவதே சரியான ஒரே வழியாகும்.
இதோடு கூட, தேவன் மனிதனானதால்,
(அ) நாம் எப்படி வாழ்வதென வழிகாட்டினார்
(ஆ) மனித வாழ்வின் துயர்களில் பங்கெடுத்தார்
மொத்தத்தில் தேவன் "நான் சொல்வதைச் செய், நன் செய்வதை மட்டும் செய்யாதே" என்று கூறுபவரில்லை. நாம் எப்படி வாழவேண்டும் என்று அவரே வாழ்ந்துக்காட்டிச் சென்றுள்ளார்.
நான் இணையத்தில் இணைந்த ஆரம்பகாலத்தில் இரசித்து வாசித்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தேடிக்கொண்டிருந்த கட்டுரை இன்று தான் கிடைத்தது; அதனை யௌவன ஜனம் வாசகருக்காகப் பகிர்ந்துகொள்ளுகிறேன். இந்த கட்டுரையானது முக்கியமாக (மேசியாவின்) எதிரிகளான வேத மாணாக்கர் என்றும் பெரேயன்ஸ் என்றும் தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் இரஸலின் நரகலான அருவருப்புக்களுக்காகவே பதிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.
"நான்தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?
கேள்வி:
கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?
பதில்:
என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.
“நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று இயேசு ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?
அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?
மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.
நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.
உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” (யோவான் 11:25). என்று கூறினார்.
இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:
“இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.” (யோவான் 11:43,44).
நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:
1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரம் உடையவராகவே பேசினார்.
2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.
3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.
தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)
இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.
எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.
இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.
யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.
உங்களின் வாதம்:
"நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்ல வில்லையே என்பதாகும்.
இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள்.