எங்க சபையில் முழு இரவு ஜெபம் (10 pm - 4 am) இருக்கும். அது இப்ப முன்னிரவு (6 pm - 12 midnight) ஜெபமாக மாறி விட்டது! இந்த மாதம் கலிகுரா ஜெபசிங் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்!) என்ற ஊழியர் மதுரையிலிருந்து செய்தி கொடுக்க வந்திருந்தார். நல்ல உற்சாகமாய் இசை வாசித்து பாடி ஆராதனை செய்து செய்தி கொடுத்தார்.
அவர் சொன்ன சாட்சி: அவர் ஊழியத்திற்காக தாய்லாந்து சென்றிருந்த போது கடல் உணவு சாப்பிட்டு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜியாகி கொப்பளங்கள் உடலில் உண்டாகி 4 வ்ருடங்களாக வேதனை தந்து கொண்டிருந்ததாம். அது சமீபத்தில் தீவிரமாகி ஆஸ்பத்திரியில் இருந்தாராம்.உடல் உள்ளேயும் அதிகம் புண்ணாகி விட்டது. ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 3 நாள் தான் தாங்கும். வீட்டுக்கு கொண்டு போயிடுங்க என்று சொல்லி விட்டார்களாம். இவர் வீட்டிற்கு வந்து அன்றிரவு ஜெபித்திருக்கிறார். உன் கதை முடிந்தது. உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது என்று பிசாசு ஒரு பக்கம் வந்து சொன்னானாம். இன்னொரு பக்கம் இயேசு கிறிஸ்து , உன்னை திரும்பவும் உயிர்பிப்பேன். பயன்படுத்துவேன் என்று சொன்னாராம். அதன் பின் அற்புதமாக பூரண சுகமடைந்தாராம். டாக்டர் சொல்வதையெல்லாம் நம்பக் கூடாது என்று சொன்னார்.