இன்னும் எங்க ஊர்ல CD வரலைங்க.... வெளில வாங்கிட்டு வர சொல்லி, பாட்டு கேட்டுட்டு mail அனுப்பறேன்.... :)
ஒரு இரகசியத்தை சொல்லட்டுமா, நான் கொடுத்துள்ள தொடுப்பின் மூலமே அந்த பாடல்களை நீங்கள் கேட்கலாம்;தேவைப்பட்டால் உங்கள் தனி உபயோகத்துக்காக மட்டும் டௌன்லோடு செய்துகொள்ளலாம்.
ஆயத்தமா பாடற் தொகுப்பின் மூன்றாவது பாகத்தை கேட்டு அதில் எனக்குப் பிடித்த பாடல் எது என்பதை சொல்லும் நண்பருடைய செல்போன் கணக்கில் நான் நூறு ரூபாய் போடுவதாக அறிவித்திருந்தேன்;நான் எந்த பாடலை கேட்டா என்ன என்று நினைத்தார்களோ அல்லது என் மீது நம்பிக்கையில்லையோ அல்லது மற்றவர் பணத்துக்கு ஆசைப்படாததாலோ எனக்கு அருமையான தளநண்பர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை;எல்லோருக்குமே நான் சீரியஸாக இருப்பதே பிடிக்கும் போல;நான் எப்போதுமே சீரியஸாகவே இருந்தால் என் வாழ்க்கையே சீரியஸ் நிலைமைக்குப் போயிருமே,கொஞ்சம் கூட எம்மேல யாருக்கும் அனுதாபமே இல்லையா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"ஆயத்தமா" பாடல் தொகுப்பின் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது; அதிலிருந்து கேட்ட பாடல்களில் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது; இதுவரை சுமார் 30 முறை கேட்டிருப்பேன், இன்னும் சலிக்கவில்லை; எனது பாசத்துக்குரிய வாசகர்களான நீங்களும் கேட்டுவிட்டு எனக்குப் பிடித்தமான பாடல் எது என்பதைக் கண்டுபிடித்து சொல்லுவீர்களானால் உங்கள் செல்போன் கணக்கில் நான் நூறு ரூபாய் போடுவதற்கு வாக்குறுதி கொடுக்கிறேன்; முதலில் வந்து சேரும் நூறு எண்களிலிருந்து ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அந்த எண்ணுக்கு இந்த நூறு ரூபாயை பரிசாக அளிக்கலாம் என்று இருக்கிறேன்; ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் விடையுடன் தங்கள் அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.