இது தமிழ் வேதாகத்தின் திருத்திய பொது மொழிபெயர்ப்பைவிட பரவாயில்லை; அதிலிருந்து ஜோக்..."ஜீவ அப்பம் நானே.." எனும் வசனம் தற்கால தமிழர்களுக்கு விளங்காது என்ற நல்லெண்ணத்தில் அதனை "உயிருள்ள தோசை நானே.." என்று திருத்தியிருக்கிறார்களாம்,இது நியாயமா..?
rajkumar_s:
சீகன்பால்கு வேதாகமத்தை மொழிபெயர்த்த போது அப்பம் என்பதற்கு தமிழில் எப்படி எழுதலாம் என்று புரியாமல் நீங்கள் சாப்பிடும் பொருளின் பெயர் என்ன என்று வேலைக்காரனிடம் கேட்டாராம், அதற்கு அந்த வேலைக்காரர் கஞ்சி என்று சொல்லியிருக்கிறார். ஆகவே வேதாகமத்தில் அப்பம் என்று வரும் இடத்திலெல்லாம் கஞ்சி என்றே மொழிபெயர்த்துவிட்டாராம், பின்நாட்களில் தான் அந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டு அப்பம் என்று மாற்றப்பட்டதாம்
இதெல்லாம் கூட பரவாயில்லை காலம் சென்ற வேத அறிஞர், மறைதிரு ராஜரீகம் அவர்கள் கத்தோலிக்கர்கள் புரட்சியாளர்கள் இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரு பொது மொழிபெயர்ப்பை வெளியிட முனைந்தார்கள். ஆனால் அது வெளிவரும் முன்பே 1978 ஆம் ஆண்டு மறைந்தார். இன்று வரை அந்த மொழிபெயர்ப்பு முழுமையடையாமல் தேங்கிக் கிடக்கிறது,
ஆனால் புதிய ஏற்பாடு கத்தோலிக்கர்களால் வெளியிடப்பட்டுவிட்டது அதில் அவர்கள் சமாதாணம் என்பதை அமைதி என்றும் மரியாளை 'மரியா' என்றும் மாற்றி வெளியிட்டுருக்கிறார்கள், எபிரேயத்தமிழ் நடையில்லாத ஒரு சுத்த தமிழ் நடைஇருக்கும் என்ற எண்ணத்தில் வாங்கி அதைப் படித்த போது அதிர்ந்து விட்டேன்.
வேதாகமத்தை கிரேக்கு எபிரேயு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்று இஸ்லாமியர்கள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். அப்படி தமிழிலும் கிரேக்கத்திலும் எபிரேயத்திலும் புலமை பெற்ற கிறிஸ்தவர்கள் யவரும் இல்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு ஆகும் ஆனால் அது பொய் என்று நிரூபிக்க நமக்கு இருக்கும் தற்போதைய ஆதாரம் ராஜரீகம் அவர்களின் வாழ்க்கையும், அவரது பொதுமொழிபெயர்ப்பு வேதாகமும் தான்
மறைதிரு ராஜரீகம் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
மறைதிரு ராஜரீகம் (1907 1978) இவர் நெல்லையில் பிறந்தவர், இவர் இறையியலில் இரண்டு பட்டங்களும், தமிழ் இலக்கியத்தில் இரண்டு பட்டங்களும் செற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், எபிரெயம், கிரேக்கம் ஆகிய நான்கு மொழிகளில் புலமை பெற்றவர். இவரே பைபிளை நல்ல தமிழில் மொழிபெயர்த்த முதல் தமிழர்.
இவர் லுத்தரன் இறையியல் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு இவருக்கு மொழியாக்கப்பணி கொடுக்கப்பட்டது. இதனால் தன் பனியைத் துறந்து மொழியாக்கப்பணியை செய்யத் தொடங்கினார். இவரது குழுவில் பன்மொழி அறிஞர்களும், பன்னாட்டு இறையியல் மேதைகளும், இருந்தனர், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்தார்.
இவர் இதற்கு முன் வந்த மொழியாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் முற்றிலும் புதிய எளிய தமிழ் நடையில் மொழிபயர்ப்பு செய்தார். இவர் தலைமையில் அமைக்கப்பட்ட்ட குழுவால் 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி வெளிவந்தது. முதலில் நான்கு சுவிஷேச நூல்களும், பின்னர் 1978ல் சங்கீதம் இனந்த புதிய ஏற்பாடும், மேலும் நீதிமொழிகள் 1976லும், ரூத் 1977லும் வெளிவந்தன. இவர் தனியாளாக பழைய ஏற்பாட்டை மொழிப்யர்த்து விட்டார், குழுவாக எசேக்கியேல் வரை மொழிபெயர்த்துவிட்டார்கள். ஆனால் ஆதியாகமம் அச்சில் இருந்த போது இடைவிடாத பணியால் ஓய்வெடுக்க முடியாமல் இருந்ததால் இரத்த அழுத்தம் அதிகமாகி முகுளத்தில் இரத்த நாளம் வெடித்து 1978ம் ஆண்டு ஜனவரி திங்கள் 24ம் நாள் உயிர் துறந்தார்,
அன்று முதல் இன்று வரை தமிழில் இவருக்கு இனையான அறிஞர் எவரும் இல்லாததால் இவர் விட்டுச் சென்ற பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இந்த பணி நிறைவடைந்தால் தமிழில் மிக மிக பொக்கிஷமாக ஓர் மொழி பெயர்ப்பு தமிழ் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிடைக்கும். இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நமக்கு அருமையான நண்பர் இராஜ்குமார் அவர்கள் வேறொரு திரியில் (நான் இயேசுவை காதலிக்கிறேன்) பதித்த இந்த அரிய தகவல்களை சிறப்பு செய்ய எண்ணி, தனி திரியாகப் பதித்துள்ளேன்; இதில் திசைதிருப்பும் வாதங்களைத் தவிர்த்து சுவையானதும் அரிதானதுமான தகவல்களை நண்பர்கள் தருவிக்க அன்போடு வேண்டுகிறேன்.
இது தமிழ் வேதாகத்தின் திருத்திய பொது மொழி பெயர்ப்பைவிட பரவாயில்லை; அதிலிருந்து ஜோக்..."ஜீவ அப்பம் நானே.." எனும் வசனம் தற்கால தமிழர்களுக்கு விளங்காது என்ற நல்லெண்ணத்தில் அதனை "உயிருள்ள தோசை நானே.." என்று திருத்தியிருக்கிறார்களாம்,இது நியாயமா..?
சீகன்பால்கு வேதாகமத்தை மொழிபெயர்த்த போது அப்பம் என்பதற்கு தமிழில் எப்படி எழுதலாம் என்று புரியாமல் நீங்கள் சாப்பிடும் பொருளின் பெயர் என்ன என்று வேலைக்காரனிடம் கேட்டாராம், அதற்கு அந்த வேலைக்காரர் கஞ்சி என்று சொல்லியிருக்கிறார். ஆகவே வேதாகமத்தில் அப்பம் என்று வரும் இடத்திலெல்லாம் கஞ்சி என்றே மொழிபெயர்த்துவிட்டாராம், பின்நாட்களில் தான் அந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டு அப்பம் என்று மாற்றப்பட்டதாம்
chillsam Wrote on 12-07-2011 15:01:25:
பொதுவாகவே நம்முடைய தமிழ் வேதாகமத்தில் சுமார் 40 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுவார்கள்;
உண்மைதான் சகோதரரே, ஒரு மொழி ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கொழிந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னைத்தானே புத்தாக்கம் செய்துகொள்ளும் என்று மொழியியலாலர்கள் சொல்லுகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் கணினி கனிப்பொறி என்று வழங்கப்பட்டு வந்ததை நாம் அறிவோம். ஏன் நம்முடைய வேதாகமத்தில் அனேக சமஸ்கிரத மொழிகள் உள்ளன என்று ஆராய்ந்தோமானால் அதற்கு அது மொழிபெயர்க்கப்பட்ட காலத்தின் காரணமாகத்தான்.
தற்போது புழக்கத்தில் உள்ள தமிழ் வேதாகமம் 1871 ஆம் ஆண்டு ஹென்றி பவர் என்பவரால் வெளியிடப்பட்டது, சமஸ்கிரதம் அதிகமாக கலந்திருப்பதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக 1915 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டு வெளிநாட்டிலிருந்து கப்பலில் வந்துவிட்டனவாம் ஆனால் அன்றைய தமிழ் கிறிஸ்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கடலில் தூக்கி எறிந்து விட்டார்களாம்,
1727 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகளையும் அதற்கு தற்காலத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளேன்
தற்போதைய வார்த்தைகள் .......................சீகன் பால்கு பயன்படுத்தியது (1727)
முதல் தமிழ் வேதாகமம் எப்படி இருந்தது தெரியுமா? படத்தை பாருங்கள்
தமிழ் மொழி எழுத்து சீர்த்திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னால் அதாவது கி.பி 1840 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த தமிழ் வேதாகமங்கள் கீழ் கண்ட படத்தில் உள்ளது போன்ற எழுத்து நடையில் தான் இருந்தன
1840 ஆண்டில் வெளிவந்த வேதாகமத்தில் தான் தமிழில் முதன்முதலில் எழுத்து சீர்திருத்தம் செய்யப்பட்டது போர்ச்சுகீசியரான "கான்ஸ்டைன் பெஸ்கி" இவரைத்தான் எல்லோரும் இவரை வீரமாமினிவர் என்று அழைப்பார்கள். இவரே தமிழில் தற்போது நடைமுறையில் இருக்கும் எழுத்து சீர்திருத்தம் செய்தவராவார், மேலும் இவருக்கு பிறகு அமெரிக்க அருட்பனி இயக்கத்தின் தலைவராக இருந்த "ஹென்டர்" என்பவர் தான் சீரற்று இருந்த தமிழ் எழுத்துக்களுக்கு சீரான அச்சு வடிவத்தை உருவாக்கினார், அது வரை பனவோலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக (இன்றைய தனிப்பட்ட கைஎழுத்துகள் போல) எழுதி வந்தார்கள்.
எழுத்து சீர்திருத்தம் செய்யப்பட்டு முதன்முதலாக வெளிவந்த வேதாகமத்தை படத்தில் காணலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)