இது பிரபலமான தேவ மனிதர்கள் சொன்னவற்றைப் பதிக்கும் பகுதி... இதில் தாங்கள் கேள்விப்பட்டு அல்லது வாசித்துத் தங்களைக் கவர்ந்த சிறு துணுக்குகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.., இதோ நான் முயற்சிக்கிறேன்... ஒரு பிரபலமான ஊழியர் வேகமாக மேடையேறினார்..எதையோ செய்து தன்னை முன்னிலைப்படுத்த முயன்றார்;ஆனாலும் கூட்டத்தைப் பார்த்ததும் அவருக்கு கையும் ஓடவில்லை;காலும் ஓடவில்லை;இறங்கி ஓடிவிடவேண்டும் போலிருந்தது;முக்கியமான எதையோ மறந்துவிட்டு வந்தது போலத் தவித்துக் கொண்டிருந்த அவரைக் காப்பாற்றும் வண்ணமாக அப்போது மேடையிலிருந்த அனுபவம் வாய்ந்த மற்றொரு மூத்த ஊழியர் எழும்பி அவரை அமரச் செய்துவிட்டு இப்படிச் சொன்னாராம்,"தம்பி மேடையில் ஏறும் முன்பு தாழ்மையுடன் ஏறி பெருமையோடு இறங்கவேண்டும்;இப்படி பெருமையுடன் ஏறி தாழ்மையுடன் இறங்கக் கூடாது" என..! அந்த மூத்த ஊழியர் மறைந்த மாபெரும் அப்போஸ்தலரும் மேய்ப்பருமாகிய G.சுந்தரம் ஐயா அவர்கள் தான்...