Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவை பெரேயன் குழுவின் குழப்பத்திற்கு விளக்கங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: கோவை பெரேயன் குழுவின் குழப்பத்திற்கு விளக்கங்கள்
Permalink  
 


நானும் ரொம்ப நாளாய் கேட்கிறேன். "நித்திய ஆக்கினை" என்றால் என்ன என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்....ஒழுங்கா கேள்வியை வாசிங்க நான் "நித்திய அக்கினி" பற்றி கேட்க வில்லை "நித்திய ஆக்கினை" பற்றி கேட்கிறேன்.

அன்னை தெரசாவிற்கு எப்போது பாபிலோனிய வேசிசபையில் இருந்ததற்கான தண்டனை கிடைக்கும்? வரப்போகிற ராஜ்ஜித்திலா? ஓ ஒருவேளை ராஜ்யத்தில் கற்று கொள்ளுவது தான் நித்திய ஆக்கினையோ????

எங்களுக்கு எப்ப நித்திய ஆக்கினை கிடைக்கும்??

பெரேயன் குழு பரலோகம் போகுமா அல்லது பரதீசிலே (இங்கே பூமியிலே) இருக்குமா ?

உங்களுடைய முதாதயர்களுக்கு சுவிசேஷம் சொன்ன மிஷினரிகள் செய்தது தவறா அல்லது சரியா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//ஈசா சாலமோனுக்கு தாத்த்தாக்கு வசனம் கேட்டு, முலங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு..............//
 
ஈசாய் சாலமோனுக்கு தாத்த்தா என்பதற்கு வசனம் இல்லை ஆனால் ஈசாய் தாவிதின் தகப்பன் என்றும் , தாவிது சாலமோனுக்கு தகப்பன் என்பதற்கு வசனம் இருக்கிறது அதனால் ஈசாய் சாலமோனுக்கு தாத்த்தா என்று அறிகிறோம் அதே போல கிறிஸ்துவுக்குள் தேவத்துவம் பரிபூரனமாய் இருந்தது என்பதற்கு வசனம் இருக்கிறது ஆனால் தேவன் ஒருவரே என்றும் வசனம் இருக்கிறது அப்படி என்றால் அந்த ஒரே தேவனே கிருஸ்துவுக்குள்ளும் வாசம் செய்கிறவர் என்று அறியலாம்.
 
//அவர் அனுப்பினவரை நாம் ஏற்றுக்கொள்வது தேவனால் உண்டான காரியமாக இருக்கிறது என்பது தான் சரியான மொழிப்பெயர்ப்பு!! என்னமோ தேவனை நம்புவது உங்களால் ஆன காரியம் என்று நினைத்தீர்களா!! //
 
நான் அப்படி நினைக்கவில்லை. தேவனை விசுவாசிக்கும் படி கட்டளை கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் அந்த விசுவாசம் தேவனால் உண்டாகிறது. அப்படியானாலும் விசுவாசிக்காமல் ஒருவன் செய்கிற எந்த கிரியையும் நற்கிரியை அல்லது தேவனுக்கு ஏற்கும் கிரியை அல்ல. மேலும் தமிழ் வேதாகமம் மட்டுமே நான் வாசிக்கிறேன் என்பது உங்களுடைய அறியாமையையும், பெருமையையும் காட்டுகிறது. ஏன் தமிழ் வேதாகமம் அவ்வளவு கேவலமா?
 
//விசுவாசம் என்பதே ஒரு ஈவு என்று வேதம் சொல்லும் போது விசுவாசத்தினால் தான் இரட்சிக்கப்படுவார்கள் என்பது தேவனின் வசனங்களை பொய்யாக்குவதாகும்!!//
 
விசுவாசத்தால் நிதிமான் பிழைப்பான் என்பது பொய்யா? தேவனுடைய ஈவாக இருந்தாலும் விசுவாசம் இல்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்படமாட்டான்.
 
//ஏனென்றால் தேவன் அவனை அப்பொழுது விசுவாசிக்கும்படியாக நியமிக்கவில்லை, ஃபெலிக்ஸும் ராஜியத்தில் தெரிந்துக்கொள்வான்!!//
 
பேலிக்சை பார்த்து பவுல் நீ ராஜ்யத்தில் தெரிந்து கொள்ளுவாய் என்று சொன்னவுடன் அவன் பயந்து விட்டானா??? ம்ம்ம்....நீங்க அப்படி சொல்லி யாராவது பயந்து இருக்கிறார்களா? ராஜ்யத்தில் தெரிந்து கொள்ளுவதற்கு என்ன பயம் விளக்குவீர்களா?
 
//சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்துக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம். //
 
QUIZ TIME !!!! " சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான் 1 :3 )." இங்கே சொல்லப்பட்ட "அவர்" சிருஷ்டியா ? அல்லது சிருஷ்டிகரா?

இயேசு கிறிஸ்துவின் கரத்தில் ஜீவனை ஒப்புகொடுத்து, ஜெபித்த ஸ்தேவான் சிருஷ்டியை தொழுதால் நானும் தொழுவேன்

கிழே உள்ள வசனத்தில் உள்ளவர் தொழத்தக்கவரா?

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். ( 1 யோவான் 5 : 20 )

ஜெபங்களாகிய தூபவர்க்கத்தை பெற்று கொள்ளுகிற ஆட்டுக்குட்டியானவர் சிருஷ்டி என்று நீங்கள் அவமதித்தாலும் நான் அவருடைய பாதத்தில் விழுந்து தொழுவேன்.

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து: (வெளி 5 : 8 )

மரியாள் நேசத்தோடு தனக்காக சிலுவை சுமக்கப்போகிற பாதத்தை கண்ணீரினால் கழுவி முத்தமிட்டாள் என்றால் நான் எனக்காக சிலுவை சுமந்து விட்ட நேசருடைய பாதத்தை இன்னும் அதிகமாய் தொழுதுகொள்ளுவேன்.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

 
//எதில் நிலைநிற்கச்சொல்கிறார்?//
 
அவரை விசுவாசிகிறதிலே தான்.

//எங்கே சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லும் ஒரு ஆளைக் காண்பியுங்கள்...//
 
நான் தான்! சிலுவை என்பது இயேசுவை விசுவாசிப்பதின் நிமித்தம் மற்றவர்களால் வரும் எதிர்ப்பு மற்றும் பாவத்தை வெறுப்பதால் வரும் நஷ்டம் . உதாரணம் எனக்கு சிலுவை நீங்கள்தான்
 
//உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் 'நற்செய்தி' அறிவித்து விடவில்லை.//
 
உங்க வாத்தியார் ரசலின் 'நற்செய்தியை' பவுல் பேலிக்சிடம் சொல்லியிருந்தால் அவன் ஏன் பயப்பட வேண்டும்.  சொதப்பாம சொல்லணும் ஓகேவா?
 
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான் (அப்போஸ்தலர் 24:25 )
 
 
//தாவீது கூட பரலோகத்துக்கு எழுந்து போகவில்லையே அப்2:34. அப்ப அவன் எங்கு போவான் நரகத்துக்கா?//
 
என்ன உளறல்??? கிறிஸ்து சரிரத்தில் எழுந்து பரலோகம் போனது போல தாவிது போகவில்லை. இப்போ என்ன பிரச்சனை??
 
 
//என்னுடைய கேள்வி அப்ப முன்குறிக்காதவர்களை 'நரகத்துக்கு' முன்குறித்திருக்கிறாரா?//
 
கட்டாயமாக!
 
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். ( I தெசலோனிக்கேயர் 5:9 )
 
//அப்ப யார் யாருக்கு பரலோகம் யார் யாருக்கு நரகம் என்று தேவனே முன்குறித்துவிட்டபடியால் இங்கே நமக்கென்ன வேலை. தேவன் முன்குறியாதவர்களை யாரும் பரலோகத்துக்குத் தகுதியாக்க முடியுமா?//
 
தேவன் யாரை முன்குறித்தார் என்று நமக்கு தெரியாதே!!
 
//ஓஒ அப்ப மரிக்கும் எல்லா மனிதரின் ஆவியும் தேவனிடத்திற்கு பரலோகத்துக்குப் போய்விடும் (பாவியானாலும் பரிசுத்தவானானாலும்). அங்கே தேவனோடு ஒன்றிவிடும். பின் எதற்கு சரீர உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு? அப்படியே விட்டுவிடலாமே.//
 
தேவனோடு ஒன்றி விடும் என்று யார் சொன்னது ரசலா?  அப்படியே விட்டு விடுங்கள் என்று தேவனுக்கு ஆலோசனை சொல்லுகிற தாங்கள் யாரோ???
 
//அப்ப ஐசுவரியவான், லாசரு உண்மைச் சம்பவத்தில் நடப்பவைகளுக்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள் நண்பரே? ஆபிரகாம் உயிர்த்தெழுந்து விட்டாரா? அல்லது ஆவிக்கும் 'மடி' யெல்லாம் கூட இருக்குமா?//
 
எனக்கு தெரியாது!  எனக்கு என்ன தெரியவேண்டுமே அதை தேவன் தெளிவாய் எழுதி வைத்து உள்ளார். காணாதவைகளில் நுழைகிற இழிவான பழக்கம் எனக்கு இல்லை
 
காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள் (கொலோசெயர் 2:19 )
 
இல்லதவைகளில் இருந்து இருக்கிறவைகள்  எப்படி வரும் என்று எனக்கு தெரியாது ஆனால் என் தேவன் அதை செய்ய வல்லவர் என்று தெரியும். அபிரகாமை போல நாம் எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் அழைத்த தேவனை நம்பி போவது தான் விசுவாசம் 
 
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். (எபிரெயர் 11 : 8 )


 //மறுபடியும் கொழப்புறீன்ங்க இயேசுவை ஏற்றுக்கொள்வதும் (இரட்சிப்பு) அவரை மறுப்பதும் (நரகம்) மனிதன் கையில்தான் இருக்கிறது என்றுதானே நீங்கள் எல்லாருமே வாதாடினீர்கள். இப்ப என்ன தடால் பல்டி...//

நான்  எழுதியதாக  ஒரு சாம்பிள் காண்பிக்கமுடியுமா? பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் குமாரனிடத்தில் வரான். இழுக்கபடுகிற எவனும் Resist பண்ணவும் முடியாது.
 
//ஆக ஏற்றுக்கொண்டு என்ன வேணா செய்யலாம் ஏத்துக்காம நல்லது செஞ்சாக்கூட நரகம்தான். பேஷ் பேஷ்! அப்புறம் ஏன் ஏற்றுக்கொண்ட அநேக பரிசுத்த ஊழியர்களை உங்கள் தளத்தில் சாடுகிறீர்கள். அவர்கள்தான் ஏற்றுக்கொண்டவர்களாயிற்றே... //
 
பவுல் கொரிந்து சபையை சாடவில்லையா? புரிகிறதா இல்லை சும்மா கேட்கிறதா?
 
//சாத்தான் யாரையும் நரகத்துக்குத் தகுதியாக்குவதில்லையா? அப்ப யாரை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றித்திரிகிறான் என்ற வசனம் அவனது பசியைக்குறித்துச் சொல்கிறதோ?//
 
அது என்ன என்று உங்களுக்கு தெரியாதா? அப்புறம் எல்லாம் 'தேவன் செயல்' என்று எப்படி எழுதினீர்கள்??
 
//நாங்கள் இரட்சிக்கப்படவே வேண்டாம் பிரதர், கிறிஸ்துவை அறியாத அநேக குடும்பங்கள், நண்பர்கள், உறவினர்களை மற்றும் என் சகோதரர்களாகிய மனிதர்கள் எல்லாரையும் நரகத்தில் வேதனைப்படவிட்டு விட்டு நான் மட்டும் பரலோகம் போகவே வேண்டாம்.//

 

கிருஸ்துவை விட உங்களுக்கு உறவினர்கள் முக்கியம் என்று எனக்கு தெரியும். அப்படி தாயையும், தகப்பனையும் கிருஸ்துவை ஏற்று கொள்ள இடைஞ்சலை உண்டாக்கும் பட்சத்தில் அவர்களை  விட்டுவிடுவது தான் ராஜா சிலுவை!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//வேதம் ஒரே தேவன் என்கிறதா அல்லது *போட்டு *Conditions Apply, என்கிறதா? //
 
வேதம் ஒரே தேவன் என்கிறது அதோடு "வார்த்தை தேவனாய் இருந்து , தேவனோடு இருந்தது" என்றும் சொல்லுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது வார்த்தையும் ஒரே தேவன் தான் ஆனால் அது தேவனோடும் இருந்தது என்று சொல்லுவதால் தேவன் அல்லது தேவத்துவம் என்பது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்தத்துவங்களுக்குள் இருப்பதை அறியலாம்.
 
//எங்கே தேவன் மூன்றாக இருக்கிறார் என்று ஒரு வசனம் காண்பியும் பார்க்கலாம்?//
 
எங்கே ஈசாய் சாலமோனுக்கு தாத்தா என்று ஒரு வசனம் காண்பியுங்களேன்?
 
//யோபு ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன் என்பது என்ன உங்களுக்கு 'ஆவியானவர்' வெளிப்படுத்தினாரா? புதுக் கதை விடுகிறீர். வசனம் உண்டா?//
 
அது யோபு வாழ்ந்த உத்ஸ் தேசம் ஆபிரகாம் (அல்லது முற்பிதாக்கள்) வாழ்ந்த காலத்திய தேசம் என்பதால் கொள்ளப்பட்ட ஒரு அனுமானம். எப்படி இருந்தாலும் கிறிஸ்துவிற்கு முன்பும் வாழ்ந்து கிருஸ்துவை ஏற்று கொண்டு மரித்த ஜனங்களை நாம் வேதத்தில் காணமுடியும்.
 
//ஒருத்தனுக்கு செய்தியே கொடுக்காமல் தண்டிக்கும் ஒரு அநீதியின் தேவனையா வேதம் சொல்கிறது?//
 
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (ரோமர் 1 : 19 - 20 )
 
//கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலேயே அநேக நற்கிரியைகள் (மன நலக் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் நடத்துபவர்கள்) எல்லாருமே நரகத்துக்குத்தான்.//
 
கிருஸ்துவை ஏற்று கொள்ளாமல் யாரும் 'நற்கிரிகை' செயமுடியாது.
 
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். (ரோமர் 4 :5 )
 
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6 :29 )
 
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2 :10 )
 
//கிறிஸ்து பிறப்பதற்கு முன்னே வாழ்ந்த கோடா கோடி ஜனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால்(?) நரகத்துக்குப் போவார்கள் என்று 'ஆணித்தரமாக' விளக்கியிருக்கிறீர்கள். அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார் என்று மழுப்புவார்களே தவிர உம்மைப்போல் எந்த ஊழியனும் எந்தக்காலக்கட்டத்திலும் இப்படி ஒரு அபத்தத்தைச் சொன்னதில்லை.//

யாரையும் Please பண்ண வேண்டும் என்று நான் சொல்லுகிறது இல்லை வேதம் சொல்லுகிறதையே நம்புகிறேன், சொல்லுகிறேன். இரட்சிக்கபடுகிறவர்கள் எப்போதும் தேவன் பேரில் விசுவாசம் வைத்து அந்த விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டர்கள்.

வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. (ரோமர் 4 :3 )

நரகத்திற்கு அனுப்பினாலும் தேவன் அநீதி உள்ளவர் அல்ல என்று வேதம் சொல்லுகிறது

நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? (ரோமர் 3:5 )

தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? (ரோமர் 9 :22 - 23 ) 

தேடுகிற எவனும் அவரை கண்டுகொள்ளுவான். பிரச்சனை என்னவென்றால் யாரும் தேடுகிறது இல்லை.

உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; (ரோமர் 3 :11 )



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
கோவை பெரேயன் குழுவின் குழப்பத்திற்கு விளக்கங்கள்
Permalink  
 


//1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்) //
 
முன்று தேவர்கள் அல்ல மூன்று ஆள்ததுவங்கள்எங்க நீங்க சொல்லுங்க மொத்தம் எத்தனை தேவர்கள்? What is God? என்றால் ஒன்று (அதாவது Essence  மற்றும் substance )  Who is God என்றால் மூன்று ஏனென்றால் அது ஆள்தத்துவம்.
 
 
//இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை.(இதுவரை கிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடிப்பேர் என்னாவார்கள்?... //
 
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை என்பது உண்மையென்றால் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து அவரை அறியாமல் மடிந்த கோடாகோடிப்பேர் நரகம் போவார்கள் இதில் என்ன குழப்பம்? யோபுவுக்கு கிருஸ்துவை தெரியும் அவன் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். 
 
//விசுவாசித்தால் மட்டும் போதுமா பரலோகம் கேரண்டியா? ஹி ஹி தெரியாது, பரிசுத்தமாக (கூடுமானவரை???) கடைசிவரை வாழ வேண்டும்.//
 
விசுவாசித்தால் மட்டும் போதும். பரிசுத்த வாழ்கை அல்லது வாழ முயற்சிப்பது என்பது விசுவாசத்தின் அடிப்படையில் நடக்கும் கிரியை. ரோமர் 6 அதிகாரத்தை வாசித்தால் பவுல் இதற்கு தெளிவாய் பதில் சொல்லுகிறார். கிருபை பெருகும் படி பாவத்தில் நிலை நிற்கிறேன் என்று உண்மையிலே கிருபையை பெற்றவன் சொல்லமாட்டான் ஏனென்றால் அது அவன் தரித்துக்கொண்ட புதிய சுபாவத்திற்கு எதிரானது.
 
//மனிதன் சாவானா? இல்லை! மரித்தபின்(?) அவன் பாதாளத்திலோ, பரதீசிலோ. ஆபிரகாம் மடியிலோ, பரலோகத்திலோ இருப்பான். நியாயத்தீர்ப்புவரை. அதன்பின் மறுபடியும் பரலோகத்துக்கோ, பாதாளத்துக்கோ(நரகம்) போவான். (மீண்டுமா.....?)//
 
மனிதன் மரித்தபின் அவனுடைய ஆவி தேவனிடத்திலும்  சரிரம் மண்ணுக்கும் திரும்பும். பின்பு இறுதி நியாயத்தீர்ப்பில் நரகமோ (இரண்டாவது மரணமோ, நித்திய ஆக்கினை ) அல்லது நித்திய ஜீவனோ பெறுவான்
 
//எல்லா கிறிஸ்தவ சபைகளும் உண்மையான சபைகளா? நோ நோ கத்தோலிக்கம் கிறிஸ்தவமே அல்ல, பாரம்பரிய புரோட்டஸ்டான்டு சபைகள் ஆவியில்லாத சபை; பெந்தெகொஸ்த் சபைகள் எல்லாமே சரி என்று சொல்ல முடியாது...//
 
சபை எனபது denomination கிடையாது. சபை என்பது கண்ணுக்கு புலப்படாத கிறிஸ்துவின் சரிரம். யார் அதில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் , தேவனுக்கும் மட்டுமே தெரியும். ஒருவனுடைய  கனிகளை வைத்து சற்று நிதானிக்கலாம். நிச்சயமாக ரசலின் சிஷர்கள் சபையில் இல்லை என்று என்னால் உறுதியாய் கூறமுடியும்
 
 
//மனிதன் தூங்கும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? தூங்கும்.
மனிதன் சாகும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? சாகாது.//
 
????? மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும், துங்குவதும் ஒன்றா? தூங்கியது  போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!
 
//விசுவாசிகள் பரலோகத்துக்கும் அவிசுவாசிகள் நரகத்துக்கும் போவார்கள். வெகு சிலர் மட்டுமே பரலோகம் போவார்கள் மற்ற எல்லாருமே நித்திய நரகத்துக்குத்தான்//
சரி அதுனாலே என்ன? எல்லாரும் பரலோகம் (அல்லது பரதிசு..கொடுமை) போவர்கள் என்று சொல்லிவிடலாமா?
 
//பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரா? ஆமா. ஒருசில பாவிகளையா எல்லா பாவிகளையுமா? எல்லா பாவிகளுக்காகவும்தான்.//
ஒரு சில பாவிகளைத்தான். அதே நேரத்தில் எல்லா  பாவிகளுக்கும் அழைப்பு இருக்கிறது.  "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்."  வாசித்தது இல்லையா?  எந்த பாவியும் தேவன் என்னை அழைக்கவில்லை என்று சொல்ல முடியாது. ரோமர் 1 ஆம் அதிகாரத்தை வாசிக்கவும்.
 
 
//இரட்சிக்கக் கூடாதபடிக்கு அவர் கை குறுகிவிட்டதா? ஆமா பிரதர் இரட்சிப்பு தேவன் கையில் இல்லை அது மனிதன் கையில்தான் இருக்கிறது.//
மனிதன் கையில் மண்ணுதான் இருக்கிறது. இரட்சிப்பும், நித்திய ஆக்கினையும் தேவன் கையில் மட்டுமே இருக்கிறது
 
 
//அது சரி ஏற்றுக்கொண்ட எல்லா கிறிஸ்தவர்களுமாவது பரலோகம் போவார்களா? அதெப்புடீ, சான்ஸ் கம்மி பிரதர். எந்தக் கிறிஸ்தவன் முழுமையான பரிசுத்த ஜீவியம் செய்கிறான்? கஷ்டம்தான்....//
இயேசு கிருஸ்துவை ஏற்று கொண்ட எல்லாரும் பரிசுத்தவான்கள்தான். விபச்சார பாவத்தில் சிக்கியிருந்த கொரிந்து சபை விசுவாசிகளை பவுல் பரிசுத்தவான்கள் என்று அழைக்கவில்லையா?
 
//ஆமா அப்ப பெரும்பாலோர் நரகத்துக்குப் போனால் மெஜாரிடியை நரகத்துக்குத் தள்ளிய சாத்தான் பெரியவனா? அவர்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போன தேவன் பெரியவரா? //
 
சாத்தான் யாரையும் நரகத்தில் தள்ளுவது இல்லை மறுபடி மறுபடி ஏன் நாங்கள் சொல்லாததை உளறிக்கொண்டு திரிகிறீர்கள்? நரகத்தில் தள்ளுவது தேவனே!
 
 
//'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' என்று வசனம் சொல்கிறதே ஆத்துமா உண்மையில் சாகுமா? அது வந்து..... ஹி ஹி... போங்க பிரதர் நீங்க் கொழப்புரீங்க‌... நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம்...//
 
வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !
 
 
 
 
 
 


-- Edited by John on Friday 8th of July 2011 01:23:53 AM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard