இதில் பரிசுத்த ஆவியானவரை ஒரு ஆளாய், ஒர் நேசராய் கனவில் பார்க்கிறார்கள். திரித்துவ தேவனைப் பற்றிய நல்ல வெளிப்பாடும் ஆண்டவர் அவ்ர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
திரித்துவ தேவனை 3 சிங்கங்களாக ஒரு தரிசனம் பார்த்திருக்கிறார்கள்.
முதலில் பார்த்தது பெரிய பயங்கரமான ஒரு சிங்கம். பிடரி மயிர் முகத்தில் உரசுமளவிற்கு நெருக்கமாக இவர்கள் அருகில் நிற்கிறது - இது இயேசு கிறிஸ்து.
இடப்பக்கத்தில்,கொஞ்சம் தூரத்தில் சிறிது உயரமான முகட்டில், முகம் தெளிவாக தெரியாத இன்னோரு சிங்கம் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இவர்களை அக்கறையுடன் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது - இது பிதாவாகிய தேவன்.
வலப்பக்கத்தில் இன்னோரு சிங்கத்தின் பின்பக்கம் பார்க்கிறார்கள் மனிதன் போல் இரண்டு காலில் நிற்கிறது. இவர்கள் அதன் முன் மணப்பெண் போல் நிற்க அந்த சிங்கம் தன் முன்னங்காலால் இவர்கள் தலையை சற்று சரி செய்கிறது. மணப்பெண்ணின் முகமும், சிங்கத்தின் பின்புறமும் தான் தெரிகிறது. - இது பரிசுத்த ஆவியானவர்.
மூன்று சிங்கங்களுக்கிடையில் உடனடி தகவல் பரிமாற்றம் நடப்பதும் புரிகிறது. மூன்று சிங்கங்கள் இருந்தாலும் ஒரு சிங்கத்தின் முகம்(இயேசு கிறிஸ்து) மட்டும் தான் இவர்களால் பார்க்க முடிகிறது. இதை இந்த பகுதியில் வாசிக்கலாம்.
Chapter 7 Entering Into The Mystery of the Lord
--
இதில் பென்னி ஹின் ஊழியத்தின் மூலம் தான் பெற்ற நன்மைகளை சொல்லியிருப்பார்கள். அது பற்றி அவர்கள் அனுப்பிய மெயில் இது. அவர்கள் அனுமதியுடன் போஸ்ட் பண்ணுகிறேன்.
--
Hi Golda
I attached the front cover too, just so you could see what it looked like. The book does mention one public personality - Benny Hinn. I included him because he was just part of the story at the time. That was 10 years ago. He seems to be controversial now, but I cannot help that. I wish I did not have to apologize for this, but I do not want the actual message of the book to get messed up because of him. Anyhow, I hope you enjoy the book, and can find something personal for yourself in it. It is a book of dreams and visions, so understand much of what I say is a dream, and not "reality." The message I hope is clear, that we have a wonderful, intimate God who loves us deeply and wants to be part of our life.