Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)
Permalink  
 


இயேசுக்கிறிஸ்து தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் தேவனை விடத் தாழ்வானவர் என்று யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர். (34) எனினும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம் (மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார். அதாவது, நீ என்னை இவ்வாறு   அழைப்பதற்கான காரணம் யாது என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால் “அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை(35) தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்கா யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார் (36)

 

இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது(37) எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது (38)

 

(இவ்வாக்கமானது சகோ.வசந்தகுமார் எழுதிய யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதி்ல்கள் எனும் நூலிலிருநது பெறப்பட்டதாகும் வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)

 

Footnote and References 

(34) Anonymous, Ad to Bile Understanding i.676 ; Anonymous, Should you Believe in he Trinity p 17

(35) L. Morris, The gospel According to Mathew, p 490)

(36) N. Geldenhuys, The Gospel of Luke: The New International Commentary on the New Testament p 458

(37) J.Bodine & M.Bodine, Witnessing to the Witnesses, pp 41-42

(38) J.D. Grassmick, Mark: the Bible Knowledge Commentary p 150



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard