Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பைகள்- ஜோசப் ருசிகரம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பைகள்- ஜோசப் ருசிகரம்..!
Permalink  
 


// soulsolution:

உதாரணங்களுக்கு குறைச்சலில்லை. இதுவரை மழையை நோக்கித் திருப்பப்படாத கோடா கோடி கோப்பைகளின் கதி என்ன? ஏற்கனவே 'திருப்பப்ட்ட' கோப்பைகளே லீக் ஆகி காலியாக உள்ளது. இதற்கு ஏன் பதிலே ஒரு ஆள் கூட சொல்வதே இல்லை. காது கேட்காததுபோல ஏன் எல்லாருமே நடிக்கிறீர்கள். சுவிசேஷம் ஒரு முறைகூட கேட்காதவர்கள், கேட்டும் பின்பற்ற முடியாதவர்கள் என்னதான் ஆவார்கள் என்று வசன சகிதமாக விளக்கிவிட்டு அடுத்தபடிக்குப் போகலாமே. //

ஆனாலும் அதனை முன்போல தன்மானத்தைத் தூண்டும் வண்ணமாக எழுதாமல் நாகரீகத்துடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது; தொடர்ந்து பேசுவோம்.


 இதற்கு ரோமர் 1 மற்றும் 2ம் அதிகாரத்தை படித்து தெரிந்துகொள்ளவும். 

திருப்பப்படாத கோப்பைகளை பற்றி நீங்களே இவ்வளவு கவலைப்படும் போது தேவன் கவலைகொள்ளாமல் இருப்பாரோ, ஒவ்வொரு மனிதனுக்கும் எது சரி எது தவறு என்பதை பற்றிய உணர்த்துதல் உள்ளே ஆண்டவர் வைத்திருக்கிறார், அவரவர் தாங்கள் அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தேவன் அவர்கள் உள்ளத்தில் வைத்துள்ள அந்த உணர்த்துதலாலேயே நிறுக்கப்படும். அந்த உணர்த்துதலை கூட மந்தமாக்கிவிட்டு பாவத்தில் உழன்றததால் தான் தேவன் நினிவே மேல் கோபம் கொண்டு தன் தீர்க்கனை அனுப்பி எச்சரிக்கை செய்தார், அந்த உணர்த்துதலை குறித்து அவர்கள் தட்டியெழுப்பப்பட்டதால் தான் அவர்கள் அழிவில் இருந்து தப்பித்தார்கள். இயேசு என்ற ஒருவர் வந்து மனித சரித்திரத்தை பிளந்த பிறகு அவரை பற்றி அறிந்தவர்கள் அதைப்பற்றி போக்குச்சொல்ல இடமில்லை கிருபையினால் மீட்பு என்பது செயல்பாடுகளினால் உள்ள மீட்பை விட மேலானதால் தான் இயேசுவை அறிவிக்க ஆதங்கப்படுகிறோம். ரோமர் 2:14,15,16 ஐ வாசிக்கவும்.



-- Edited by joseph on Friday 26th of August 2011 10:40:24 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நமக்கு அருமையான நண்பர் ஜோசப் அவர்கள் தன்னால் இயன்ற மட்டும் சாத்வீகமான முறையில் சத்தியத்தை சத்தியமாகச் சொல்ல போராடி வருகிறார்; என்பது அறிந்ததே; அண்மையில் அவர் கிறித்துவைக் குறித்த தனது நம்பிக்கையை ஒரு கோப்பையில் விழும் மழைத் துளியுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்;அந்த வரிகள் பின்வருமாறு...

பவுலும் சீலாவும் சிறையில் இருந்த போது துதித்து பாடினார்கள் கடைசியில் பூமியதிர்ச்சி வந்து சிறைக்கதவுகள் திறந்தது அப்போது தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள நினைத்த போது அவனை தடுத்தார்கள். அந்த நிகழ்வுகளால் தொடப்பட்ட அக்காவலன் ரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என கேட்டான். 

இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உள்ளன‌

1) அந்த சிறைக்காவலன் ஒரு புறஜாதியான், அவனையும் பவுல், சீலாவின் சாட்சி தொட்டது

2) அவன் எப்படி சத்தியத்தை கேள்விப்பட்டான். பவுலும் சீலாவும் பாடல்களை பாடினார்கள், அப்பாடல்கள் நிச்சயம் இயேசுவின் சிலுவை பரிகார பலியை எடுத்துச்சொல்லியிருக்கும். சுவிஷேஷத்தை எந்த ரூபத்திலும் பிரஸ்தாபப்படுத்த தேவையில்லை என்ற கருத்து இதில் அடிபட்டு போகிறது

3) ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆத்தும தாகம் அந்த காவலனின் கேள்வியாக வெளிப்படுகிறது, ரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும். இக்கேள்வியில் வாயிலாக ஒரு உண்மை புலப்படுகிறது, ரட்சிப்பு என்றால் பாவத்தில் இருந்து விடுதலை என்பதை அக்காவலன் உணர்ந்தான், தனது வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்த அவன் தான் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இருந்ததை உணர்ந்தான். அதனால் கேட்ட கேள்வியே மேற்கண்டது.

4) இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்றனர் அப்போஸ்தலர்கள். இயேசுவை விசுவாசிக்கவேண்டும் என்ன விசுவாசிக்கவேண்டும், அவர் நமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்பதை ஒருவன் விசுவாசிக்கவேண்டும் அவர் மூலமாகவே மீட்பு என்பதை விசுவாசிக்கவேண்டும், இந்த உணர்த்துதல் இல்லாமல் ஒருவன் ரட்சிப்படைய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் மேசியாவின் எதிரிகள் சொல்வது என்ன, உலகத்தில் பிறந்த யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் இல்லை, அவரை விசுவாசிக்காமலே ரட்சிப்பு என்ற வேத புரட்டை எடுத்து வைக்கின்றனர். யோவான் 3:16 ல் ரட்சிப்புக்கான வழியை சொன்னபின்பும், இயேசுவை தெய்வமாக ஏற்கும் மனப்பான்மை இல்லாததால் அவரது மீட்பை அலட்சியப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் மூல பாஷையை தேடியாகவேண்டும், அது என்ன மூல பாஷை என்பது இவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம், ஒருவேளை அப்போஸ்தலர்கள் எழுதியவை நேரடியாக இவர்கள் கையில் இருக்கிறதா என தெரியவில்லை. இந்த ரட்சிப்பை குறித்த அசட்டையே இவர்களை பூட்டிய அறைக்குள் வேத ஆராய்ச்சி மட்டும் செய்ய ஏழுகிறது, அஃதாவது எவன் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்கு ரட்சிப்பு கேரண்டியாம்.

ஒரு சிறு உதாரணம், ஒரு வெட்டவெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு கோப்பையை தலைகீழாக கவிழ்த்து வைத்தால் அதில் ஒரு சொட்டு கூட நிறையாது, மழை பெய்வதென்னமோ உண்மை தான் அந்த கோப்பை வெளிப்புறமாக நனைவதென்னமோ உண்மைதான் ஆனால் கவிழ்க்கப்பட்ட அந்த கோப்பையானது உள்ளே உள்ள வெற்றிடமாக அப்படியே நிலைத்திருக்கும். நிரம்ப என்ன செய்யவேண்டும் அதை மழையை நோக்கி திருப்பவேண்டும், இப்போது கோப்பை நிறையும். இதே போல தான் மேசியாவின் எதிரிகள் வசனத்தால் தங்களை வெளிப்புறமாக நனைத்தாலும் உள்ளே வெறுமையோடு இருக்கின்றனர், அந்த மழை உள்ளே விழுந்து நிறைத்தால் தான் பாத்திரம் அல்லது கோப்பை நிரம்பும். ரட்சிப்பை பற்றி ஏட்டளவில் உணர்ந்துள்ள இவர்கள், இயேசுவை நோக்கி தங்களை திருப்பினால் மாத்திரமே ரட்சிப்பை உணர்வுபூர்வமாக அறிய முடியும் மாறாக இயேசு அனுப்பப்பட்டவர், மிகாவேல் தூதன், அவர் தொழத்தக்கவர் அல்ல என வசனங்களை தேடிக்கொண்டிருந்தால்......

Link: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்

ஆனால் எப்போதும் கற்றாலும் ஒருபோதும் உணராத (மேசியாவின்) எதிரிகள் வழக்கம் போல விதண்டாவாதம் செய்திருக்கிறார்கள்;அந்த வரிகள் பின்வருமாறு...

 

// soulsolution: உதாரணங்களுக்கு குறைச்சலில்லை. இதுவரை மழையை நோக்கித் திருப்பப்படாத கோடா கோடி கோப்பைகளின் கதி என்ன? ஏற்கனவே 'திருப்பப்ட்ட' கோப்பைகளே லீக் ஆகி காலியாக உள்ளது. இதற்கு ஏன் பதிலே ஒரு ஆள்கூட சொல்வதே இல்லை. காது கேட்காததுபோல ஏன் எல்லாருமே நடிக்கிறீர்கள். சுவிசேஷம் ஒரு முறைகூட கேட்காதவர்கள், கேட்டும் பின்பற்ற முடியாதவர்கள் என்னதான் ஆவார்கள் என்று வசன சகிதமாக விளக்கிவிட்டு அடுத்தபடிக்குப் போகலாமே. //

ஆனாலும் அதனை முன்போல தன்மானத்தைத் தூண்டும் வண்ணமாக எழுதாமல் நாகரீகத்துடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது;தொடர்ந்து பேசுவோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard