சர்ச்சைகள் எதுவும் வேண்டாம் என நீங்கள் முடிவு செய்திருப்பது நல்லது தான் ஆனால் சிலர் (மேசியாவிடம்) எதிரியிடம் விலை போய்விட்டதாக எழுதியுள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நாம் மேசியாவிடம் விலைபோய்விட்டோம் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்; ஏனென்றால் நாம் அவரது விலையேறப்பட்ட ரத்தத்தால் மீட்கப்பட்டு கிரையத்துக்கு கொள்ளப்பட்டோமே. எதை மனதில் வைத்து சொல்கிறீர்கள் என தெரியவில்லை; ஒருவேளை apology... என்றால் விலை போய்விட்டதாக நீங்கள் எண்ணினால் உங்களது எண்ணம் தவறு என்பது எனது தாழ்மையான கருத்து. நண்பர் என்ற முறையில் உங்களை கண்டனம் செய்வதற்கும் எனக்கு உரிமை இருப்பதாகவே கருதுகிறேன்.
எனதருமை நண்பர் ஜோசப் அவர்களின் கண்டனத்தையும் புத்திமதியையும் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது வெறும் apology...தானா, நண்பரே; எத்தனை பரிதாபத்தை வரவழைக்கும் வரிகள் அவை..! "நிற்கிறேன்" எனும் ஒரு சொல் கரையாத கல்லையும் கரையவைக்குமே..?
ஐயய்யா,நான் பாவி...என்று பாடுவோமே, அதுபோல பாட்டுப்பாடி, நீ என்னை மன்னிக்காவிட்டால் எனக்கு விமோசனமே இல்லை என்று தெய்வத்திடம் மன்றாடுவது போன்ற தோரணையல்லவா,அது..?
அதில் தலையிட எனக்கு உரிமையில்லை;அது அவரவர் விருப்பம்; ஆனாலும் ஒருவருடைய இருதயமானது டிஜிஎஸ் பாஷையில் சொல்லுவதானால் சுக்குநூறாக உடைந்து, கேட்ட மன்னிப்பையே நீங்கள் இளகச் செய்வதால் மன்னித்தவரின் மனதைப் புண்படுத்தும் பாவத்தை செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது.அதே நேரத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்த எதிரிகளிடம் விலைபோன யூதாஸின் கூட்டத்தாரிடம் எந்த நிலையிலும் அப்போஸ்தலர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்; அவனை தூஷித்து சபித்த வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது,யாரும் அதைத் திரும்பப்பெறவுமில்லை.
என்னுடைய அன்பு தெய்வத்தை ஒருவன் தூஷிப்பான்,அந்த மனுஷனை நான் "பேலியாளின் மகனே," என்று நான் தூஷிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு கட்டத்தில் என்னுடைய மனம் வாதிக்கப்பட்டு அந்த மனுஷனிடம் நான் மன்னிப்பு கேட்பேனா..?! அதுவும் அவனுடைய வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்பேனா..? என் உயிரே போனாலும் அதுபோன்ற படுபாதக செயலை செய்யவே மாட்டேன்;ஏனென்றால் அந்த மனுஷன் இன்னும் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ளவில்லை; என்னுடைய தெய்வத்தைத் தொடர்ந்து நிந்தித்துக்கொண்டே இருக்கிறான்; ஒருவேளை அவன் தன்னுடைய தவறான கருத்துக்காக மனம் வருந்தியிருந்தால் - திருந்தியிருந்தால் நான் அவன் காலைக் கழுவி என் தலையில் ஊற்றிக்கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்பேன்,அவனும் என்னிடம் மன்னிப்பு கேட்பான், இதுவே அன்பின் உறவுக்கு ஆரம்பமாக இருக்கும்;
அதே நேரத்தில் இதுவரை ஆண்டவருடைய அன்பையே ருசித்திராத ஒரு மனுஷன் என் ஆண்டவரை தூஷித்தால் அவனிடம் பொறுமையாக இருக்கவே வேதம் சொல்லுகிறது; ஆனால் பரமஈவை ருசிபார்த்து மறுதலித்துப் போனவர்களுடன் என்னால் சமரசம் செய்துகொள்ளவே முடியாது;
"உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது." (சங்கீதம்.119:158)
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்." (சங்கீதம் 139:20,21,22)
-மேற்கண்ட வசனங்களுக்கு இன்னும் உயிர் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா,மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளவரையே நீங்கள் ஆராதிக்கிறீர்களா, அப்படியானால் என்னுடைய நிலையில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்..!
நாம் ஒரு குழுவாக ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது நம்மிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நண்பர் எதிர்புறம் தாவி நம்முடைய நிலையை பெலவீனப்படுத்தும் வண்ணமாக ஏதேனும் செய்தால் எவ்வளவு அவமானமாக இருக்கும் அல்லவா, அதையே நம்ம ஊரில் மூக்குடைப்பு என்றும் ஆங்கிலத்தில் நோஸ்கட் என்றும் சொல்வார்களல்லவா..? இப்போ சொல்லுங்க எல்லா சேர்ந்து யாருக்கு நோஸ்கட் கொடுத்தாங்க...யாருக்கு தலைகுனிவு என்று..!
இப்போதும் கூட நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை; எனக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது; குருவி போல நாலு இடத்துக்குச் சென்றாலே என்னை நம்பியிருக்கும் ஜீவன்களைக் காப்பாற்றமுடியும்;எனவே இதற்கு மேலும் சர்ச்சைகளை வளர்ப்பதை நான் விரும்பாமலே நானும் அமைதியாக இருக்கிறேன்;ஆனாலும் நம்முடைய நண்பர்கள் யாரும் நான் பின்வாங்கி விட்டதாகவோ நாம் பேசிவைத்துக்கொண்டு (மேசியாவின்) எதிரிகளிடம் சமரசம் செய்துகொண்டதாகவோ எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே இவற்றை எழுதுகிறேன்;
நான் யாரை என்னுடைய நண்பராக நினைக்கிறேனோ அவருடைய மனம் என்னுடைய எழுத்துக்களால் புண்பட்டிருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.ஆனால் ஆண்டவரைக் குறித்த வைராக்கியத்தினால் வெளிப்பட்ட வார்த்தைகளுக்கு நான் ஒருபோதும் பொறுப்பாளியாக முடியாது, நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவும் அவசியமில்லை.
"நீங்கள் பிதாவினால் அனுப்பப்பட்டு அவரால் அங்கீகரிக்கப்பட்ட இயேசுவானவரைத் தொழத்தக்கவராக எண்ணுகிறீர்கள், உங்களுடைய நம்பிக்கையை தூஷித்த காரணத்தினால் உங்களுடைய மனம்புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம், சத்தியத்தை ஆராய்ந்து பாருங்கள் ,நாம் நிதானமாக முன்னேறுவோம், நமக்குள் இனி சர்ச்சைகள் வேண்டாம்... " என்பது போன்ற ஒரு அறிவிப்பை (மேசியாவின்) எதிரிகள் வெளியிட்டிருந்தால் நாம் பிரச்சினைக்கு வெளியே வந்து ஒரு மனிதனுக்கு மனிதன் என்ற நிலையில் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பதில் பிரச்சினையில்லை; அதேபோல நாமும் மேற்கண்ட அறிக்கையைப் போலவே அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து சரியாக அறியாத நிலையில் செய்திருக்கக்கூடிய விமர்சனங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதிலும் தவறில்லை;
இதுபோன்ற இணக்கமான சூழ்நிலையினை ஒரு முகமதியரோ அல்லது இந்துத்வா நண்பரோ கூட ஏற்படுத்த ஆயத்தமாக இருப்பார்; அதன் காரணமாகவே இந்த தேசத்தில் சிறுபான்மையினரான நாம் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; நீங்களே யோசித்துப்பாருங்கள், ஒவ்வொரு மசூதியிலும்இந்து கோவிலும் இருந்து ஓயாமல் இயேசுவை தூஷித்து பேசினார்களானால் எப்படியிருக்கும்..? அவர்கள் நம்முடைய நம்பிக்கையைக் குறித்து அவதூறாகப் பேசாமல் சகித்துக்கொள்ளுகிறார்கள் அல்லவா..? இது தானே நிதர்சனமான உண்மை..? நாம் பைபிளை எடுத்துக்கொண்டு கோவிலுக்குப் போகும்போது யாரும் நம்மை பார்த்து, "போறான் பாரு டெட் பாடியை கும்பிடறதுக்கு" என்று பரியாசம் பண்ணவில்லையே..?
ஆனால் இந்த எதிரிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, கிறிஸ்தவர்களுடைய வீடாகப் பார்த்து அல்லது உடன்பணிபுரியும் கிறிஸ்தவனாகப் பார்த்து அல்லது உடன் பயிலும் மாணவர்களில் கிறிஸ்தவனாகப் பார்த்து முதலாவது அவர்களுடைய வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு அழைக்கிறார்கள்; அவர்களிடம், நீங்கள் பைபிளை ஆண்டவருடைய வார்த்தை என்று நம்புகிறீர்களா, என்று முகமதியரைப் போலவே ஆரம்பித்து, இயேசுவை கும்பிடச் சொல்லி வேதத்தில் எங்காவது இருக்கிறதா, என்றும் அவராவது தம்மை வணங்கச்சொல்லி எங்காவது சொல்லியிருக்கிறாரா என்றும் முதலில் சர்ச்சையை விதைத்து, தொடர்ந்து ஊழியம் என்ற பெயரில் சிலர் செய்யும் அட்டூழியங்களைச் சொல்லி புரட்சிகரமாகப் பேசி அவர்கள் மனதை மயக்குகிறார்கள்; தாங்கள் ரோஷத்துடன் உழைத்து சாப்பிடுபவர்கள் என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்; (வேலையில்லாமல்...) இவர்கள் சொல்லுவதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவோரை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துப்போடுகிறார்கள்; இதுவே அண்மைய நிலவரம்; இந்த அவலத்தைக் கண்ணாரக் கண்டு வெகுண்டெழுந்த காரணத்தினாலேயே இந்த தளம் பிறந்தது; (மேசியாவின்) எதிரியை நான் நேருக்கு நேர் நின்று தாக்குவதாலேயே என்னை முதல் எதிரியாக பாவிக்கிறார்கள்;
எனவே இந்த பகிரங்க மன்னிப்பானது இயேசுவானவரின் சீடர்கள் யூதாஸின் கூட்டத்தாரிடம் சென்று, ஐயய்யோ அவரு தெரியாம உங்களயெல்லாம் மொறச்சிக்கினாரு பாவம் வாழவேண்டிய வயசு அவரை மன்னித்து விட்டுடுங்களேன் என்று கேட்பதைப் போலவே எனக்குத் தோன்றுகிறது;இந்த தளத்தின் பதியப்பட்டிருக்கும் இந்த மன்னிப்பானது, இந்த தளத்தின் கருத்து அல்ல, என்பதையும் அது ஒரு தனிப்பட்ட நபரின் அறிக்கை என்பதையும் தள நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்; அல்லது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி ஒரு முடிவுக்கு வரட்டும்;நானும் அவர்களிடம் எனதருமை நண்பர் கோல்வின் அவர்களைப் போலவே மன்னிப்பு கேட்கிறேன்.
ஒருவேளை கோல்வின் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் மெயில் மூலம் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவாதத்துக்கே அவசியமிராது; அவர்களும் அதனை சந்தோஷமாகத் தங்கள் தளத்தில் வெளியிட்டு இரசித்திருப்பார்கள்; ஆனால் இங்கே பகிரங்கமாக கோல்வின் கேட்ட மன்னிப்பானது நம்முடைய தளத்தின் மொத்த கருத்து போல அமைந்துவிட்டது; இதன்மூலம் எதிரிகள் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தியிருக்கிறார்கள்.முக்கியமாக நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி இதில் வெளிப்பட்டிருக்கிறது.
மன்னிப்பது என்பது, வேறு மன்னிப்பு கேட்பது வேறு; இயேசு மன்னித்தாரே தவிர யாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை; மன்னிக்கப்படவேண்டிய நிலையிலுள்ள துரோகிகளிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்..? நிபந்தனையற்ற அன்பு என்னிடத்தில் எப்போதும் உண்டு; ஆனால் நிபந்தனையற்ற மன்னிப்பை தேவ காரியங்களில் நான் சுயமாக வழங்கிட முடியாது. அது விண்ணரசு சம்பந்தமானதல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யாருக்குத் தெரியும்? ஆவியானவர் நீங்க எழுதியதையெல்லாம் கனவில் காட்டி, ஏற்றுக் கொள்ள வைத்து அண்ணன் Soul Solutionஐ Soul Winner ஆ ஒரு நாள் மாற்றக் கூடும்! நம்பிக்கையோடு இருங்க!
Superb.......................
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னித்தேன் என்பவன் மாமனிதன், கொல்வினுக்கு எனது பாராட்டுகள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துவிட்டு போகட்டும் ஆனால் அவர்களும் தங்களது எழுத்துக்களை சீர்தூக்கி பார்த்தால் நலமாக இருக்கும்.
உயிர்தெழுதலில் கொல்வினும் இல்லை, கொடுப்பினும் இல்லை என்று சொல்லி உங்களை அப்பவே மன்னித்து விட்டார் உங்கள் பாசக்கார அண்ணன் SS.
இது நான் அப்ப போஸ்ட் பண்ண வேண்டும் என்று நினைத்து எழுதியது. இப்ப பண்றேன்!
--
அன்பு சகோ கொல்வின்,
யாரையும் செத்துத் தொலை என்று சொல்வது சரியல்ல என்பது பண்புள்ள உங்களுக்கு நன்றாக தெரியும் என்பது எனக்குத் தெரியும். இந்த அளவிற்கு அவர்கள் மேல் உங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
நமக்கு வேண்டியவர்கள், நம் நண்பர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் பேசினால்தான் வருத்தப்பட வேண்டும்
அந்த ஆய் பயல்கள் அல்லது பேய் பயல்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தையே மறுதலிக்கும் துணிகரம் கொண்டவர்கள்.நம்மை திட்டவோ, சபிக்கவோ தான் யோசிக்கப் போறாங்களா? அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.
இவர்கள் பேச்சுக்கெல்லாம்,எறும்பு கடித்ததற்கு காட்டும் அளவிற்குக் கூட நாம் சீரியஸ் reaction காட்ட அவசியமில்லை! இவர்கள் திட்டுவதை நாம் ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவே தேவையில்லை.
யாருக்குத் தெரியும்? ஆவியானவர் நீங்க எழுதியதையெல்லாம் கனவில் காட்டி, ஏற்றுக் கொள்ள வைத்து அண்ணன் Soul Solutionஐ Soul Winner ஆ ஒரு நாள் மாற்றக் கூடும்! நம்பிக்கையோடு இருங்க!
-என்று வேதம் சொல்லுகிறது; கோல்வின் கேட்கும் மன்னிப்பு இயேசுவானவரை வெறும் தூதன் மட்டுமே- பலியாடு மட்டுமே என்று சொல்லுவோருக்கு சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போலிருக்கும்; எதிர்தரப்பு துவக்கிவைத்த இந்த நல்ல காரியத்தில் ஒரு முடிவுண்டாக வேண்டுமானால் அவர்களே முதல் அடியெடுத்துவைக்கவேண்டும்; அப்படியும் எல்லா சர்ச்சைகளுக்கும் முடிவுண்டாகும் வகையில் கோல்வின் அவர்கள் திறந்துள்ள இந்த புதிய வாசலை எதிர்தரப்பினர் எப்படி பயன்படுத்திக்கொள்ளுவார்களோ தெரியவில்லை; பழைய அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, "சரி,சரி பிழைச்சு போ...இனியாவது ஒழுங்கா இரு..!" கண்டிப்பாக இதுபோன்ற தொனியில் ஒரு பதில் வரும் என்று நம்புகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் எழுதிய கடும்சொற்களினால் உங்கள் மனது புண்பட்டிருக்கிறது என்பதை அறிகிறேன் உங்கள் மீது சுமத்திய குற்றசாட்டு ஆதாரமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களிடம் மன்னிப்பைக் கோரி நிற்கிறேன். நீங்கள் கோரும் பட்சத்தில் யௌவன ஜனம் தளத்திலிருந்து தங்களைக் குறித்து எழுதிய அவதூறான அனைத்து பதிவுகளை நீக்கி விடுகிறேன்.
கிறிஸ்துவுக்குள்
கொல்வின்
இலங்கை
-- Edited by chillsam on Wednesday 22nd of June 2011 04:26:30 PM